புது தில்லி, September 5, 2017 /PRNewswire/ --
UBM இந்தியாவினால் நடத்தப்படும் வட இந்தியாவின் மாபெரும் ஆபரண வர்த்தகக் கண்காட்சி
UBM இந்தியாவினால் நடத்தப்படும் 6-வது டெல்லி ஆபரண மற்றும் ஜெம் கண்காட்சியில் (DJGF) மாபெரும் ஆபரணவியலாளர்களும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியாளர்களும், தொழில்துறை கூட்டமைப்புகளும் தலைநகரில் கூடுகின்றன. புது டெல்லியின் பிரகதி மைதானத்தில் வரும் செப்டம்பர் 9 முதல் 11-வரை நடைபெறும் மூன்று நாள் கண்காட்சியில் ஆபரணத் துறையில் சமீபத்திய சில கவர்ச்சிகரமான ஆபரணங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன. இந்தக் கண்காட்சி ஆபரணவியலாளர்களாலும், தொழில்துறையினராலும் ஆபரணத் துறையின் ஒரு அங்கமாகக் கருதப்படுகிறது. இதற்கு, Karol Bagh Jewelers Association, Delhi Bullion & Jewelers Association, Delhi Jewelers Association மற்றும் Maliwara Jewelers Association போன்ற புகழ்வாய்ந்த சங்கங்கள் ஆதரவளிக்கின்றன.
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/551671/DJGF_Logo.jpg )
280-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். அதாவது, பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 80% அதிகரித்துள்ளது. மிகப்பெரிய ஆபரண மற்றும் ஜெம்ஸ்டோன் கண்காட்சியாகவும் ஆபரணவியலாளர்களுக்கு சிறந்த ஆபரணம் கிடைக்கும் இடமாகவும் இது வளர்ந்திருக்கிறது. ஆபரண மொத்த விற்பனையாளர்கள், சில்லறை வர்த்தகர்கள், ஏற்றுமதி இறக்குமதியாளர்கள், ஆபரணத் தயாரிப்பாளர்கள், வைரம், ஜெம் கற்கள், முத்து சப்ளை செய்வோர் மற்றும் வர்த்தகர்கள், பிரெஷியஸ் மெட்டல் மற்றும் ஜுவல்லரி மவுண்டிங் வர்த்தகர்கள் மற்றும் சப்ளையர்கள், வர்த்தக மற்றும் அரசு நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவரும் சந்திக்கும், ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும், தங்கள் தொழிலை வளர்க்கும் இடமாக இந்த கண்காட்சி திகழும். இந்த ஆண்டு, இந்தக் கண்காட்சியில் National Institute of Diamond and Gems மற்றும் Design Academy of India ஏற்பாடு செய்துள்ள கருத்தாழமிக்க கருத்தரங்குகளும் நடைபெற உள்ளன.
Gitanjali Jeweler Retail Limited, GIA (Gemological Institute of America), Zar Jewels Pvt Ltd., Unique Chains Pvt Ltd., Yamuna Diamond, Hari Krishna Exports Pvt Ltd., Bluestone Jeweler & Lifestyle Pvt Ltd., Royal Chains Pvt Ltd., Ridhi Sidhi Gems & Jeweler, Solanki Jewelers, Damara Gold Pvt Ltd., Vikas Chain & Jeweler Pvt Ltd., Swarnshilp Chain & Jewelers Pvt Ltd., N.D Diamonds & Jewels, Silver City, Yash Gold, Shilpi Jewels போன்ற நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்கின்றனர். கண்காட்சியின் தொடக்கமாக ஜெய்ப்பூர், லூதியானா மற்றும் மீரட் போன்ற வட இந்திய நகரங்களில் UBM இந்தியா பல வரிசையான வெற்றிகரமான ரோடு ஷோக்களை நடத்தி கண்காட்சியை பிரபலமாக்கியிருக்கிறது.
