மும்பை, April 19, 2018 /PRNewswire/ --
தனித்தன்மையுடன் நிலைப்படுத்தப்பட்ட வர்த்தக கண்காட்சியின் 6வது பதிப்பு
மும்பையிலுள்ள பாம்பே கன்வென்ஷன் அண்ட் எக்சிபிஷன் செண்டர், அரங்கு 3ல் ஏப்ரல் 26 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை தனித்தன்மையுடன் நிலைநிறுத்தப்பட்ட குழந்தைகள், கைக்குழந்தை மற்றும் மகப்பேறு கண்காட்சி இந்தியா 2018 (CBME இந்தியா) வின் 6வது பதிப்பை UBM இந்தியா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய குழந்தைகள் மற்றும் மகப்பேறு தயாரிப்பு வர்த்தக கண்காட்சியான , CBME இந்தியா, குழந்தை தயாரிப்புகளின் உள்ளூர் மற்றும் உலக உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு நிகரற்ற வர்த்தக வாய்ப்பை வழங்குகிறது, விநியோகஸ்தர்கள், இறக்குமதியாளர்கள், செல்வாக்குடைய வணிகர்கள் மற்றும் விற்பனை தலைமையாளர்கள் ஆகியோருடன் நவீன சில்லரை வியாபாரங்கள், ஆன்லைன் சில்லரை வியாபாரிகள், திரட்டுபவர்கள்,சேவை அளிப்பவர்கள், வணிக முதலீட்டாளர்கள் மற்றும் முகவர்கள் வரை தேர்ந்தெடுத்து அவர்களுடன் இணைந்து, நெட்வொர்க் அமைத்து மற்றும் வியாபாரத்தை நடத்த வாய்ப்பை அளிக்கிறது . கைக்குழந்தை, குழந்தை ஆடைகள்,குழந்தைகள் காலணிகடைகள், மகப்பேறு கால காலணிகள்; பொம்மை கடைகள், சூப்பர்மார்க்கெட்டுகள், ஹைபர் மார்க்கெட்டுகள், டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், ப்ரீ- ஸ்கூல்கள், நர்சிங் ஹோம்கள், தனிப்பட்ட நுகர்வோர்கள், சேவை நிறுவனங்கள், வடிவமைப்பாளர்கள், மன்றங்கள் மற்றும் தூதரகங்கள் போன்ற பல தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் அடங்குவர்.
(Logo: https://mma.prnewswire.com/media/675607/UBM_Logo.jpg )
(Photo: https://mma.prnewswire.com/media/678670/CBME_India_2018_Logo.jpg )
இந்த மூன்று நாள் கண்காட்சி இந்திய மற்றும் சர்வதேச வழங்குனர்கள், குழந்தை, கைக்குழந்தை மற்றும் மகப்பேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் உற்பத்தியாளர்கள் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரும். 150க்கு மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கண்காட்சியாளர்கள் முதல் பங்கு கொண்ட 12 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் வரை அனைவரும் தயாரிப்புகளை காட்சிப்படுத்த இந்த கண்காட்சி வாய்ப்பை நல்கும். இந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தங்கள் 450க்கும் அதிகமான பிராண்டுகளை காட்சிப்படுத்துவார்கள் மேலும் அதிக அளவிலான பேபி கேர் தயாரிப்புகள்,பொம்மைகள், குழந்தை உணவு, ஆர்கானிக் ஆடைகள், ஊட்டச்சத்து மருந்துகள், பணிச்சூழலுக்கேற்ற நாற்காலிகள், உரிமம் பெற்ற பிராண்டுகள், ஸ்டேஷனரிகள்,பரிசுப்பொருட்கள்,கைக்குழந்தை பாதுகாப்பு தொழில்நுட்பம், மூளை வளர்ச்சி கருவிகள் ஆகியவற்றை உயர் தரத்துடன், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பார்ப்பவரைக் கவரும் சர்வதேச தயாரிப்புகளை காணுவதற்கு வாய்ப்பை அளிக்கிறது. இந்த வருட வர்த்தக கண்காட்சியில் பங்கு பெற ஆர்வமாக உள்ள நாடுகள் ,சீனா, கனடா,கொரியா,சிங்கப்பூர்,ரஷ்யா,சௌதி அரேபியா, ஐரோப்பா, அமெரிக்கா, வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகியவை. மிக முக்கியமாக இந்த நிகழ்ச்சி , உரிமம் பெற்ற தொழில்துறை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு (LIMA) , இந்திய இறக்குமதியாளர்கள் வர்த்தக மற்றும் தொழில்துறை சேம்பர் (IICCI) மற்றும் அனைத்து இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (AIAI) போன்ற கூட்டமைப்புகளால் நன்றாக ஆதரிக்கப்படுகிறது.
