புது தில்லி, இந்தியா, September 11, 2017 /PRNewswire/ --
UBM இந்தியாவால் பிரகதி மைதானில் நடத்தப்பட்ட வட இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச ஜுவெல்லரி திரேட் ஷோவில் பங்கேற்பு சதவிகிதம் 80 சதவிகிதமாக உயர்வு
UBM இந்தியவால் நடத்தப்பட்ட, The Delhi Jewellery and Gem Fair (DJGF) -இன் 6-ஆவது பதிப்பு, உயர் தர நகை வியாபாரிகள்,இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகர்கள் மற்றும் தொழில்துறை நிறுவனங்களை, தலைநகரத்தில் மீண்டும் இணைத்தது. 9 முதல் 11 செப்டம்பர் வரை நடந்த இந்த மூன்று நாள் கண்காட்சி, மரியாதைக்குரிய தொழில்துறை முகவர்களின் மத்தியில், புது தில்லி பிரகதி மைதானில், ஒரு அற்புதமான தொடக்கத்தைக் கண்டது. The Delhi Jewellery and Gem Fair வட இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச B2B நகைக் கண்காட்சியாகும், மேலும் இந்தியா முழுவதிலும் UBM இந்தியாவால் நடத்தபட்ட நான்கு பெரிய ஜெம்ஸ் & ஜுவெல்லரி கண்காட்சிகளில் ஒன்றாகும்.
(Logo: http://mma.prnewswire.com/media/553946/UBM_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/553945/DJGF_Logo.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/553944/DJGF_North_India.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/553941/Delhi_Jewellery_and_Gems_Fair_2017.jpg )
இந்தக் கண்காட்சி கௌரவ விருந்தினராகிய, இந்திய அரசின் NIFT, ஜவுளி அமைச்சகத்தின் கவர்னர் வாரிய உறுப்பினர், Ms. Ruby Yadav, Shri. Ram Niwas Goel, கௌரவ. சபாநாயகர் தில்லி சட்டமன்றம்; Shri. Shyam Jaju, தேசிய துணை தலைவர், பாரதிய ஜனதா கட்சி; Shri. Ram Avatar Verma, தலைவர், புல்லியன் அண்ட் ஜுவல்ஸ் அசோசியேஷன் தில்லி; Shri. Yogesh Singal - ஜனாதிபதி, புல்லியன் ஜுவலஸ் சங்கம் டெல்லி; Shri. Navin Kumar, செய்தித் தொடர்பாளர் BJP மற்றும் தலைவர், புல்லியன் அண்ட் ஜுவல்ஸ் அசோசியேஷன் தில்லி; Mr. Yogesh Mudras - MD UBM இந்தியா மற்றும் Mr. Michael Duck - UBM ஆசியாவின் துணைத் தலைவர் ஆகியவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த்க் கண்காட்சி, நகைத் துறையின் ஒரு முக்கிய அங்கமாக சங்கங்கள் மற்றும் தொழில்துறையால் பெரிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு, Karol Bagh Jewellers Association, Delhi Bullion & Jewellers Association, Delhi Jewellers Association மற்றும் Maliwara Jewellers Association ஆகிய புகழ்பெற்ற சங்கங்களால் ஆதரிக்கப்படுகிறது. Gitanjali Jewellery Retail Limited, GIA (Gemological Institute of America), Zar Jewels Pvt. Ltd., Unique Chains Pvt. Ltd., Yamuna Diamond, Hari Krishna Exports Pvt. Ltd., Bluestone Jewellery & Lifestyle Pvt. Ltd., Royal Chains Pvt. Ltd., Ridhi Sidhi Gems & Jewellery, Solanki Jewellers, Damara Gold Pvt. Ltd., Vikas Chain & Jewellery Pvt. Ltd., Swarnshilp Chain & Jewellers Pvt. Ltd., N.D. Diamonds & Jewels, Silver City, Yash Gold, Shilpi Jewels இன்னும் பல நிறுவனங்கள்இந்தக் கண்காட்சியில் பங்குபெற்ற சில புகழ்பெற்ற நகை உற்பத்தியாளர்களாவர்.
