புது தில்லி, September 19, 2017 /PRNewswire/ --
தனிப்பட்ட பார்வையாளர் வருகையில் 54% சாதனை அதிகரிப்புக்கான சாட்சி
DJGF 2017 ஒரே பார்வையில்:
Delhi Jewellery and Gem Fair (DJGF) உடைய 6வது பதிப்பு, UBM Indiaவினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வு பிரகதி மைதான், புதுதில்லியில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இந்த கண்காட்சயை துவக்கி வைத்த சிறப்பு விருந்தினர்களாவனர். Ms. Ruby Yadav, கவர்னர்களின் மன்ற உறுப்பினர், NIFT, ஜவுளி அமைச்சகம், இந்திய அரசாங்கம்; Shri. Ram Niwas Goel, மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர்; Shri. Shyam Jaju, தேசிய துணை தலைவர், பாரதீய ஜனதா கட்சி; Shri. Ram Avatar Verma, சேர்மேன், The Bullion and Jewellers Association Delhi; Shri. Yogesh Singal - தலைவர், The Bullion Jewellers Association Delhi; Shri. Navin Kumar, செய்தித் தொடர்பாளர் பாஜக மற்றும் சேர்மேன், The Bullion and Jewellers Association Delhi; Mr. Yogesh Mudras - மேலாண்மை இயக்குநர், UBM India மற்றும் Mr. Michael Duck - நிர்வாக துணை தலைவர், UBM Asia.
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/551671/DJGF_Logo.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/557401/Inauguration_ceremony_of_DJGF_2017.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/557402/Key_Dignitaries_at_the_inauguration_of_DJGF_2017.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/557400/DJGF_2017.jpg )
இந்த கண்காட்சியானது நகை துறையின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் இது முக்கிய கழகங்கள், கண்காட்சியாளர்கள் மற்றும் வாங்குநர்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருகின்றது. Delhi Jewellery and Gem Fair வட இந்தியாவின் நம்பர். 1 சர்வதேச B2B நகை கண்காட்சி மற்றும் இந்திய ரத்தினக்கற்கள் மற்றும் நகை துறைக்காக வருடந்தோறும் UBM India நடத்துகின்ற நான்கு பெரிய நகைக் கண்காட்சிகளில் ஒன்றாகும். கழகங்களினாலும், பெருவாரியான துறையினாலும் இந்த கண்காட்சி நகைத் துறையின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் புகழ்பெற்ற கழகங்களான, The Bullion & Jewellers Association Delhi - இதன் உறுப்பினர்களில் தில்லியில் உள்ள முன்னணி உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்தவியாபாரிகள் உள்ளடங்குவார்கள், Karol Bagh Jewellers Association, Delhi Jewellers Association மற்றும் Maliwara Jewellers Association ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றுள்ளது.
இந்த மூன்று நாள் வர்த்தக கண்காட்சி 300க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களை திரட்டி வந்து இந்தியா முழுவதிலும் உள்ள நகை உற்பத்தியாளர்கள், சில்லரைவர்த்தகர்கள், மொத்தவியாபாரிகள், இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுடன் இணைக்கவும் தொழிலை உருவாக்கவும் கொண்டு வந்து, மற்றும் தங்கம், வைரம், ரத்தினக்கற்கள், முத்து விநியோகஸ்தர்கள் மற்றும் வணிகர்கள், விலையுயர்ந்த உலோகம் மற்றும் நகை பதிக்கும் வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள், மற்றும் வர்த்தக மற்றும் அரசாங்க அமைப்புகளில் இருந்து பிரதிநிதிகள் சந்திக்கவும், ஈடுபடவும் பிணைப்பை ஏற்படுத்தவும் தங்கள் தொழிலை வளர்த்துக்கொள்ளவும் ஒரு வாய்ப்பையும் அளிக்கிறது. இந்த கண்காட்சியில் இயந்திர மற்றும் துணை கருவித் தொழிற்சாலை நிறுவனத்தினரின் பங்கேற்பும் இடம்பெற்றது.
