Kalinga Institute of Social Sciences (KISS) நிகர்நிலை பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது
புவனேஸ்வர், இந்தியா, August 29, 2017 /PRNewswire/ --
உலகின் முதல் பழங்குடியினர் பல்கலைக்கழகம்
Kalinga Institute of Social Sciences (KISS), கலிங்கா Kalinga Institute of Industrial Technology (KIIT)யின் துணை நிறுவனம், இந்திய அரசின் கடித எண். F.9-14/2011-U-3 (A) 25/08/2017 இன் படி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்ட அந்தஸ்து வழங்கப்பட்டது. இது இந்தியா மற்றும் உலகிலேயே பழங்குடினருக்கான முதல் பல்கலைக்கழகம் ஆகும். இந்திரா காந்தி தேசிய பழங்குடி பல்கலைக்கழகம் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்த போதிலும், அங்கு அனைத்து வகை மாணவர்களும் சேர்க்கப்படுகிறார்கள். மேலும் மறுபுறம், KISS பல்கலைக்கழகம் பழங்குடி மாணவர்களுக்காக பிரத்தியேகமாக உள்ளது.
KISS ஒரு பார்வை: https://www.youtube.com/watch?v=F2OKrbupDtA
KISS, இந்தியாவின் புவனேஸ்வரை அடிப்படையாகக் கொண்டது, டி-நோவோ பிரிவின் கீழ் நிகர்நிலை பல்கலைக்கழகமாக அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக பழங்குடிப் படிப்புகளை ஆராய்ச்சி செய்வதற்கு உத்வேகம் அளிக்கும் வகையில் பல்கலைக்கழகம் ஏழு புதிய புதுமையான துறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது உலகளாவிய பழங்குடி கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை அடைய KISS க்கு உதவுகிறது; இந்த நம்பிக்கையுடன் நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. முன்பு போல், KISS பல்கலைக்கழக மாணவர்களுக்கு உறைவிடக் கல்வி முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.
தன்னுடைய திருப்தியை வெளிப்படுத்திய டாக்டர் அச்சுத சமந்தா, நிறுவனர், KISS பல்கலைகழகம், "எல்லாம் வல்ல இறைவனின் ஆசியோடும் மற்றும் ஒடிசா மக்கள் அனைவரின் நல் வாழ்த்துக்களாலும் இது சாத்தியமானது."என்றார் டாக்டர் சமந்தா, KISS இன் சார்பாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அவரது இதயப்பூர்வமான நன்றியை வெளிப்படுத்தினார். ஒடிசா மாண்புமிகு முதலமைச்சரான நவீன் பட்நாயக்கிற்கு நன்றி தெரிவித்த, ஸ்ரீ சமந்தா, அவருடைய ஆசீர்வாதங்களும் நல்வாழ்த்துக்களும் இல்லாமல், KISS இத்தகைய உயரங்களை அடைந்திருக்க முடியாது என்று கூறினார்.
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜவாடேகருக்கு தனது தனிப்பட்ட நன்றியை வெளிப்படுத்தினார், KISS ற்கு நிகர்நிலை பல்கலைக்கழக தகுதிக்கான அங்கீகாரம் அளித்ததன் மூலம் வரலாற்றை உருவாக்கியவர். இந்தியா அரசு மற்றும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் ஒப்புதலுக்காக மனித வள துறை அமைச்சகத்தின் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தார். ஒடிசாவின் இரண்டு மத்திய அமைச்சர்களான- ஸ்ரீ ஜுவல் ஓரம், பழங்குடி விவகார அமைச்சர், ஸ்ரீ தர்மசேந்திர பிரதான், பெட்ரோலியம் அமைச்சர் அவர்களின் உதவி மற்றும் நல் வாழ்த்துக்களுக்காக நன்றி தெரிவித்தார். டாக்டர் சமந்தா, உள்ளூர் தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்கள் ஆதரவு அளித்ததற்கு அவரது நன்றியினை வெளிப்படுத்தினார்.
KISS நிகர்நிலை பல்கலைக்கழகம் பிரத்தியேகமாக பழங்குடி மாணவர்கள் மற்றும் பழங்குடி ஆய்வுகளுக்காக முற்றிலும் இலவசமாகவும், முழு உறைவிடத்தோடும் உள்ள உலகின் முதல் பல்கலைக்கழகம் என்று கருதப்படுகிறது. கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்சஸ் (KISS) 1992-93-ல் புவனேஸ்வரில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் 125 ஏழை பழங்குடி மாணவர்களோடு மட்டும் பேராசிரியர் அச்சுத சமந்தாவால் நிறுவப்பட்டது. இது கொஞ்சம் கொஞ்சமாய் மாணவர் எண்ணிக்கை அதிகரித்து மகத்தான வளர்ச்சி கண்டது. தற்போது, KISS இன் மாணவர் எண்ணிக்கை 37,000 (27,000 தற்போதைய மாணவர்கள் மற்றும் 10,000 பட்டம் பெற்றவர்கள்). அவர்களில் அறுபது சதவிகிதம் பெண் மாணவர்கள்.
முறையான கல்வியோடு முதல் வகுப்பு முதல் முதுகலை நிலை வரை, பரந்த அளவிலான தொழிற்கல்வி திறன்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. உண்மை உணர்வுடன் ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்தியதைத் தவிர, மாவோயிஸ்ட் மற்றும் நக்சலைட் கிளர்ச்சியின் பரவலைத் தடுக்க ஒடிசாவின் பழங்குடி நிலப்பகுதி மற்றும் அதன் அண்டை மாநிலங்களின் மிகவும் தேவையான சமூக மாற்றங்களை KISS கொண்டு வர முடிந்தது. KISS, மாநிலத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து பல குடும்பங்கள் இருந்து வரும் 37,000 மாணவர்கள் மூலம்,உண்மையில் பழங்குடி மன-அமைப்பை மாற்றியமைத்து அவர்களை சமூகத்தில் முக்கியமாக சேர உதவியிருக்கிறது.
இந்த செய்தி கிடைத்தவுடன் KISS மாணவர்களிடையே மகிழ்ச்சி அலை ஏற்பட்டது. இந்நிறுவனத்தின் சுமார் 37,000 மாணவர்களின் பெற்றோர் மற்றும் பழங்குடி சமூகமும் இந்த சாதனையால் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
ஊடக தொடர்பு:
Shradhanjali Nayak
Director PR
KIIT and KISS
Phone no.: +91-674-2725636
E-mail: [email protected]
Share this article