ஆஸ்திரேலிய அரசுத் தலைமை வழக்குரைஞர் துறை, Jindal சட்டக்கல்வி மாணவர்களுக்கு உள்ளகப்பயிற்சியை (இன்டர்ன்ஷிப்) அளிக்கிறது
சோனிபட், இந்தியா, September 8, 2017 /PRNewswire/ --
O.P. Jindal Global University (JGU)யின் The Centre for India Australia Studies (CIAS), சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் Young Leaders Externship Advancement Programme (YLEAP) என்னும் மிகச் சிறப்பான ஒரு முயற்சியை அறிமுகம் செய்துள்ளது. CIAS, ஆஸ்திரேலியாவில் JGU மாணவர்களுக்கு பிரத்யேக உள்ளகப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வாய்ப்புக்களை அளிக்கும் YLEAP என்னும் முயற்சிக்காக பொதுநலவாய அரசுத் தலைமை வழக்குரைஞர் துறை மற்றும் பல முன்னணி ஆஸ்திரேலிய சட்ட நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளது.
YLEAPன் அறிமுகத்தால், மாணவர்களால் சட்ட நிறுவனங்களிலும் அரசு அமைப்புகளிலும் மதிப்புமிக்க சர்வதேச வேலை அனுபவத்தைப் பெற முடியும். மேலும் இது ஆஸ்திரேலியாவில் தொழில்வாழ்க்கையை மேற்கொள்ள விரும்பும் இந்திய மாணவர்களுக்கு ஒரு பிரத்யேக படிக்கல்லாக இருக்கிறது. YLEAP மூலம் JGU மற்றும் CIAS ஆகியவை இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள வாய்ப்புக்கள் குறித்து அதிகமாகத் தெரிந்துக் கொள்ள வேண்டுமென்கிற நோக்கத்தை நிறைவேற்றத் துவங்கியுள்ளன. இதனால் இந்தியாவால் ஆஸ்திரேலியாவை எளிதில் அணுக முடியும்.
இந்த வளர்ச்சிகள் பற்றிப் பேசிய, JGU-வின் தலைமை துணைவேந்தர், பேராசிரியர் (டாக்டர்.) C. Raj Kumar, கூறியதாவது, "ஓர் உலகளாவிய பல்கலைக்கழகமாக JGU, எப்போதும் எங்கள் மாணவர்களுக்கு பிரத்யேக உலகளாவிய வாய்ப்புக்களை அளிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆஸ்திரேலிய கல்வி முறை முற்றிலும் உலகத்தரம் வாய்ந்தது. நாங்கள் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சில உலகளாவிய முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுகிறோம். ஆஸ்திரேலியாவில் உள்ள எங்கள் மாணவர்களுக்கு நாங்கள் அளிக்கும் வாய்ப்புக்களுடன் சேர்த்து, இந்த உள்ளகப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வாய்ப்புக்களையும் அளிக்கிறோம்."
அரசுத் தலைமை வழக்குரைஞர் துறையின் செயலாளர், திரு. Chris Moraitis PSM, கூறியதாவது, "நான் ஆஸ்திரேலிய அரசுத் தலைமை வழக்குரைஞர் துறையில் இந்த சுவாரஸ்யமான உள்ளகப் பயிற்சி (இன்டர்ன்ஷிப்) வாய்ப்பில் பங்கேற்க O.P. Jindal Global University-யின் மாணவர்களை வரவேற்கிறேன். இந்த உள்ளகப் பயிற்சி, (இன்டர்ன்ஷிப்) கல்வியையும் நன்மையையும் அளிக்கும் என்பதில் நான் நம்பிக்கைக் கொண்டுள்ளேன்."
இந்தப் பிரத்யேக வேலை அனுபவ வாய்ப்புக்களுடன் சேர்த்து, Law Council of Australia, சமீபத்தில் JGLS பட்டப்படிப்பை அங்கீகரித்துள்ளது. இதனால் JGLS பட்டதாரிகள் எளிதாக, ஆஸ்திரேலியாவில் சட்டப்பயிற்சி செய்ய தகுதிப் பெறுகின்றனர்.
