மொழிபெயர்ப்பு வேலை : ஆஸ்திரேலியாவின் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி, Jindal Global Law School-ல் கௌரவ துணை பேராசிரியராக நியமிக்கப்பட்டார்
புது டெல்லி, January 16, 2018 /PRNewswire/ --
ஆஸ்திரேலியாவின் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி, சர்வதேச நீதிபதி மாண்புமிகு Mr. Michael Kirby AC CMG, Jindal Global University (JGU) Jindal Global Law School (JGLS) கௌரவ துணை பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள Hawai உச்ச நீதிமன்றத்தின் புகழ்பெற்ற நீதிபதிகள் மாண்புமிகு Mr. Justice Michael D. Wilson and Hon. Ms. Justice Sabrina S. McKenna மற்றும் ஹாகில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான, புகழ்பெற்ற இந்திய நீதிபதியான மாண்புமிகு Mr. Justice Dalveer Bhandari, புகழ்பெற்ற Dr. Abhishek Manu Singhvi, இந்திய உச்ச நீதிமன்றத்தின் சீனியர் வழக்கறிஞர் Mr Gopal Subramanium ஆகியோர் மாண்புமிகு திரு.கிர்பிக்கு முன்னரே ஜின்டால் குளாபல் லா ஸ்கூலில் கௌரவ துணை பேராசிரியர்களாக நியமிகப்பட்டுள்ளார்கள்.
Mr. Kirby தனது பதவிக்காலத்தின்போது, இந்திய தீர்ப்புகளின் மேற்கோள்களை அடிக்கடி பயன்படுத்தியுள்ளார். ஆஸ்திரேலிய இந்திய பேராசியர்களின் சமீபத்திய ஆய்வின்படி, நாட்டின் உச்ச நீதிமன்றமாகிய ஆஸ்திரேலிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் பயன்படுத்திய மொத்த இந்திய தீர்ப்பு மேற்கோள்களில் 64% இவரால் மட்டும் பயன்படுத்தப்பட்டிருப்பதாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இந்தியாவுடனான நீண்ட கால உறவுடன் கூட 2014 ல் அவர் KG basin கலகத்தில் முதன்மை நடுவராக பணியாற்றினார்.
பேராசிரியர். (Dr.) C. Raj Kumar, துணை அதிபர், O.P. Jindal Global University (JGU) மற்றும் Jindal Global Law School (JGLS)ன் Dean அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பேசுகையில் ' உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆசிரிய உறுப்பினர்களை நியமிப்பதும் பல்வேறு துறைகளில் அவர்களுக்கு மேம்பட்ட கல்வியையும் அனுபவத்தையும் அளிப்பதே JGUவின் அடிப்படை நோக்கமாகும். நமது மாணவர்களுக்கு எல்லைகள் மற்றும் அதிகாரத்தை தாண்டிய முன்னோக்குகள் மற்றும் அனுபவங்களை பெறுவதற்கான வாய்ப்புகளை அளிக்க, சர்வதேச சட்டக் கல்வியின் நம்முடைய அர்ப்பணிப்பிற்கான உண்மையான சான்றாக Mr. Michael Kirby AC CMG அவர்களின் நியமனம் உள்ளது'. என்று கூறினார்
'மாண்புமிகு Mr. Michael Kirby அவர்களை நம்முடைய யுனிவர்சிட்டியின் கௌரவ துணை பேராசிரியராக வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்' என்று மேலும் அவர் கூறினார்.
ஜின்டால் குளோபல் லா ஸ்கூலில் கௌரவ துணை பேராசிரியராக நியமிக்கப்பட்டதற்கான அவருடைய மேற்கோளில் அவருடைய பங்களிப்புகளும் பாராட்டுகளும் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது : 'சட்டம், ஒப்பீடு மற்றும் சர்வதேச சட்டம் மற்றும் இந்திய ஆஸ்திரேலிய சட்ட உறவு மற்றும் சட்ட கல்வி ஆகியவற்றில் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது'.
