ஹைதராபாத், இந்தியா, April 25, 2018 /PRNewswire/ --
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இந்தியா கண்காட்சி (REI இந்தியா) ஒருங்கிணைப்பாளர்களால் நடத்தப்பட்ட தெற்கு இந்தியாவின் முக்கிய ஆற்றல் கண்காட்சியில் 150க்கும் அதிகமான கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர்.
ஹைதராபாத்தில் (ஏப்ரல் 13-14) இரண்டு நாள்- கண்காட்சியான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இந்தியா (REI) ஒருங்கிணைப்பாளர்களான UBM இந்தியா-ஆல் RenewXன் மூன்றாம் பதிப்பு நடத்தப்பட்டது. தொழில்துறை போக்குகள், சவால்கள் மற்றும் சந்தை உள்நோக்குகளை பற்றி தெற்கு இந்தியாவின் கிரீன் (பச்சை) பொருளாதார சமூகம் கலந்தாலோசிக்க நல்ல கூட்டமாக இந்த கண்காட்சி அமைந்தது.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Logo: https://mma.prnewswire.com/media/676833/RenewX_2018_Logo.jpg )
துவக்க விழாவில் Shri G. Raghuma Reddy, சேர்மன் மற்றும்மேனேஜிங் டைரக்டர், தெலுங்கானா லிமிடெட்டின் தெற்கு ஆற்றல் விநியோக நிறுவனம்; Shri Ismail Ali Khan, சேர்மன், தெலுங்கானா மாநில மின்சார ஒழுங்குமறை ஆணையம்; Mr. Uday Kiran, டைரக்டர், உள்கட்டமைப்பு, அரசாங்கம் மற்றும் உடல்நலம், இந்தியாவில் KPMG; Mr. Yogesh Mudras,மேனேஜிங் டைரக்டர், UBM இந்தியா மற்றும் Mr. Rajneesh Khatta, குழு டைரக்டர்,UBM இந்தியா ஆகிய தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்றனர்
உற்பத்தியாளர்கள், ஈபிசிக்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றதால் இந்த வருட கண்காட்சி அளவில் பெரியதாகவும், ஆழமானதாகவும் இருந்தது. RenewX மூன்றாம் பதிப்பு கண்காட்சியில், தொழில்துறை வல்லுநர்கள் மற்றும் முக்கிய கண்காட்சியாளர்கள் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், டாட்டா பவர் சோலார், விக்ரம் சோலார் லிமிடெட், ஆங்கர் எலக்ட்ரிக்கல்ஸ் பிரைவேட் லிமிடெட் (பேனாசோனிக் குழு நிறுவனம்), ஹேவல்ஸ் இந்தியா லிமிடெட், பிரீமியர் சோலார், ஃபோகஸ் இந்தியா, ஓஆர்பி எனர்ஜி, கனடியன் சோலார் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், ஜிங்கோ சோலார், ஜியான்சு குட்வி பவர் சப்ளை டெக்னாலஜி கோ. லிமிடெட், ஜின்லாங் (சோலிஸ்) டெக்னாலஜிஸ் கோ லிமிடெட்,ஓரியானோ க்ளீன் எனர்ஜி பிரைவேட் லிமிடெட், சோலார் எட்ஜ், பவர் ஒன் மைக்ரோ சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எனெக்ட்ரிக் புரோஜெக்ட்ஸ் அன்ட் சொல்யுசன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியோர் பங்கேற்றனர்.
