புது டெல்லி, August 2, 2017 /PRNewswire/ --
ஜூன் 30, 2017 அன்று முடிவடைந்த இந்த நிதியாண்டில், CMA® (Certified Management Accountant) பயிற்சி நிகழ்ச்சி, வளர்ச்சியில் சாதனைப் புரிந்துள்ளது என்று அறிவிப்பதில் IMA® (Institute of Management Accountants) பெருமையடைகிறது. CMA மாணவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதமாக வளர்ச்சியடைந்து 41,000த்தை அடைந்துள்ளது. பயிற்சி நிகழ்ச்சி விரிவடைந்ததால், கடந்த ஐந்தாண்டுகளில் CMA தொடர்ச்சியாக, விண்ணப்பதாரர் எண்ணிக்கையில் 21 சதவிகிதம் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி விகிதத்திற்கு பங்களித்துள்ளது. மேலும் IMA-வின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 11 சதவிகிதம் வளர்ச்சியடைந்து, 90,000ஐ அடைந்துள்ளது. இதே நிலையில் தொடர்ந்தால் இந்த நிறுவனம் 2019-ல் தனது 100வது ஆண்டுவிழாவின் போது 100,000 உறுப்பினர்களை அடையக்கூடும்.
(Logo: http://mma.prnewswire.com/media/510711/IMA_Logo.jpg )
"எங்களது தன்னார்வலர்கள், பங்குதாரர்கள் மற்றும் பணியாளர்கள் அவர்களது பணியில் காட்டிய மிக அதிகமான ஈடுபாடும், எங்களது உறுப்பினர்கள் அவர்களின் தொழில்வாழ்க்கையை மேம்படுத்த காட்டிய அக்கறையும் தான் இந்த வளர்ச்சிக்கு காரணம்," என்றார் CMA, CAE, IMA தலைவர் மற்றும் CEO ஆன ஜெஃப் தாம்சன். "நாங்கள் அடைந்திருக்கும் இந்த வெற்றி குறித்து மிகவும் பெருமையடைகிறோம். எங்களின் 100வது ஆண்டுவிழாவைக் கொண்டாட உள்ள இந்த நேரத்தில் இன்னும் அதிக மைல்கற்களை அடைவோம் என்று எதிர்ப்பார்க்கிறோம்."
தாம்சனின் கூற்று படி, நம்பிக்கையுடன் கூடிய ஒருமைப்பாட்டால் வளர்ச்சியடைவது மற்றும் நிதி விஷயத்தில் வலிமையான இருப்பு நிலைக் குறிப்பைக் கொண்டிருப்பது ஆகியவற்றில் IMA தொடர்ந்து கவனம் செலுத்துவதால், பல மில்லியன் டாலர் மதிப்பிலான 'You've Got to Earn It' விளம்பர பிரசாரத்தில் முதலீடு செய்ய முடிகிறது. இந்த ஒருங்கிணைந்த பிரசாரத்தின் விளைவாக CMA திட்டத்தில் 26,000 பேர் புதிதாகச் சேர்ந்துள்ளனர். மேலும், CMA தேர்வில் சீன மொழி பதிப்பு துவங்கப்பட்டு 10 ஆண்டுகளானதையும், யூ.எஸ்.-யில் புதிய CMA மாணவர்களின் எண்ணிக்கை இரண்டு இலக்க வளர்ச்சியை (29 சதவிகிதம்) அடைந்துள்ளதையும் IMA கொண்டாடியது.
CMAவின் இந்த வெற்றிக்கு ஆதரவளித்தவர்களை கெளரவிப்பதற்காக, IMAவின் சான்றளிப்பு பிரிவான ICMA® (Institute of Certified Management Accountants), கடந்த மாதம் டென்வரில் நடைபெற்ற தனது 2017 Annual Conference & Expo-வில் தனது கெளரவ விருது பெறுபவர்களை அறிவித்தது. Ping An Insurance of China மற்றும் Johnson & Johnson ஆகிய இரண்டும் CMA பயிற்சி நிகழ்ச்சிக்கு அளித்த அர்ப்பணிப்பிற்காக கெளரவிக்கப்பட்டனர்.
ஷென்ஸெனில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் ஓர் ஒருங்கிணைந்த நிதிச் சேவை அமைப்பான Ping An Insurance of Chinaவிற்கு இந்த ஆண்டிற்கான Bulloch விருது வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் CMA பயிற்சி நிகழ்ச்சிக்கு அளித்துவரும் அற்புதமான ஆதரவையும் ஊக்கத்தையும் அங்கீகரிக்கிறது. இந்த விருது ICMA-வின் முதல் நிர்வாக இயக்குநரான James Bulloch-ன் பெயரில் வழங்கப்படுகிறது. இவர்தான் CMA வின் உண்மையான கட்டமைப்பு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி விதிகளை உருவாக்க உதவியவராவார்.