பேராசிரியர் Shaun Star எக்சிகியுட்டிவ் டைரக்டர், CIAS மற்றும் உதவி Dean, ஜின்டால் குளோபல் லா ஸ்கூல், ' நீதிபதி மைக்கேல் கிர்பியை தவிர இந்திய ஆஸ்திரேலிய இருபக்க சட்ட உறவில் சிறந்த வழக்கறிஞர் வேறொருவர் கிடையாது. நீதிபதி Kirbyயை மறுபடியும் இந்தியாவில் வரவேற்க நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியா ஆஸ்திரேலியா ஆய்வுகள் மையத்தின் ஆலோசனை போர்டு உறுப்பினராகவும் மற்றும் சமீபத்திய அவரது கௌவர துணைபேராசிரியர் பதவியினாலும் அவர் இருபக்க சட்டநடவடிக்கைகளில் வலுவான இணைப்பை தூண்ட மேலும் வித்திடுகிறார். எதிர்கால தலைமுறையினருக்கு இருபக்க உறவில் விழிப்புணர்வு மற்றும் விருப்பத்தை மேலும் தூண்ட CIAS இம்மாதிரி புகழ்பெற்ற சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் பாலிசி மேக்கர்களை பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்கிறது.' என்று தெளிவுபடுத்தினார்.
மாண்புமிகு Michael Kirby AC CMG, சர்வதேச சட்டவியல் நிபுணர் மற்றும் முன்னாள் நீதிபதியாவார். ஆஸ்திரேலிய ஒப்புதல் மற்றும் நடுவர் ஆணையம் (1975-83) ல் துணை பிரெசிடெண்டாகவும் ஆஸ்திரேலிய சட்ட சீர்திருத்த ஆணையம்(1975-84)ன் சேர்மனாகவும் ஆஸ்திரேலியாவின் ஃபெடரல் கோர்ட்டின் நீதிபதியாகவும்(1983-4), நியு சவுத் வேல்ஸ் கோர்ட் ஆஃப் அப்பீல்(1995-96) ன் பிரெசிடென்டாகவும் சாலமன் தீவுகளின் கோர்ட் ஆஃப் அப்பீலின் பிரெசிடென்டாவும் (1995-96) மேலும் ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாகவும்(1996-2009) அவர் பணியாற்றியுள்ளார்
Mr. Kirby, ஐக்கிய நாடுகளின் பல சர்வதேச நடவடிக்கைகளிலும் காமன்வெல்த் செயலகத்திலும் OECDயிலும் மேலும் காசநோய் , மலேரியா மற்றும் AIDSக்கான குளோபல் ஃபண்டிலும் பங்கேற்றுள்ளார். சிவில் சோசைட்டிகளிலும் பணியாற்றியுள்ளார் மேலும் சர்வதேச சட்டவல்லுநர் கமிஷனின் பிரெசிடென்டாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றியுள்ளார்(1995-8).
எதிர்கால காமன்வெல்த் நாடுகளின் எமினென்ட் உறுப்பினர் குழுவின் உறுப்பினராகவும்(2010-11), HIV மற்றும் சட்டத்தின் UNDP குளோபல் கமிஷனின் கமிஷனராகவும்(2011-12), DPRK மீதான UN விசாரணை கமிஷனின் சேர்மனாகவும் (வட கொரியா) (2013-14) மேலும் UN செகரெட்டரி குழுவின் உயர்மட்ட அத்தியாவசிய மருத்துவ பராமரிப்பிற்கான குழுவின் உறுப்பினராகவும் (2015-16) தன் பணியை சமீபகாலத்தில் தொடர்ந்துள்ளார்.
ஆஸ்திரேலிய மனித உரிமைகள் மெடலால் அவர் 1990 ல் பரிசளிக்கப்பட்டார். 1998ல், மனித உரிமைகள் கல்விக்கான யுனெஸ்கோ பரிசுக்காக அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. 2010ல் அவர் குரூபர் சட்ட பரிசின் கோ-வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2011ல் தொடக்க ஆஸ்திரேலிய தனியுரிமை பதக்கம் பெற்றார். ஆஸ்திரேலியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் பல்கலைக்கழகங்களால் அவருக்கு Doctor of Letters, Doctor of Laws மற்றும் Doctor of the University போன்ற பல்வேறு கௌரவ பட்டங்கள் வழங்கப்பட்டன.
இந்திய ஆஸ்திரேலிய ஆய்வுகள் மையத்தால் உருவாக்கப்பட்ட (CIAS) ' இந்தியா முழு கவனிப்பு திட்டம்' கீழ் 40க்கும் அதிகமான ஆஸ்திரேலிய மாணவர்கள் JGUவிற்கு வருகை தரும் நேரத்தில் Mr. Kirby இந்தியாவிற்கு வருகிறார் மேலும் கௌரவ துணை பேராசிரியராக நியமிக்கப்படுகிறார்.
