ஹைதராபாத், இந்தியா, August 14, 2017 /PRNewswire/ --
- PharmaLytica நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட புதிய கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர்; PharmaLytica வின் 4-வது கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்றனர்.
- முன்னணி தொழில்துறை தலைவர்கள் பார்மா இண்டஸ்ட்ரியில் ஏற்பட்டுள்ள சமீபத்திய தொழில்துறை பாணிகளைப் பற்றியும் புதுமைகள் பற்றியும் உரையாடினர்
UBM India, மற்றும் உலக அளவில் முன்னணியில் உள்ள மருந்து விற்பனைக் கண்காட்சி மற்றும் மாநாட்டிற்கான CPhI மற்றும் P-MEC இந்தியா-வின் ஏற்பாட்டாளர்கள், அதன் 4-வது PharmaLytica 2017 (11 - 12 ஆகஸ்ட்) கண்காட்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியை தெலுங்கானா மாநிலத்தின் முதன்மைச் செயலரும் Industries & Commerce (I&C) Department & Information Technology, Electronics and Communications (ITE&C) துறையின் செயலருமான Shri. Jayesh Ranjan, தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் Indian Pharmaceutical Association (IPA)-யின் தலைவரான டாக்டர் Rao Vadlamudi, மற்றும் Pharmexcil-யின் தலைவரும் Aurobindo Pharma-வின் இயக்குநருமான Mr. Madan Mohan Reddy அவர்களும்; Pharmexcil-ன் தலைமை இயக்குநரான டாக்டர் Ravi Uday Bhaskar அவர்களும்; Dr Reddy's Laboratories-ன் Director & Head - Global Sourcing Mr. Avinash Talwar அவர்களும்; Ecobliss-ன் இயக்குநரான Mr. AVPS Chakravarthi அவர்களும்; UBM INDIAவின் நிர்வாக இயக்குநரான Mr. Yogesh Mudras அவர்களும்; UBM INDIAவின் குரூப் இயக்குநரான Mr Rahul Deshpande ஆகியோர் HITEX கண்காட்சி மையத்தில் முன்னிலை வகித்தனர்.
(Photo: http://mma.prnewswire.com/media/544247/4th_edition_PharmaLytica.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/542604/PharmaLytica_2017_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/469712/UBM_India_Logo.jpg )
PharmaLytica 2017 என்பது Analytical & Bio Tech, Lab equipment & Lab Chemicals, Pharma Machinery மற்றும் Packaging துணைத் துறைகளில் உள்ள மருந்துத் துறை வல்லுநர்கள் இந்திய மருந்துத் துறையில் வளர்ந்து வரும் தொழிலில் உள்ள புதிய கண்டுபிடிப்புகள் பற்றி அறிந்து கொள்ள ஒரு சரியான தளமாகக் கருதப்படுகிறது. கண்காட்சியில் முதல் முறையாக 100 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதன் மூலம் தென்னிந்தியாவில் அதன் முதன்மை நிலை மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது.
இந்த 4-வது கண்காட்சியில் நாடு முழுவதிலுமிருந்தும் 150-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில், Standard Group of Companies, Sanitt Equipment & Machines, Gandhi Automations, Mack Pharmatech, S.K Pharma Machinery, Sterimax Engineering, Utopia Optovision, Rahul Enterprises, Chemipack India, Shree Naina Glass, Komal Industries, Allpharm Technologies, Subodh Engineering, Kirloskar Pneumatic, Integrated Cleanroom Technology, Accura Pharmaquip Inos Technologies போன்ற முன்னணி தொழில்துறையினர் கலந்து கொண்டனர்.
