மும்பை, November 10, 2017 /PRNewswire/ --
உணவு மற்றும் ஆரோக்கியத்திற்கான இந்திய துணை கண்டத்தின் மிக விரிவான B2B கண்காட்சி
Food Ingredients India & Health Ingredients (FFi India & Hi) 2017 பற்றிய பார்வை:
- 200க்கும் அதிகமான காட்சியாளர்களைக் கொண்ட இந்திய உணவு சந்தையை அணுகலாம்
- ஆண்டுதோறும் மும்பைக்கும் புது டெல்லிக்குமிடையே ஆண்டுதோறும் மாறிமாறி நடைபெறுகிறது
- Fi India & Hiன் 12வது கண்காட்சி இந்தியாவில் மும்பையில் நடைபெறுகிறது
- 15 நாடுகள்; 67 சர்வதேச பங்கேற்பாளர்கள்; 60க்கும் அதிகமான புதிய காட்சியாளர்கள்; ஆரோக்கிய உட்பொருட்கள் நிறுவனங்களைச் சேர்ந்த 54 காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர்
- உணவு உட்பொருட்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் பற்றிய இலவச ஆன்-சைட் கருத்தரங்குகள்; நியூட்ரிமார்க்கெட்டிங் நிபுணர்களுடன் ஒரு வழிகாட்டப்பட்ட கண்டறிதல் சுற்றுலா
- எக்ஸ்போ ஃபுட்டெக் காட்சிக்கூடம்; சீனா காட்சிக்கூடம்; பிரபல சமையல் கலைஞர் Rakhee Vaswani வழங்கும் ஹெல்த் இன்க்ரெடியன்ட்ஸ் முன்னோட்டம் மற்றும் பயிலரங்குகள்
- இந்தியாவில் ProPak அறிமுகம் செய்யப்படுகிறது; கிரேட்டர் நொய்டாவில் Fi India & Hi 2018 உடன் இணைந்து அமைக்கப்பட உள்ளது
இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரான UBM India, Food ingredients India & Health ingredients (Fi இந்தியா & Hi), 12வது கண்காட்சியை நடத்துகிறது. இது இன்றைய உணவு மற்றும் உடல்நல உட்பொருட்கள், பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் துறைக்காக இந்திய துண கண்டமான மும்பையிலுள்ள பாம்பே கன்வென்ஷன் அண்டு எக்ஸிபிஷன் சென்டரில் மிக விரிவான B2B கண்காட்சியை நடத்துகிறது. இந்த மூன்று நாள் வர்த்தக கண்காட்சி (நவம்பர் 9 - 11) முக்கிய உயர் பதவி வகிப்பவர்களால் துவங்கி வைக்கப்படுகிறது - Mr. R. B. Smarta, செயலாளர் HADSA; Mr. Prabodh Halde, தலைவர், AFSTI; Mr. P. Muthuraman, இயக்குநர், FSSAI; Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India மற்றும் Mr. Rahul Deshpande, குழும இயக்குநர், UBM இந்தியா ஆகியோர் இந்தத் துறையின் மாபெரும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/585811/Fi_India_Logo.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/600881/Fi_India_and_Hi.jpg )
இந்தக் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் இரண்டு சிறந்த ஃபுட் ஹப்களான மும்பையிலும் புது டெல்லியிலும் மாறிமாறி நடைபெறும். Fi India & Hiயின் 2017வது கண்காட்சி மேற்கிந்தியாவில் வளர்ந்துவரும் உணவு உற்பத்தி துறையை சாதகமாக்கிக் கொள்ள இந்தத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