ஆஸ்திரேலியாவின் முன்னணி யுனிவர்சிட்டிகளில் படிக்கும் இளங்கலை மாணவர்கள் இந்தோ பசிபிக் பகுதிகளுக்கு வருகை தந்து படிப்பதை உறுதிப்படுத்தும் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய கோலம்போ பிளானால் நிதியுதவி செய்யப்படும் ஆண்டுதோறும் 3வார-தங்கும் இந்த திட்டம், இந்தியாவின் பல்வேறு முகங்களை ஆஸ்திரேலிய மாணவர்கள் தெரிந்துகொள்ள உதவுகிறது.
இந்திய மேல்படிப்பு நிறுவனங்களுடன் தொடர்புடைய இந்தியா-ஆஸ்திரேலியா இருபுற உறவுக்கும் வழிவகுக்கும் ஒரே மையம் CIAS ஆகும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருக்கும் முதலீட்டாளர்களுடன் CIAS உறவு வளர்த்துள்ளது மேலும் இந்திய ஆஸ்திரேலிய உறவுகளில் அர்த்தமுள்ள ஆழமான தொடர்புகளை உருவாக்க முயற்சிக்கிறது.
O.P. Jindal Global Universityயை பற்றி
ஹரியானா அரசாங்கத்தால் நிறுவப்பட்ட இலாப-நோக்கமில்லாத குளோபல் யுனிவர்சிட்டியான O.P. Jindal Global University (JGU), University Grants Commission (UGC)னால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Mr. Naveen Jindal அவர்களால் தனது தந்தை Mr. O.P. Jindal நினைவாக JGU ஒரு தொண்டு நிறுவனமாக தொடங்கப்பட்டது. National Accreditation & Assessment Council (NAAC) ஆல் JGUவுக்கு மிக உயர்ந்த கிரேடான "A" கிரேடு வழங்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் 1:13 ஆசிரியர் :மாணவர் விகிதத்தை பராமரிக்கும் சில யுனிவர்சிட்டிகளில் JGU யும் ஒன்று மேலும் இந்தியா மற்றும் உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து சிறப்பான கல்வித்தகுதிகள் மற்றும் அனுபவத்தை கொண்ட ஆசிரியர்களை நியமித்துள்ளது. JGU ஆய்வை முதன்மையாக கொண்ட யுனிவர்சிட்டி, மேலும் இது ஆழமாக நிறுவன மதிப்புகளுடன் தொடர்புடைய உள்- ஒழுங்குமுறை மற்றும் புதுமையான கற்பிக்கும் முறை, பன்முகத்தன்மை மற்றும் மேலான ஸ்காலர்ஷிப்; மேலும் சர்வதேசமயம் மற்றும் சர்வதேச தொடர்புடன் அழகாக நிறுவப்பட்டுள்ளது; JGU எட்டு ஸ்கூல்களை நிறுவியுள்ளது அவை ஜின்டால் குளோபல் ஸ்கூல் (JGLS), ஜின்டால் குளோபல் பிசினஸ் ஸ்கூல்(JGBS), ஜின்டால் ஸ்கூல் ஆஃப் இன்டர்நேஷனல் அஃபேர்ஸ்(JSIA), ஜின்டால் ஸ்கூல் ஆஃப் கவர்ன்மென்ட் அன்ட் பப்ளிக் பாலிசி(JSGP), ஜின்டால் ஸ்கூல் ஆஃப் லிபரல் ஆர்ட்ஸ் & ஹ்யுமானிட்டிஸ்(JSLH), ஜின்டால் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம் & கம்யுனிகேஷன்(JSJC), ஜின்டால் ஸ்கூல் ஆஃப் ஆர்ட் & ஆர்க்கிடெக்சர் (JSAA) மற்றும் ஜின்டால் ஸ்கூல் ஆஃப் பேங்கிங் & ஃபினான்ஸ்(JSBF)
மீடியா தொடர்புக்கு:
Nagendra Gupta
[email protected]
+91-8396907393
மேனேஜர், தகவல்தொடர்பு மற்றும் பொது விவகாரங்கள்
O.P. Jindal Global University
Share this article