பெங்களூர், February 16, 2018 /PRNewswire/ --
APICS மற்றும் IMA இலிருந்து வெளியிடப்பட்டுள்ள புதிய அறிக்கை பரவலான செலவு சம்பந்தமான தோல்விகளைத் தீர்க்க தீர்வு வழங்குகிறது
APICS, சப்ளைசெயின் மேலாண்மையின் பிரதான தொழில்முறையிலான சங்கம், மற்றும் IMA® (Institute of Management Accountants), வணிகத்தில் உள்ள கணக்காளர்கள் மற்றும் நிதி நிபுணர்களின் சங்கம் ஆகியோர் அடங்கிய கூட்டு ஆராய்ச்சி அறிக்கை ஒரு கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளது அதாவது 'சிறந்த செலவின நடைமுறைகளுடன் சப்ளை செயின் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு இணைந்து செயல்படுவது.' இந்த அறிக்கையின்படி, APICS மற்றும் IMA ஆகியவை மேலதிக மேலாண்மை சப்ளை செயின் நிபுணர்களுடன் செலவின அமைப்புகள் மற்றும் நடைமுறைகளைக் குறித்து பரிசீலனை செய்தன. இந்த அறிக்கை பயனுள்ள செலவு அமைப்புகளை உருவாக்கும் போது ஏற்படும் பொதுவான தடைகளை கூறுவதோடு, மேலும் சப்ளைசெயின் மற்றும் கணக்கியல் மற்றும் நிதி வியாபார பிரிவுகளுடன் இன்னும் நெருக்கமாக ஒருங்கிணைக்கும் தீர்வை வழங்குகிறது.
(Logo: http://mma.prnewswire.com/media/510711/IMA_Logo.jpg )
"சப்ளை செயின் நிபுணர்கள் முடிவுகளை எடுக்கும்போது செலவின தகவல்களைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் அந்தத் தகவலை மிகவும் துல்லியமாகவும், திறம்படவும் இருக்கும்படி கோருகிறார்களா என தெரியவில்லை" என்று APICS இன் CEO Abe Eshkenazi, CSCP, CPA, CAE தெரிவித்தார். "இந்த அறிக்கை சப்ளை செயின் மற்றும் நிதியத் துறைகள் ஆகியவை இன்னும் நெருக்கமாகப் பணியாற்றுவதுடன் அதனை செயல்படுத்தும் நடைமுறையில் உள்ளார்ந்த முடிவுகளை தெரிவிப்பதில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும்."
IMA இன் ஸ்டராடிஜிக் செலவு மேலாண்மைப் பணிப்பிரிவின் ஒரு பகுதியாக உள்ள இந்த ஆய்வு, செலவு தகவல்களைப் பயன்படுத்தும் நிபுணர்களிடம் இருந்து செலவு நடைமுறைகளை மேம்படுத்துவது பற்றிய கருத்துக்களைப் பெறுகிறது.
"சப்ளைசெயின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும்போது, ஒரு பயனுள்ள நிர்வாக செலவின அமைப்பானது தெளிவான மதிப்பைக் கொண்டது. இது சிறந்த தயாரித்தல் அல்லது கொள்முதல் முடிவுகளை செயல்படுத்துகிறது, குறைந்த மற்றும் வீழ்ச்சியடைந்த செலவுகள் வரையறுக்கிறது மற்றும் சரக்குகளை வைத்திருப்பதற்கான உண்மையான செலவுகளை நிர்ணயிக்கிறது," என IMAவின் ஆராய்ச்சி மற்றும் கொள்கை துணை தலைவர் , Raef Lawson, Ph.D., CMA, CPA தெரிவிக்கிறார்.
விற்பனை மற்றும் விற்பனை நடவடிக்கை திட்டங்களிலும் இந்த செலவு தகவல் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆய்வின் போது கணக்கெடுக்கப்பட்டவர்களில், சப்ளைசெயின் மேலாளர்கள் சராசரியாக, செலவு அமைப்புகளை மேம்படுத்தும் போது தங்கள் முதலீட்டை விட அதிகமாக நன்மைகள் இருப்பதை ஒப்புக் கொண்டனர்.
தற்போதைய செலவுத் தகவல்களைப் பயன்படுத்துவதை தடுப்பது எது என்று கேட்டபோது, 44 சதவீத சப்ளைசெயின் மேலாளர்கள் செயல்பாட்டுத் தரவு இல்லாததை மேற்கோள் காட்டினர். அதற்கு மாறாக, செலவின தகவல்கள் பெரும்பாலும் தனிப்பட்ட முறையிலும் நிதியியல் முறையிலும் அறிக்கையிடப்படுகின்றன, இதனை அந்நியச் செலாவணியாக மாற்றுவது மிகவும் கடினமானது. மேலும் பதிலளித்தவர்களில், பயனுள்ள செலவு தகவலுக்கான இரண்டாம் மற்றும் மூன்றாம் தடைகளாக போதுமான தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் (39 சதவிகிதம்) மற்றும் கணக்கியல் மற்றும் நிதியியல் பணியாளர்கள் (30 சதவிகிதம்) ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றன என்றனர்.
இந்த அறிக்கையின்படி, சப்ளை செயின் தொழில் நுட்பம் ஏன் போதுமான செலவு தகவலை பெறவில்லை என்பதற்கான மூன்று மூல காரணங்கள் உள்ளன:
1. வெளிப்புற நிதி அறிக்கையிடல் முறைகளில் ஒரு அதிகாரம்: பல நிறுவனங்கள் வெளிப்புற நிதி சார்ந்த கணக்குப்பதிவு அமைப்புகளை நம்பியுள்ளன, அவை மிக அதிகமான பொருட்கள் மற்றும் சேவைகளின் செலவுகளைக் குறைக்க வழிவகை செய்கின்றன, அவை உள் வணிக முடிவுகளை ஆதரிக்கும் தகவல்களை உருவாக்குகின்றன.
