மும்பை, July 18, 2017 /PRNewswire/ --
அன்ஜும் என்பவர் மஹாராஷ்டிராவில் உள்ள போய்சாரைச் சேர்ந்த MoneyOnMobile சில்லறை விற்பனையாளர். அன்ஜுமின் கதை, தனது மகள்களுக்கு வசதியான வாழ்க்கையை அளிக்க விரும்பும் ஒரு இந்திய இல்லத்தரசியைப் பற்றியது. அவர் இதற்காக சாமானிய மக்களுக்கு நிதிச் சேவைகளை அளித்து தனது சொந்தத் தொழிலைத் துவங்க முடிவு செய்தார். அவருடைய கணவர் வேலைக்காக இந்தியாவிலிருந்து வேறு நாட்டிற்கு சென்று, தங்கியுள்ளார். அவரின் முயற்சிகளுக்கு கணவர் மிகவும் ஆதரவாக இருக்கிறார்.
(Photo: http://mma.prnewswire.com/media/536175/MoneyOnMobile_Retailer_Anjum.jpg )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161026/432722LOGO )
மொபைல் மூலம் கட்டணம் செலுத்தும் வசதியைப் பயன்படுத்தி, இவரைப் போன்ற சில்லறை விற்பனையாளர்கள் பணப் பரிமாற்றம் செய்தல், பயன்பாட்டு கட்டணங்களைச் செலுத்துதல், மற்றும் வாடிக்கையாளர்களுக்கான மற்ற நிதிச் சேவைகளை அளித்தல் ஆகியவற்றை மேற்கொள்ள உதவுகிறது. அன்ஜும் நான்கு ஸ்டோர்களுக்கு மேல் துவங்கி வெற்றிகரமாகச் சில்லறை விற்பனைச் செய்து முன்னேறியுள்ளார்.
இப்போது இவர் தனது மகள்களுக்கு அவசியமான வாழ்க்கைத் திறன்களையும் தொழில்முனைவு திறன்களையும் பற்றிக் கற்றுக்கொடுக்க இந்த வாய்ப்பினைப் பயன்படுத்துகிறார்; அவர்கள் பள்ளி நேரம் முடிந்தப் பிறகு அவரின் கடைகளுக்கு வருவதற்கு அவர்களை அனுமதிக்கிறார். அவர் புதிய டிஜிட்டல் இந்தியாவில் பொறுப்புள்ள நபர்களாக மாற இது உதவுமென்று அவர் நம்புகிறார்.
"MoneyOnMobile-ன் மேடை அனைவருக்கும் தொழில்முனைவு வாய்ப்புக்களை அளிப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்; குறிப்பாக, சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கு அவர்களின் சொந்த மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களின் நிதிசார்ந்த எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கு மேடையை அமைத்து தருகிறது. அன்ஜும் மற்றும் இவரைப் போன்ற பல பெண்கள் MoneyOnMobile-யில் இணைந்ததிலிருந்து அவர்களின் தொழிலை வெற்றிகரமாக வளர்ச்சியடையச் செய்துள்ளனர்," என்று MoneyOnMobile-யின் நிர்வாக இயக்குநர் திரு. Ranjeet Oak, Jt. கூறினார்.
MoneyOnMobile பற்றி:
MoneyOnMobile என்பது தெருவில் உள்ள ஒவ்வொரு நபரும் தொல்லையில்லாமல் கட்டணம் செலுத்தும் திறனை அளிக்கும் மொபைல் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான இந்தியாவின் மிகப் பெரிய மேடையாகும். இந்தியா முழுவதிலும் எங்களின் 330,000க்கும் மேற்பட்ட சில்லறை வணிகர்களின் மூலம் 170 மில்லியனுக்கும் மேற்பட்ட பிரத்யேக வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனையை மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் உள்ள கிராமப்பகுதிகளில் நாங்கள் ஊடுருவியிருக்கும் தூரத்தினால் இன்று சந்தையில் தனித்தியங்கும் ப்ரீபெய்ட் கருவியாக மாறியிருக்கிறோம். வங்கியில் இணைந்திராத நுகர்வோருக்கு நிதிச் சேர்ப்பு மற்றும் சுயச் சார்பின் மூலம் சேவை வழங்க வேண்டும் என்பதுதான் எங்கள் நம்பிக்கையின் அடிப்படை.
