மும்பை, December 6, 2017 /PRNewswire/ --
- பிரம்மோஸ்- கோத்ரேஜ் கூட்டுறவில் இந்த ஒப்படைப்பு புதிய மைல்கல்லாக விளங்கும்
-வான் வழி ஏவுகணைகளுக்கான ஏர்ஃபிரேம்களின் 100 தொகுப்புகள் கொண்ட
ஆர்டரை கூடுதல் பரிசாக Godrej பெற்றுள்ளது
Godrej & Boyce Mfg. Co. Ltd., கம்பெனியின் ஒரு பிரிவான Godrej Aerospace, BrahMos Aerospace Pvt. Ltd. (BAPL) நிறுவனத்திற்கு 100வது ஏர்ஃபிரேம் அசெம்பிளிஸ் தொகுப்பை அதனுடைய ஏவுகணை அமைப்புகளுக்காக ஒப்படைப்பதன் மூலம், இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை வளர்ப்பதில் பங்களிக்கும் அதன் பெருமை பாரம்பரியத்தை நிறுவனம் தொடர்கிறது.
(Logo: http://mma.prnewswire.com/media/615498/Godrej_Aerospace.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/615499/Godrej_Aerospace_delivers_BrahMos.jpg )
Dr. Sudhir Mishra, புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் டைரக்டர் ஜெனரல் (BrahMos), CEO & MD BrahMos Aerospace இந்த அரிய சாதனையை கொண்டாட Godrej Aerospace க்கு வருகை புரிந்தார் மேலும் அவர் இந்த விழாவின் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக
Mr. Jamshyd N. Godrej, Godrej & Boyce தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், அவர்களால் வழங்கப்பட்ட 100வது BrahMos Airframe நிறைவடைந்ததற்கான ஆவணங்களை பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் Mr. Mishra, Godrej Aerospace நிறுவனம் வான்வழி ஏவப்படும் வகை BrahMos missile ன் ஏர்ஃபிரேம்முகளின் 100 யூனிட்டுகள் ஆர்டரை பரிசாக பெற்றதற்காகவும் மேலும் அதன் உற்பத்தி தொடக்கத்திற்கும் வாழ்த்து தெரிவித்தார்.
Godrej & Boyce தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் Jamshyd N. Godrej பேசுகையில், "Godrej மற்றும் BrahMos 17 வருடங்களாக முக்கியத்துவம் வாய்ந்த முறையில் கூட்டாளிகளாக உள்ளன. அந்தக் காலத்தின்போது, இந்தியாவின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்துவதில் எங்களின் சிறிய பங்களிப்பின் மூலம் நாட்டை - உருவாக்குவதில் பங்கு கொண்டுள்ளோம் என்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம். ஆதலால், Dr. Mishra விடம் 100 தொகுப்பு ஏர்ஃபிரேம்கள் நிறைவு ஆவணத்தை ஒப்படைப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். இது Godrej, Brahmos மற்றும் இந்தியாவுக்கான பெருமைப்படும் கணமாகும். மேலும் இது தொழில்நுட்பரீதியாக எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் உள்நாட்டு உற்பத்தியின் மூலம் நாட்டிற்கு சேவை செய்யும் எங்களின் அர்ப்பணிப்பிற்கான உறுதிப்பாடாக விளங்குகிறது " என்று கூறினார்."
Mr. Godrej, உலகின் மிகவும் மேம்பட்ட ஏவுகணைகளில் ஒன்றுக்கான உலகத்தரம் வாய்ந்த உற்பத்தி உள்கட்டமைப்பை உருவாக்கவும் உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் தர பயிற்சிகளை மேம்படுத்துவதிலும் தன்மயமாக்குவதிலும் DRDO & MSQAA வின் பங்களிப்பு, துணை மற்றும் வழிகாட்டல் ஆகியவற்றுக்கு ஏற்புத்தெரிவித்தார். இந்த பெருமுயற்சியில் கல்வித்துறை மற்றும் Godrej விற்பனையாளர்கள் ஆகியோரின் பங்களிப்பையும் பாராட்டினார்.
BrahMos Aerospace DS, டைரக்டர் ஜெனரல், தலைமை நிர்வாக அதிகாரி & MD
Dr. Sudhir Mishra பேசுகையில் "கோத்ரேஜ் பல வருடங்களாக BrahMos ற்கும் இந்தியாவின் பாதுகாப்பு துறைக்கும் தனது இடையுறாத பங்களிப்பை அளித்துள்ளது. எங்களுடைய நீண்ட நாள் உறவில் போருக்கு தகுதியான ஏர்ஃபிரேம் ஏவுகணையின்100 வது தொகுப்பு ஒப்படைத்தல் புதிய மைல்கல்லாக விளங்கும். எதிர்காலத்தில், எங்களின் கூட்டணி புதிய வரைமுறைகளைத் தொடரவும் புதிய ஆயுதங்கள் மற்றும் அதிநவீன ஆயுதங்கள் உற்பத்தி செய்வதற்கான தூண்டுதலுக்கு முன்மாதிரியாகவும் செயல்படும் என்று நான் நம்புகிறேன். "
BrahMos ஏவுகணையானது, உலகளாவிய போர் supersonic ஏவுகணையாகும். இதனை கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள், விமானங்கள் மற்றும் நிலம் சார்ந்த ஏவுகணை தளங்கள் ஆகிய இடங்களிலிருந்து ஏவ முடியும். இதனைப் பயன்படுத்தி நிலம் மற்றும் நீரில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.
