கிரேட்டர் நொய்டா, இந்தியா, September 18, 2017 /PRNewswire/ --
உலகளாவிய ஆர்வம், சர்வதேச முதலீடுகள் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைக் குறிக்கும் 11வது பதிப்பு
REI 2017 ஒரு பார்வை:
(Logo: http://mma.prnewswire.com/media/556154/UBM_REI_2017_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளரான UBM India நடத்தும் Renewable Energy India 2017 Expo (REI), வெற்றிகரமாகப் பத்தாவது ஆண்டை நிறைவு செய்துவிட்டது. இந்த ஆண்டு செப்டம்பர் 20 முதல் 22 வரை கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்தியா எக்ஸ்போ மையத்தில் இந்தக் கண்காட்சியை நடத்த உள்ளது. மிகச் சிறப்புமிக்க நிகழ்வான REI மிகவும் பிரபலமான உலகளாவிய மேடையாகும். இதில் அயல்நாட்டில் செயல்படுபவர்களையும் சேர்த்து இந்தியாவின் பசுமை பொருளாதார சமூகத்தைச் சேர்ந்த அனைவரும் துறையின் போக்குகள், சவால்கள் மற்றும் மார்க்கெட் நிலவரங்கள் மற்றும் இந்திய கட்டுப்பாட்டு விதிகள் ஆகியவற்றைப் பற்றி கலந்துரையாடுவதற்காக ஒன்றுகூடுவார்கள். இந்த நிகழ்வு சர்வதேச கண்காட்சிகள் மற்றும் மாநாட்டு மேடை மூலம் புதுப்பிக்கப்படக்கூடிய எரிபொருள் வளஆதாரங்களின் பயன்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும், அவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பொருட்கள், புதுமைகள் ஆகியவற்றைக் காட்சிப்படுத்த வேண்டும் மற்றும் முன்சிந்தனைகளை அதிகரிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
சங்க ஆதரவு மற்றும் பங்கேற்கும் நாடுகள்:
REIயின் 11வது பதிப்பில், ஜப்பான், ஜெர்மனி, ஃபிரான்ஸ், போலாந்து, யூ.எஸ்.ஏ. கொரியா, சீனா மற்றும் தைவான் போன்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதற்கு Ministry of New and Renewable Energy (MNRE), Solar Energy Corporation of India (SECI), Indian Renewable Energy Development Agency Limited (IREDA), NEDO Japan, Indo German Energy Forum (IGEF), Bloomberg New Energy Finance மற்றும் Mercom Capital போன்ற நிறுவனங்கள் ஆதரவளிக்கின்றன.
முக்கிய பிரமுகர்கள்:
இந்தக் கண்காட்சிக்கு The Global Association of the Exhibitions Industryயான UFI சான்றளித்துள்ளது. இதில் செப்டம்பர் 20 அன்று நடைபெறவுள்ள பிரமாண்ட திறப்பு விழாவில் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர் - Shri Anand Kumar, IAS, Secretary, Ministry of New and Renewable Energy, இந்திய அரசு; Shri Amitabh Kant, IAS, CEO, NITI AYOG, இந்திய அரசு; Shri Upendra Tripathy, IAS, Interim Director General, International Solar Alliance (ISA); Mr. Justin Wu, Head of APAC, Bloomberg New Energy Finance, Singapore; Mr. Hans-Josef Fell, President of the Energy Watch Group (EWG) & German Parliament-யின் முன்னாள் உறுப்பினர்; Mr. Naoki Tomotake, Director General International Affairs, NEDO, ஜப்பான்; Mr. René Van Berkel, இந்தியாவின் UNIDO பிரதிநிதி மற்றும் Dr. Arunabha Ghosh, CEO, Council on Energy, Environment and Water(CEEW).
கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் நாடுகள்:
உற்பத்தியாளர்கள், EPC, மற்றும் சேவை வழங்குநர்களை ஒன்றிணைக்கும் இந்தக் கண்காட்சியில் Adani Solar, Tata Power Solar, Azure Power, Sky Power, Canadian Solar, Huawei, Trina Solar, Jinko Solar, Siemens Gamesa, Vikram Solar, Waaree Energies, Mitsubishi, Delta Electronics, Panasonic, SMA, ABB, Kyocera, Sterling & Wilson, Mahindra Sustain, Applied Materials, POSCO, Fronious போன்ற நிறுவனங்களையும் சேர்த்து 750க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றன.