PharmaLytica-வின் முதல் நாளன்று, பல கருத்தாழமிக்க அமர்வுகள் இருந்தன. இந்திய மருத்துவத் துறையின் வளர்ச்சி நிலைபற்றியும், அது சந்திக்கும் சவால்கள் பற்றியும், வரும் காலங்களில் உலக அளவில் மருந்துத் துறையில் எப்படி தன்னுடைய உண்மையான தனித்துவத்தை மீண்டும் பெற முடியும் என்பது பற்றியும் பேசினர். மருந்துத் துறையில் தன்னுடைய தன்னுடைய தனித்தன்மையை நிலைநாட்டிய பின்னர், இந்திய மருந்து நிறுவனங்கள் R&D-யிலும் மருந்து கண்டுபிடிப்பிலும், புதிய நவீன தொழில்நுட்பங்களிலும், ஒட்டுமொத்த, விரைவான மற்றும் திறம்பட்ட வளர்ச்சிக்கான எந்திரங்களிலும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தினரின் அதிகரிக்கும் கூர்ந்தாய்வு பற்றி Mr. Tadashi Koshida, Overseas Sales & Technical Suppot, Asia Pacific, Fuji Electric, அவர்கள் பேசும்போது, food drug administrators (FDA) அதிகாரிகளின் மூலம் மருந்து நிறுவனங்கள் சந்திக்கும் முக்கிய சவால்கள் பற்றியும், ஒழுங்குமுறையாளர்களின் கண்ணோட்டத்தில் தரவு ஒருங்கிணைவு மற்றும் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை பற்றியும் விளக்கினார். இந்திய மருந்து நிறுவனங்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உருமாற்றம் பற்றி NATCO ஆராய்ச்சி மையத்தின் GM-DQA-வான Mr. G Sunder விளக்கும்போது, தரவு பகுப்பாய்வு மற்றும் QC ஆய்வக ஒழுங்குமுறை ஆய்வுகளுக்கு இணங்கி நடப்பதன் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். குளிர்பதன அறையில் மருந்துகளைப் பாதுகாத்து வைத்தல் பற்றி Gubba Cold Storage-ன் CEO-வான Mr. Gunna Kiran அவர்களும், கேமரா இன்ஸ்பெக்ஷன் சிஸ்டம் பற்றி Shree Naina Glass-ன் இயக்குநரான Mr. Kartik Khanna அவர்களும், மதிப்பிடுதல்- ஒரு சுகமான சுமை பற்றி Aztec Consulting-ன் Director- Head of Operations, India பொறுப்பு வகிக்கும் Dr Subbarao V Kattamuri அவர்களும், பேக்கேகிங்கில் புதுமை பற்றி P.R Packaging Ltd-ன் இயக்குநரான Mr. Vishesh Gupta அவர்களும், FDA Approved Simulation for Pharma Industry பற்றி CADEFM Engineering Services India Pvt Ltd-ன் Country Manager, Customer Solutions பொறுப்பு வகிக்கும் Mr. Srikanth Kankekar அவர்களும் பேசினர்.
4-வது PharmaLytica-வின் தொடக்க நிகழ்ச்சியில் UBM INDIAவின் நிர்வாக இக்குனரான Mr. Yogesh Mudras, பேசும்போது, "தரம், ஆராய்ச்சி, ஒழுங்குமுறை மற்றும் சுற்றுச்சூழல் இணக்கத்தின் காரணமாக, இந்தியாவில் பகுப்பாய்வு, உயிரித் தொழில்நுட்பம், ஆய்வக சாதனங்கள், மருந்து தயாரிக்கும் சாதனங்கள் மற்றும் மருந்து பேக்கேஜிங் மிகப் பெரிய வளர்ச்சியை எட்ட இருக்கிறது" என்றார். எனவே, சிறந்த தயாரிப்புகள் மற்றும் சேவை அளிப்புகள் மூலம் இன்றைய நிலையிலிருந்து அதிகபட்ச செயல்திறனை அடைவதே இந்திய தொழில்துறைக்கான இன்றைய தேவையாகும். இன்னும் பலருக்கும் இவற்றைக் கொண்டு செல்லவும், அதன் மூலம் இந்த மருந்துத் துறையின் மத்தியில் வர்த்தகத்தை ஊக்குவிப்பதற்கும், UBM INDIA PharmaLytica-வின் 4-வது கண்காட்சியை நடத்துகிறது. கருத்தாழமிக்க கருத்தங்குகள் நிறைந்த இந்தக் கண்காட்சியானது, கண்காட்சியாளர்களும் பார்வையாளர்களும் ஒரு நெட்வொர்க்கை ஏற்படுத்தச் செய்வதோடு மருந்துத் துறையினர் சமீபத்திய தொழில்துறை பாணிகளையும் புத்தாக்கங்களையும் பெற்றுக்கொள்ளவும் உதவும்."
