சென்னை, July 14, 2017 /PRNewswire/ --
கடந்த ஆண்டைவிட 15% பேர் அதிகமாகக் கலந்துகொண்டனர்
'Security and Fire Expo (SAFE) - South India 2017 ', என்னும் மூன்று நாள் வணிக கண்காட்சியை UBM India நடத்தியது. இதில் IFSEC India தனித்துவமான கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சி சென்னை டிரேட் சென்டரில் தனது மூன்றாவது கண்காட்சியை கடந்த வாரம் வெற்றிகரமாக நிறைவுசெய்தது. தலைமை விருந்தினர், Mr. Abhay Kumar Singh, Additional Commissioner of Police (Traffic), Chennai, Tamil Nadu மற்றும் Mr. Yogesh Mudras, Managing Director, UBM India, ஆகியோர் ஆகஸ்டு மாத துறைக் கூட்டத்தின் இடையே இந்த நிகழ்ச்சியைத் துவங்கிவைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு Electronic Security Association of India (ESAI) மற்றும் Asian Professional Security Association (APSA) ஆதரவு அளித்துள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20170621/525918LOGO )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
இந்தக் கண்காட்சி இந்த ஆண்டு ஜூன் 29 - ஜூலை 1, 2017 வரை நடைபெற்றது. இது இந்தப் பகுதியில் நடைபெற்ற மிகப் பெரிய பாதுகாப்பு மற்றும் தீ பாதுகாப்பு நிகழ்ச்சியாகும். பிரபல சர்வைலன்ஸ், என்ட்ரன்ஸ் மற்றும் ஹோம் ஆட்டோமேஷன் துறை பிராண்டுகளின் இந்திய மற்றும் உலகளாவிய வழங்குநர்களும் உற்பத்தியாளர்களும் ஆலோசகர்கள், வணிக நிபுணர்கள் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகளுடன் இணைந்து ஒரே இடத்தில் ஒருங்கிணைந்து, உரையாடி, நெட்வொர்க்கை அமைத்து, உலகின் முன்னணி நிறுவனங்களின் புதுமையான கண்டுபிடிப்புகளைப் பார்த்து, வணிகங்களை மேற்கொண்டு, மிகச் சிறந்த நிபுணர்களின் ஆதரவைப் பெறுவதற்கு இந்தக் கண்காட்சி உதவியது.
SAFE - South India 2017 பாதுகாப்பு குறித்த புரிதல் இல்லாமல் முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக, பாதுகாப்பினை சிறப்பாகத் திட்டமிடப்பட்ட, முக்கியத்துவத்தைக் கொண்ட, உத்திப்பூர்வமான முதலீடாகப் பார்க்கும் இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் சந்தைக்குள் நுழைவதற்கும், வணிகத்தை மேற்கொள்வதற்கும் வாய்ப்புக்களை அளித்தது. மூன்றாவது ஆண்டில், SAFE India பெரிதாகவும் முழுமையாகவும் வளர்ச்சியடைந்து துறையில் முன்னிலை வகிப்பவர்களையும் முக்கியமான நிறுவனங்களையும் கவர்ந்துள்ளது, இதில் Premier Plus Partners -- eSSL, Hikvision, Mark Electronics GPS, Unicam Systems and TVT; its Premier Partners -- In4 Solutions & Zkteco, Road Point India, Starex & Orbit ஆகியோரும் அடக்கம். இந்தக் கண்காட்சியில் பங்கேற்ற மற்ற முக்கியமான பங்கேற்பாளர்களுள் Vamosys, Hash Control, Swipe Technologies, Spectra, Main Hardware, Vitaran, Matrix Comsec, Micro & Super Micro, Biomax மற்றும் Realtime ஆகியோரும் அடக்கம். 70க்கும் மேற்பட்ட பிரபல இந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு பிராண்டுகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இதில் கிட்டத்தட்ட 15 பிராண்டுகள் புதியவை. வளர்ந்துவரும் சந்தையில் லாபகரமான வணிக முறைகளும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தக் கண்காட்சி துறையில் தாக்கத்தை ஏற்படுத்துபவர்களுடன் தொழில்சார் உறவை ஏற்படுத்திக் கொள்ள உகந்தச் சூழலை உருவாக்கியது. ஹாஸ்பிட்டாலிட்டி, IT/BPO மற்றும் சர்வீஸ் துறை, ரியல் எஸ்டேட், துறைமுக ஆணையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், தளவாடங்கள், கட்டுமானம், கட்டமைப்பு, ஆட்டோமொபைல், உற்பத்தி, சில்லறை விற்பனை, ஆபரணம், ஆரோக்கியம், கல்வி, ஐ.டி., நெட்வொர்க்கிங், தொலைத்தொடர்புகள், ஆட்டோமேஷன் மற்றும் BFSI ஆகியவற்றைச் சேர்ந்த பாதுகாப்பு மேலாளர்களும் இதில் பங்கேற்றனர்.