குறிப்பிட்ட தலைப்பினை அடிப்படையாகக் கொண்ட மூன்று நாள் மாநாடு:
'Accelerating Momentum...From Ambition to Action' என்னும் தலைப்பினைக் கொண்டு நடத்தப்படும் மிகவும் சிறப்பான இந்த மூன்று நாள் மாநாடு Ministry of New and Renewable Energy, International Solar Alliance ( ISA ) , UNIDO, Indo-German Energy Forum, MNRE - EU Technical Cell, Bloomberg New Energy Finance, PV Magazine, Skill Council for Green Jobs, மற்றும் Mercom Capital ஆகியவை வழங்கும் சிறப்பான அமர்வுகளுடன் நடைபெறும்.
இந்த மாநாட்டின் சிறப்பம்சங்கள்:
- இந்தியா: முக்கிய கொள்கை முயற்சிகளை வரையறுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும் புதுப்பிக்கப்படக்கூடிய எரிபொருள் துறையின் பிரதிநிதி.
- Skilling by Nations' இந்தத் துறையில் பயிற்சி எப்படி ஒருங்கிணைக்கப்படுகிறது, பயிற்சி மற்றும் சிறப்பான நடவடிக்கையின் தாக்கம் என்பதை எடுத்துரைக்கும்; Green Jobs மற்றும் CEEW வழங்கும் அமர்வுகள்.
- சூர்ய நமஸ்காரம்: இயர்ன் ஃப்ரம் தி சன்'
- இந்தியாவில் ரூஃப்டாப் PV மார்க்கெட் வளர்ச்சி'
- விண்ட்ஸ் ஆஃப் டுமாரோ: மேக் இன் இந்தியா'
- சூரிய மற்றும் காற்று வள மேலாண்மையில் சிறப்பாகச் செயல்பட ஊக்குவிப்பு'
- மைக்ரோ க்ரிட்கள்: குறிப்பிட்ட இடத்திற்கான பயன்பாடுகளை அளித்தல் மற்றும் வாய்ப்புக்களை அதிகப்படுத்துதல்'
- அருகாமை மின்சக்தி: மின்சார அமைப்பில் ப்ளாக் செயினின் பங்கு
- ஸ்மார்ட்டான நகரங்களுக்கு ஸ்மார்ட்டான பவர்: செயல்திறனை அதிகரித்தல்
- சர்க்குலர் பொருளாதாரம்: கழிவை எரிபொருளாக்க ஸ்வச் பாரத் மற்றும் ஸ்மார்ட் சிட்டீஸ் இலக்கு ஆகியவற்றின் மூலம் வழிகளைக் கண்டுபிடித்தல்
REI Expo 2017இல் புதிதாக என்ன உள்ளது:
- Mahindra Susten வழங்கும் இந்தியாவின் முதல் மொபைல் PV ஆய்வுக்கூடம் காட்சிப்படுத்தப்பட உள்ளது
- தர வட்ட மேசை - PV Magazine, Germany வழங்கும் கலந்துரையாடல்
- PV Magazine, Germany வழங்கும் சோலார் சூப்பர் ஹீரோஸ்
- சோலார் இன்ஸ்டாலர்களுக்கான திறன் போட்டி
- EPCக்கள் மற்றும் டெவலப்பர்களுக்கு சோலார் டிசைன் சவால்
- என்ஃபேஸ் எனர்ஜி, USA வழங்கும் மாஸ்டர் வகுப்பு: இன்ஸ்டாலர்கள் மற்றும் இன்ஜினியரிங், கொள்முதல் மற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு மைக்ரோ-இன்வர்ட்டர் தொழில்நுட்பங்களுக்கு பின்னாலுள்ள புதுமைகள் குறித்த அறிவை அளிக்கும், இந்திய ரூஃப்டாப் சோலார் போட்டோவால்டாயிக் (PV) சந்தைக்கு மைக்ரோ-இன்வர்ட்டர்கள் எப்படி சிறப்பாகப் பொருந்தும் என்பதை விவரிக்கும்.