அதன் மூன்றாம் பதிப்பில், கண்காட்சியானது ஸ்டார்ட்- அப்களுக்கும் அதனுடன் தெலுங்கானா மாநிலம் மற்றும் சீனாவிற்கும் அர்ப்பணிப்பான கூடாராமாக அமைந்துள்ளது. சீன கூடாரத்தில் ஜேஜியாங் ஜிங்கோ லிமிடெட்; குட்வி பவர் சப்ளை டெக்னாலஜி கோ லிமிடெட்; ஜின்லாங் (சோலிஸ் டெக்னாலஜிஸ் கோ லிமிடெட்; அன்ஹு டாஹெங் எனர்ஜி டெக்னாலஜி கோ லிமிடெட்; Tbea Xi'an எல்க்ட்ரிக் டெக்னாலஜி கோ லிமிடெட்; மற்றும் ஜுஹாய் ஜிமி சோலார் எக்யுப்மென்ட் கோ போன்றவை உள்ளன. தெலுங்கானாவிலிருந்து ஸ்ரீ சாவித்ரி சோலார் பிரைவேட் லிமிடெட், தெலுங்கானா மாநில புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு நிறுவன லிமிடெட்(TSREDCO); பிரீமியிர் சோலார் பவர்டெக் பிரைவேட் லிமிடெட்;பிரீமியர் சோலார் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட்; ஆர்க்கிமிடீஸ் கிரீன் எனர்ஜிஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் சிக்னி எனர்ஜி பிரைவேட் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் பங்கேற்றன. ஸ்டார்ப்- அப் கூடாரத்தில் ஆர்பிகே கிரீன் வர்த்தகம்; கேங்கோ எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட்; மற்றும் கிரேஸ் சோலார் சிஸ்டம்ஸ் போன்றவை உள்ளன. வருகை புரிந்தவர்களுக்கு மிக ஆழமான மதிப்பு கூட்டுதல் சேவை மற்றும் அறிவு பகிர்தலை இவை அனைத்தும் வழங்கின.
இந்திய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு ஏஜென்சி லிமிடெட், தெலுங்கானா மாநில புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாட்டு நிறுவன லிமிடெட்(TSREDCO), ஆந்திரப் பிரதேசத்தின் எலக்ட்ரானிக் இன்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன், கிரீன் ஜாப்ஸ்களுக்கான திறன் கவுன்சில், இந்தோ- ஜெர்மன் ஆற்றல் துணை குழுமம், TELMA, தெலுங்கானா மற்றும் ஆந்திரப்பிரதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை சம்மேளனம் (FTAPCCI) மற்றும் இந்திய பயோகேஸ் அசோசியேஷன் (IBA) போன்ற முக்கிய மத்திய முகவர்களால் RenewX துணை செய்யப்பட்டுள்ளது.
ஆற்றல் நிறைந்த இரண்டு நாள் மாநாட்டு கண்காட்சியில் முக்கிய பொருளான , 'சூரியனை மூலமாக்குதல்' (சோர்சிங் த சன்)' மூலம் வியாபாரத்தில் புதுப்பிக்கத்தக்கவைகளை ஒருங்கிணைக்க அதனை இயக்கும் சிறந்த தீர்வுகளை கண்டுபிடிக்க முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. நிகழ்வு ஆய்வு வழங்கல்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்கல்கள் உள்ளிட்ட மாநாட்டில் நடைபெற்ற அனைத்தும் அடிமட்டத்திலிருந்து அனுபவத்தை முன்னிறுத்தியுள்ளன மேலும் தொழில்நுட்பத்தில் உள்ள பொருத்தமான விஷயங்களை கலந்தாலோசித்தன.
இந்த வருட முக்கிய மேற்கோளாக வெற்றிகரமான கிரீன் ஜாப் கண்காட்சியாக இது நடைபெற்றது. கிரீன் ஜாப்ஸ்- SCGJ UBM இந்தியா திறன் கவுன்சிலுடன் இணைந்து ஒருங்கிணைக்கப்பட்ட 'கிரீன் ஜாப் ஃபேர்' புதுப்பிக்கத்தக்க ஆற்றல் சந்தையிலுள்ள இடைவெளிகளை நிரப்பியது. இந்த கண்காட்சியானது பட்டதாரி மாணவர்கள், வேலை செய்யும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் புதிய தொழில்முனைவோர்கள் போன்ற தூய்மை ஆற்றல் பிரிவில் உள்ள வேலை வாய்ப்புகளை தேடுபவர்களுக்கானது மேலும் இது அதிகளவு வேலைகள் உள்ள புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவில் முன்னணி நிறுவனங்களுடன் வேலை செய்யும் வாய்ப்பை இளைஞர்களுக்கு வழங்குகிறது.
