புது தில்லி, October 5, 2017 /PRNewswire/ --
IMA® (Institute of Management Accountants) இன்று இந்தியாவில் இருந்து CMA® (Certified Management Accountant) எனப்படும் அதன் பிரதான திட்டத்திற்கான சிறந்த திறமைசாலிகளை அறிவித்துள்ளது. CMA® உலகம் முழுவதும், CMA தேர்வுகளை IMA ஒரு வருடத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி; மே மற்றும் ஜூன்; செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் என மூன்று முறை நடத்துகிறது
(Logo: http://mma.prnewswire.com/media/510711/IMA_Logo.jpg )
இந்த ஆண்டு, மே மற்றும் ஜூன் சோதனை சாளரத்தில் மட்டும், உலகளவில் ஆங்கில மொழி தேர்வை மொத்தம் 5,904 மாணவர்கள் எழுதினர். தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் மாதம் அவர்களுக்கு அனுப்பப்பட்டன. இந்தியாவில் இருந்து CMA தொழில்முறை தேர்வு எழுதிய மாணவர்களின் மத்தியில், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் இருந்து ரிச்சா குப்தா அதிகபட்ச மதிப்பெண் பெற்றார். " CMA பாடத்திட்ட கட்டமைப்பு எனது தற்போதைய நிறுவனத்தில் என் பங்கிற்கு மிகவும் பொருத்தமானதாகத் தோன்றியது. உலகெங்கிலும் இந்த சான்றிதழின் நடைமுறை அணுகுமுறை மற்றும் பரவலான அனுகூலங்கள் போன்றவை இந்த படிப்பைத் தொடர வழிவகுத்த முக்கியமானதாக சிலவற்றை, குப்தா CMA பாடதிட்டத்தை தொடர்வதற்கான தனது முடிவை விளக்குகிறார். "இப்பொழுதிலிருந்து ஐந்து ஆண்டுகளில், நான் என் தற்போதைய அமைப்பின் நிதி திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு (FP & A) பிரிவின் தலைவராக இருப்பதாகக் காண்கிறேன். CMA பட்டம் உயர்ந்த நெறிமுறைகள் மற்றும் திறமையுடன் தொடர்புடையது, எனது இலக்குகளை வேகமாகச் சாதிக்க எனக்கு உதவுகிறது," என்று தற்போது ஒரு FP & A மேலாளராக பணிபுரியும் குப்தா மேலும் கூறுகிறார்.
இதற்கிடையில், அதே சோதனை சாளரத்தில் CMA தேர்வு நடத்திய கல்லூரி / பல்கலைக் கழக மாணவர்களிடையே, மும்பையில் இருந்து யாஷ் மஜேஜே பதானி சிறந்த திறமைசாலியாக வெளிவந்துள்ளார்.
"நடைமுறை அனுபவம் இல்லாததால் எனக்கு மிகவும் சவாலான பகுதியாக உள் கட்டுப்பாடுகள் இருந்தது. நான் கருவூலம் மற்றும் மேலாண்மை தொழிலைத் தொடர நம்பிக்கையுடன் இருக்கிறேன். 11 வெவ்வேறு திறன்கள் கொண்ட நான், நிதி மற்றும் கணக்கியல் வேலைகளின் பல அம்சங்கள் மற்றும் CMA சான்றிதழின் உலகளாவிய அங்கீகாரம் ஆகியவற்றைக் கொண்டு என் பணியை முன்னெடுத்துச் செல்ல நான் தயாராக இருக்கிறேன், இப்போது நான் பணியிடத்தில் சேர தயாராக உள்ளேன்", என்று பதானி ஒரு தொலைபேசி பேட்டியில் விளக்குகிறார்.
மும்பை பல்கலைக்கழகத்தில் பதானி வர்த்தக இளங்கலை பட்டப்படிப்புடன் பட்டம் பெற்றார். அவர் இப்போது CMA திட்டத்திலிருந்து கற்றுக்கொண்ட திறன்களை தீவிரமாக பயன்படுத்த தயாராக ஒரு வாய்ப்புக்கு முயற்சிக்கும் ஒரு இளம் தொழில்முறை வல்லுனர்.