- CEO வட்டமேசை மற்றும் நிதி வட்டமேசை
- 'அட்வான்டேஜ் ராஜஸ்தான்' என்பது ஆற்றல்மிக்க முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் டெவலப்பர்களைக் கவர்வதற்காக ராஜஸ்தான் மாநிலம் தடத்தும் கருத்தரங்காகும்.
- 3E, Belgium and Wise Energy, UK வழங்கும் 'சூரிய மற்றும் காற்று வள மேலாண்மையில் சிறந்த செயல்திறனை அதிகரித்தல்' குறித்த பயிலரங்கு
Renewable Energy Indiaவின் 11வது ஆண்டுவிழாவை அறிவித்து பேசிய, Mr. Yogesh Mudras, Managing Director, UBM India, கூறியதாவது, "சமீபத்திய அறிக்கையின்படி 2017ன் H1யின் போது கூடுதலாக 4,765MW திறனுடன் இந்திய சோலார் துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது, என்று சமீபத்திய அறிக்கைத் தெரிவிக்கிறது. சூரிய சக்திக்கான செலவு குறைவு என்பதால் பலரும் இதனை விரும்புகின்றனர். எனவே, ரூஃப்டாப் சோலாரும் பெருமளவில் வளர்ச்சியடைந்துவருகிறது. இது மட்டுமல்லாமல், சமீபத்தில் இந்தியா இந்த ஆண்டின் 'Renewable Energy Country Attractiveness Index'-யில் யூ.எஸ்.ஐ பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. இது சர்வதேச முதலீட்டாளர்களுக்கும் உபகரண சப்ளையர்களையும் ஈர்க்கிறது. REI Expoவின் 2017 பதிப்பில் UBM இந்தியாவின் நோக்கம் "Accelerating the Momentum…From Ambition to Action." இதுவே இந்த ஆண்டு கண்காட்சியின் தலைப்பாகும். இது துறை, அரசு மற்றும் முதலீட்டாளர்களுக்கிடையே உள்ள இடைவெளியை இணைக்கும். "
மேலும் அவர், " REI 2017 என்பது பல நாடுகளின் பங்கேற்பு, சிறந்த தொழில்நுட்பம், விலைக் குறைவான தீர்வுகள், துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களின் பங்கேற்பு, பல்வேறு நாட்டினைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கேற்பு, உலகளவில் முன்னிலை வகிக்கும் பிராண்டுகள் அவர்களின் பொருட்களையும் தீர்வுகளையும் காட்சிப்படுத்துதல், மற்றும் சிறந்த தகவல்களை அளிக்கும் மாநாடாக இந்த மாபெரும் நிகழ்வு இருக்கும்," என்று கூறினார்."
இந்த வர்த்தகக் கண்காட்சியில் 3வது செப்டம்பர் 19, 2017 அன்று 3வது Renewable Energy India Awards வழங்கப்படும். இது இந்தத் துறையின் முயற்சிகள், புதுமை, மற்றும் சிறப்புக்களை அங்கீகரிப்பதையும் திறமையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த விருதுகள் உற்பத்தி மற்றும் நடைமுறைப்படுத்துதல் பிரிவுகளைச் சேர்ந்த பல்வேறு வகைப்பாடுகளின் கீழ் போட்டியிடும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
துறையின் கருத்துக்கள்
திரு. Saurabh Bhandari, Founder, SolarMaxx:
"REI என்பது பல தேசிய மற்றும் சர்வதேச பார்வையாளர்களைக் கவரும் இந்தியாவின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறந்த புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி கண்காட்சி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இது புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி துறையில் இயங்கும் எங்களைப் போன்ற நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள், திட்டங்களை ஏற்படுத்துபவர்கள், ஊடகம் மற்றும் சக தொழில் நிபுணர்கள் ஆகியோருடன் உரையாட ஒரு மேடையை அளித்து தருகிறது. இந்த புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி துறை, குறிப்பாக சூரிய சக்தி துறை இந்தியாவில் குப்பைக் கொட்டுதல் எதிர்ப்பு வரி, GST நடைமுறை, டிரான்ஸ்மிஷன் மற்றும் வீலிங் கட்டனங்கள் அதிகரிப்பு, மூன்றாம் தரப்பினர் வாங்குவதற்கு விதிக்கப்படும் அதிக கமிஷன்கள் மற்றும் வரி போன்றவற்றால் சவாலான தருணத்தை சந்தித்து வருகிறது. இந்த கண்காட்சியில் நடத்தப்படும் அர்த்தமுள்ள கருத்தரங்குகள் ஒரு துறையாக இணைந்து இந்த சவால்களைத் தீர்க்க எங்களுக்கு உதவும். SolarMaxx-யில் நாங்கள் REI 2017-யில் பங்கேற்க ஆர்வமுடன் காத்திருக்கிறோம்."
