ஹைதராபாத், இந்தியா, August 8, 2017 /PRNewswire/ --
இந்தியாவில் மருந்துத்துறைத் தொடர்பான பல வெற்றிகரமான மாநாடுகளை நடத்தியிருக்கும் UBM India-வின் பிரிவான CPhI Conferences ஹைதராபாத்தில் ஆகஸ்டு 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2வது ஆண்டு Annual Biosimilars Congress India 2017-ஐ நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.
(Logo: http://mma.prnewswire.com/media/542609/UBM_CPhI_Biosimilars_Congress_India_2017_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
இந்திய உயிரியொத்த மருந்து துறை அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருவதால், ஏற்புத்தன்மை, புதிய நிறுவனங்களின் நுழைவு, மற்றும் உயிரியொத்த தயாரிப்புகளின் வெற்றிகரமான அறிமுகம் ஆகியவை அதிகரித்துள்ளன. இந்திய உயிரியொத்த மருந்து உற்பத்தியாளர்கள் இந்த அதிக முதலீடுகள் மற்றும் கையகப்படுத்துதலின் மூலம் இந்த வளர்ச்சி வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். உயிரியொத்த மருந்துகள் இந்திய மருந்துத் துறை மற்றும் உயிரியொத்த மருந்துத் துறைக்கு மிகப் பெரிய வாய்ப்புக்களை அளித்தாலும், உற்பத்தியாளர்கள் சில பிரத்யேக R&D சவால்களையும் சந்திக்கின்றனர். இந்தியாவில் புதிய கட்டுப்பாட்டுக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாலும், உயிரியொத்த மருந்துகள் அதிகளவில் வாங்கப்படக்கூடியதாய் இருப்பதாலும் இந்திய மருந்து நிறுவனங்கள் உயிரியொத்த மருந்துகளை அதிக லாபம் தரும் துறையாகப் பார்க்கத் துவங்கியுள்ளனர். உள்நாட்டுச் சந்தை 2030 க்குள் $40 பில்லியன் இலக்கை அடையும் நோக்கிலும், உலகச் சந்தையில் 20% பங்கை கொண்டிருக்கும் வகையிலும் மிக வேகமாக வளர்ச்சியடையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
CPhI-ன் 2வது ஆண்டு Biosimilars Congress India 2017-யில் உயிரியொத்த மருந்துகளின் கட்டுப்பாடுகள், R&D, மருத்துவ ஆராய்ச்சி, திட்ட மேலாண்மை மற்றும் உயிரியொத்த மருந்துகளை வணிகமயமாக்கல் ஆகிய பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்படும். மிகச் சிறந்த பொருளடக்கத்தையும் பேச்சாளர்களையும் கொண்டிருக்கும் இந்தக் கூட்டம் வல்லுநர்களும், முடிவுகளை எடுக்கும் நிலையில் உள்ளவர்களும் உயிரியொத்த மருந்துகளின் போக்குகள், இன்று இந்தத் துறை சந்திக்கும் முக்கிய பிரச்னைகள் மற்றும் உயிரியொத்த மருந்துகள் தொடர்பாக இந்தியா தொடர்ந்து வெற்றியடைய புதுமையான தீர்வுகளை அளிப்பது குறித்து கலந்துரையாட ஒரு மேடையாக இருக்கும். இந்தக் கூட்டத்தில் கேள்வி பதில் அமர்வைக் கொண்ட குழு கலந்துரையாடலுடன் இந்திய மற்றும் சர்வதேச நிபுணர்கள் அளிக்கும் கள ஆய்வு கருத்துக்களும் இடம்பெறும்.