சில முக்கிய கண்காட்சியாளர்களாக, தி ஹிமாலயா மருந்து கம்பெனி, நோபள் ஹைஜீன் பிரைவேட் லிமிடெட், Artsana இந்தியா பிரைவேட் லிமிடெட், R for Rabbit Baby Products Pvt. Ltd., அஜாஃப்ரான் இன்னோவெகேசன் லிமிடெட், மேன்டாட் இம்பெக்ஸ், ராயல் இன்டஸ்ட்ரீஸ் (தாய்லாந்து) பப்ளிக் கம்பெனி லிமிடெட், ஃபர்ஸ்ட் கேர் இந்தியா பிரைவேட் லிமிடெட், நெக்டர் பயோஃபார்மா பிரைவேட் லிமிடெட்., M/s. ஏ ஸ்டார் மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட், டிரீம் தியேட்டர், ரெஸ்பர் இன்டர்நேஷனல் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், சன்ஹெரி மார்க்கெட்டிங் பிரைவேட் லிமிடெட், கேலக்சி இன்கார்ப்பரேசன், சூப்பர்பிராண்ட்ஸ் மெடிக்கல் இன்னோவேசன் பிரைவேட் லிமிடெட், சாஃப்ட்சென்ஸ் கன்ஸ்யுமர் புரோடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் மீ அன்ட் மாம்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் பங்கேற்றனர்.
CBME 2018 பற்றிய அறிவிப்பில் பேசுகையில், திரு. யோகேஷ் முத்ராஸ், நிர்வாக இயக்குனர், UBM இந்தியா, " முளை விடும் மற்றும் இளம் தலைமுறை இந்தியாவின் தேவைகளுக்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கண்காட்சியான CBMEன் 6வது பதிப்பை வெளியிடுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். சந்தை போக்கு மற்றும் நுகர்வோரின் மாறிவரும் தேவைகளை கற்றுக்கொள்ள CBME ஒரு சிறந்த இடமாக இருக்கும். கடந்த பல வருடங்களாக, விழிப்புணர்வை உருவாக்குதல் மற்றும் உண்மையாகவே குழந்தை வளர்ப்பை எளிதாக மற்றும் மகிழ்வாக மாற்றும் சிறந்த தயாரிப்புகளின் தேவை போன்றவற்றில் சந்தையில் முக்கிய பங்கை வகித்துள்ளது." என்று கூறினார்.
மேலும் அவர் " கண்காட்சியாளர்கள் மற்றும் வருகை தருபவர்கள் இருவருக்கும் சிறந்த மற்றும் புதுமையான மதிப்பு மிக்க கருத்துரையை அளிக்கும் அதன் முயற்சியில், இந்த வருடம் CBME இந்தியா, உரிமத்தின் மீது சிறப்பு காட்சிக்கூடத்தின் சாட்சியாக இருக்கும். இலாபகரமான உரிமம் பெறுதல் மற்றும் விற்பனை தொழில்துறை வளர்ச்சியடைந்துள்ளது. இதற்கு காரணம் உலகளாவிய பொழுதுபோக்குகளை இந்திய நுகர்வோர் எளிதில் அணுகுதல் மற்றும் அதனால் அவர்கள் மத்தியில் அதிகரிக்கும் ரசிகர் தொடர்புகள் , உதாரணமாக, உலகளாவிய இசை குழுகள் அல்லது கார்ட்டூன் கதாபாத்திரங்கள் போன்றவையாகும். இவை உரிமம் பெறுவதால் உலகமெங்கும் விரிவடைதல் மற்றும் வளர்ச்சி, உரிமம் பெற்ற பயிற்சியாளர்களின் நிபுணத்துவத்தின் அளவை உயர்த்துதல் மேலும் இந்திய வர்த்தக சமூகத்திற்கு உரிமம் பெறுவதின் பலன்களை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குதல் போன்றவை விரைவடையும் என நாங்கள் நம்புகிறோம்." என்றும் கூறினார்.