Corrs Chambers Westgarth-யின் பங்குதாரரும் தலைமை நிர்வாக அலுவலருமான திரு. John W.H. Denton AO, கூறியதாவது, "நாங்கள் Jindal Global Law School உடன் இணைந்து செயல்படுவது குறித்தும், Jindal-ல் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்கள் சிலர் எங்களின் seasonal clerkship program-யில் சேர்வது குறித்தும் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவின் முதன்மை சட்டக் கல்லூரிகளுள் ஒன்றான இதில் சட்டக் கல்வி, வெளியீடுகள் மற்றும் உள்ளகப் பயிற்சிகள் (இன்டர்ன்ஷிப்கள்) ஆகிய பிரிவுகளில் இணைந்து செயல்படுவதால் இந்திய சந்தையில் நாங்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு மேலும் வலுவடைகிறது, இது போன்ற பிரிவுகளில் பெரிய ஆஸ்திரேலிய நிறுவனம் ஈடுபடுவது இதுவே முதல்முறை."
JGLS-ன் Centre for India Australia Studies-ன் நிர்வாக இயக்குநரும் துறை துணை முதல்வருமான Shaun Star, கூறியதாவது, "ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு பிரத்யேக வாய்ப்புக்களை வழங்கும் இந்த பார்ட்னர்ஷிப்களை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஆஸ்திரேலியாவிற்கு செல்வதற்கு வழிகளை உருவாக்குவது என்பது நமது இரண்டு நாடுகளுக்கிடையே நிறுவனம்சார்ந்த தொடர்புகளையும் மக்களுக்கு இடையிலான தொடர்புகளையும் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். நாங்கள் YLEAP programme-ஐ வளர்ச்சியடைய செய்யவும், மேலும் அதிகமான ஆஸ்திரேலிய அமைப்புகளுடன் வலிமையான பார்ட்னர்ஷிப்களை உருவாக்கவும், இந்த முயற்சியின் தாக்கத்தை மேலும் அதிகமான இந்திய மாணவர்களிடம் ஏற்படுத்தவும் விரும்புகிறோம்."
O.P. Jindal Global University பற்றி
JGU என்பது ஹரியானா பிரைவேட் பல்கலைக்கழகங்கள் (இரண்டாவது சட்டத்திருத்தம்) சட்டம், 2009ஆல் நிறுவப்பட்டுள்ள லாபநோக்கமற்ற உலகளாவிய பல்கலைக்கழகம். JGU திரு. O.P. Jindal-யின் நினைவாக, தலைமை வேந்தர் திரு. Naveen Jindal பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் இதனை உருவாக்கினார். உலகளாவிய பாடங்கள், உலகளாவிய பாடநிகழ்ச்சிகள், உலகளாவிய பாடத்திட்டம், உலகளாவிய ஆராய்ச்சி, உலகளாவிய உடனிணைவுகள், மற்றும் உலகளாவிய ஆசிரியர்கள் மூலம் உலகளாவிய உரையாடலை ஊக்குவிப்பது JGU-யின் நோக்கமாகும். JGU டெல்லியில் நேஷனல் கேப்பிட்டல் ரீஜியனில் 80 ஏக்கரிலான அற்புதமான தங்குமிடத்தைக் கொண்ட வளாகத்தில் அமைந்துள்ளது.
JGU 1:15 என்கிற ஆசிரியர்-மாணவர் விகிதாசாரத்தைக் கொண்டிருக்கும் ஆசியாவில் உள்ள சில பல்கலைக்கழகங்களுள் ஒன்று. இது உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மிகச் சிறந்த கல்வித் தகுதிகளையும் அனுபவத்தையும் கொண்ட பேராசிரியர்களை நியமித்துள்ளது. JGU ஆறு கல்லூரிகளை நிறுவியுள்ளது: Jindal Global Law School, Jindal Global Business School, Jindal School of International Affairs, Jindal School of Government and Public Policy, Jindal School of Liberal Arts & Humanities மற்றும் Jindal School of Journalism and Communication.
மேலும் விவரங்களுக்கு, http://www.jgu.edu.inஐ பார்க்கவும்.
ஊடகத் தொடர்பு:
Kakul Rizvi
Additional Director, Communications and Public Affairs
[email protected]
+91-8396907273
O.P. Jindal Global University
Share this article