Godrej Aerospace நிறுவனம் BrahMos திட்டத்துடன் 2001 ல் துவங்கியதில் இருந்து இணைந்துள்ளது. பிரம்மோஸ் ஏவுகணையின் பெரும்பாலான உலோகத் துணை அமைப்புகளை உருவாக்குவதில் Godrej முக்கிய பங்கு வகிக்கிறது. பிரதான வானூர்தி தவிர, கோத்ரேஜ் கட்டுப்பாட்டு பரப்புகள் மற்றும் வானூர்தியின் மூக்கு பாகங்களையும் தருகிறது. இதனுடன் கோத்ரேஜ் மொபைல் தன்னியக்க லாஞ்சர்களையும், ஏவுகணை மறுசீரமைப்பு வாகனங்களையும் நில ஏவுதளங்களுக்காக வழங்குகிறது.
Godrej & Boyce பற்றி :
Godrej & Boyce, Godrej குழுமத்தின் ஓரு கம்பெனி, 14 வெவ்வேறு வணிகங்களில் ஈடுபட்டுள்ளது. 1897-ல் உருவாக்கப்பட்ட இந்த கம்பெனி முதன்முதலில் உயர் தரமான பூட்டுகளை உற்பத்தி செய்தது. அதிலிருந்து நுகர்வோர் பொருட்கள், அலுவலகம் மற்றும் தொழிற்சாலை சார்ந்த பொருட்கள் மற்றும் சேவைகள், உள்கட்டமைப்பு மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற பல்வேறு பரிணாமங்களை அடைந்துள்ளது. மும்பையை தலைமையகமாக கொண்டு இயங்கும் Godrej & Boyce நிறுவனம் வீட்டு உபயோகப்பொருட்கள், ஃபர்னிச்சர்கள் & இன்டீரியர்கள், பாதுகாப்பு தீர்வுகள், பூட்டுதல் தீர்வுகள், ஏவி தீர்வுகள், விற்பனை, பொருட்கள் கையாளுதல், தொழில்துறை தளவாடங்கள், ஏரோஸ்பேஸ், அணுசக்தி, பாதுகாப்பு, வாகன துறைக்கான கருவிதீர்வுகள், செயல்முறை உபகரணம், ஆற்றல் உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட் மற்றும் கிரீன் பில்டிங் கன்சல்டிங் போன்ற அநேக துறைகளில் முக்கியஅளவில் மாற்றங்கள் கொண்டுவந்து விற்பனையில் முன்னணியாக விளங்குகிறது. ஒவ்வொரு நாளும் உலகெங்கிலும் 1.1 பில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் இந்தியாவின் மிக நம்பகமான ஒரு பிராண்டு Godrej ஆகும்.
BrahMos ஏவுகணையைப் பற்றி:
290 கிமீவரை செல்லும் BrahMos ஏவுகணை ஒரு சூப்பர்சானிக் போர் ஏவுகணையாகும். 200-300 கிலோ எடையுள்ள வழக்கமான வெடிபொருட்களை இது சுமந்து செல்லுகிறது. இது செங்குத்தாக 15 கிமீ உயரத்திலும் தரையில் தாழ்வாக 10மீ வரையிலும் அதன் பறக்கும் எல்லை முழுவதும் சென்று அதிவிரைவாக (ஒரு நொடிக்கு 1கிமீ விட அதிகமாக) தாக்க முடியும். ஒருமுறை BrahMos ஏவுகணையை செலுத்திவிட்டால், பின்னர் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அதற்கு எவ்வித வழிகாட்டலும் தேவைப்படாது. இது 'Fire and Forget' (ஃபயர் மேலும் ஃபர்கெட்) ஏவுகணையாக தயாரிக்கப்பட்டுள்ளது.
BrahMos ஏவுகணை பல்திறன் கொண்டது மேலும் அது நிலம், வான்வெளி மற்றும் நீர் ஆகிய ஏவு தளங்களிலிருந்து நிலம் மற்றும் நீரில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை வாய்ந்தது. இதனுடைய அதிவேகத்தால் இது உயிரைக்கொல்லும் மிகக்கொடிய ஆயுதமாக மாறியுள்ளது. இதன் அதிதுல்லியத்தன்மை இணை சேதத்தை குறைக்க உதவுகிறது.
BrahMos ஏவுகணையின் முதல் வெற்றிகரமான புறப்பாடு ஜூன் 12ஆம்தேதி 2001 அன்று நடந்தது. அது ஒரிசாவின் Chandipur கடற்கரையின் இடைப்பட்ட சோதனை எல்லையில் நிலம் சார்ந்த லாஞ்சரிலிருந்து ஏவப்பட்டது.
கூடுதல் தகவல்களுக்கு தயவுசெய்து தொடர்பு கொள்ளவும் :
Adfactors PR:
Neha Sharma
+91-9871571721
[email protected]
Akshada Thakur
+91-9773706707
[email protected]
Share this article