திரு. Suman Kumar, President, Rajasthan Solar Association:
"இந்தியா மற்றும் உலகம் முழுவதிலும் சூரிய சக்தி என்பது மிகவும் போட்டிகரமான மூலாதாரமாக மாறிவிட்டது. நாம் சோலார் துறை மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் காலக்கட்டத்தில் வாழ்ந்துவருகிறோம். இந்தியாவின் கணிசமான திறன் வளர்ச்சியினால் நாட்டிற்குள் பல உலகளாவிய சோலார் நிறுவனங்கள் வருகின்றன. இது ஒவ்வொரு ஆண்டும் REI-யிலிருந்து துவங்குகிறது. ஆசியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கப்படக்கூடிய எரிசக்தி நிகழ்வான REI, இந்த ஆண்டு அட்வான்டேஜ் ராஜஸ்தான் எனப்படும் ராஜஸ்தானுக்கான பிரத்யேக அமர்வை நடத்துகிறது. இது ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள வணிக வாய்ப்புக்களைக் காட்சிப்படுத்தும். ராஜஸ்தானைச் சேர்ந்த சோலார் நிறுவனங்கள் பல இந்த ஆண்டின் REIயில் பங்கேற்கின்றன."
Mr. A.K.Jain, Managing Director, Rajashthan Electronics & Instruments Ltd (REIL):
"இந்தியாவின் முன்னணி கண்காட்சியான REI, உலகம் முழுவதிலுமுள்ள நிறுவனங்கள் ஒன்றாக சேர்த்து, அவர்களின் பொதுவான விருப்பங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது. இந்த ஆண்டு REIL இந்தத் துறையில் தனக்குள்ள 30 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், SPV சொல்யூஷன்ஸில் 3.15 லட்சத்திற்கும் மேல் சேர்த்து, 50 MWக்கு மேல் கொண்டுவரவும் விரும்புகிறது. REIL இந்தியாவில் மிகப்பெரிய ஆஃப் க்ரிட் சொல்யூஷன் ப்ரொவைடராக நுழைந்து, பல முன்னணி செயற்திட்டங்களையும் National Solar Mission, Smart Cities Mission மற்றும் Electrification of Rural Housing, Rooftop with Net-Metering, Expert CPSE for Grid Interactive SPV Power plants போன்ற அரசாங்க திட்டங்களையும் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த வெற்றிக் கதைகளுடன் மேலும் பல வெற்றிகளும் காத்திருக்கின்றன. ஒட்டுமொத்த நோக்கங்களை நிறைவேற்ற முக்கியமான இடைவெளிகளையும் சவால்களையும் தீர்க்க வேண்டும். RPOவை நடைமுறைப்படுத்துதல், குறையும் வரிவீதம், உள்நாட்டு உற்பத்தி, க்ரிட் மேலாண்மை, ஸ்டோரேஜ், ரூஃப்டாப் இன்ஸ்டாலேஷன்களை அதிகரிக்க பொது-தனியார் பங்கேற்பு, நெட் மீட்டரிங் போன்றவற்றை நடைமுறைப்படுத்த DISCOMன் நேர்மறையான பதில் போன்றவை முக்கியமான பிரச்னைகளாக உள்ளன. இவை தீர்க்கப்பட்டால் ராஜஸ்தான் சோலாருக்கு உலகளாவிய இடமாக இருந்து, இந்தியா தனது இலக்கினை அடைய உதவும்."