கண்காட்சியில் முழு நாள் பயிற்சி ஒர்க்ஷாப் 'சூரிய ஆற்றல் நிறுவனங்களின் ஆற்றல் பெறும் மதிப்பீடு / முன்கணிப்பு மேற்பார்வையுடன் வடிவமைப்பு மற்றும் நடைமுறைப்படுத்தலில் முக்கிய பயிற்சிகள்' நடைபெற்றது. இந்த ஒர்க்ஷாப்பானது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்தின் தன்னியக்க நிறுவனமான NIWE ன் கீழ் உள்ள சோலார் ரேடியேசன் ரிசோர்ஸ் அசெஸ்மென்ட் & அட்வான்ஸ் மெசர்மென்ட் ஸ்டேஷன் (எஸ்ஆர்ஆர்ஏ) உடன் கூட்டான லாசார்யா சிலிக்கான் லிமிடெட்- ஆல் நடத்தப்பட்டது .
RenewX 2018 வெற்றிகரமான நிறைவு விழாவில் Mr. Yogesh Mudras,மேனேஜிங்டைரக்டர் பேசும்போது, 'அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அதன் பாதையை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளது. இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வல்லுநர்களின் நேர்மறையான எதிர்பார்ப்புகளையும் விட உயர்ந்துவிட்டது. அரசாங்கத்தின் நோக்கமானது 2022க்குள் நாட்டின் புதுப்பிக்கதக்க ஆற்றல் 175 GW அடைய வேண்டும் என்பதே ஆகும் இது சர்வதேச பார்வையையும் மேலும் மதிப்பு சங்கிலியில் அதிகளவு மூலதன வாய்ப்பையும் நல்கியது. தெலுங்கானா மாநிலம் அது உருவான காலந்தொட்டே மிக வலுவாக சூரிய ஆற்றலுக்கு ஆதரவு தருகிறது மேலும் தெற்கு இந்தியாவில் பிற மாநிலங்களிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை தூண்டி இந்த துறைக்கு பிராந்திய ஆதரவை அதன் தொழில்துறை கொள்கைகள் மற்றும் அரசாங்க விதிகளாலும் அளித்துள்ளது. RenewX அதன் தொடக்கத்திலிருந்தே கண்டுபிடிப்புகள், கொள்கைகள் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பிரிவு செயல்முறைகள் ஆகியவற்றில் தெற்கு இந்தியாவில் போட்டித்தளமாக மாறிவிட்டது. வலுவான தொழில்நுட்ப பிரிவுகள், மிகைப்படுத்தப்பட்ட அறிவு குழுமங்கள், பிற முக்கிய பிராண்டுகளின் போட்டி காட்சிப்படுத்தல்கள் மற்றும் புதுமையான சந்திப்புகள் மூலம் தனிப்பட்ட போக்கை கண்காட்சியானது அதன் மூன்றாம் பதிப்பிலேயே அடைந்துவிட்டது' என்று கூறினார்.
