மும்பை, April 27, 2018 /PRNewswire/ --
உலகளாவிய மற்றும் உள்ளூர் பிராண்டுகளின் துடிப்பான அணி UBM இந்தியா நிகழ்ச்சியில் கவனத்தை ஈர்க்கிறது
மும்பையிலுள்ள பாம்பே கன்வென்ஷன் அண்ட் எக்சிபிஷன் சென்டர், தனித்தன்மையுடன் நிலைநிறுத்தப்பட்ட குழந்தைகள், கைக்குழந்தை மற்றும் மகப்பேறு கண்காட்சி இந்தியா 2018 (CBME இந்தியா) வின் 6வது பதிப்பை UBM இந்தியா தொடங்கியது. இந்தியாவின் மிகப்பெரிய குழந்தைகள் மற்றும் மகப்பேறு தயாரிப்பு வர்த்தக கண்காட்சியான , CBME இந்தியா, குழந்தை தயாரிப்புகளின் உள்ளூர் மற்றும் உலக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நிகரற்ற வர்த்தக வாய்ப்பை வழங்கி, அவர்களுடன் இணைந்து, நெட்வொர்க் அமைத்து மற்றும் வியாபாரத்தை நடத்த வாய்ப்பை அளிக்கிறது .
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/678670/CBME_India_2018_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/682868/UBM_CBME_2018_Special_Guests.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/682869/UBM_CBME_2018_EshaDeol_BharatTakhtani.jpg )
CBME இந்தியா 2018 ன் ஆரம்ப விழா முக்கிய விருந்தாளிகளின் முன்னிலையில் இடம்பெற்றது: திருமதி. இஷா தியோல் - பாலிவுடின் பிரபலமான தாய் மற்றும் திரு பாரத் தஹானி, தொழிலதிபர்; தொழில்துறை கூட்டத்தில் அனைவருக்கும் மத்தியில் சிறப்பு விருந்தினர்களாக - திரு. அஜய் அகர்வால், தலைவர் - டாய் அசோசியேஷன் ஆஃப் இந்தியா; திரு. யோகேஷ் முத்ராஸ், நிர்வாக இயக்குனர் UBM இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் திரு. அபிஜித் முகர்ஜி, குழுத் தலைவர் UBM இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியோர் இருந்தனர். விநியோகஸ்தர்கள், இறக்குமதியாளர்கள், செல்வாக்குடைய வணிகர்கள் மற்றும் விற்பனை தலைமையாளர்கள் ஆகியோருடன் நவீன சில்லரை வியாபாரங்கள், ஆன்லைன் சில்லரை வியாபாரிகள், திரட்டுபவர்கள்,சேவை அளிப்பவர்கள், வணிக முதலீட்டாளர்கள் மற்றும் முகவர்கள் வரை தேர்ந்தெடுத்து அவர்களுடன் இணைந்து பங்கேற்றனர்.
இந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் 450க்கும் அதிகமான பிராண்டுகளை காட்சிப்படுத்துவார்கள் மேலும் அதிக அளவிலான பேபி கேர் தயாரிப்புகள்,பொம்மைகள்,குழந்தை உணவு, ஆர்கானிக் ஆடைகள், ஊட்டச்சத்து மருந்துகள், பணிச்சூழலுக்கேற்ற நாற்காலிகள், உரிமம் பெற்ற பிராண்டுகள், ஸ்டேஷனரிகள், பரிசுப்பொருட்கள், கைக்குழந்தை பாதுகாப்பு தொழில்நுட்பம், மூளை வளர்ச்சி கருவிகள் ஆகியவற்றை உயர் தரத்துடன், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பார்ப்பவரைக் கவரும் சர்வதேச தயாரிப்புகளை காணுவதற்கு வாய்ப்பை அளிக்கிறது. கைக்குழந்தை, குழந்தை ஆடைகள், குழந்தைகள் காலணி கடைகள், மகப்பேறு கால ஆடைக்கான கடைகள்; பொம்மை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஹைபர் மார்க்கெட்டுகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், ப்ரீ- ஸ்கூல்கள், நர்சிங் ஹோம்கள், தனிப்பட்ட நுகர்வோர்கள், சேவை நிறுவனங்கள், வடிவமைப்பாளர்கள், மன்றங்கள் மற்றும் தூதரகங்கள் போன்ற பல தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் இந்த எக்ஸ்போவில் பங்களித்த வல்லுனர்கள்.