இன்டஸ்ட்ரி ஸ்பீக்:
தெலுங்கானா மாநிலத்தின் முதன்மைச் செயலரும் Industries & Commerce (I&C) Department & Information Technology, Electronics and Communications (ITE&C) துறையின் செயலருமான Mr. Jayesh Ranjan அவர்கள் பேசும்போது, UBM INDIA ஏற்பாடு செய்துள்ள இந்த 4-வது PharmaLytica வெற்றிபெற வாழ்த்துகிறேன். இந்தியாவின் மருந்துத் தயாரிப்பின் மையமான ஹைதராபாத்தில் PharmaLytica-வை நடத்துவது பொருத்தமாக உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய 15,000 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் மருந்து நகரம் அமைந்திருப்பதையும் இத்துறையின் பல்வேறு அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருப்பதையும் மீண்டும் ஒருமுறை உறுதி செய்கிறது. ஒரு பிரத்யேகமான மருந்து நகரத்தை உருவாக்குவதால் தங்களுடைய வேலை எப்படி நிறைவடைகிறது என்பதை PharmaLytica போன்ற மிகப்பெரிய மன்றங்களின் பார்வையாளர்களும் கண்காட்சியாளர்களும் பகுப்பாய்வு செய்ய முடியும். PharmaLytica நுகர்வோருக்கும் விற்பனையாளர்களுக்கும் கருத்தாழமிக்கதாகவும், பயனுள்ளதாகவும் அமையும் என நம்புகிறேன். இதன் நோக்கம் வெற்றிபெற வாழ்த்துகிறேன்" என்றார்.
Pharmexcil-ன் தலைவரும் Aurobindo Pharma-வின் இயக்குநருமான Mr. Madan Mohan Reddy அவர்கள் பேசும்போது, "மருந்துத் துறை தன்னுடைய சிந்தனையை மேம்படுத்திக் கொள்ளும் புதுப்பித்துக் கொள்ளும் முக்கியமான தருணத்தில் நாம் இருக்கிறோம். இல்லாவிட்டால், நீடித்திருப்பதற்கான வாய்ப்பு இல்லை. சமீபத்திய மேம்பாடுகளைப் புரிந்துகொண்டு, அவற்றைப் பகுத்தாய்வு செய்து, பெரிய அளவில் ஒருங்கிணைக்க வேண்டும். இத்தகைய சூழலில் PharmaLytica போன்ற தளங்கள் இந்தத் துறையை முன்னோக்கி நடத்திச் செல்ல உதவும். இந்த மருந்துத்துறை கண்காட்சியை தொழில்முறையில் நடத்தி உலக அளவில் பிரபலமாக்குவதற்காகவும் சரியான திசையில் நடத்திச் செல்வதற்காகவும் UBM-ஐ நான் பாராட்டுகிறேன். PharmaLytica போன்ற மன்றங்களுக்கு Pharmexcil போன்ற முக்கியமான மருந்து நிறுவனங்கள் இத்துறையின் வளர்ச்சியை முன்னிட்டு நேரடியாக ஆதரவளிப்பது ஒரு நல்ல போக்கு என்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.
Indian Pharmaceutical Association-ன் (IPA) தலைவரான Dr. Rao Vadlamuri, பேசும்போது, "PharmaLytica போன்ற மன்றங்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மருந்துத் துறை சந்திக்கும் சவால்களுக்கு ஈடுகொடுக்கவும், முழுமையான புரிதலைப் பெறவும் வர்த்தகக் கண்காட்சிகளுக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் வருவதும், சேவையாளர்கள் தயாரிப்பாளர்களைச் சந்திப்பதும் மிகமிக அவசியமாகும். UBM இந்திய இத்துறையில் அருமையான பணியைச் செய்து வருகிறது, IPA-யின் தலைவர் என்ற முறையில், ஹைதராபாத்தில் இந்தக் கண்காட்சியை நடத்த முடிவுசெய்தது மிகவும் பொருத்தமானது என்றாலும், வளர்ந்துவரும் இந்தியாவின் பிற இடங்களையும் அணுகுவது சிறப்பானதாக இருக்கும். இத்தகைய பெரிய மன்றங்களின் ஆதரவும் வெளிப்பாடும் அவற்றுக்குத் தேவை" என்றார்.
Kirloskar Pneumatic Co Ltd-ன் கிளையின் தலைவரான Mr. Gopal Malawade, பேசும்போது, "PharmaLytica 2017-ல் பங்கேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். மருந்துத் துறையில் உள்ள எம்முடைய நடப்பு மற்றம் சாத்தியமான வாடிக்கையாளர்களைச் சந்திப்பதற்கு இது ஒரு அருமையான தளமாக அமைந்தது. Kirloskar Pneumatic என்பது HVAC மற்றும் பல்வேறு குளிர்சாதன பயன்பாடுகளில் பயன்படுத்தப்படும் குளிரூட்டி அமைப்புகளை அமைப்புகளை சப்ளை செய்வதில் முன்னணியில் நிற்கும் நிறுவனமாகும். இந்த ஆண்டு, எம்முடைய New Generation Series Vapour Absorption Chiller-ஐ அறிமுகம் செய்திருக்கிறோம். எம்முடைய வாடிக்கையாளர்களின் CAPEX & OPEX-ல் குறிப்பிடத்தக்க அளவு செலவினைக் குறைத்து சேமிப்பை அளித்ததன் மூலம் ஏற்கனவே, இது இத்துறையில் முன்னிலை பெற்றுள்ளது" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த Innovation Gallery-யில் எட்டு நிறுவனங்கள் பங்கேற்றன. தங்களுடைய புத்தாக்கத் தொழில்நுட்பங்களையும் புத்தாக்கங்களையும் காட்சிப்படுத்தியிருந்தனர். Innovation Gallery-யில் பங்கேற்ற நிறுவனங்களாவன: Biopharmax India Pvt Ltd, Galaxy Sivtek Pvt Ltd, Gandhi Automations Pvt Ltd, Scientific Research Instruments Company Private Limited, S K Pharma Machinery Pvt Ltd, Landsky Engineers Pvt Ltd மற்றும் Orbit Technologies Pvt Ltd, Hyderabad.
