புது டெல்லி, January 30, 2018 /PRNewswire/ --
- IMAஇன் உலகமயமாக்கல் மற்றும் மதிப்பு இயக்க ஆர்வம் மற்றும் CMA சான்றிதழ்
- IMAவின் இந்திய உறுப்பினர் எண்ணிக்கை அடித்தளத்திலிருந்து படிப்படியாக அதிகரித்து வருகிறது
IMA® (இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அக்கவுண்ட்டண்ட்ஸ்), வணிகத்தின் கணக்காளர்கள் மற்றும் நிதி வல்லுனர்களின் சங்கம், தனது 100 ஆண்டுகால வரலாற்றில் முதல் தடவையாக 100,000 உறுப்பினர்களை எட்டியுள்ள தனது மைல்கல் சாதனையை அறிவித்துள்ளது. IMA இன் 100 வருட ஆண்டு விழா கொண்டாட்டம் நடைபெறவுள்ள இந்த நேரத்தில் இது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது, IMA வின் வருடாந்திர மாநாடு மற்றும் எக்ஸ்போ வரும் ஜூன் மாதம் இண்டியானாபோலிஸில் தொடங்குகிறது, மேலும் சான் டியாகோவில் 2019 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அதன் மாநாட்டுடன் முடிவடைகிறது.
(Logo: http://mma.prnewswire.com/media/510711/IMA_Logo.jpg )
அமெரிக்கா, ஆசிய / பசிபிக், மத்திய கிழக்கு / இந்தியா மற்றும் ஐரோப்பா ஆகியவற்றின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தனது வலிமையான வளர்ச்சியால், இந்த சாதனை மைல்கல்லை எட்டியுள்ள IMA, உலகளாவிய ரீதியில் கணக்காளர் / சர்வதேச கணக்கியல் புல்லட்டினால் இந்த ஆண்டுக்கான 'ஆண்டின் சிறந்த தொழில்முறை அமைப்பு' என்று பெயர் பெற்றுள்ளது. சர்வதேச சந்தைகள், குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில் உயர் வளர்ச்சிப் பகுதியில் இருந்தன, IMA இன் திறனைப் பயன்படுத்தி உலகளாவிய வலைப்பின்னல் மற்றும் உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், பணிவாய்ப்புகள் மற்றும் நிறுவனங்களின் மதிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி இன்னும் பலப்படுத்தப்பட்டது.
IMAவின் தலைவர் மற்றும் CEOவான, Jeff Thomson, CMA, CSCA, CAE, சமீபத்தில் IMAவின் சர்வதேச உறவுகளை மேம்படுத்த பிரேசில் மற்றும் இந்திய பயணம் மேற்கொண்டபோது "உலகமயமாக்கல் என்பது எங்களது தொடர்ச்சியான விரிவாக்கத்தை இயக்கும் காரணிகளில் குறிப்பிடத்தக்கது," என்றார். "பொருளாதார அபிவிருத்தி அடையும்போது, திறமையான நிதி மற்றும் கணக்கியல் வல்லுநர்கள் தான் வணிகங்கள் மற்றும் அரசாங்கங்களுக்கான நுண்ணறிவு மற்றும் முன்கணிப்புகளை வழங்க வேண்டும்."
நூறாண்டுகளுக்கு மேலான IMA ஆனது, தன்னியக்கம், செயற்கை நுண்ணறிவு மற்றும் சங்கிலித்தொடர் ஆகியவற்றின் காரணமாக தனது உறுப்பினர்களுக்கு துரித வளர்ச்சியளிக்க முனைகிறது, அவை மீண்டும் மீண்டும் பணிபுரியும் வேலைகள் மற்றும் அதிக அளவிலான ஆலோசனை திறன்களைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைத் திறக்கும் என்பதில் ஐயமில்லை.
"மத்திய கிழக்கிலும், இந்தியாவிலும் எங்கள் உறுப்பினர் அடித்தளம் உள்ளதால், எண்ணெய் விலை வீழ்ச்சியின்போதும் பொருளாதார வீழ்ச்சியின்போதும்கூட சீராக வளர்ச்சியடைந்து வருகிறது. இது பிராந்தியத்தின் நிதியியல் மற்றும் கணக்கியல் தொழில்வல்லுனர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையை முதலீடு செய்வதற்கான முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது, மாறிவரும் பணியிட சூழலில் அவர்களது பாத்திரம் மற்றும் வணிக பங்குதாரர்களாக செயலாற்றுவது என்பது அவர்களது நிறுவனத்தின் நிதி சார்ந்த காரியதரிசிகள் ஆக அல்ல," என IMA இன் மத்திய கிழக்கு, ஆப்ரிக்கா மற்றும் இந்தியா செயல்பாடுகள் இயக்குனர் Hanadi Khalife கூறினார்.