2. காலாவதியான விலை மாதிரிகள் பயன்படுத்துதல்: பாரம்பரிய செலவு கணக்கு நடைமுறைகள் இனி இன்றைய வணிக சூழலில் சவால்களை சந்திக்க முடியாது, ஆனால் இவை இன்னும் பல கணக்காளர்கள் மூலம் பயன்படுத்தப்படுகின்றன.
3. கணக்கியல் மற்றும் நிதி மாற்றத்துக்கான எதிர்ப்பு: துல்லியமான தரவை அளித்து மேம்படுத்த கணக்கியல் தகவலை பயன்படுத்தும் மேலாளர்களிடம் இருந்து கொஞ்சம் அழுத்தம் அளிக்கப்படுவதால், கணக்காளர்கள் தங்கள் நிறுவனங்கள் உள்ள புதிய, மேலும் பொருத்தமான நடைமுறைகள் ஊக்குவிக்க தயக்கம் காட்டுகின்றனர்.
அறிக்கையின் விவரங்களில் இருந்து பல்வேறு சப்ளை செயின் வல்லுநர்கள் தங்கள் நிறுவனங்களுக்குள் செலவு செய்யும் அமைப்புகளை மேம்படுத்திக்கொள்ளலாம். இங்கு அளிக்கப்பட்டுள்ள ஒரு மூலோபாயமாக, சப்ளைசெயின் மேலாளர்கள் கணக்கியல் மற்றும் நிதி ஆகிய இரு துறைகள் இடையே அதிகமான தகவல் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதாவும் தங்கள் உறவை வலுப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. மற்ற தீர்வுகளாக உயர் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட செலவு நடைமுறைகளுக்கு உயர்மட்ட நிர்வாகத்தின் தேவை அதிகரித்துள்ளது பற்றி கூறப்பட்டுள்ளது.
முழு அறிக்கையையும் படித்து, செலவினத்தடைகள் மற்றும் அவற்றை கடப்பதற்கான மூலோபாயங்களையும் பற்றி மேலும் அறிந்துகொள்ள, செல்வும்: apics.org/costingsurvey அல்லது imanet.org/scmcosting
APICS பற்றி
APICS சப்ளைசெயின் மேனேஜ்மெண்ட்க்கான சங்கம் மற்றும் ஆராய்ச்சி கல்வி மற்றும் சிறந்த சப்ளைசெயின் பணியாளருக்கான சான்றிதழ் திட்டங்கள், கண்டுபிடிப்பு மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றின் முன்னணி வழங்குநராவர். APICSஇன் உற்பத்தி மற்றும் சரக்கு மேலாண்மை சான்றிதழ் (CPIM); APICS இன் சான்றளிக்கப்பட்ட சப்ளை செயின் வல்லுநர் (CSCP); APICS சான்றளிக்கப்பட லாஜிஸ்டிக்ஸ், போக்குவரத்து மற்றும் விநியோகம் சான்றிதழ் (CLTD); மற்றும் APICS சப்ளை செயின் ஆபரேஷன்ஸ் ரிஃப்ரன்ஸ்-ப்ரொஃபெஷனல் (SCOR-P ) ஆகிய பெயர்கள் தொழில் தரநிலையை அமைக்கின்றன. 45,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் ஏறக்குறைய 300 சேனல் பங்குதாரகளுடன், கூடிய APICS, மக்கள் வியாபாரம் செய்வதை மாற்றியமைக்கிறது, வளர்ச்சி மற்றும் உலகளாவிய வாடிக்கையாளர்களை அடைவதை நோக்கி இயங்கி வருகிறது. மேலும் தகவலுக்கு, http://www.apics.org/ ஐப் பார்வையிடவும்.
IMA® (Institute of Management Accountants) பற்றி
IMA ®, கணக்காளர் / சர்வதேச கணக்கியல் புல்லட்டின் மூலம் 2017ம் ஆண்டின் ப்ரொஃபசனல் பாடி என்ற பெயரிடப்பட்டு, மேலாண்மை கணக்கியல் தொழிலை முன்னேற்றுவதில் பிரத்தியேகமாக கவனம் செலுத்துகின்ற மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க சங்கங்களில் ஒன்று ஆகும். உலகளவில், IMA ஆராய்ச்சி மூலம் பணிபுரியும், CMA® (Certified Management Accountant) திட்டம், தொடர்ந்து கல்வி, நெட்வொர்க்கிங், மற்றும் உயர்ந்த நெறிமுறை வணிக நடைமுறைகளை வாதிடுவதன் மூலம் தொழிலை ஆதரிக்கிறது. 140 நாடுகளில் சுமார் 100,000 உறுப்பினர்கள் மற்றும் 300 தொழில்முறை மற்றும் மாணவர் அத்தியாயங்களில் IMA உலகளாவிய வலையமைப்பைக் கொண்டுள்ளது. மான்ட்வெலி, N.J., USA இல் தன் தலைமையகைத்தை அமைத்துள்ள IMA தனது சேவைகளை பின்வரும் உலகளாவிய இடங்களிலிலும் அமைத்துள்ளது: ஆசியா / பசிபிக், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு / இந்தியா ஆகிய நான்கு உலகப் பிராந்தியங்கள். IMA ஐப் பற்றிய மேலும் தகவலுக்கு, http://www.imanet.org க்குச் செல்லவும்.
ஊடகத் தொடர்பு:
Janice Sevilla
[email protected]
+971-562088948
+91-900-316-2258
Communication Specialist
Institute of Management Accountants
Share this article