Mr. Ketan Mehta, Co-founder, Rays Power Infra.:
"நாங்கள் தொடர்ந்து 4வது ஆண்டாக Renewable Energy India Expoவில் பங்கேற்பது குறித்து பெருமையடைகிறோம். முந்தைய ஆண்டுகளைவிட REIயில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மேடை பல்வேறு சூரிய சக்தி நிறுவனங்கள் மத்தியில் நீண்ட கால உறவினை ஏற்படுத்துகிறது. டெவலப்பர்கள், சப்ளையர்கள், ஒப்பந்ததாரர்கள் அனைவரும் இதனால் பயனடைகின்றனர். இது பல்வேறு சோலார் கார்ப்பரேட்கள் இணைந்து செயல்பட காரணமாக உள்ளது. இந்த ஆண்டு, நாங்கள் எங்களின் புதிய முயற்சியான 'Rays Future Energy' என்பதை அறிமுகம் செய்கிறோம். நாங்கள் இ-மொபிலிட்டி, பேட்டரி ஸ்டோரேஜ் மற்றும் சோலார் தயாரிப்புகள் போன்ற சோலார் எனர்ஜி சொல்யூஷன்களைக் காட்சிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்."
திரு. Rajeshwar Bhat, MD, Juwi India Renewable Energies Private Limited:
"இன்றைய தொழில்துறை சோலார் PV செயற்திட்டங்களில் ஃப்ரீ ஃபீல்ட் மற்றும் ரூஃப்டாப்கள் இரண்டிலும் அபரிமிதமான வளர்ச்சியடைந்துள்ளது. இன்று இந்தத் துறை க்ரிட் பாரிட்டி விலைகளை அல்லது க்ரிட் பாரிட்டியைவிட குறைவான விலைகளை அடைந்துள்ளது. இந்த PPA விலைகள் இறக்குமதி செய்யப்பட்ட சீன மாட்யூல்களினால் சாத்தியமாகியுள்ளது. இந்த மாட்யூல் விலை செயற்திட்ட செலவில் 60% இருந்து, இந்த செயற்திட்டங்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டதும் கடந்த 3 மாதங்களில் 10-12% மேல் வளர்ச்சியடைந்துள்ளது. எனவே, பொருட்களை அனுப்புவதிலும் தேவையிலும் உள்ள நிச்சயமற்ற உலக சந்தை சூழலை அடிப்படையாகக் கொண்ட விலை இந்தத் துறையில் நிலைக்காது. மாட்யூல்களின் விலை அதிகரித்திருப்பது இந்த செயற்திட்டங்களுக்கான நிதியையும் நடைமுறை தரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிற கருத்தினைக் கொண்டிருக்கிறோம். நிதியளிக்கும் முகமைகள் இந்த செயற்திட்டங்களுக்காக நிதியளித்து இந்த செயற்திட்டங்கள் சரியான நேரத்திற்கு முடிக்கப்பட்டால், இந்தத் துறை அடுத்த 3-5 ஆண்டுகளுக்கு நிலைநிறுத்தத்தக்க வணிகத்திற்கு சந்தையில் நியாயமான PPA விலைகளை அளிக்க வேண்டும். மேலும் இதனால் வேஃபர்கள் மற்றும் செல், உற்பத்தி தொழிற்சாலைகள் ஆகியவற்றுக்கும் இந்தியாவில் அதிக முதலீட்டு தேவையை ஏற்படுத்தும். இதனால் போட்டிகரமாகச் செயல்பட முடியும் மற்றும் இந்தியாவில் முக்கிய சக்தியாக சூரிய சக்தி இருக்கும். சோலார் PV செயற்திட்டங்களில் 100GW நோக்கத்தை அடைய, திறமிக்க கருத்தாய்வை உறுதி செய்ய, அனைத்து முக்கியமான பங்குதாரர்களும் பங்கேற்க இது உதவும்."