சில முக்கிய கண்காட்சியாளர்களாக, தி ஹிமாலயா மருந்து கம்பெனி, நோபள் ஹைஜீன் பிரைவேட் லிமிடெட், Artsana இந்தியா பிரைவேட் லிமிடெட், R for Rabbit Baby Products Pvt. Ltd., அஜாஃப்ரான் இன்னோவெகேசன் லிமிடெட், மேன்டாட் இம்பெக்ஸ், ராயல் இன்டஸ்ட்ரீஸ் (தாய்லாந்து) பப்ளிக் கம்பெனி லிமிடெட், ஃபர்ஸ்ட் கேர் இந்தியா பிரைவேட் லிமிடெட், நெக்டர் பயோஃபார்மா பிரைவேட் லிமிடெட்., M/s. ஏ ஸ்டார் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட், டிரீம் தியேட்டர், ரெஸ்பர் இன்டர்நேஷனல் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், சன்ஹெரி மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட், கேலக்சி இன்கார்ப்பரேசன், சூப்பர்பிராண்ட்ஸ் மெடிக்கல் இன்னோவேசன் பிரைவேட் லிமிடெட், சாஃப்ட்சென்ஸ் கன்ஸ்யுமர் புரோடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மீ அன்ட் மாம்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த வருட வர்த்தக கண்காட்சியில் பங்கு பெற ஆர்வமாக உள்ள நாடுகள், சீனா, கனடா, கொரியா, சிங்கப்பூர், ரஷ்யா,சௌதி அரேபியா, ஐரோப்பா, அமெரிக்கா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகியவை. தொழில் பார்வையாளர்களின் கருத்துப்படி சமீபத்திய போக்குகள் மற்றும் தொழில்நுட்பம் பற்றிய நுண்ணறிவுடன் இந்திய உற்பத்தியாளர்களுடன் இந்த உட்புகுதல் கட்டுப்படுகிறது. மிக முக்கியமாக இந்த நிகழ்ச்சி, உரிமம் பெற்ற தொழில்துறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு (LIMA) , இந்திய இறக்குமதியாளர்கள் வர்த்தக மற்றும் தொழில்துறை சேம்பர் (IICCI) மற்றும் அனைத்து இந்திய தொழில் சங்கம் (AIAI) போன்ற கூட்டமைப்புகளால் நன்றாக ஆதரிக்கப்படுகிறது.
கண்காட்சியாளர்கள் மற்றும் வருகை தருபவர்கள் இருவருக்கும் சிறந்த மற்றும் புதுமையான மதிப்பு மிக்க கருத்துரையை அளிக்கும் அதன் முயற்சியில், இந்த வருடம் CBME இந்தியா, அறிவு நிரம்பிய அமர்வுகள், கருத்தரங்குகள், புதிய போக்குகளுக்கான கலந்துரையாடல்கள் மற்றும் இந்தியாவில் விரைவாக விரிவாகும் மற்றும் வேறுபட்ட சில்லரை விற்பனை பிரிவுகளைப் பற்றிய பல்வேறு சர்வதேச காட்சிக்கூடங்கள் உள்ளடங்கிய நிகழ்வுகள் நடந்தன.