3 நாட்கள் நடந்த கண்காட்சியில் CBME 2018, ஆழ்ந்த அறிவு நிரம்பிய அமர்வுகள், கருத்தரங்குகள், புதிய போக்குகளுக்கான கலந்துரையாடல்கள் மற்றும் இந்தியாவில் விரைவாக விரிவாகும் மற்றும் வேறுபட்ட சில்லரை விற்பனை பிரிவுகளைப் பற்றிய பல்வேறு சர்வதேச காட்சிக்கூடங்கள் உள்ளடங்கிய நிகழ்வுகள் நடந்தன. உரிமம் பெற்ற தொழில்துறை வல்லுநர்கள் திரு. நிதின் கர்லா - AI லைசன்சிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், திரு. பெர்மேந்திரா சிங்- தலைமை - நுகர்வோர் தயாரிப்புகள் Mattel Toys (India) Pvt Ltd ஆகியோரின் முன்னிலையில் பார்வையாளர்களை கவருவதற்காக LIMA வின் உரிமம்பெறும் காட்சிக்கூடம் அமைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் 'உங்கள் சந்தை வளர்ச்சி பெற உரிமம் பெறும் காட்சிக்கூடம்' என்ற தலைப்பில் கலந்துரையாடுவார்கள். இந்த அமர்வில் குழந்தைகள் பிரிவில் உரிமம் பெறுதல், எவ்வாறு முதலாளிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு தங்கள் போர்ட்ஃபோலியோவில் உரிமம் பெறுவதை சேர்ப்பதால் பலன் கிடைக்கும் மேலும் இந்திய சில்லரை வர்த்தக விரிவுபடுத்தல் மற்றும் உரிமம் பெறுதலின் தாக்கம் மற்றும் புதிய உரிமம் சார்ந்த வகைகளில் வரவிருக்கும் வாய்ப்புகள் ஆகியவற்றை பற்றியும் கலந்துரையாடுவராஃகள்.
இந்தியாவின் LIMA தலைவர், ஜிகி ஜார்ஜ் கூறுகையில், " தொழில்துறை உச்சம் பெற்ற இந்த நேரத்தில் இந்தியாவில் உரிமம் பெறுவதற்கு இது சிறந்த நேரமாக இருக்கும். கடந்த சில வருடங்களில் அளவுகளில் வளர்ச்சி மற்றும் உரிமத்தின் நோக்கம், அதன் வளர்ச்சிக்கான முக்கியத்துவத்தின் குறியீடாக உள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் குறிப்பாக குழந்தை தயாரிப்பு நிறுவனங்கள், உரிமம் பெறுவதற்கு அதிக வாய்ப்பு நிலவுகிறது மேலும் LIMA இந்தியாவில் நாங்கள் அவர்களின் சிறந்த பங்களிப்பை காண விரும்புகிறோம். பொருளாதாரம், சில்லரை மற்றும் மின் வணிகம், ஆகியவற்றில் வளர்ச்சியுடன் தொழில்துறையில் உரிமம் பெறுதல் நிச்சயமாக நிகழ வேண்டியுள்ளது."
சிறப்பு ஃபேஷன் அன்ட் கிட்ஸ் கான்கிளேவ்' அமர்வில் பின்வரும் தலைப்புகள் கலந்துரையாடப்படும்:
இந்தியாவில் ஆரம்ப நிலையில் உள்ள குழந்தை கவனிப்பு பிரிவானது அதன் அதிகரித்து வரும் மக்கள் தொகையால் மிகப்பெரிய ஆற்றல் பெற்றுள்ளது. இந்த பிரிவானது அதன் வருமானத்தில் கிட்டத்தட்ட CAGRல் 17% கொண்டு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. தயாரிப்புகளை பொருத்தவரையில் , மிகவும் பிரிக்கப்பட்டிருந்தாலும் கைக்குழந்தை மற்றும் குழந்தை கவனிப்பின் நெறிமுறை இயல்பின் காரணமாக ஒருங்கிணைக்கப்பட்ட நபர்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது இதில் ஊட்டச்சத்து, ஆரோக்கியம், அறிவு தூண்டுதல்,தோல் பராமரிப்பு மற்றும் தலை பராமரிப்பு உள்ளிட்ட அனைத்தும் அடங்கும்.