Mr. Sunil Kotak, Executive Director and CEO, Kotak Urja:
"இந்தத் துறையில் முன்னணி நிறுவனமாகச் செயல்படும் Kotak Urja, கடந்த 10 ஆண்டுகளாக REI உடன் இணைந்து செயல்படுவது குறித்து பெருமையடைகிறது. நாங்கள் REI அளவில் பெரிதாக வளர்வதை நாங்கள் பார்த்திருக்கிறோம். இது இந்தியாவின் முதன்மை Renewable Energy exhibitionஆக உருவாக நிபுணத்துவத்துடன், சர்வதேச அளவில் செயல்படுகிறது. முக்கிய வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் ஊடகம் ஆகியவற்றின் முன்னால் நின்று ப்ராடக்ட்களையும் சிஸ்டம்களையும் ஒருங்கிணைத்து பெரிய தீர்வுகளாகக் காட்ட ஓர் அற்புதமான மேடையாகும். சோலார் துறை GST-யின் தாக்கம், முன்மொழியப்பட்டிருக்கும் குப்பைக் கொட்டுதல் எதிர்ப்பு வரி போன்ற சில சரிவுகளை சந்திக்கிறது. கொள்கையை அமைப்பவர்கள் உள்நாட்டு சோலார் மாட்யூல்ஸ் உற்பத்தியாளர்கள் மற்றும் ஸ்டோரேஜ் சிஸ்டம்களை ஊக்குவிக்க வேண்டியது அவசியம். மாநிலங்கள் முழுமையும் சீரான கொள்கைகளைக் கொண்டிருப்பதும் இதற்கு உதவும். ஆயினும், துறைப் பற்றிய எதிர்கால எதிர்பார்ப்பு வலிமையாக உள்ளது. நாங்கள் ஒரு நிறுவனமாகவும் துறையாகவும் வளர்ச்சி வாய்ப்பினை சந்திக்க தயாராக இருக்கிறோம்.
திரு. Vishnu Hazari, Chief Executive Officer, Premier Solar Systems Private Limited:
"Premier Solar சமீபத்தில் சிறப்பான தன்னியக்க 200 MW சோலார் பேனல்கள் உற்பத்தி தொழிற்சாலையை நிறுவி தனது உற்பத்தி திறனை விரிவுப்படுத்தியுள்ளது. இதனால் Premier Solarயின் ஒட்டுமொத்த உற்பத்தி திறன் சோலார் பேனல்களுக்கு 375 MWஆகவும், சோலார் செல்லுக்க் 50 MWஆகவும் உள்ளது. இந்த விரிவாக்கம் எங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது. நாங்கள் Premier Solar, வளர்ந்துவரும் இந்தத் துறையில் முக்கிய நிறுவனமாக இருப்பதாக உணர்கிறோம். சூரிய சக்தி உருவாக்கம் 2022க்குள் 175 GWஆக இருக்க வேண்டுமென்கிற இலக்கினை இந்திய அரசு நிர்ணயித்துள்ளது. இதனால் இத்திட்டத்தை நாடு முழுவதிலும் இந்த செயற்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்த முடியும். இது எங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாகும். REI, சோலார் PV ப்ராடக்ட் உற்பத்தியாளர்கள், EPC நிறுவனங்கள் மற்றும் உபகரண சப்ளையர்கள் ஆகியோர் சந்திக்கவும், இணையவும், எதிர்கால வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடவும், அவர்கள் இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 100GW இலக்கினை அடைய எப்படி ஒன்றாக இணைந்து செயல்படலாம் என்று ஆராயவும் சிறந்த நெட்வொர்க்கிங் மேடையை அளிக்கிறது."
Mr. Ashish Khanna, ED & CEO, Tata Power Solar:
"சோலார் இப்போது மிகவும் வளர்ச்சியடைந்துவரும் துறையாக உள்ளது, REI கண்காட்சி போன்ற சிறப்பான மேடையினால், இந்தத் துறை வளர்ச்சியடைவதற்கும், சோலார் மற்றும் அது தொடர்பான துறைகளில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சிகளைத் தெரிந்துகொள்ளவும் முடிகிறது. இது உலகம் முழுவதிலும் உள்ள துறை நிபுணர்களையும் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து புதிய தொழில்நுட்பங்கள், திறன்கள் ஆகியவற்றை வெளிக்காட்ட பிரத்யேக வாய்ப்பினை அளிக்கிறது. இது இந்தியாவின் மின்சக்தி உருவாக்க முறை மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள சோலார் துறையை முற்றிலும் மாற்றும் வளர்ச்சிகளை எடுத்துரைக்கிறது.