12 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் இந்தக் கண்காட்சியில் Fi India மீண்டும் ஒருமுறை உணவு உட்பொருட்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் பற்றிய 3 நாட்கள் இலவச, ஆன்-சைட் கருத்தரங்குகளை நடத்துகிறது. இந்தக் கருத்தரங்குகள் பல இந்திய சங்கங்களுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவை தொழில்நுட்ப வளர்ச்சிகள் மற்றும் சந்தைப் போக்குகள் பற்றியதாக இருக்கும். நாள் 1 'கட்டுப்பாடுகள் எப்படி இந்திய ஊட்டச்சத்து மருந்துகள் துறையை எளிதாகச் செயல்பட வைக்கின்றன'; 'சந்தையில் முன்னேற்றமடைந்துவரும் ஊட்டச்சத்து மருந்துகள் - விளையாட்டுகளுக்கான ஊட்டச்சத்து, செறிவூட்டிய உணவுகள், மருத்துவ ஊட்டச்சத்து'; 'டயட்டரி சப்ளிமென்ட்ஸ் மார்க்கெட்டிற்கு எப்படி உதவுகிறது? ஃபார்மகோபோரியாஸ் டயட்டரி சப்ளிமன்ட்ஸ் சந்தையில் எப்படி உதவுகிறது?'; ' ஊட்டச்சத்து மருந்துகள் சந்தை வளர்ச்சியில் மருந்து வகைகளின் பங்கு என்ன'; 'உட்பொருட்களில் புதுமை' மற்றும் 'மாங்க் பழச்சாறு - இயற்கையான சிறந்த இனிப்புச் சுவைவையை அளிக்கும் 100% இயற்கையான மாற்றுப்பொருள்' பற்றிய அமர்வுகளைக் கொண்டிருக்கும். நாள் 2 அன்று 'உணவு உட்பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் உள்ள வாய்ப்புக்களும் கட்டுப்பாட்டு சவால்களும்' குறித்து AIFPAவின் கருத்தரங்கு மற்றும் FSSAI-யின் முயற்சி - 'நாடு முழுவதிலும் உணவு பாதுகாப்புக்கான சூழ்நிலையை உருவாக்குவதற்கான புதிய முயற்சிகள்' ஆகியவை நடைபெறும். நாள் 2 அன்று Mondelez International, Farm to Fork Solution, Exelon Food, NuFFoods Spectrum, மற்றும் TUV India ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த பிரமுகர்களின் 'FSSR 2011 முதல் 2018 - உணவுத் துறையில் ஏற்பட்டுள்ள தாக்கம்' பற்றிய கலந்துரையாடலும் நடைபெறும். நாள் 3 அன்று 'க்ளீன் லேபிள் நேச்சுரல் ப்ராடக்ட்ஸ் பாதுகாப்பானவை மற்றும் ஆரோக்கியமானவை'; 'லோகஸ்ட் பீன் கம் (LBG) மற்றும் அதன் உணவு பயன்பாடு' மற்றும் 'என்கேப்சுலேஷன் - உணவில் சிறந்த ஊட்டச்சத்து மதிப்புக்களை க்கொண்டிருக்க என்கேப்சுலேஷன் தொழில்நுட்பம்' ஆகியவை பற்ரிய அமர்வுகள் நடைபெறும்.
இந்த ஆண்டு, இந்தக் கண்காட்சி புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது - நியூட்ரிமார்க்கெட்டிங் நிபுணர்களுடன் சேர்ந்து அனைத்தும் புரோட்டின்கள், ஆரோக்கியமும் நலனும் மற்றும் பேக்கரி புதுமைகள் போன்ற தலைப்புகளில் ஓர் வழிகாட்டப்பட்ட கண்டறிதல் சுற்றுலா என்னும் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டு இந்தக் கண்காட்சியின் மற்ற சுவாரஸ்யமான சிறப்பம்சங்களில் உணவு தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் மற்றும் பேக்கேஜிங் நிறுவனங்கள் ஆகியவை பற்றிய பற்றிய எக்ஸ்போ ஃபுட்டெக் காட்சிக்கூடம், சீனா காட்சிக்கூடம்; ஹெல்த் இன்க்ரெடியன்ட்ஸ் முன்னோட்டம் மற்றும் சிறப்பு Fi India & Hi சமையல் பயிலரங்குகள் ஆகியவையும் அடங்கும். இந்தப் பயிலரங்கில் பிரபல சமையல் கலைஞர் Rakhee Vaswani வழங்கும் சமீபத்திய உணவு போக்குகள் பற்றிய இரண்டு நாள் செயல்முறை விளக்கம் வழங்கப்படும். இதில் இந்திய ஃப்யூஷன் தமாகா, ஃபேன்சி பிரெட் தயாரிப்பு, அற்புதமான எக்லெஸ் டெசர்ட்கள் மற்றும் ஃபெஸ்டிவ் பியஸ்டா ஆகிய அமர்வுகளும் நடைபெறும் - காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் உட்பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி உணவுகளும் டிப்களும் தயார் செய்யப்படும்.