கண்காட்சியாளர்கள் மேற்கோள்கள்:
பிரேம்நாத் ஜெயக்குமார்,டைரக்டர், Resper International India (Pvt) Ltd
குடும்பங்களில் எழுத்தறிவு அதிகரித்துள்ள நிலையில், குழந்தை, கைக்குழந்தை மற்றும் மகப்பேறு தயாரிப்புகளுக்கான இந்திய சந்தை மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. மேலும், கல்வியறிவுள்ள, வசதிபடைத்த குடும்பங்களில் குழந்தைபிறப்பு என்பது மகப்பேறு முறை, பிறப்புக்கு - முந்தைய ஆரோக்கிய தயாரிப்புகள், புதிதாக பிறந்த குழந்தைக்கான பொருட்கள், குழந்தை குளியலுக்கான தயாரிப்புகள் போன்றவற்றில் அதிகரிக்கும் தேவையை காட்டுகிறது. இந்த வருட CBME இந்தியாவில், நாங்கள் எங்களது வர்த்தகத்தில் பயனை தரும், இந்திய நுகர்வோர் மக்கள் தொகைக்கேற்ற குறிப்பிட்ட வகையிலான புதுமையான தயாரிப்புகள் மற்றும் புதிய பிராண்டுகளை எதிர்பார்க்கிறோம். நாங்கள் முதல் முறையாக CBME இந்தியாவில் பங்கேற்கவிருக்கிறோம், இங்கு நாங்கள் வாகன இருக்கை பாதுகாப்பதற்காக கடுமையான ஐரோப்பிய தரநிலைப்படுத்தல்களை நிறைவேற்றிய புத்தம் புதிய "i- Size" ஐ அறிமுகப்படுத்த உள்ளோம். ஒவ்வொரு வருடமும் சாலை விபத்துக்களினால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக பாதிக்கப்பட்டள்ளது மேலும் இந்த தொழில்நுட்பம் இந்திய சாலைகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக மாற உதவுகிறது."
குனால் போபட், நிறுவனர், R for Rabbit Baby Products Pvt. Ltd.
"ஒட்டுமொத்த CAGRல் 20% உடன் குழந்தை, கைக்குழந்தை மற்றும் மகப்பேறு சந்தை விரைவாக முன்னேறி வருகிறது. மின்- வர்த்தகம் காரணமாகவும் மில்லியன்கணக்கான நுகர்வோர்களை எளிதில் அடைய முடிகிறது குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது அடுக்கு நகரங்களில் குழந்தை மற்றும் கைக்குழந்தை கடைகளில் வாங்குவதில் உள்ளார்ந்த தயக்கம் இருந்துவரும் நகரங்களையும் அடைய முடிகிறது. நாட்டிலேயே குழந்தைகள்,கைக்குழந்தை மற்றும் மகப்பேறு தயாரிபுக்களுக்கான ஒரு சிறப்பு கண்காட்சியான CBME இந்தியாவில், அதிக அளவிலான சில்லரை வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்கள் பங்கேற்பார்கள் என நாங்கள் நம்புகிறோம். வளர்ச்சியின் காரணமான பல்வேறு புதுமைகளை இந்த பிரிவு வெளிக்காட்டும் மேலும் அதனால் நாம் பல்வேறு விரும்பத்தக்க, புதுமையான தயாரிப்புகளை எதிர்பார்க்கலாம். இந்திய நுகர்வோரிடம் வழங்க விரும்பும் எங்களது சமீபத்திய சில புதுமைக்கண்டுபிடிப்புகளை நாங்களும் கண்காட்சியில் காட்சிப்படுத்துவோம்."
பிரத்யும்ன் & கிருஷ்ணா, நிறுவியவர்கள், Buddsbuddy
" கடந்த வருட கண்காட்சியில் பேபி கேர் சந்தையில் நாங்கள் அதிகளவு ஆதரவை பெற்றுள்ளோம் அதற்கு காரணமான CBME எங்களுக்கு மிகவும் முக்கியமானது. சர்வதேச பேபிகேர் மற்றும் மகப்பேறு தயாரிப்புகளின் ஒவ்வொரு வளரும் நிறுவனர்களுக்கான கண்டிப்பான காட்சித்தளமாக இது விளங்குகிறது. நமது நாட்டின் சிறந்த விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்களை அடைய இது அதிகளவிலான வாய்ப்புகளை அளிக்கிறது. நாங்கள் 2018ல் எங்களது பங்கேற்பில் நம்பிக்கையுடன் இருக்கிறோம் மேலும் இன்னும் நல்ல விளைவுகளை பெறுவோம் என நம்புகிறோம்."