மருந்துத் துறையில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தருணத்தில் PharmaLytica 2017 நடைபெற்றுள்ளது. தற்போது, மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் உலகில் உண்மையிலேயே முதலிடத்தைப் பெறுவதற்காக 'Pharma Vision 2020' என்ற மிக முன்னோக்கிய பிரச்சாரம் போன்றதொரு தேசிய மருந்துக் கொள்கையை (National Pharma Policy) அரசு வரைவு செய்து கொண்டிருக்கிறது. Drug Price Control Order (மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை) & National Pharmaceutical Pricing Authority (தேசிய மருந்துப் பொருட்கள் விலைநிர்ணய ஆணையம்) ஆகியவை முனைப்போடு செயல்படுத்தப்படுகின்றன. மேலும், முதலீடுகளை ஊக்குவிக்க புதிய தொழிலகங்களுக்கு அனுமதி வழங்கும் காலம் குறைக்கப்பட்டுள்ளது. மருந்துப் பொருட்கள் தயாரிப்பாளர்களின் சமூக வலையமைப்பு தங்களுடைய குறிப்பிடத்தக்க சந்தை அறிதிறனை வெளிக்காட்டவும் தங்களுடைய ஒருங்கிணைந்த கருத்துக்களை வெளியிடவும் PharmaLytica 2017 உதவியது.
இந்த கண்காட்சிக்கு Pharmexcil, The Association of Contract Research Organisations (ACRO), Confederation of Indian Pharmaceutical Industry (CiPi) மற்றும் Bulk Drug Manufacturers Association (India) BDMA ஆகியோர் ஆதரவளிக்கின்றனர்.
UBM INDIA பற்றி:
UBM INDIA என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM INDIA 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM INDIA மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய வர்த்தக நடத்துபவராகும். கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து ubmindia.in என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
UBM plc பற்றி:
UBM plc என்பது உலகில் மிகப்பெரிய பியூர்-பிளே B2B நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அமைப்பாகும். அதிகரித்துவரும் டிஜிட்டல் உலகில், ஒரு அர்த்தமுள்ள, மனிதர்களுக்கிடையிலான இணைப்பு என்பது ஒருபோதும் அதிக முக்கியமானதாக இருந்ததில்லை. UBM-ல், நாம் சேவை வழங்கும் தொழில் துறை பற்றிய நம்முடைய ஆழமான அறிவும் ஆழ்ந்த விருப்பமும் மக்கள் வெற்றிபெறச் செய்யும் மதிப்புமிக்க அனுபவங்களை உருவாக்க நமக்கு உதவுகின்றன. நம்முடைய நிகழ்வுகளில் மக்கள் உறவுகளை ஏற்படுத்துகிறார்கள், ஒப்பந்தம் செய்து தங்கள் தொழில்களை வளர்த்துக் கொள்கிறார்கள். 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் நம்முடைய 3,750+ பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்ட (ஃபேஷன் முதல் மருந்துப்பொருட்கள் தயாரிப்புவரை) பல்வேறு துறையினருக்கு, சேவையாற்றுகின்றனர். திறன்பெற்ற, ஆர்வமிக்க பணியாளர்கள், மற்றும் சந்தையை முன்னோக்கிச் செலுத்தும் நிகழ்வுகள் என்ற இந்த உலகளாவிய வலையமைப்பு, தங்கள் வாழ்க்கை இலக்குளை அடைய வர்த்தகப் பிரிவினருக்கு அருமையான வாய்ப்புகளை அளிக்கின்றன.
எந்த ஒரு மீடியா விசாரணைகளுக்கும் தயவுசெய்து இவர்களைத் தொடர்பு கொள்ளவும்:
UBM India Pvt. Ltd.
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
Tel: +91-22-61727000
Share this article