உத்திர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான், ஆகிய அருகாமை மாநிலங்களில் இருந்து மற்றும் மகராஷ்ட்ரா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் இக்கண்காட்சி அபரிமிதமான வரவேற்பை பெற்றது. இந்த பிரம்மாண்ட கண்காட்சிக்கான திரைச்சீலை உயர்த்தப்படும்போது, UBM India ஒரு தொடர்ச்சியான வெற்றிகரமான சாலை கண்காட்சிகளை வட இந்தியாவின் பல்வேறு கேந்திரங்களான ஜெய்பூர், லூதியானா மற்றும் மீரட்டில் நடத்தியது, மற்றும் அதோடு இந்தியாவின் 90 நகரங்களை இணைக்கும் கடையில்-இருந்து-கடை செயல்பாடுகளையும் அந்த மண்டலத்திலுள்ள பல்வேறு புகழ்பெற்ற நகைக்கடைகளுடன் நடத்தியது. 'வைர வகைப்படுத்தல் மற்றும் மதிப்பிடுதல்' என்கிற தலைப்பில் National Institute of Diamond and Gems நடத்திய கருத்தாழம் மிக்க கருத்தரங்கம் மற்றும் ஒலிம்பிக் பாக்சிங் சாம்பியன் மற்றும் பத்ம பூஷன் விருதுபெற்ற,Mary Kom, அவர்கள் சிறப்பித்த Design Academy of India மாணவர்களுக்கான ஒரு பாராட்டுவிழாவும் நடைபெற்றன, இவை இந்த கண்காட்சியின் சில சிறப்பு அமசங்கள், இவற்றோடு 100க்கும் அதிகமான வாங்குநர்கள் நடத்திய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் இடம்பெற்ற புகழ்பெற்ற கண்காட்சியாளர்களில் நாட்டின் நகை உற்பத்தியாளர்களாகிய Swarnshilp Chain & Jewellers Pvt. Ltd., Gitanjali Jewellery Retail Limited, GIA (Gemological Institute of America), Zar Jewels Pvt. Ltd., Unique Chains Pvt. Ltd., Yamuna Diamond, Hari Krishna Exports Pvt. Ltd., Bluestone Jewellery & Lifestyle Pvt. Ltd., Royal Chains Pvt. Ltd., Ridhi Sidhi Gems & Jewellery, Solanki Jewellers, Damara Gold Pvt. Ltd., Vikas Chain & Jewellery Pvt. Ltd., N.D. Diamonds & Jewels, Silver City, Yash Gold மற்றும் Shilpi Jewels உள்ளிட்ட பலர் உள்ளடங்குவர்.
6ஆம் நிகழ்வின் வெற்றிகரமான நிறைவுவிழாவை பற்றி பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர் , UBM India Pvt. Ltd., இவ்வாறு கூறினார், " ரத்தினக்கற்கள் மற்றும் நகைகளின் சந்தை குறிப்பிடத்தக்க மாற்றங்களை கண்டுள்ளது, குறிப்பாக ஜிஎஸ்டி வரிவிதிப்புக்குப் பிறகு. உண்மையில் இந்த நகர்வானது இந்த துறையை அதிக முதிர்ச்சியுள்ளதாகவும், ஒருங்கிணைப்பானதாகவும் மற்றும் வெளிப்படைத்தன்மையானதுமாகவே மாற்றும். ஒருங்கிணைக்கப்பட்ட சில்லரை நகை சந்தையானது இந்தியாவில் இன்னமும் ஆரம்பகட்டத்திலேயே இருந்தாலும், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அளவில்லாதவை. நுகர்வோர் மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் இருப்பதால் ஒருங்கிணைக்கப்பட்ட துறையானது அடிப்படை பங்கை தொடர்ந்து செயல்படுத்தும். புதுமையான வடிவமைப்புகள் மற்றும் நகைகளில் ரகங்கள் ஆகியவற்றுக்கான அதிகரிக்கும் தேவையுடன் நுகர்வோரின் முன்னுரிமையில் இத்துறை மாற்றங்களை கண்டு வருகின்றது. மேலும், ஆடம்பரமான மற்றும் அறிக்கை ஏற்படுத்தும் நகைகளுக்கான நாட்டத்திற்கு வட இந்தியாவே பெயர் பெற்றது, இதில் முகலாய பழங்கால நகைகள், தங்கம், வைரம் மற்றும் குந்தன் நவ்ரத்னா உள்ளிட்டவை அடங்கும். Delhi Jewellery and Gem Fair உடைய 6ஆம் நிகழ்வு நகை சந்தையின் மீதும், அது வழங்கும் உற்சாகமூட்டும் தயாரிப்புகள் மீதும் ஒரு நம்பிகை உணர்வை மீண்டும் வலியுறுத்தியது . இது நகைக்கடைக்கார்ர்கள் அதிகமான விற்பனையையும் கடைக்கு வருகைதருபவர்களையும் காணக்கூடிய வரவிருக்கும் திருமணம் மற்றும் பண்டிகை விழாக்காலத்திற்கு நன்றாக இருக்கும்."