முதல் நாளில் 'ஃபேஷன் அன்ட் கிட்ஸ் கான்கிளேவ்' 2018 அமர்வில் பின்வரும் தலைப்புகளான குழந்தைகள் ஆடைகளில் புரட்சி மற்றும் சந்தை போக்குகள் குழந்தை ஆடைகளில் ஃபைபரின் பங்கு குழந்தை ஆடைகள் மூலங்கள் / உற்பத்தி / சந்தைப்படுத்துதல் அல்லது பிராண்டிங்- ல் சவால்கள்ஆர்கானிக் ஆடைகள் - குழந்தைகள் ஆடை சந்தையின் எதிர்காலம் டிஜிட்டல் நெட்வொர்க்கிங் மற்றும் சில்லரை பிரிவில் பயனர் நட்பு குழந்தை ஆடைகளுக்கான உயர்தரமான ஃபினிஷஸ் உலக சந்தை போக்குடன் இந்தியாவில் குழந்தை ஆடைகளுக்கான எதிர்காலம் ஆகியவை கலந்துரையாடப்பட்டன. உலகளாவிய போக்குகளுக்கு இணங்க இந்தியாவில் குழந்தை ஆடைகளுக்கான எதிர்காலம் என்பதின் மீது ஒரு குழு கலந்துரையாடலுடன் முடிவடையும்.
நாள் 2 ஒரு அற்புதமான அமர்வை உள்ளடக்கும் உங்கள் சந்தை வளர்ச்சி பெற உரிமம் பெறும் காட்சிக்கூடம்' என்ற தலைப்பில் கலந்துரையாடுவார்கள். இந்த அமர்வில் குழந்தைகள் பிரிவில் உரிமம் பெறுதல், எவ்வாறு முதலாளிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு தங்கள் போர்ட்ஃபோலியோவில் உரிமம் பெறுவதை சேர்ப்பதால் பலன் கிடைக்கும் மேலும் இந்திய சில்லரை வர்த்தக விரிவுபடுத்தல் மற்றும் உரிமம் பெறுதலின் தாக்கம் மற்றும் புதிய உரிமம் சார்ந்த வகைகளில் வரவிருக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றை பற்றியும் கலந்துரையாடுவார்கள்.
CBME இந்தியாவின் 2018 ஆம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் Mr. Yogesh Mudras கூறுகையில், "உலக குழந்தை மற்றும் மகப்பேறு உற்பத்தியின் சந்தை 2025 ஆம் ஆண்டில் 121.0 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, முன்னர் ஒரு முக்கிய சந்தையாக கருதப்படுகிறது, இந்தியாவில் உள்நாட்டு குழந்தை, மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு பொருட்கள் சந்தை பரந்த மனநிலையையும் வளர சாத்தியமும் கொண்டுள்ளது. ஆயினும், நாம் இந்த பிரிவில் தகவல் மற்றும் நூதனமான பொருட்கள் கிடைக்கும் தன்மையின் போதாமை கண்காணிக்கின்றோம். அது CBME இந்தியாவின் தனிப்பட்ட முயற்சிகள் தகவல் மற்றும் கல்வி அத்துடன் குழந்தைகள் மற்றும் மகப்பேறு சந்தையில் பட்டியிலை உயர்த்த உத்வேகம் வழங்க மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது."
மேலும் அவர், "எக்ஸ்டோவில் காணப்படும் இந்தத் துறையைத் தெரிவிக்கும் உயர்ந்த போக்குகள், செயல்பாட்டு, பணிச்சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் நட்பு வடிவமைப்புகள், குழந்தைகள் இணைந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து வரும் எழுத்துக்குறிகள் போன்ற அதிகமான கூட்டு பிராண்டட் பொருட்கள், புதிய பாதுகாப்பு தொடர்பான தயாரிப்புகளின் வளர்ச்சியுடன் பாதுகாப்பிற்கு அதிக கவனம் செலுத்துகிறது."
இந்தியாவின் LIMA தலைவர், Jiggy George கூறுகையில், "தொழில்துறை உச்சம் பெற்ற இந்த நேரத்தில் இந்தியாவில் உரிமம் பெறுவதற்கு இது சிறந்த நேரமாக இருக்கும். கடந்த சில வருடங்களில் அளவுகளில் வளர்ச்சி மற்றும் உரிமத்தின் நோக்கம், அதன் வளர்ச்சிக்கான முக்கியத்துவத்தின் குறியீடாக உள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் குறிப்பாக குழந்தை தயாரிப்பு நிறுவனங்கள், உரிமம் பெறுவதற்கு அதிக வாய்ப்பு நிலவுகிறது மேலும் LIMA இந்தியாவில் நாங்கள் அவர்களின் சிறந்த பங்களிப்பை காண விரும்புகிறோம். பொருளாதாரம், சில்லரை மற்றும் மின் வணிகம், ஆகியவற்றில் வளர்ச்சியுடன் தொழில்துறையில் உரிமம் பெறுதல் நிச்சயமாக நிகழ வேண்டியுள்ளது."