6-வது DJGF-யினை அறிவித்து, வட இந்தியாவில் ஆபரணத் துறையின் பிரகாசமான தொடர்ந்து வளர்ந்து வரும் வாய்ப்பு வளங்களைப் பற்றிப் பேசிய UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனரான திரு. யோகேஷ் முத்ராஸ் பேசும்போது, "பணக்குறைப்பு நடவடிக்கை மற்றும் GST வரிமுறை தொடங்கிய பின்னர் ஆபரணத் துறையின் வேகம் சிறிது மந்தமாக இருந்தாலும், நடப்பு நிதி ஆண்டில் ஆபரணத் துறையின் வளர்ச்சி 10 விழுக்காடாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. குறிப்பாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் வரும் விழாக் காலங்களின்போது இதன் வளர்ச்சி அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாக் காலத்திற்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த டெல்லி ஆபரண மற்றும் ஜெம் கண்காட்சி புதிய பாணிகள், புத்தாக்கங்கள், அகத்தூண்டல்களுக்கு ஆதாரமாகத் திகழும். இந்த வளர்ச்சியின் பலனை எடுத்துக்கொள்ள இத்துறைக்கு உதவும். தற்போது, பொருளாதார மற்றும் புவியியல் தாக்கங்களின் காரணமாக வாடிக்கையாளர் விரும்பத்தில் ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லர் சந்தை குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்து வருகிறது. அபரிவிதமான வருவாய் பெறும் இளம் லட்சாதிபதிகள் முழுமையாக முதலீட்டு நோக்கங்களுக்காக அல்லாது, புதுமையான கலைநயமான வடிவமைப்புகளை அழகியல் நோக்கில் வாங்க விரும்புகின்றனர். கூட்டமைப்புத் துறை அடிப்படைப் பணியை செய்யும். ஏனெனில் அதனால் வாடிக்கயயாளர் மற்றும் பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ள முடியும். வளர்ச்சிக் கட்டத்தில் உள்ள இந்தியாவில் ஒருங்கிணைக்கப்பட்ட சில்லறை ஆபரணச் சந்தைக்கான வளர்ச்சி வாய்ப்புகளுக்கு வரம்பே இல்லை."
"கடந்த 22016-ல் நடந்த டெல்லி ஆபரண மற்றும் ஜெம் கண்காட்சியானது ஆபரணச் சந்தையில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. பல மினுமினுப்பான தயாரிப்புகளையும் காட்சிப்படுத்தியது. இத்தனை ஆண்டுகளில் இந்தக் கண்காட்சி இந்திய ஆபரணத் துறைக்கு வட இந்தியாவில் வர்த்தகத் தளமாக விரைவாக பரிணமித்துள்ளது. DJGF 2017 - வட இந்தியாவின் மிகப்பெரிய கண்காட்சியாக இருக்கும். தனது 6-வது கண்காட்சியின் அளவும் அதில் உள்ள அரங்குகளும் இந்தத் துறையை பெருமளவு உயர்த்தும். ஹைதராபாத், கொல்கொத்தா மற்றும் சென்னையைத் தொடர்ந்து ஆபரணத் துறையில் இந்தியாவின் தனிப்பெரும் மரபுப் பெருமையைத் தக்க வைக்கும் இந்தக் கண்காட்சி இங்கு நடத்தப்படுகிறது," என்று மேலும் அவர் கூறினார்.
DJGF 2017-ல் UBM இந்தியாவின் தனித்துவமான முயற்சியான மூன்றாவது ரீட்டெய்ல் ஜூவல்லர்ஸ் கில்டு விருதுகளும் வழங்கப்படும். சில்லறை ஆபரண தொழிலில் இந்திய முழுவதும் தனி நபர்களும் நிறுவனங்களும் செய்துள்ள தனிச்சிறப்புகளையும் முயற்சிகளையும் அங்கீகரிக்கும் வகையிலும் பெருமைப்படுததும் வகையிலும் இந்த விருதுகள் வழங்கப்படும்.