பன்னாட்டு மருத்துவ சாதனங்கள், மருந்து மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட நுகர்வோர் பொருட்கள் உற்பத்தியாளரான Johnson & Johnson-க்கு இந்த ஆண்டிற்கான ICMA Board of Regents Corporate Recognition விருது வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் அதன் நிதி பணியாளர்களுக்கு அளித்துவரும் CMA பயிற்சி நிகழ்ச்சிக்கான நீடித்த ஆதரவையும் ஊக்கத்தையும் இந்த விருது அங்கீகரித்தது.
" Johnson & Johnson-யில், நிதி நிபுணத்துவத்தைக் கொண்டச் சிறந்த வணிகத் தலைவர்களை உருவாக்கும் மிகவும் சிறப்பாக வரையறுக்கப்பட்ட அணுகுமுறையைக் கொண்டிருக்கிறோம். பல அத்தியாவசியமான வணிக அனுபவங்களை அளித்து திறன்களை உருவாக்குவதும் இதில் அடங்கும். இந்த அணுகுமுறையில் சான்றளிப்பும் முக்கிய அம்சமாகும்," என்று CMA, CFM இன், பெருநிறுவன கட்டுப்பாட்டாளரான ரோனெல்ட் ஏ, மற்றும் ஜான்சன் & ஜான்சனின் தலைமை கணக்காளர் கபுஸ்டா ஆகியோர் தெரிவித்தனர். "CMA என்பது கணக்கியல் மற்றும் நிதி அறிவை வளக்கவும் மேம்படுத்தவும் சிறந்த வழியாகும். இதில் தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் முடிவெடுக்க உதவும் திறன்கள் ஆகியவையும் அடங்கும். இது வேலையில் சிறந்த பொறுப்பேற்கவும், மேம்பட்ட ஆற்றலைக் கொண்டிருக்கவும், தனிப்பட்ட வளர்ச்சிக்கான பொறுப்பை ஏற்கவும், தொழிலில் நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும் பணியாளர்களைத் தயார்ப்படுத்த உதவும்."
IMA® (Institute of Management Accountants) பற்றி
கணக்காளர்கள் மற்றும் நிதித் துறையைச் சேர்ந்தவர்களின் சங்கமான IMA, நிர்வாக கணக்கியல் தொழிலை மேம்படுத்துவதில் பிரத்யேகமாக கவனம் செலுத்தும் மிகப் பெரிய, மிக கெளரவமான சங்கங்களுள் ஒன்றாகும். உலகளவில், IMA ஆராய்ச்சி, CMA® (Certified Management Accountant) பயிற்சி நிகழ்ச்சி, தொடர்ச்சியான கல்வி, நெட்வொர்க்கிங் மற்றும் மிகச் சிறந்த நன்னெறி வணிக நடவடிக்கைகளைப் பரிந்துரைப்பது ஆகியவற்றின் மூலம் இந்தத் தொழிலுக்கு ஆதரவளிக்கிறது. IMA 140 நாடுகளில் உள்ள 85,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், 300 தொழில் மற்றும் மாணவர் குழுக்கள் ஆகியோரின் நெட்வொர்க்கை உலகளவில் கொண்டுள்ளது. Montvale- N.J., USA-வை தலைமையகமாகக் கொண்டிருக்கும் IMA உலகளவில் நான்கு பகுதிகளின் மூலம் குறிப்பிட்ட சேவைகளை அளிக்கிறது: அமெரிக்கா, ஆசியா/பசிஃபிக், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு/இந்தியா. IMA பற்றிய மேலும் தகவலுக்கு http://www.imanet.org-யைப் பாருங்கள்.
இந்தியாவில் IMA, Miles Professional Education (Miles), IMA platinum-approved review provider மற்றும் John Wiley and Sons, Inc. (Wiley), CMA Learning System-ன் வெளியீட்டாளர் ஆகியோருடன் இணைந்து செயல்படுகிறது.
ஊடகத் தொடர்பு:
Janice Sevilla
கம்யூனிகேஷன்ஸ் ஸ்பெஷலிஸ்ட்
Institute of Management Accountants (IMA)
[email protected]
+91-9003162258
Share this article