UGC- ஆல் ஓ.பி ஜின்டால் குளாபல் பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது
சோனிபட், இந்தியா, March 22, 2018 /PRNewswire/ --
இந்தியாவின் இரு தனியார் பல்கலைக்கழகங்களின் ஒன்றான மேலும் ஹரியானா மாநிலத்தின் ஒரே தனியார் பல்கலைக்கழகத்திற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது
அங்கீகரிக்கப்பட்ட தன்னாட்சி விதிமுறைகள் 2018ன் கீழ் யுனிவர்சிட்டி கிரான்ட்ஸ் கமிஷனால்(UGC) ஓ.பி. ஜின்டால் குளோபல் பல்கலைக்கழகத்திற்கு (JGU) தன்னாட்சி வழங்கப்பட்டது. இந்த அறிவிப்பு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் திரு. பிராகாஷ் ஜவடேகர் அவர்களால் மார்ச் 20 ஆம்தேதி அறிவிக்கப்பட்டது. JGU தன்னாட்சி பெறும் ஹரியானாவின் முதல் தனியார் பல்கலைக்கழகம் மற்றும் முதன்முதலில் தன்னாட்சி பெறும் இந்திய இரு பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்
உயர்கல்வி துறையில் சுதந்திர தன்மை அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், தரத்துடன் தன்னாட்சி தன்மையை வலியுறுத்தும்படி, UGC மற்றும் MHRD 52 பல்கலைக்கழகங்களுக்கு தன்னாட்சி வழங்கியுள்ளது இதில் 5 மத்திய பல்கலைக்கழகங்கள் , 21 மாநில பல்கலைக்கழகங்கள், 24 நிகர்நிலை மற்றும் இரு தனியார் பல்கலைக்கழகங்கள் அடங்கும். இந்தியாவில் 300க்கும் அதிகமான தனியார் பல்கலைக்கழகங்கள் உள்ளன இருந்தாலும் இரு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே இந்த சிறப்பு நிலை கொடுக்கப்பட்டுள்ளது, இதில் ஓ.பி ஜின்டால் குளோபல் பல்கலைக்கழகமும் உன்று. குறிப்பாக, இந்திய அரசியல் வரலாற்றில் எந்த தனியார் பல்கலைக்கழகங்களும் அல்லது நிறுவனங்களும் இம்மாதிரி இதுவரை அந்தஸ்து பெற்ற தகவல் கிடையாது.
ஓ.பி ஜின்டால் குளோபல் பல்கலைக்கழக நிறுவன அதிபர் Mr. Naveen Jindal, 'ஒப்பிடுதல் மற்றும் சர்வதேச பார்வைகளில் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களை இந்தியாவில் தோற்றுவிக்கும் JGUவின் அர்ப்பணிப்பிற்கு இந்த அடி வலுக்கொடுத்துள்ளது. நாங்கள் MHRD மற்றும் JGU அவர்களுக்கு எங்கள் நோக்கத்தை பாராட்டியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இந்தியா, அதன் பல்கலைக்கழகங்களை மாற்றி வேகமாக மாறிவரும் உலக சிந்தனைக்கு ஏற்ப புத்துணர்வு பெற வைக்க வேண்டியது அவசியமாகும். உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுக்கு இணையாக ரேங்கிங் பெற இந்தியாவிற்கு இதுவே தக்க தருணம் மற்றும் நம்முடைய மாணவர்களுக்கான கல்வி சூழ்நிலையை மேம்படுத்துவதும் மிக முக்கியம்' என்று கூறினார்
'இந்த அங்கீகாரம் முக்கிய வரலாற்றறை படைத்துள்ளது மேலும் எதிர்காலத்தில் இந்திய பல்கலைக்கழகங்களைக்கு மதிப்பையும் உயர் கல்வியில் நிறுவன திறமையையும் வழங்கும். இது JGU வின் பயணத்தில் மிகப்பெரிய மைல்கல்லாகும் மேலும் நான் அனைத்து JGU முதலீட்டாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஹரியானா அரசாங்கம் மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அவர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய நிறுவன அதிபர் திரு. நவீன் ஜின்டால் அவர்களுக்கு இந்த அர்ப்பணிப்பான நடவடிக்கைக்காக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய தொலைநோக்கு, குறிக்கோள் மற்றும் இயக்கத்தினாலேயே இந்த வெற்றி கிடைத்துள்ளது', இவ்வாறு நிறுவன துணை அதிபர் பேராசிரியர் திரு சி ராஜ்குமார் தெரிவித்தார்.