இந்தக் கண்காட்சியின் துவக்கத்தில், UBM India, ProPak Indiaவை அறிமுகம் செய்தது. இது அடுத்த கண்காட்சியிலிருந்து Fi India & Hi உடன் இணைந்து நடத்தப்படும். ProPak India என்பது இந்தியாவில் நடைபெறும், விரிவான, பிரத்யேக நிகழ்ச்சி; பேக்கெஜ்ட் உணவுகளுக்கான சந்தையில் இந்தியா முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக இந்தியா இருப்பதால், இந்தக் கண்காட்சி துறையைச் சேர்ந்தவர்கள் சந்திக்க, ஒருங்கிணைய, வணிகத்தை நடத்த, சமீபத்திய தொழில்நுட்பத்தையும் தீர்வுகளையும் பார்க்க, யோசனைகளையும் அறிவையும் பரிமாறிக்கொள்ள இந்தியாவில் மிகச் சிறந்த மேடையாக இருக்கும். $24.6 பில்லியனுக்கும் மேல் வணிகம் செய்வதாலும், ஆண்டுதோறும் 13% முதல் 15% வரை வளர்ச்சி விகிதத்தைக் கொண்டிருப்பதாலும், இந்திய பேக்கேஜிங் துறை 2020க்குள் $72 பில்லியனை அடையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. UBM உணவு, மருந்து மற்றும் அழகு சாதனங்கள் போன்ற முக்கிய துறைகளில் வலுவான கால்தடம் பதித்துள்ளது. பேக்கேஜிங் என்பது இந்தத் துறைகளில் மிகவும் முக்கியமான ஒரு பகுதி. இந்தத் துறையில் UBM Indiaவின் வலிமையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் இந்தியாவில் இந்தப் பிரத்யேகத் துறையின் வாய்ப்பைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் இந்தக் கண்காட்சியை அறிமுகம் செய்வதற்கு காரணம். ஏனென்றால் இந்தத் துறை தொடர்பாக எந்தக் கண்காட்சியும் நடத்தப்படுவதில்லை.
Fi India & Hi 2017ன் அறிமுக விழாவில் பேசிய, Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM இந்தியா கூறியதாவது, "உணவு உட்பொருட்கள் உலகம் முழுவதிலும் வளர்ந்துவரும் பல பில்லியன் டாலர் துறை. உணவு மற்றும் பானம் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி, குறிப்பாகப் பதப்படுத்தப்படும் உணவுத் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி, புதிய பொருள் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற வாய்ப்புக்களை உருவாக்கித் தந்துள்ளது. மாறிவரும் சமூகபொருளாதார சூழ்நிலைகளும் உணவுத் தயாரிப்புகளின் தரநிலைகள் குறித்து விழிப்புணர்வை அதிகரித்துள்ளன. இதன் விளைவாக, இறுதியாகக் கிடைக்கும் பொருட்களைத் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் உட்பொருட்களின் தரத்தில் கவனம் செலுத்துவதும் அதிகரித்துள்ளது. Fi India & Hiயின் 12வது கண்காட்சியில், UBM India ஒரே இடத்தில் வணிகங்களைக் கண்டுபிடித்து, வளர்ச்சியடைய செய்ய மூன்று நாட்களும் உணவு உட்பொருட்களின் முற்றிலும் சர்வதேச காட்சிப்பாட்டை அளிக்கின்றன. ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவமளிக்கும் நுகர்வோரால் அதிகம் மதிக்கப்படும் நலம் மற்றும் இயற்கை உட்பொருட்கள் போன்ற பிரத்யேக துறைகளின் போக்குகளைத் தெரிந்துகொள்ளவும் இது உதவுமென்று நான் நிச்சயம் நம்புகிறேன்."
"இந்த ஆண்டு, நாங்கள் ProPak Indiaவின் அறிமுகம் குறித்து அறிவிப்பதில் பெருமையடைகிறோம். அடுத்த ஆண்டிலிருந்து Fi India & Hi உடன் இணைந்து நடத்தப்படும். 24.6 பில்லியன் USD வணிகத்தையும் ஆண்டுதோறும் 13-15 சதவிகித வளர்ச்சி விகிதத்தையும் கொண்டிருக்கும் இந்திய பேக்கேஜிங் துறை 2020க்குள் 72 பில்லியன் USDஐ அடையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பேக்கேஜிங்கில் உலகிலேயே மிகக் குறைந்த தனிமனித பயனீட்டளவைக் கொண்டிருக்கும் இந்தத் துறை பதப்படுத்தப்பட்ட உணவு துறையை நோக்கி நாம் செல்லசெல்ல அதிக முக்கியத்துவத்தைப் பெறக்கூடும். UBM India, ProPak 2017 உடன் இணைந்து உணவு, பானம் மற்றும் மருந்து துறைகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களுக்கு வெற்றிகரமான கூட்டங்கள், அறிவு பரிமாற்றங்கள், நெட்வொர்க்கிங் மற்றும் வணிக வாய்ப்புக்கள் ஆகியவற்றை அளித்து இந்த பிரத்யேக, வளர்ந்துவரும் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்திய உணவு உட்பொருட்கள் சந்தை:
- இந்தியாவில் 2016யில் கிட்டத்தட்ட $700 மில்லியனாக இருந்த உணவு உட்பொருட்கள் சந்தை (உலக உணவு உட்பொருட்கள் துறையில் 0.2%க்கும் குறைவானவை $400 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது) தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதாலும், சாப்பிடுவதற்கு தயாராக இருக்கும் உணவுகளின் மீது விருப்பம் அதிகரித்து வருவதாலும் அதிவேக வளர்ச்சியை அடைந்து வருகிறது.