MoneyOnMobile, பதிவுசெய்யப்பட்ட வணிகர்களிடமிருந்து பொருட்களையும் சேவைகளையும் வாங்குவதற்கு பதிவுபெற்ற பயணர்களுக்கு கட்டண முறையை அமைத்துத் தர Reserve Bank of India (RBI) அதிகாரமளித்துள்ளது. MoneyOnMobile கட்டண மேடை பாதுகாப்பான, திடமான மற்றும் நம்பகமான மொபைல் மூலம் கட்டணம் செலுத்தும் சேவையை இந்தியாவில் வழங்குகிறது. இது பொருட்களையும் சேவைகளையும் வாங்குவதை எளிதாக்குகிறது; இதில் வங்கியியல் மற்றும் நிதிச் சேவைகளை எளிதாகவும் மிக செளகரியமான வழியிலும் வழங்குவதும் அடங்கும்.
காப்புடை இருப்பு அறிக்கை
இந்த வெளியீடு எந்தவொரு நிறுவனத்தின் எந்தவொரு பாதுகாப்பு பத்திரங்களையும் விற்பனை செய்வதற்கான அல்லது பரிந்துரைப்பதற்கான சலுகையைக் கொண்டிருக்கவில்லை. இந்த வெளியீடில் இடர்களையும் எதிர்பாராத நிகழ்வுகளையும் உள்ளடக்கிய தற்போதைய எதிர்ப்பார்ப்புகள், முன்னறிவிப்புகள் மற்றும் ஊகங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் குறிப்பிட்ட காப்புடை இருப்பு அறிக்கைகளைக் கொண்டுள்ளது. இந்த வெளியீட்டில் உள்ள காப்புடை இருப்பு அறிக்கைகள் இந்தத் தேதிவரையில் எங்களுக்கு கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையிலானது. எங்கள் வணிகத்துடன் தொடர்புடைய இடர்கள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளினால் இது போன்ற காப்புடை இருப்பு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது அமைந்துள்ளவற்றிலிருந்து எங்களின் நிஜமான முடிவுகள் மாறுபடலாம். இதில் ஆகஸ்டு 19, 2016 அன்று தாக்கல் செய்யப்பட்ட எங்கள் படிவம் 10-Kயில் வெளியிடப்பட்டுள்ள இடர் காரணிகளும் அடங்கும். காப்புடை இருப்பு அறிக்கைகளில் எதிர்காலம் தொடர்பான எங்களின் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், நோக்கங்கள் மற்றும் உத்திகள் தொடர்பான அறிக்கைகளும் அடங்கும். இதனை "anticipate," "believe," "could," "estimate," "expect," "intend," "may," "should," மற்றும் "would" அல்லது இது போன்ற காப்புடை இருப்பு சொற்களின் மூலம் அடையாளம் காணலாம். புதிய தகவல்கள், எதிர்கால நிகழ்வுகள் அல்லது வேறு காரணத்திற்காக இந்த செய்தி வெளியீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை நிகழ்நிலைப்படுத்தும் எந்த கடமையும் எங்களுக்கு இல்லை.
Web site: http://MoneyOnMobile.in
Twitter: https://twitter.com/MoneyOnMobile
Facebook: https://www.facebook.com/MoneyOnMobile.Official/
LinkedIn: https://www.linkedin.com/company/MoneyOnMobile
YouTube: https://youtu.be/bYsSK00hjBo
ஊடகத் தொடர்பு:
Navaz Damania
[email protected]
+91-9167122661
Vice-President of Corporate Communications
MoneyOnMobile
Share this article