இந்த அங்கீகாரத்தால் பல்கலைக்கழகமானது புதிய படிப்புகளையும் துறைகளையும் அறிமுகப்படுத்த சுதந்திரம் உள்ளது மேலும் UGCயின் அனுமதியில்லாமலேயே வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சேரவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனாலும் மற்ற வழக்கமான UGC சோதனைகளுக்கு விலக்கு கிடைத்துள்ளது. சுய- ரிப்போர்ட்டிங் அடிப்படையில் மதிப்பீடுகள் செய்யப்படும். இருந்தாலும் JGU க்கு உலகளவில் மொத்த ஆசிரியரில் 20% நபர்களை நியமிக்கவும் மேலும் 20% இருக்கைகளை சர்வதேச மாணவர்களுக்கு ஒதுக்கவும் உரிமை உள்ளது.
ஓ.பி ஜின்டால் குளோபல் பல்கலைக்கழகம் பற்றி
இலாப நோக்கத்தில் அல்லாமல் ஹரியானா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட குளோபல் பல்கலைக்கழகம், யுனிவர்சிட்டி கிரான்ட்ஸ் கமிஷனால் ஓ.பி ஜின்டால் குளோபல் பல்கலைக்கழகமாக (JGU)அங்கீகரிக்கப்பட்டுள்ளது. JGU அதன் நிறுவன அதிபர் திரு. நவீன் ஜின்டால் அவர்களால் தன்னுடைய தந்தை திரு. ஓ.பி ஜின்டால் அவர்களின் நினைவாக உருவாகப்பட்டது. நேஷனல் அக்ரிடியேசன் மற்றும் அசெஸ்மென்ட் கவுன்சில் (NAAC) ஆல் மிக உயர்ந்த கிரேடு JGU க்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் 1:13 ஆசிரியர் -மாணவர் விகிதத்தை பராமரிக்கும் சில பல்கலைக்கழங்களுள் JGU ம் ஒன்று மேலும் இந்தியாவிலிருந்தும் உலகின் பல பகுதிகளிலிருந்தும் சிறந்த கல்வி தகுதி மற்றும் அனுபவங்கள் கொண்டவர்களை நியமிக்கிறது. ஆய்வை மையமாக கொண்ட இந்த பல்கலைக்கழகம் அதன் மூல நிறுவன மதிப்புகளான பல்துறை -ஒழுங்கு மற்றும் புதுமையான ஆசிரியப்பணி ஆகியவற்றை கொண்டுள்ளது; பன்முகத்தன்மை மற்றும் சிறந்த ஸ்காலர்ஷிப் மேலும் உலகமயமாக்கம் மற்றும் சர்வதேச ஒருங்கிணைப்பு ஆகியவைகளை பராமரிக்கிறது.
JGUல் 8 பள்ளிகள் உள்ளன: ஜின்டால் குளாபல் லா ஸ்கூல்(JGLS), ஜின்டால் குளோபல் பிசினஸ் ஸ்கூல்(JGBS), ஜின்டால் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் அஃபேர்ஸ் (JSIA), ஜின்டால் ஸ்கூல் ஆஃப் கவர்ன்மென்ட் அன்ட் பப்ளிக் பாலிசி(JSGP), ஜின்டால் ஸ்கூல் ஆஃப் லிபரல் ஆர்ட்ஸ் மற்றும் ஹ்யுமானிட்டிஸ்(JSLH), ஜின்டால் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் மற்றும் கம்யுனிகேசன் (JSJC), ஜின்டால் ஸ்கூல் ஆஃப் ஆர்ட் அன்ட் ஆர்க்கிடெக்சர் (JSAA) மற்றும் ஜின்டால் ஸ்கூல் ஆஃப் பேங்கிங் அன்ட் ஃபினான்ஸ்(JSBF).
அதிக தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தரவும் - http://www.jgu.edu.in/.
மீடியா தொடர்பு :
Devadeep Konwar,
[email protected],
+91-7027850344,
Assistant Director,
Communication and Public Affairs,
O.P. Jindal Global University
Share this article