மூன்று அரங்களில் பரவியிருந்த நிகழ்ச்சியில், 280-க்கும் மேலான பங்கேற்பாளர்கள் காட்சிப்படுத்திய ஜொலிக்கும் கண்காட்சி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசம் மேலும் மகாராஷ்டிரம் போன்ற அபரிமிதமான அண்டைய மாநிலங்களிலிருந்து வரவேற்பைப் பெற்று, இக்கண்காட்சியை ஒரு பெயர்பெற்ற தொழில்துறை தளமாகவும், நகை வியாபாரிகளுக்கு மிகப்பெரிய நகை மற்றும் இரத்தினக் கற்கள் வாங்குமிடமாகவும் மேலும் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இந்தக் கண்காட்சியில், நகை மொத்த விற்பனையாளர்கள், வைரம், இரத்தினக் கற்கள், முத்து வினியோகஸ்தர்கள் மற்றும் வணிகர்கள், விலை மதிப்பில்லா உலோகங்கள் மற்றும் நகை பதிக்கும் வணிகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள், வர்த்தக மற்றும் அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் போன்ற அனைவரும் ஒரே கூரையின் கீழ் இணைந்து, சந்தித்து, ஈடுபட்டு, உறவுகளைப் புதிப்பித்து, தங்களுடைய வர்த்தகத்தை முன்னேற்றுவதை இந்தக் கண்காட்சியில் காணமுடிந்தது. நடத்தப்பட்ட மற்ற 100-க்கும் மேலான வாங்குவோர் நிகழ்ச்சிகளுடன், 'வைரத்தைப் பிரித்து மதிப்பிடுதல்' என்னும் தலைப்பில் நடந்த ஒரு உள்நோக்குள்ள கருத்தரங்கும் இந்தக் கண்காட்சியின் முக்கிய அம்சமாகத் திகழ்ந்தது.
இந்த பிரமாண்டமான நிகழ்ச்சியின் முன்னோட்டமாக, UBM இந்தியா வெற்றிகரமான ரோட் ஷோக்கள் தொடர் ஒன்றையும், ஜெய்ப்பூர், லூதியானா மற்றும் மீரட் போன்ற வடஇந்திய மையங்களில் உள்ள பல முக்கிய நகை வியாபாரிகளுடன் இணைந்து அந்தப் பகுதியில், கடைக்குக் கடை நிகழ்ச்சிளையும் நடத்தியது.
DJGF-இன் ஆறாவது பதிப்பின் தொடக்கவிழாவில் பேசிய UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் Mr. Yogesh Mudras, "தற்போது, ஒரு தொழில்பிரிவாக ஜெம்ஸ் அண்ட் ஜுவெல்லரி தொழில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கண்டு வருகிறது. தங்கத்தின் விலை ஒரு வருடத்தில் மிகவும் அதிகமாக உயர்ந்துவிட்டது, மேலும், தங்கத்தை உடனே பரிமாற்றம் செய்வது போன்ற செயலூக்கமான முயற்சிகள் வர்த்தகத்தை மேலும் உயர்த்துமென்று எதிர்பார்க்கிறோம். வாடிக்கியாளர் மற்றும் பொருளாதார மாற்றங்களை தாங்கிக்கொள்ளும் திறனுடையதால், அது ஆரம்பக் கட்டங்களில் இருந்தாலும், அமைப்புசார் பிரிவு தொடர்ந்து அடிப்படைப் பங்கை வகிக்கும். மேலும், வட இந்தியாவே, முகல் ஆண்டிக், தங்கம், வைரம், குந்தன் நவரத்தினம் போன்ற பளபளப்பான ஆடம்பரமான நகைகளுக்கான விருப்பத்தில் நாட்டின் பெரும்பான்மைச் சந்தையை தனதாக்கிக்கொண்டுள்ளது. UBM இந்தியா ஜொலிப்பதற்கான ஆசையைப் புரிந்து கொண்டிருப்பதால், வட இந்தியாவின் இவ்வளவு பிரமாண்டமான பெரிய அளவிலான - டெல்லி ஜுவெல்லரி அண்ட் ஜெம் கண்காட்சி இந்தப் பிரிவை மேலூம் முன்னேற்றும்." என்று கூறினார்.
அவர் மேலும், "280-க்கும் மேற்பட்ட பங்கேற்கும் கண்காட்சியாளர்கள் மற்றும் பங்கேர்பில் ஒரு அபரிமிதமான 80% மேலான உயர்வு மூலமாக, இந்தக் கண்காட்சி, நகை வியாபாரிகளுக்கு மிகப்பெரிய ஜுவெல்லரி மற்றும் ஜெம்ஸ்டோன் வாங்குமிடமாக உருவாகியுள்ளது." என்றும் கூறினார்.
DJGF 2017, UBM இந்தியாவின் இந்தியா முழுவதிலும் உள்ள சில்லறை நகை வணிகத்தில் உள்ள தனி நபர்கள் மற்றும் நிறுவனங்களின் சிறப்பையும் முயற்சிகளையும் அங்கீகரித்து பாராட்டும் ஒரு தினிச்சிறப்பு வாய்ந்த முயற்சியாகிய ரீடெயில் ஜூவெல்லர்ஸ் கில்ட்ஸ் விருது நிகழ்ச்சியின் மூன்றாவது பதிப்பையும், 10 செப்டெம்பர் அன்று த லலித் டெல்லியில் நடத்தும்.