"இந்த ஆண்டின் கண்காட்சியானது வருகைதந்தவர்களில் 54% மற்றும் பங்கேற்பில் 80% என்கிற குறிப்பிடத்தக்க அதிகரிப்பையும் கண்டது. இந்த கண்காட்சியானது Retail Jewellers Guild Awards (RJGA) உடைய மூன்றாம் நிகழ்வையும் கண்டது, இது சில்லரை நகை வர்த்தக தொழிலை இந்தியா முழுவதிலும் கௌரவிப்பதற்கான ஒரு தனித்துவமான முயற்சி இது. நாகரீக அணிவகுப்பின் மூலமாக தங்கள் படைப்புகளை காட்சிப்படுத்திய சில்லரைவர்த்தகர்களும் உற்பத்தியாளர்களும் இருந்தார்கள்," என்று அவர் மேலும் கூறினார்.
Retail Jewellers Guild Awards உடைய மூன்றாம் நிகழ்வானது UBM Indiaவால் தொடங்கப்பட்டது, மற்றும் இதில் சில்லரை நகை வர்த்தகத்தில் இருக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளின் சிறப்புத்தன்மை மற்றும் முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டு இந்திய அளவில் கௌரவிக்கப்படுகின்றனர். Ernst & Young நிறுவனத்தை செயல்முறை ஆலோசகராகக் கொண்டு RJGA நாட்டின் சிறந்த திறமைகளை ஒரு முறையாண, தொழில்முறையான நடைமுறை மூலமாக வரையறுத்தது. RJGA 2017 உடைய சிறப்பம்சமானது இந்தியாவின் முதன் முறையான சில்லரை நகை துறைக்கான புகழ்ச்சிக்கான Walk of Fame - இது புகழ்பெற்ற பிராண்டுகளின் பிரத்தியேகமான கண்காட்சி ஆகும். இந்த ஆண்டும், மாடல் மற்றும் நடிகர்களான Gauhar Khan, Mannara Chopra ஆகிய நிகழ்ச்சியை வியந்துபார்க்க வைக்கும் நபர்களால் நடத்தப்பட்ட கண்கவரும் நாகரீக வரிசைகள், துறைசார்ந்த நிபுணர்கள், பொழுதுபோக்கு மற்றும் நெட்வொர்க்கிங் அமர்வுகளினால் விருது வழங்கும் விழா குறிப்பிடப்பட்டது.
'The Retail Jewellers Guild Awards 2017' உடைய வெற்றியாளர்கள்:
- சிறப்பான வாடிக்கையாளர் சேவை- Sales Process Initiatives; சிறப்பான வாடிக்கையாளர் சேவை- After Sales Initiatives, ஆண்டின் சிறந்த முதலாளி, மிகவும் புதுமையான சந்தைப்படுத்தல்- Kashi Jewellers
- பிரச்சாரம்- சோதனைரீதியான / செயல்பாடுகள் மற்றும்மிகவும் புதுமையான சந்தைப்படுத்தல்பிரச்சாரம்- OOH - NAC Jewellers
- ஆண்டின் சிறந்த கடை- தனியாக (Less than 1,000 சது.அடி.) - S2R Jewels & Jewellery
- ஆண்டின் சிறந்த கடை- தனியாக (1,000 - 5,000 சது.அடி.) - Chintamani's Jewellery Aracade Pvt. Ltd.
- ஆண்டின் சிறந்த கடை- தனியாக (5,000 சது.அடிக்கும் அதிகம்) - Anand Jewels (Indore) Pvt. Ltd.