அரசாங்கம் பிரத்யேகமான தாய்நாட்டு பாதுகாப்பு துறையை உருவாக்குதல், ஒருங்கிணைந்த புலனாய்வு தகவல் சேகரிப்பை மேம்படுத்துதல், அவசியமான கட்டமைப்பைப் பாதுகாத்தல், கடல்சார்ந்த பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் தனது பாதுகாப்பு பட்ஜட்டை 35%ஆக உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட நேரத்தில் The SAFE South India கண்காட்சி பாதுகாப்பு பணியாளர்களுக்காகவே வந்துள்ளது.
'Security and Fire Expo (SAFE) - South India 2017' வெற்றிகரமாக நிறைவடைந்தது பற்றி பேசிய Mr. Yogesh Mudras, Managing Director, UBM India "தொழில்நுட்பம் தொடர்ந்து மாறிவருவதாலும், வளர்ந்துவருவதாலும், தொழிற்சாலைகளும் குடியிருப்புகளும் அதிகரித்து வருவதாலும் பாதுகாப்பும் கண்காணிப்பும் உடனடியாக வளர்ச்சியடைய வேண்டிய நிலை உள்ளது. எப்போதுமே பொருளாதாரம், நிதித் துறை, முக்கிய அரசாங்க துறைகள் மற்றும் கட்டமைப்புகள் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் அதிகரித்து கொண்டேயிருக்கும். இதனால் உட்புற பாதுகாப்பு அபாயத்திற்குள்ளாகும். எனவே, இந்தத் துறையின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பது மிகவும் அவசியமாகிவிட்டது. இது உலகம் முழுவதிலும் உள்ள உற்பத்தியாளர்கள், வழங்குநர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் ஆகியோர் தங்களின் தயாரிப்புகளையும் தீர்வுகளையும் காட்சிப்படுத்துவதற்கு மாபெரும் வாய்ப்பினை அளிக்கிறது. தனது 3வது கண்காட்சியிலேயே SAFE South India இந்தத் தேவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்தியாவில் தாய்நாட்டு பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியமான வணிக மையமாகத் திகழும் தெற்கு பகுதி சந்தைக்கு புதுமையான தயாரிப்புகளையும் ஐ.டி. தீர்வுகளையும் அளித்துள்ளது" என்று கூறினார்.
Mr. Lakshman Sundar, PR Consultant, Pharma Hikvision (India) Pvt. Ltd.
"இந்திய சந்தை ஒருங்கிணைந்த பாதுகாப்புத் தீர்வுகளைப் பெருமளவில் வரவேற்று வருகிறது. மொபைல் சார்ந்த செயலிகள், பயோமெட்ரிக் சொல்யூஷன்ஸ், சி.சி.டி.வி.யில் க்ளவுட் ஸ்டோரேஜ், மல்டிசைட் மானிட்டரிங் ஆகியவை வளர்ச்சியடைந்து வருகின்றன. Deep Learning Technology, Machine Vision, UAVs, H.265+ video compression technology which improves the compression ratio , Portable SSD for faster, safer and stronger mobile data storage, Multi-touch Interactive Screen ஆகியவை சில நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளாகும். நாங்கள் Command Control Center, Mobile & Intelligent Traffic System, Video Door Phone, Energy and Thermal Cameras, Turbo HD 4.0, Smart IP and Easy IP, Ezviz மற்றும் Intrusion Alarm Systems (Pyronix and Hikvision) போன்ற எங்களின் மிகச் சிறந்த பாதுகாப்பு தீர்வுகளைக் காட்சிப்படுத்தினோம். இந்தக் கண்காட்சி 2015ல் துவங்கப்பட்டதிலிருந்து Hikvision இதில் பங்கேற்று வருகிறது."
Ms. Mary Thomas, Matrix Security Solutions Pvt. Ltd.