ராஜேஷ் வோஹ்ரா, தலைமை நிர்வாக அதிகாரி, Artsana இந்தியா, சிக்கோ
"குழந்தைகள், கைக்குழந்தை, மகப்பேறு கண்காட்சி (CBME) இந்தியாவில் தொடங்கியதிலிருந்தே அதனுடன் இணைந்திருப்பதில் சிக்கோ மகிழ்வடைகிறது. பல்- நிபுணத்துவ பேபி கேர் தயாரிப்புகள் முன்னணி நிறுவனமான சிக்கோ-வில் நாங்கள், நர்சிங், காஸ்மெடிக்ஸ் மற்றும் கைக்குழந்தை பயணம் உள்ளிட்ட பலதரப்பட்ட தயாரிப்புகளை காண்பிக்க இந்த தளத்தை பயன்படுத்த உள்ளோம் இதனால் எங்களது மதிப்புவாய்ந்த நுகர்வோர்கள் மற்றும் சேனல்பங்குதாரர்கள், இந்தியாவெங்கும் எங்களால் தயாரிப்புகளை அடையாளப்படுத்த முடிகிறது. இந்தியாவில் பேபி கேர் பிரிவுகளை மேம்படுத்துவதில் CBME முக்கிய பங்கு வகிக்கிறது மேலும் இந்த முயற்சியில் இணைந்திருப்பதில் சிக்கோ பெருமைப்படுகிறது."
UBM இந்தியா :
UBM இந்தியா என்பது இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஆவர், இது கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியோக்கள் , உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழிநடத்தல் மூலமாக ,உலகெங்கிலும் இருந்து விற்பனையாளர்கள் மற்றும் வாங்குவபர்களை இணைக்கும் தொழில்துறையுடன் கூடிய தளங்களை அளிக்கிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய அளவிலான கண்காட்சிகள் மற்றும் 40 மாநாடுகளை யுபிஎம் இந்தியா நடத்துகிறது; பலதரப்பட்ட தொழில்துறை பிரிவுகளிடையே வர்த்தகத்தை விரிவுபடுத்துகிறது. யுபிஎம் ஆசியா நிறுவனமான, யுபிஎம் இந்தியா-விற்கென மும்பை,புது டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்கள் உள்ளது. லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில் பட்டியலிடப்பட்ட யுபிஎம் பிஎல்சிக்கு சொந்தமானது யுபிஎம் ஆசியா. ஆசியாவில் முன்னணி கண்காட்சி ஒருங்கிணைப்பாளராக யுபிஎம் ஆசியா விளங்குகிறது மேலும் இது சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக ஒருங்கிணைப்பாளராகவும் திகழ்கிறது.
அதிக தகவல்களுக்கு, தயவுசெய்து http://www.ubmindia.inக்கு வருகை தரவும்.
UBM பிஎல்சி :
UBM பிஎல்சி என்பது உலகில் மிகப்பெரிய ப்யுர்- பிளே பி2பி நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பாளராக விளங்குகிறது. அதிகரிக்கும் டிஜிட்டல் உலகில், மனித மட்டத்தில் அர்த்தமுள்ள இணைப்பிற்கான மதிப்பு முக்கியமானதாக இல்லை. யுபிஎம் ல், நாங்கள் சேவைபுரியும் தொழில்துறை பிரிவுகளுக்கான எங்களது ஆழ்ந்த அறிவு மற்றும் உணர்ச்சி மக்கள் வெற்றிபெறும் வண்ணம் மதிப்புமிக்கக அனுபவங்களை உருவாக்குகிறது. எங்களது நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளை உருவாக்குகிறார்கள், ஒப்பந்தங்களை முடிக்கிறார்கள் மேலும் தங்கள் வர்த்தகத்தை வளர்க்கிறார்கள். 20 நாடுகளில் பரவி, 50க்கும் அதிகமான வெவ்வேறு பிரிவுகளுக்கும் சேவை செய்து - ஃபேஷன் முதல் மருந்துத்துறை பொருட்கள் வரை எங்களது 3,750+ மக்கள் சேவையை அளிக்கிறார்கள். இந்த உலகளாவிய கட்டமைப்புகள், திறன் பெற்ற, உணர்வுமயமான மக்கள் மற்றும் சந்தை - முன்னணி நிகழ்வுகள், வியாபார மக்கள் தங்கள் குறிக்கோள்களை அடைய அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
அதிக தகவல்களுக்கு, http://www.ubm.comக்கு வருகை தரவும்; யுபிஎம் பெருநிறுவன செய்திகளுக்கு, @UBM, UBM Plc LinkedIn ல் எங்களை ட்விட்டரில் பின்தொடரவும்
மீடியா தொடர்பு :
UBM India Pvt. Ltd.
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
Mili Lalwani
[email protected]
+91-9833279461
Share this article