இந்தியாவில் ஆரம்ப நிலையில் உள்ள குழந்தை கவனிப்பு பிரிவானது அதன் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் மிகப்பெரிய ஆற்றல் பெற்றுள்ளது. இந்த பிரிவானது அதன் வருமானத்தில் கிட்டத்தட்ட CAGRல் 17% கொண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. தயாரிப்புகளை பொருத்தவரையில் , மிகவும் பிரிக்கப்பட்டிருந்தாலும் கைக்குழந்தை மற்றும் குழந்தை கவனிப்பின் நெறிமுறை இயல்பின் காரணமாக ஒருங்கிணைக்கப்பட்ட நபர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது இதில் ஊட்டச்சத்து, ஆரோக்கியம், அறிவு தூண்டுதல்,தோல் பராமரிப்பு மற்றும் தலை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தும் அடங்கும்.
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆவர், இது கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியோக்கள், உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழிநடத்தல் மூலமாக, உலகெங்கிலும் இருந்து விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவபர்களை இணைக்கும் தொழில்துறையுடன் கூடிய தளங்களை அளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய அளவிலான கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை UBM இந்தியா நடத்துகிறது; பலதரப்பட்ட தொழில்துறை பிரிவுகளிடையே வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது. UBM ஆசியா நிறுவனமான, UBM இந்தியா-விற்கென மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளது. லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்ட UBM plcக்கு சொந்தமானது UBM ஆசியா. ஆசியாவில் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராக UBM ஆசியா விளங்குகிறது மேலும் இது சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் திகழ்கிறது.
அதிக தகவல்களுக்கு, தயவுசெய்து http://www.ubmindia.in க்கு வருகை தரவும்.
UBM plc பற்றி:
UBM plc என்பது உலகில் மிகப்பெரிய ப்யுர்- பிளே பி2பி நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்குகிறது. அதிகரிக்கும் டிஜிட்டல் உலகில், மனித மட்டத்தில் அர்த்தமுள்ள இணைப்பிற்கான மதிப்பு முக்கியமானதாக இல்லை. UBM ல், நாங்கள் சேவைபுரியும் தொழில்துறை பிரிவுகளுக்கான எங்களது ஆழ்ந்த அறிவு மற்றும் உணர்ச்சி மக்கள் வெற்றிபெறும் வண்ணம் மதிப்புமிக்கக அனுபவங்களை உருவாக்குகிறது. எங்களது நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளை உருவாக்குகிறார்கள், ஒப்பந்தங்களை முடிக்கிறார்கள் மேலும் தங்கள் வர்த்தகத்தை வளர்க்கிறார்கள். 20 நாடுகளில் பரவி, 50க்கும் அதிகமான வெவ்வேறு பிரிவுகளுக்கும் சேவை செய்து - ஃபேஷன் முதல் மருந்துத்துறை பொருட்கள் வரை எங்களது 3,750+ மக்கள் சேவையை அளிக்கிறார்கள். இந்த உலகளாவிய கட்டமைப்புகள், திறன் பெற்ற, உணர்வுமயமான மக்கள் மற்றும் சந்தை - முன்னணி நிகழ்வுகள், வியாபார மக்கள் தங்கள் குறிக்கோள்களை அடைய அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
அதிக தகவல்களுக்கு, http://www.ubm.com க்கு வருகை தரவும்; UBM பெருநிறுவன செய்திகளுக்கு, @UBM, UBM Plc LinkedIn ல் எங்களை ட்விட்டரில் பின்தொடரவும்
மீடியா தொடர்பு :
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
UBM India Pvt. Ltd.
Mili Lalwani
[email protected]
+91-9833279461
UBM India Pvt. Ltd.
Share this article