பிராசஸ் ஆலோசகரான Ernst & Young மூலம் முறையான, தொழில்முறையான விதத்தில் சில்லறை ஆபரணத் துறையில் நாட்டில் சிறந்த திறனைக் கண்டறிந்து ரீட்டெய்ல் ஜூவல்லர்ஸ் கில்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன. சில்லறை ஜூவல்லரி துறையின் பல்வேறு செயல்பாடுகளை மனதில் கொண்டு இந்த ஆண்டு விருதுகள் பல்வேறு விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன: 'Store of the Year', 'Employer of the Year', 'Most Innovative Marketing Campaign', 'Excellence in Customer Service' மற்றும் 'Excellence in Design' போன்ற விருதுகள் இவற்றில் அடங்கும்.
Walk of Fame for the Retail Jeweler என்ற இந்தியாவின் முதலாவது மிகச் சிறந்த பிராண்டுகளின் தலைசிறந்த படைப்புகளை தனித்துவமாகக் காட்சிப்படுத்தும் காட்சி அரங்கு RJGA 2017-ன் தனித்துவமாக இருக்கும். இந்த ஆண்டும், விருது வழங்கும் நிகழ்ச்சியில் கண்கவரும் ஃபேஷன் தொடர்களும், துறையின் வல்லுநர்களின் உரைகளும், பொழுதுபோக்கு அம்சங்களும், நெட்வொர்க்கிங் அமர்வுகளும் இடம்பெறும்.
UBM இந்தியா பற்றி:
UBM இந்தியா என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM இந்தியா 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM ஆசியா நிறுவனமான, UBM இந்தியா மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM ஆசியா நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM ஆசியா என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக நடத்துபவராகும். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து ubmindia.in என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
UBM plc பற்றி:
UBM plc என்பது உலகில் மிகப்பெரிய பியூர்-பிளே B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அமைப்பாகும். அதிகரித்துவரும் டிஜிட்டல் உலகில், ஒரு அர்த்தமுள்ள, மனிதர்களுக்கிடையிலான இணைப்பு என்பது ஒருபோதும் அதிக முக்கியமானதாக இருந்ததில்லை. UBM-ல், நாம் சேவை வழங்கும் தொழில் துறை பற்றிய நம்முடைய ஆழமான அறிவும் ஆழ்ந்த விருப்பமும் மக்கள் வெற்றிபெறச் செய்யும் மதிப்புமிக்க அனுபவங்களை உருவாக்க நமக்கு உதவுகின்றன. நம்முடைய நிகழ்வுகளில் மக்கள் உறவுகளை ஏற்படுத்துகிறார்கள், ஒப்பந்தம் செய்து தங்கள் தொழில்களை வளர்த்துக் கொள்கிறார்கள். 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் நம்முடைய 3,750+ பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்ட (ஃபேஷன் முதல் மருந்துப்பொருட்கள் தயாரிப்புவரை) பல்வேறு துறையினருக்கு, சேவையாற்றுகின்றனர். திறன்பெற்ற, ஆர்வமிக்க பணியாளர்கள், மற்றும் சந்தையை முன்னோக்கிச் செலுத்தும் நிகழ்வுகள் என்ற இந்த உலகளாவிய வலையமைப்பு, தங்கள் வாழ்க்கை இலக்குளை அடைய வர்த்தகப் பிரிவினருக்கு அருமையான வாய்ப்புகளை அளிக்கின்றன.
கூடுதல் தகவல்களுக்கு எமது வலைதளமான http://www.ubm.com-ஐ பார்க்கவும்; UBM கார்ப்பரேட் செய்திகளுக்கு, எமது டுவிட்டர் முகவரி: @UBM, UBM Plc LinkedIn.
எந்த ஒரு ஊடக விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
UBM India
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
UBM India
[email protected]
+91-22-61727000
Share this article