இந்தியா அதன் எதிர்வரும் முக்கிய புரோஜெக்ட்களுக்காக பச்சை (கிரீன்) முயற்சிகளை செய்வதற்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களுக்கு மாறுவதற்கும் பல செயல்களை செய்கிறது. வர்த்தக துறைமுகங்கள், ரெயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் காட்சி சாலைகள் திறமையாக உருவாக்கப்பட்டு அவை கார்பன் உமிழ்வுகளை குறைத்து, விரைந்து வளர்ந்துவரும் பச்சை ஆற்றல் நுகர்வோராக நாட்டை உருவாக்க மேம்படுத்தப்பட்டுள்ளது. நம்முடைய நாடு , ஃபிரான்ஸ் மற்றும் வேர்ல்ட் பேங்க் போன்ற சர்வதேச அமைப்புகளின் உதவியையும் அதன் நோக்கங்களை நிறைவேற்ற பெற்றுள்ளது.;2014, மே மாதம் 26 ஆம்தேதி 2,650 MW ஆக இருந்த நாட்டின் சூரிய ஆற்றல் மின்தேக்கத்திறனானது, 2018, பிப்ரவரி மாதத்தில் 20GW மின்தேக்கத்திறனாக அதிகரித்துள்ளது. இந்த 20 GW திறன் 2022 க்குதான் முதலில் இலக்காக கொள்ளப்பட்டது மேலும் கால அட்டவணையின் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அரசாங்கம் அதன் இலக்கை அடைந்துவிட்டது. இந்திய அளவில் பார்த்தோமானால், தெலுங்கானாவில்தான் மிக அதிக நிறுவப்பட்ட சோலார் ஆற்றல் திறன் உள்ளது; இதனுடன் ஆந்திரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் நெருங்கி வருகிறது இவற்றுடன் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் குஜராத் உள்ளது.
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆவர், இது கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியோக்கள் , உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழிநடத்தல் மூலமாக , உலகெங்கிலும் இருந்து விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவபர்களை இணைக்கும் தொழில்துறையுடன் கூடிய தளங்களை அளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய அளவிலான கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை UBM இந்தியா நடத்துகிறது; பலதரப்பட்ட தொழில்துறை பிரிவுகளிடையே வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது. UBM ஆசியா நிறுவனமான, UBM இந்தியா-விற்கென மும்பை, புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளது. லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்ட UBM பிஎல்சிக்கு சொந்தமானது UBM ஆசியா. ஆசியாவில் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராக UBM ஆசியா விளங்குகிறது மேலும் இது சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் திகழ்கிறது.
அதிக தகவல்களுக்கு, தயவுசெய்து http://www.ubmindia.in க்கு வருகை தரவும்.
UBM plc பற்றி:
UBM plc என்பது உலகில் மிகப்பெரிய ப்யுர்- பிளே பி2பி நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்குகிறது. அதிகரிக்கும் டிஜிட்டல் உலகில், மனித மட்டத்தில் அர்த்தமுள்ள இணைப்பிற்கான மதிப்பு முக்கியமானதாக இல்லை. UBM ல், நாங்கள் சேவைபுரியும் தொழில்துறை பிரிவுகளுக்கான எங்களது ஆழ்ந்த அறிவு மற்றும் உணர்ச்சி மக்கள் வெற்றிபெறும் வண்ணம் மதிப்புமிக்கக அனுபவங்களை உருவாக்குகிறது. எங்களது நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளை உருவாக்குகிறார்கள், ஒப்பந்தங்களை முடிக்கிறார்கள் மேலும் தங்கள் வர்த்தகத்தை வளர்க்கிறார்கள். 20 நாடுகளில் பரவி, 50க்கும் அதிகமான வெவ்வேறு பிரிவுகளுக்கும் சேவை செய்து - ஃபேஷன் முதல் மருந்துத்துறை பொருட்கள் வரை எங்களது 3,750+ மக்கள் சேவையை அளிக்கிறார்கள். இந்த உலகளாவிய கட்டமைப்புகள், திறன் பெற்ற, உணர்வுமயமான மக்கள் மற்றும் சந்தை - முன்னணி நிகழ்வுகள், வியாபார மக்கள் தங்கள் குறிக்கோள்களை அடைய அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
அதிக தகவல்களுக்கு, http://www.ubm.com க்கு வருகை தரவும்; UBM பெருநிறுவன செய்திகளுக்கு, @UBM, UBM Plc LinkedIn ல் எங்களை ட்விட்டரில் பின்தொடரவும்
மீடியா தொடர்பு :
Roshni Mitra
UBM India
[email protected]
+91-22-61727000
Mili Lalwani
[email protected]
+91-9833279461
UBM India
Share this article