எர்ன்ஸ்ட் & யங்-கை செயல்முறை ஆலோசகர்களாகக் கொண்டு ரீடெயில் ஜூவெல்லர்ஸ் கில்ட்ஸ் விருது, ஒரு முறையான, தொழில்முறையுள்ள அணுகுமுறையுடன் சில்லறை நகை வியாபாரத்தில், நாட்டின் திறமைகளிலிருந்து சிறப்பானவர்களைத் தேர்ந்தெடுக்கிறது. இந்த ஆண்டு வழங்கப்படும் பரந்த வகையிலான விருதுகள், 'இந்த ஆண்டின் சிறந்த கடை', 'இந்த ஆண்டின் சிறந்த முதலாளி', 'மிகவும் புதுமையான விளம்பரப் பிரசாரம்', 'சிறந்த வாடிக்கையாளர் சேவை' மற்றும் 'சிறந்த டிசைன்' போன்ற சில்லறை விற்பனைத் துறையின் பல்வேறு செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
புகழ்பெற்ற பிராண்டுகளின் தனிச்சிறப்பான காட்சியான - சில்லறை நகை வியாபாரத்தின் இந்தியாவிலேயே முதல் புகழ் நடை RJGA 2017-இன் சிறப்பம்சமாக அமையும். இந்த ஆண்டும், இந்த விருது நிகழ்ச்சியில் கௌஹார் கான், மன்ஹாரா சோப்ரா, இன்னும் பல மாடல்கள் ஷோஸ்டாப்பார்களாக பங்குபெறும் ஒரு கண்கவர் பேஷன் ஷோவும், தொழில்துறை வல்லுனர்களின் கண்ணோட்டங்கள் மற்றும் பொழுதுப்போக்கு, நெட்வர்கிங் அமர்வுகளும் நடைபெறும்.
UBM India-வைப் பற்றி
UBM India, கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியோ, உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளின் மூலம், தொழில்துறைக்கும் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒரே இடத்தில் சேர்க்கும் ஒரு தளத்தை உருவாக்கித் தரும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளராகும். UBM India 25-க்கும் மேலான பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளையும் நாடெங்கிலும் ஆண்டு முழுவதும் நடத்துகிறது; இதன் மூலமாக பலவிதமான தொழில்துறைகளில் வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது. ஒரு UBM Asia நிறுவனமாகிய, UBM India-விற்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் உள்ளன. UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc-க்கு சொந்தமான நிறுவனமாகும்.
UBM Asia, ஏசியாவிலேயே முன்னணி கண்காட்சி அமைப்பாளராகும், மேலும் இது சீனா, இந்தியா மற்றும் மலேசியாவிலும் மிகப்பெரிய வணிகமுறை கண்காட்சி அமைப்பாளராகும். மேலும் விவரங்களுக்கு, ubmindia.in.-ஐப் பார்க்கவும்.
UBM plc:-யைப் பற்றி:
UBM plc உலகிலேயே மிகப்பெரிய, ஒரே ஒரு துறை சார்ந்த, B2B நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள் ஆகும். டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கும் உலகில், ஒரு அர்த்தமுள்ள மனித நிலைத் தொடர்பு என்பது முன்பெப்போதையும் விட முக்கியமாகிவிட்டது. UBM-இல், நாங்கள் சேவை செய்யும் பிரிவுகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவும் ஆர்வமும், மக்கள் வெற்றியடையக்கூடிய விலைமதிப்பில்லா அனுபவங்களை உருவாக்க எங்களை அனுமதிக்கிறது. எங்கள் நிகழ்ச்சிகளில், மக்கள் உறவுகளை உருவாக்கி, வியாபாரங்களை முடித்து, அவர்களுடைய வணிகத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். எங்களுடைய 3750+ ஊழியர்கள், 20 நாடுகளில் இருந்து, 50-க்கும் அதிகமான பிரிவுகளில் - ஃபேஷன் முதல் மருத்துவப் பொருட்கள் வரையிலான துறைகளில் சேவை செய்கிறார்கள். இந்த சர்வதேச வலையங்கள், ஆர்வமிக்க ஊழியர்கள் மற்றும் சந்தை முன்னணி நிகழ்ச்சிகள் ஆகியவை வணிகர்கள் தங்களுடைய குறிக்கோள்களை எட்ட உற்சாகமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
மேலும் விவரமறிய,http://www.ubm.com-க்கு செல்லவும்; UBM கார்பரேட் செய்திகளுக்கு, எங்களை @UBM-யில் ட்விட்டரில் அல்லது LinkedIn-இல் UBM Plcதொடருங்கள்.
ஊடகத் தொடர்பு குறித்த கேள்விகளுக்கு தொடர்பு கொள்ளவும்:
UBM India
Roshni Mitra / [email protected]
Mili Lalwani [email protected]
+91-22-6172-7000
Share this article