- ஆண்டின் சிறந்த கடை- கடை சங்கிலி- Ranka Jewellers
- மிகவும் புதுமையான சந்தைப்படுத்தல்பிரச்சாரம்- Digital - Achakottil Jewels
- மிகவும் புதுமையான சந்தைப்படுத்தல்பிரச்சாரம்- Print - DIACOLOR - Fine Contemporary Jewels
- மிகவும் புதுமையான சந்தைப்படுத்தல்பிரச்சாரம்- Radio - M/S Abhishek Zaveri
- மிகவும் புதுமையான சந்தைப்படுத்தல்பிரச்சாரம்- TV - AVR Swarna Mahal Jewelry Pvt. Ltd.
- சிறப்பான வடிவமைப்பு- வைர நகை- Shobha Asar Jewellery Pvt. Ltd.
- சிறப்பான வடிவமைப்பு- தங்க நகை - Sumangali Jewellers
- சிறப்பான வடிவமைப்பு- வெள்ளி நகை - R V Agrawal Impex Pvt. Ltd.
- சிறப்பான வடிவமைப்பு- பிளாட்டினம் நகை - P.N.Gadgil Jewellers Pvt. Ltd.
- சிறப்பான வடிவமைப்பு- ஜாதாவ் நகை - Sharda Jewellers
- சிறப்பான வடிவமைப்பு- வண்ண ரத்தினக்கற்கள் - Khurana Jewellery House
- நடுவர்குழு அங்கீகரிப்பு- ஆண்டின் சிறந்த இளம்கலைஞர்- வடிவமைப்பாளர் - Siddharthaa Sawansukha
- நடுவர்குழு அங்கீகரிப்பு- ஆண்டின் சிறந்த இளம்கலைஞர்- தரிசனவாதி - Saurabh Gadgil
- நடுவர்குழு அங்கீகரிப்பு- வாழ்நாள் சாதனை விருது - Romy Mehta
- நடுவர்குழு அங்கீகரிப்பு- ஆண்டின் சிறந்த பெண் தொழில்முனைவோர் - Pallavi Foley
- UBM முதன்முயற்சி அங்கீகரிப்பு: தங்க நகையில் புதுமை - Shilpi Jewels
UBM India பற்றி:
UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடத்துபவராகும்.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து வருகைதாருங்கள் ubmindia.in .
UBM plc பற்றி:
UBM plc உலகின் மிகப்பெரிய ப்யூர் ப்ளே B2B நிகழ்வு ஒருங்கிணைப்பாளர். இது அதிக டிஜிட்டல்மயமாக மாறிய உலகம், மிகவும் அர்த்தமுள்ள, மனித அளவிலான இணைப்பை ஏற்படுத்துவதன் மதிப்பு இவ்வளவு முக்கியத்துவமாக இருந்தது கிடையாது. UBMஇல், நாங்கள் சேவைசெய்யும் தொழிற்துறை பிரிவுகளுக்கான எங்கள் ஆழமான அறிவும் பற்றுதலும் மக்கள் வெற்றியடையக்கூடிய ஒரு மதிப்புமிக்க அனுபவத்தை உருவாக்க எங்களை அனுமதித்தது. எங்கள் நிகழ்வுகளில் நாங்கள் உறவுகளை உருவாக்குகிறோம், ஒப்பந்தங்களை முடிவுசெய்கிறோம் மற்றும் அவர்களுடைய தொழில்களை வளர்க்கிறோம். எங்கள் 3,750+ மக்கள், 20 நாடுகளுக்கு மேல் இருக்கிறார்கள், 50 வெவ்வேறு துறைகளில் சேவைசெய்கிறார்கள், அதில் நவநாகரீகம் முதல் மருந்து உட்பொருட்கள் வரை இருக்கின்றன. இந்த உலகளாவிய நெட்வொர்க்குகள், திறனுள்ள, பற்றுள்ள மக்கள் மற்றும் சந்தையை வழிநடத்தும் நிகழ்வுகள் தொழில்செய்யும் மக்கள் தங்கள் இலட்சியங்களை அடைவதற்கான உற்சாகமூட்டும் வாய்ப்புகளை அளிக்கின்றன.
மேலும் தகவல்களுக்கு செல்லுங்கள் http://www.ubm.com; UBM கார்ப்பரேட் செய்திகளுக்கு எங்களை டிவிட்டரில் பின் தொடருங்கள் @UBM ,UBM Plc LinkedIn.
ஊடக தொடர்பு:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article