"Cloud இனிவரும் காலங்களில் மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கும். எனவே நாங்கள் எதிர்காலத்தில் சந்தையின் அணுகல் கட்டுப்பாடு, நேர-வருகைப்பதிவு மற்றும் வீடியோ கண்காணிப்பு துறைகள் cloud-ஐ பயன்படுத்தும் என்று நினைக்கிறோம். நாங்கள் பல நிலைமுறைகளைக் கொண்ட நிறுவனங்களின் தேவைகளை நிறைவேற்ற மிகச் சிறந்த வகையில் வடிவமைக்கப்பட்ட பயனர் கடமைகள் மற்றும் உரிமைகளுக்கு ஏற்ற மத்திய கட்டுப்பாட்டை அனைத்து இடங்களிலும் அளித்துள்ளோம். மேலும், பாரம்பரிய எதிர்வினைப் பாதுகாப்பு போல் அல்லாமல், நிஜமான அறிவிப்புகளை அளிக்கும் மேம்பட்ட வீடியோ அனலிட்டிக்ஸ், நிறுவனங்களுக்கு பாதுகாப்பை அளித்து, வளாகங்களுக்குள் எந்த பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். Matrix புதிதாக அறிமுகம் செய்திருக்கும் 8 Port Input-Output Controller-ஐ அறிமுகம் செய்துள்ளது. இது 32 தளங்கள் வரை செல்லும் எலெவேட்டரை (லிஃப்ட்) கட்டுப்படுத்தும். SAFE SOUTH Exhibition-ல் நாங்கள் நான்காவது முறையாகப் பங்கேற்கிறோம். SAFE SOUTH என்பது பாதுகாப்பு துறைத் தொடர்பாக இந்தியாவின் தெற்கு பகுதியில் நடைபெறும் முக்கியமான கண்காட்சிகளுள் ஒன்றாகும். இந்தக் கண்காட்சியில் நாங்கள் நிச்சயமாக ஒவ்வொரு ஆண்டும் பங்கேற்போம். மேலும், இந்தத் துறையில் ஈடுபடும் எந்தவொரு நிறுவனமும் இதனைத் தவறவிடக் கூடாது."
SAFEஐ முற்றிலும் தென்னிந்தியாவிற்கான கண்காட்சியாக உருவாக்கியிருக்கும் UBM India, ஜூன் 28 - 30, 2018 வரை ஹைதராபாத்தில் HITEX-யில் தனது 4வது கண்காட்சியை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த முயற்சி, ஆந்திரப் பிரதேசத்திலும் தெலுங்கானாவிலும் அமைந்துள்ள தொழிற்சாலைகளுடன் SAFE பங்குதாரர்கள் நெர்வொர்க்கை உருவாக்கிக் கொள்ள பிரத்யேகமான வாய்ப்புக்களை அளிக்கும். வழக்கமாக நடைபெறும் இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டிருப்பதையும் பெரிய பிராண்டுகளும், கண்காட்சியில் பங்கு பெறும் முக்கிய நிறுவனங்களும் வரவேற்றுள்ளனர். அவர்கள் இதனை புதிய இடங்களிலும் சூழலிலும் வணிகத்தை மேற்கொள்வதற்கான வாய்ப்பாகப் பார்க்கின்றனர்.
UBM India பற்றி:
UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களையும் விற்பனையாளர்களையும் பல கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் இணைப்பதற்கான மேடைகளை வழங்குகிறது. UBM India ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதிலும் பெரிய அளவில் 25 கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகிறது. இதனால் பல துறைகளின் வணிகத்திற்கு வழிவகுக்கிறது. UBM Asia கம்பெனியின் UBM India மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM Asia-வின் உரிமையாளர் UBM plc ஆகும். இது லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia என்பது ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும், இது மெய்ன்லேண்ட் சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகும். மேலும் விவரங்களுக்கு, ubmindia.inஐ பாருங்கள்.
UBM plc பற்றி:
UBM plc என்பது உலகிலேயே மிகப் பெரிய பிரத்யேக B2B நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகும். வளர்ந்துவரும் டிஜிட்டல் உலகில், மனிதர்கள் ஒரு காரணத்திற்காகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். UBMல் எங்களின் ஆழமான அறிவும், நாங்கள் செயல்படும் இந்தத் துறையில் எங்களுக்கு உள்ள ஆர்வமும் மக்கள் வெற்றிப் பெறுவதற்கான சிறந்த அனுபவங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது. எங்களின் நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளைக் கட்டமைத்து, வணிகம் செய்து, தங்கள் தொழிலை வளர்ச்சியடைய செய்கின்றனர். எங்களின் 3,750+ உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளனர், இவர்கள் 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் செயல்படுகின்றனர். இதில் ஃபேஷன் முதல் மருந்து தயாரிப்பு உட்பொருட்கள் வரை அனைத்தும் அடங்கியிருக்கும். இந்த உலகளாவிய நெட்வொர்க் திறமிக்க, ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்து, வியாபாரிகள் தங்கள் இலங்குகளை அடைய அற்புதமான வாய்ப்புக்களை அளிக்கும் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
ஊடகத் தொடர்பு:
UBM India
Roshni Mitra
UBM India Pvt. Ltd.
[email protected]
+91-22-6172-7000
Mili Lalwani
UBM India
[email protected]
+91-22-6172-7000
Share this article