மத்திய கிழக்கில், ஓமனில் தொழில்முறை பரிசோதகர்கள் மத்தியில் ஒரு இந்தியக் குடியுரிமை அல்லாத (என்.ஆர்.ஐ) சூர்யனீல் குமார் மிக உயர்ந்த மதிப்பெண் பெற்றுள்ளார்.
"நான் அதன் உலகளாவிய அங்கீகாரத்திற்காகவும் பாடதிட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் கடுமையான சோதனை / தேர்விற்க்காகவும் CMA வைத் தொடர்ந்தேன். நான் விரைவில் ஒரு மூத்த நிர்வாக பொறுப்பில் என்னை பார்க்க விரும்புகிறேன். நான் இந்த இலக்கை அடைய CMA உதவும் என்று நான் நம்புகிறேன்", என்று ஓமானில் ஒரு மூத்த நிதி மேலாளராக பணிபுரியும் குமார் கூறினார்.
அதன் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2017 ஆம் ஆண்டுகளில் பரிசோதனைக் கழகத்தில் இந்தியாவிலிருந்து இரண்டு மாணவர்கள் CMA தேர்வில் உலகளவில் சிறந்த செயல்திறன் பெறும் விருதுகளை பெற்றுள்ளனர் என்பதை நினைவுகூறலாம். பல்கலைக்கழக மாணவர் பிரிவில், ஹரிஹரன் ராமசுப்ரமணியன் மும்பை பல்கலைக்கழகத்தில் கணக்கீட்டில் இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு பட்டம் பெற்றவர் ஒரு மாணவராக உயர்ந்த தேர்ச்சி மதிப்பெண் பெற்றதற்காக பிரிஸ்கில் எஸ் பெய்ன் சிறந்த மாணவர் செயல்திறன் விருது பெற்றார். புது தில்லியைச் சேர்ந்த அபிஷேக் கரீனா தனிச் சிறப்பான செயல்பாட்டிற்கான ஒரு மாணவர் சான்றிதழைப் பெற்றார்.
CMA® (Certified Management Accountant) பற்றி
IMA ® உலகளாவிய அங்கீகரிக்கப்பட்ட CMA® (Certified Management Accountant) திட்டம் மேம்பட்ட கணக்கியல் மற்றும் 11 முக்கிய பகுதிகளின் நிதி நிர்வாக அறிவின் மதிப்பீடு, நிதி திட்டமிடல், பகுப்பாய்வு, கட்டுப்பாடு, மற்றும் முடிவு ஆதரவு ஆகியவை உட்பட. CMA சான்றிதழ் திட்டத்தைப் பற்றிய மேலும் தகவலுக்கு, தயவுசெய்து http://www.imanet.org/certification செல்லவும்.
IMA® (Institute of Management Accountants) பற்றி
IMA, வியாபாரத்தில் கணக்காளர்கள் மற்றும் நிதி வல்லுனர்களின் சங்கம், மேலாண்மை கணக்கியல் தொழிலை முன்னேற்றுவதில் பிரத்தியேகமாக கவனம் செலுத்துகின்ற மிகப்பெரிய மற்றும் மிகவும் மதிக்கப்படும் சங்கங்களில் ஒன்றாகும். உலகளவில், ஆராய்ச்சி மூலம் தொழில்துறையை ஆதரிக்கிறது, தொடர்ச்சியான கல்வி, நெட்வொர்க்கிங் மற்றும் உயர்ந்த நெறிமுறை வணிக நடைமுறைகளுக்கு உத்திரவாதமளிக்கும் CMA® (Certified Management Accountant) திட்டம். 140 நாடுகளில் 90,000 க்கும் அதிகமான உறுப்பினர்கள் மற்றும் 300 தொழில்முறை வல்லுனர்கள் மற்றும் மாணவர் அத்தியாயங்களின் சர்வதேச வலையமைப்பை IMA கொண்டுள்ளது. Montvale, N.J., USA இல் தலைமையகமாகக் கொண்டு, IMA அதன் நான்கு உலகளாவிய பிராந்தியங்கள் மூலம் உள்ளூர் சேவைகளை வழங்குகின்றது: அமெரிக்கா, ஆசியா / பசிபிக், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு / இந்தியா. IMA ஐப் பற்றிய மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க http://www.imanet.org.
ஊடகத் தொடர்பு:
Janice Sevilla
[email protected]
+91-9003162258
Communication Specialist
Institute of Management Accountants
Share this article