CMA® (சான்றளிக்கப்பட்ட நிர்வாக கணக்கர்) சான்றிதழ் - IMA இன் முக்கிய சான்றிதழாகும் - இது தொழில் நுட்பம், முக்கிய பகுப்பாய்வு, காட்சித் திட்டமிடல் மற்றும் பணியிடத்தில் உள்ள நுண்ணறிவு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு தொழில்முறை ரீதியில் உதவுகிறது. கடந்த ஆண்டு முழுவதும், CMA விண்ணப்பதாரர்களின் மொத்த எண்ணிக்கை 67 சதவிகிதம் அதிகரித்தது என்பது, கணக்கியலாளர்களின் எண்ணிக்கை அவர்கள் முக்கிய வணிக பங்காளார்களாக மாற்றமடையும் போக்கை கொண்டிருப்பதை சமிக்ஞை செய்வதாக உள்ளது.
2017 ஆம் ஆண்டில், CSCA™ (சான்றளிக்கப்பட்ட செயல்திட்டம் மற்றும் போட்டியிடும் பகுப்பாய்வு), CMA பாடத்திட்டத்தின் மீது உருவாக்கும் ஒரு சிறப்பான சான்றளிப்பு மற்றும் நிர்வாகக் கணக்காளர்களுக்கு அவர்களின் மூலோபாய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுத் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு உதவுகிறது.
Thomson கூறுகையில் "IMA உறுப்பினர் மற்றும் CMA சான்றளிப்பு மூலம், எங்கள் பணிமிகுந்த தொழிலாளர்கள் தயாரிப்புகளைத் தயாரிப்பதற்கும், எதிர்காலத்தில் போட்டித்திறனைத் தக்கவைப்பதற்கும் உதவுவதாகும்." "இந்த வளர்ச்சி சந்தையில் ஒரு தேவையை மட்டுமல்ல, IMA இன் ஊழியர்கள், பங்குதாரகள் மற்றும் பணியாளர்களிடமிருந்து ஒரு தொழில்முறை ஆதரவுடன் மிகப்பெரிய அர்ப்பணிப்பு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எங்கள் ஒவ்வொரு 100,000 உறுப்பினர் மற்றும் வளர்ந்து வரும் உறுப்பினர்கள்- என அனைவரும் அந்த ஆதரவை தொடர வேண்டும் என நாங்கள் எதிர்நோக்குகிறோம்."
IMA® பற்றி (இன்ஸ்டியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அக்கவுண்ட்டண்ட்ஸ்)
மேலாண்மை கணக்கியல் தொழிலை முன்னேற்றுவதில் பிரத்தியேகமாக கவனம் செலுத்தும் மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிக்கப்படும் சங்கங்கள் ஒன்றான கணக்காளர் / சர்வதேச கணக்கியல் புல்லட்டின் மூலம் 2017 ஆண்டின் தொழில்முறை அமைப்பு என்ற பெயரை IMA® பெற்றுள்ளது. உலகளவில், IMA இந்த தொழிலுக்கு ஆதரவளிக்க ஆராய்ச்சி மூலமாக, CMA® (சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்கர்) திட்டம், தொடர்ச்சியான கல்வி, நெட்வொர்க்கிங் மற்றும் உயர்ந்த நெறிமுறை வணிக நடைமுறைகளை கையாள்கிறது. IMA ஆனது 140 நாடுகளில் சுமார் 100,000 உறுப்பினர்களின் உலகளாவிய வலைப்பின்னல் மற்றும் 300 தொழில்முறை மற்றும் மாணவர் சேப்டர்ஸ் Montvale, NJ, USA, தலைமையிடமாகக் கொண்டு அமைந்துள்ளது, மேலும் IMA அமெரிக்கா, ஆசியா / பசிபிக், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு / இந்தியாஎன்ற உலக பிராந்தியங்களின் தனது உள்ளூர் சேவைகளை அளிக்கிறது.
IMA பற்றிய மேலும் தகவலுக்கு, http://www.imanet.org க்குச் செல்லவும்.
ஊடகத் தொடர்பு:
Janice Sevilla
[email protected]
Communication Specialist
Institute of Management Accountants
Share this article