வரவிருக்கும் 2வது ஆண்டு Biosimilars Congress India பற்றிப் பேசிய UBM Indiaவின் நிர்வாக இயக்குநர் திரு. Yogesh Mudras, கூறியதாவது, "உயிரியொத்த மருந்துகளுக்கான பாதைகள் உலகம் முழுவதிலும் அதிகரித்து வருகிறது. மருந்து நிறுவனங்கள் சந்திக்கும் மகப் பெரிய பிரச்னை ஆதார மருந்திற்கு உயிரியொத்த தன்மையைக் காட்டுவதுதான். உயிரியொத்த மருந்துகள் குறித்த பிம்பம் மாறிவரும் வேளையில், உலகளாவிய மருந்து துறை இரண்டு முக்கிய நிகழ்வுகளின் ஒருங்கிணைந்த தாக்கத்தை உணர்கிறது - பல பெரிய மருந்து பிராண்ட்களின் காப்புரிமை காலாவதியாகும் காலம் மற்றும் உடல்நல பராமரிப்பு அமைப்புகள் கணிசமான, நீடித்த விலைக் குறைப்புகளை மேற்கொள்ள வேண்டிய பொருளாதாரச் சூழல். CPhIயின் 2வது ஆண்டு Biosimilars Congress சரியான நேரத்திற்கு வருகிறது, இது இந்தத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய சவால்களையும் வாய்ப்புக்களையும் எடுத்துரைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் அவர்களால் உயிரியொத்த மருந்துகளின் வளர்ச்சியை அதிகப்படுத்த சாதுர்யமான உத்திகளை உருவாக்க முடியும்."
இந்த மாநாட்டில் முக்கிய பேச்சாளர்களான திரு. Cecil Nick, துணைத் தலைவர் (தொழில்நுட்பம்), ஒருங்கிணைந்த பொருள் வளர்ச்சி, PAREXEL; Dr. Bhaswat S. Chakraborty, மூத்த துணைத் தலைவர், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, Cadila Pharmaceuticals Ltd; Dr. Akshaya S. Odak, மூத்த இயக்குநர் - கட்டுப்பாட்டு விதிகள், Lupin; Dr. Narendra Chirmule, மூத்தத் துணைத் தலைவர், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித் தலைவர், Biocon; Dr. A. K. S. Bhujanga Rao, R&D மற்றும் தொழில்நுட்ப தலைவர், Natco Pharma; Anjan Selz, துணைத் தலைவர் - Head of Biosimilars EMEA, Lupin - Atlantis Holdings SA; Dr. Sunit Maity, பொருள் வளர்ச்சி இயக்குநர், Zumutor Biologics உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து கொண்டு மருந்து துறையில் பல்வேறு உயிரியொத்த அம்சங்கள் பற்றிய அவர்களின் கண்ணோட்டத்தைப் பகிர்ந்து கொள்வார்கள்.
UBM India பற்றி:
UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களையும் விற்பனையாளர்களையும் பல கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் இணைப்பதற்கான மேடைகளை வழங்குகிறது. UBM India ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதிலும் பெரிய அளவில் 25 கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகிறது. இதனால் பல துறைகளின் வணிகத்திற்கு வழிவகுக்கிறது. UBM Asia கம்பெனியின் UBM India மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM Asia-வின் உரிமையாளர் UBM plc ஆகும். இது லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia என்பது ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது மெய்ன்லேண்ட் சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகும்.
மேலும் விவரங்களுக்கு, ubmindia.inஐ பாருங்கள்.
UBM plc பற்றி:
UBM plc என்பது உலகிலேயே மிகப் பெரிய பிரத்யேக B2B நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகும். வளர்ந்துவரும் டிஜிட்டல் உலகில், மனிதர்கள் ஒரு காரணத்திற்காகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். UBMல் எங்களின் ஆழமான அறிவும், நாங்கள் செயல்படும் இந்தத் துறையில் எங்களுக்கு உள்ள ஆர்வமும் மக்கள் வெற்றிப் பெறுவதற்கான சிறந்த அனுபவங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது. எங்களின் நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளைக் கட்டமைத்து, வணிகம் செய்து, தங்கள் தொழிலை வளர்ச்சியடைய செய்கின்றனர். எங்களின் 3,750+ உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளனர், இவர்கள் 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் செயல்படுகின்றனர். இதில் ஃபேஷன் முதல் மருந்து தயாரிப்பு உட்பொருட்கள் வரை அனைத்தும் அடங்கியிருக்கும். இந்த உலகளாவிய நெட்வொர்க் திறமிக்க, ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்து, வியாபாரிகள் தங்கள் இலங்குகளை அடைய அற்புதமான வாய்ப்புக்களை அளிக்கும் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
மேலும் தகவலுக்கு http://www.ubm.comஐ பாருங்கள்; UBM கார்ப்பரேட் செய்திகளுக்கு எங்களை ட்விட்டரில் @UBM என்பதிலும், UBM Plc LinkedIn என்பதிலும் பின்தொடருங்கள்.
ஊடகத் தொடர்பு:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article