- இந்தச் சந்தை உணவு மணமூட்டிகள் மற்றும் சுவையூட்டிகளால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. இவை இந்தத் துறையில் கணிசமான பங்களிக்கின்றன. இந்தப் பிரிவுகளில் ஸ்வீட்னர்கள் மிக அதிகமான வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ளது. மற்ற அனைத்து பகுதிகளையும்விட தெற்கு பகுதி தான் உணவு பதப்படுத்தல் துறைகளில் அதிக பங்குவகிக்கிறது.
- எப்போதும் தேவைப்படும் இரண்டு முக்கிய உட்பொருட்கள் டயட்டரி ஃபைபர் மற்றும் ஆன்டிஆக்சிடண்ட்களாகும். ஏனென்றால் இவை மனித ஆரோக்கியத்தை மேம்படுத்த மிகவும் முக்கியமானவை. இந்திய உணவு உட்பொருட்கள் துறை இந்தத் துறையில் தனியார் ஈக்யுட்டி கம்யூனிட்டி ஆர்வம்காட்டி வருவதால் காலப்போக்கில் பிரபலமடையும்.
- இந்திய உணவு மற்றும் மளிகைப் பொருட்கள் சந்தை உலகிலேயே ஆறாவது மிகப் பெரிய சந்தையாகும். இதில் சில்லறை விற்பனை 70 சதவிகித பங்களிக்கிறது.
- இந்திய உணவு பதப்படுத்தல் துறை நாட்டின் மொத்த உணவு சந்தையில் 32 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது. இது இந்தியாவிலேயே மிகப் பெரிய துறைகளில் ஒன்றாகும். இது உற்பத்தி, பயன்பாடு, ஏற்றுமதி மற்றும் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி ஆகியவற்றில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
- இது உற்பத்தி மற்றும் விவசாயத்தில் ஒட்டுமொத்த மதிப்புக் கூட்டலில் (GVA) முறையே ஒகிட்டத்தட்ட 8.80 மற்றும் 8.39 சதவிகிதமும், இந்தியாவின் ஏற்றுமதியில் 13 சதவிகிதம் மற்றும் மொத்த துறை முதலீட்டில் ஆறு சதவிகிதம் பங்களிக்கிறது.
- இந்திய உயர்தர உணவுச் சந்தை தற்போது US$ 1.3 பில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 20 சதவிகித கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளர்ச்சியடைந்து வருகிறது. இந்தியாவின் ஆர்கானிக் உணவு சந்தை 2020க்குள் மூன்று மடங்கு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
UBM India பற்றி:
UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களையும் விற்பனையாளர்களையும் பல கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் இணைப்பதற்கான மேடைகளை வழங்குகிறது. UBM India ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதிலும் பெரிய அளவில் 25 கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகிறது. இதனால் பல துறைகளின் வணிகத்திற்கு வழிவகுக்கிறது. UBM Asia கம்பெனியின் UBM India மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM Asia-வின் உரிமையாளர் UBM plc ஆகும். இது லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia என்பது ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது மெய்ன்லேண்ட் சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகும்.
மேலும் விவரங்களுக்கு, பார்க்கவும்: http://www.ubmindia.in.
UBM plc பற்றி:
UBM plc என்பது உலகிலேயே மிகப் பெரிய பிரத்யேக B2B நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகும். வளர்ந்துவரும் டிஜிட்டல் உலகில், மனிதர்கள் ஒரு காரணத்திற்காகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். UBMல் எங்களின் ஆழமான அறிவும், நாங்கள் செயல்படும் இந்தத் துறையில் எங்களுக்கு உள்ள ஆர்வமும் மக்கள் வெற்றிப் பெறுவதற்கான சிறந்த அனுபவங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது. எங்களின் நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளைக் கட்டமைத்து, வணிகம் செய்து, தங்கள் தொழிலை வளர்ச்சியடைய செய்கின்றனர். எங்களின் 3,750+ உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளனர், இவர்கள் 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் செயல்படுகின்றனர். இதில் ஃபேஷன் முதல் மருந்து தயாரிப்பு உட்பொருட்கள் வரை அனைத்தும் அடங்கியிருக்கும். இந்த உலகளாவிய நெட்வொர்க் திறமிக்க, ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்து, வியாபாரிகள் தங்கள் இலங்குகளை அடைய அற்புதமான வாய்ப்புக்களை அளிக்கும் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
மேலும் தகவலுக்கு, http://www.ubm.com; UBM கார்ப்பரேட் செய்திக்கு, ட்விட்டரில் @UBM, லிங்கெடினில் UBM Plc-யில் பின்தொடருங்கள்.
ஊடகத் தொடர்பு :
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
UBM India Pvt Ltd.
Mili Lalwani
[email protected]
Share this article