Mr. Saptak Ghosh, Research Scientist, Centre for Study of Science, Technology and Policy:
"சூரிய சக்தி உருவாக்கம் 2022க்குள் 175 GWஆக இருக்க வேண்டுமென்று இந்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கிற்கு நாடு முழுவதிலும் உள்ள செயற்திட்டங்கள் கைகொடுக்கும். இது எங்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பாகும். REI சோலார் PV ப்ராடக்ட் உற்பத்தியாளர்கள், EPC நிறுவனங்கள் மற்றும் உபகரண சப்ளையர்கள் சந்திக்க, இணைய, எதிர்கால வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாட, அவர்கள் இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 100GW-வை அடைய எப்படி ஒன்றாக இணைந்து செயல்படலாம் என்பதை ஆராய ஒரு முழுமையான சிறந்த நெட்வொர்க்கிங் மேடையை அளிக்கிறது. பெரிய அளவில் சூரிய சக்தி மற்றும் கிரவுண்ட் மவுன்டட் மெகாவாட் சோலார் செயற்திட்டங்கள் தொழிற்சாலை ஆகியவை துவங்கப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் ரூஃப்டாப் கொள்கைகள் மிக வேகமாக மாறிவருகின்றன. நிலையான இடத்தைப் பிடிப்பது என்பது துறைக்கு கடினமாக உள்ளது. இந்தக் கொள்கைகள் சரியாக நடைமுறைப்படுத்தப்பட்டதும், 1 GW இலக்கிற்கு நிலையான பாதையை வகுப்பது எளிதாக இருக்கும். வெளிப்படையான அணுகலை நோக்கிய சுதந்திரமான கொள்கைகள் இதற்கு உதவும். வலிமையான கொள்கைகளைத் தொடர்வதுடன் கர்னாடக அரசாங்கத்தின் முன்யோசனையும் சேர்ந்தால் உகந்த புதுப்பிக்கப்படக்கூடிய சக்தியின் லாபங்களைப் பல்வேறு துறைகளால் பெற முடியும்."
UBM India பற்றி:
UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களையும் விற்பனையாளர்களையும் பல கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் இணைப்பதற்கான மேடைகளை வழங்குகிறது. UBM India ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதிலும் பெரிய அளவில் 25 கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகிறது. இதனால் பல துறைகளின் வணிகத்திற்கு வழிவகுக்கிறது. UBM Asia கம்பெனியின் UBM India மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM Asia-வின் உரிமையாளர் UBM plc ஆகும். இது லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia என்பது ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது மெய்ன்லேண்ட் சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகும்.
மேலும் விவரங்களுக்கு, ubmindia.inஐ பாருங்கள்.
UBM plc பற்றி:
UBM plc என்பது உலகிலேயே மிகப் பெரிய பிரத்யேக B2B நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகும். வளர்ந்துவரும் டிஜிட்டல் உலகில், மனிதர்கள் ஒரு காரணத்திற்காகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். UBMல் எங்களின் ஆழமான அறிவும், நாங்கள் செயல்படும் இந்தத் துறையில் எங்களுக்கு உள்ள ஆர்வமும் மக்கள் வெற்றிப் பெறுவதற்கான சிறந்த அனுபவங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது. எங்களின் நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளைக் கட்டமைத்து, வணிகம் செய்து, தங்கள் தொழிலை வளர்ச்சியடைய செய்கின்றனர். எங்களின் 3,750+ உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளனர், இவர்கள் 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் செயல்படுகின்றனர். இதில் ஃபேஷன் முதல் மருந்து தயாரிப்பு உட்பொருட்கள் வரை அனைத்தும் அடங்கியிருக்கும். இந்த உலகளாவிய நெட்வொர்க் திறமிக்க, ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்து, வியாபாரிகள் தங்கள் இலங்குகளை அடைய அற்புதமான வாய்ப்புக்களை அளிக்கும் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
மேலும் தகவலுக்கு, http://www.ubm.com; UBM கார்ப்பரேட் செய்திக்கு, ட்விட்டரில் @UBM, லிங்கெடினில் UBM Plc-யில் பின்தொடருங்கள்.
ஊடகத் தொடர்பு:
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article