மும்பை, August 24, 2017 /PRNewswire/ --
இந்தியாவில் 15%க்கும் மேற்பட்ட தொலைபேசிகளில் MoneyOnMobile சேவைகளை பயன்படுத்தி உள்ளனர்
MoneyOnMobile, Inc. (OTCQX: MOMT) சமீபத்தில் தனது 200 மில்லியனாவது ஒட்டுமொத்த தனித்துவமான தொலைபேசி எண்ணுக்கு சேவை அளித்துள்ளதாக அறிவித்தது.
(Photo: http://mma.prnewswire.com/media/547967/million_unique_numbers_served.jpg )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161026/432722LOGO )
"இந்த அளவீடு எங்கள் வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான அளவு, ஏனென்றால் இது எங்கள் சில்லரை வர்த்தக நெட்வொர்க்கின் சென்றடைவை காட்டுகிறது. சாத்தியமுள்ள மிகக்குறைந்த விலையில் நுகர்வோருக்கான வெளிப்பாட்டைப் பெற வேண்டும் என்பதே எங்கள் வியூகம்," என்றார், MoneyOnMobile உடைய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான Harold Montgomery. "ஐந்து ஆண்டு காலத்தில் 200 மில்லியன் தனித்துவமான தொலைபேசி எண்களுக்கு சேவையளித்தல் என்பது எங்கள் சேவையை மிகப்பெரும் மக்கள்தொகை பிரிவிற்கு மிக குறைந்த விலையில் அளித்த எங்கள் விநியோக உக்தியின் செயல்திறனை வெளிப்படுத்துகிறது. இந்த அளவீடு தான் MoneyOnMobileக்கு வியூக பங்காளர்களை ஈர்க்கும், ஏனென்றால் எங்களால் கணிசமான எண்ணிக்கையிலான நுகர்வோரை அடைய முடியும்."
MoneyOnMobile இன் இந்தியாவுக்கான துணை மேலாண்மை இயக்குநர் Ranjeet Oak இவ்வாறு கூறினார், "200 மில்லியன் தனித்துவமான தொலைபேசி எண்களைப் பெறுதல் என்பது இந்திய நாட்டிற்குள் MoneyOnMobile தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான வலிமையான தேவையை நிரூபிக்கிறது. இந்தியாவின் கடைக்கோடியில் வாழும் மக்களுக்கு கூட பொருத்தமான நிதி சேவைகள் வழங்குநராக இருப்பது, எங்கள் மைய கூறுகளில் ஒன்றாகும். எங்களது பரந்த இந்திய நாட்டு சில்லரை வர்த்தகத்தின் மூலமாக கடைக்கோடியில் வாழும் மக்களுக்கும் நிதி சேர்ப்பு வசதி அளிப்பதன் மூலமாக வாங்கும்தகுதி குறைந்த நுகர்வோரின் தேவைகளையும் பூர்த்திசெய்வதில் MoneyOnMobile குறிப்பாக மகிழ்ச்சி அடைகின்றது. "
"உத்தேசமாக சுமார் 1.3 பில்லியன் அலைபேசிகள் இந்தியாவில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது ", என்றார், MoneyOnMobile இன் தலைமை செயலாக்க அதிகாரி Will Dawson. "ஒன்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்களை மக்கள் வைத்து இருப்பது இயல்பானது, ஆகவே நாங்கள் சேவை அளித்த தனிநபர்களின் துல்லியமான எண்ணிக்கை எங்களிடம் இல்லை, இந்தியாவில் உள்ள அலைபேசிகளில் 15%க்கும் மேலாக நாங்கள் சேவை செய்து இருக்கிறோம் என்பது இதன் அர்த்தமாகும்."
MoneyOnMobile, Inc. பற்றி
MoneyOnMobile இந்தியாவிலுள்ள மிகப்பெரிய மொபைல் கட்டணம் செலுத்தும் தளங்களில் ஒன்றாகும், இது தெருவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் தடங்கல் இல்லாத கட்டணம் செலுத்தும் திறனை கொண்டு வருகின்றது. 170 மில்லியனுக்கும் மேற்பட்ட தனித்துவமான நுகர்வோர் 330,000 சில்லரை வர்த்தகர்களுக்கு இந்தியா முழுவதிலும் தங்கள் கட்டணம் செலுத்துதலை இதன் மூலம் சுலபமாக்கி உள்ளனர் மற்றும் எங்கள் கட்டணம் செலுத்தும் தளம் MoneyOnMobile, Inc. இன் இந்தியாவில் செயல்படும் நிறுவனமானது பதிவுசெய்துகொண்ட பயனர்கள் மற்றும் பதிவுசெய்யப்பட்ட வர்த்தகர்களிடம் இருந்து தயாரிப்புக்களையும் சேவைகளையும் பெற்றுக்கொள்ள ஒரு கட்டணம் செலுத்து அமைப்பை அமைப்பதற்காக(MoneyOnMobile) இந்திய ரிசர்வ் வங்கியின்(RBI) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இந்தியாவில் தயாரிப்புகளையும் சேவைகளையும் வாங்குவதற்கு வசதிப்படுத்தும் MoneyOnMobile கட்டண தளம் பாதுகாப்பான, விரைவான, நம்பகமான அலைபேசி கட்டண சேவையை வழங்குகிறது; இதில் சுலபமான மிகவும் வசதியான வழியில் பேங்கிங் மற்றும் நிதி சேவைகளும் உள்ளடங்கும்.
MoneyOnMobile, Inc. டல்லாஸ், டெக்ச்சில் தன் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளதோடு இந்தியாவில் மும்பையில் தனது முதன்மை வணிகச் செயல்பாடுகளை கொண்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, வருகை தாருங்கள் www.moneyonmobile.in .
ஊடகத் தொடர்பு:
Navaz Damania
VP - Corporate Communications
MoneyOnMobile
[email protected]
+91-9167122661
Share this article