Ingenium 2017 இன் இறுதிப் போட்டியாளர்களை QuEST Global அறிவிக்கின்றது
பெங்களூரூ, August 28, 2017 /PRNewswire/ --
QuEST Global, உலகளாவிய பொறியியல் தீர்வுகளை வழங்குவதில் ஒரு முன்னோடி, இன்று, பெருமை வாய்ந்த QuEST Ingenium 2017 இன் இறுதிப் போட்டிகளுக்கு தேர்வான முதல் பத்து அணிகளை அறிவித்தது, இந்தியா அளவிலான பொறியியல் திறமை தேடுதல் போட்டி. 2017, செப்டம்பர் 15 ஆம் தேதி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடைபெறுவுள்ள Ingenium 2017ல் இறுதிப் போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் போட்டியிடுவார்கள். முதல் 10 செயல்திட்டங்கள், ஏரோஸ்பேஸ், ஆட்டோமோடிவ், எம்படெட் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் பாடதிட்டங்களில் பரவி இருக்கின்றன.
சமுதாயத்திற்கு மதிப்பை வழங்கும் பல்வேறு தொழில்துறைகளில் மெகட்ரானிக்ஸ் ஸ்ட்ரீமில் ஒரு முக்கிய சிக்கலை தீர்க்கும் திட்டத்தின் திறனை அடிப்படையாகக் கொண்டு நிபுணர் குழு அணிகளை மதிப்பீடு செய்தது. Ingenium 2017 இறுதி கட்டத்தின்போது, 8,000 குழுக்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட இந்த 10 அணிகள், தொழில் வல்லுனர்களுக்கு தங்கள் திட்டங்களை வெளிப்படுத்துவார்கள் மற்றும் வெற்றியாளர்களுக்கு1 லட்ச ரூபாய் ரொக்கப்பரிசோடு, ஜெர்மனியில் உள்ள ஏர்பஸ் வசதியைப் பார்க்கவும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும்.
கீழ்வருவன Ingenium 2017 ன் முதல் பத்து அணிகள்:
- Park College of Engineering and Technology, தமிழ்நாடு
- Chandigarh University, பஞ்சாப்
- Saintgits College of Engineering, கேரளா
- Sri Sairam Engineering College, தமிழ்நாடு
- Sahrdaya College of Engineering and Technology, கேரளா
- Sri Eshwar College of Engineering, Coimbatore, தமிழ்நாடு
- M. S. Ramaiah Institute of Technology (MSRIT), கர்நாடகா
- Vellore Institute of Technology (VIT), தமிழ்நாடு
- Manipal Institute of Technology (MIT), கர்நாடகா
- MVJ College of Engineering (MVJCE), கர்நாடகா
Srikanth D Naik, மூத்த துணைத் தலைவர் மற்றும் உலகளாவிய விநியோகத் தலைவர், QuEST Global கூறுகையில், "கடந்த 6 ஆண்டுகளில், QuEST Ingenium இந்தியாவில் இளம் பொறியியலாளர்களை மெக்கானிக்கல் மற்றும் உட்பொதிக்கப்பட்ட மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில் தங்கள் திட்டங்களை உருவாக்கியும் வெளிப்படுத்தியும் ஊக்குவிக்க முடிந்தது. Ingenium, நாடு முழுவதும் மாணவர் சமூகத்தில் பொறியியல் ஆர்வத்தை கட்டமைக்க முயற்சிக்கின்றது. ஒவ்வொரு ஆண்டும், உலகின் முன்னணி பொறியியல் நிறுவனங்களால் நியமிக்கப்படும் வாய்ப்பை அளிப்பதோடு, வென்ற அணிகளை உலக அளவில் வெளிப்படச் செய்கின்றது."
QuEST Global நிறுவனம் 'QuEST Ingenium Popular Project Award' ஐ அறிமுகப்படுத்தியது, இதில், பார்வையாளர் பிரிவில் சிறந்த திட்டத்தைப் பொதுமக்கள் வாக்களிக்கவும் தேர்வு செய்யவும் முடியும். Ingenium இறுதிப்போட்டியில் இந்த விருதைப் பெறுபவர் பற்றி அறிவிக்கப்படும்.
QuEST Global பற்றி
QuEST Globalஎன்பது ஏரோ எஞ்சின்கள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, ஹை-டெக் & தொழில்துறை, மருத்துவ சாதனங்கள், எண்ணெய் & எரிவாயு, சக்தி, மற்றும் போக்குவரத்து துறைகளில் உள்ள உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான தயாரிப்பு உருவாக்கம் & உற்பத்தி பொறியியல் தேவைகளுக்கு சேவை அளிப்பதில் 20 ஆண்டு கால நிரூபிக்கப்பட்ட வரலாற்று சாதனையை கொண்டுள்ள ஒரு உலகளாவிய பொறியியல் தீர்வுகள் வழங்குநர். இயந்திரவியல், மின், மின்னணு, உட்பொதிக்கப்பட்ட, பொறியியல் மென்பொருட்கள், பொறியியல் பகுப்பாய்வுகள், உற்பத்தி பொறியியல் மற்றும் விநியோகசங்கிலி உருமாற்ற தீர்வுகளை முழுமையான பொறியியல் வாழ்க்கை சுழற்சி அனைத்திலும்வழங்குகிறது.
ஊடக தொடர்புகள்:
Anto T Ouseph
[email protected]
QuEST Global
Share this article