சென்னை, June 30, 2017 /PRNewswire/ --
UBM India நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சிகள் தொழில் சார்ந்த பாதுகாப்பும் உடல்நலமும், மற்றும் பத்திரம் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகிய UBM India, தொழில் சார்ந்த பாதுகாப்பு மற்றும் உடல்நல (OSH சென்னை) கண்காட்சியின் 4வது பதிப்பு (29-30 ஜூன் 2017-இல் நடைபெறுகிறது) மற்றும் ஜூன் 29 முதல் ஜூலை 1 வரை பத்திரம் மற்றும் தீ கண்காட்சியின் 3வது பதிப்பு (SAFE - -தென்னிந்தியா) ஆகியவற்றை Chennai Trade Centre இல் தொடங்கியது. பாதுகாப்பு, பத்திரம் மற்றும் கண்காணிப்பு ஆகியவை பற்றிய முழுமையான பார்வையைக் கவனத்தில் கொண்டுள்ள இரண்டு கண்காட்சிகளும் தென்னிந்தியாவில் தங்கள் வகையில் மிகப் பெரிய கண்காட்சியாகத் திகழ்வதோடு, புகழ்பெற்ற இந்திய மற்றும் சர்வதேச கண்காட்சியாளர்கள், ஆலோசகர்கள், வணிக வல்லுநர்கள் மற்றும் முக்கிய அரசாங்க அதிகாரிகள் ஆகியோரை ஒரே தொழில் மேடையில் கொண்டுவந்தன. அவர்கள் பணியிடத்திலும் அதற்கு அப்பாற்பட்டும் உள்ள பாதுகாப்பு மற்றும் பத்திரம் தொடர்பான சவால்களுக்கான மிகச் சிறந்த உலகளாவிய நடவடிக்கைகளைப் பகிர்ந்துகொண்டனர் மற்றும் அதற்கான தீர்வுகளை நாடினர். தற்போதைய பதிப்பில் 105 க்கும் மேற்பட்ட முக்கிய கண்காட்சியாளர்களுடன், ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சிகள் மனதில் பதியத்தக்க 50 சதவீத Y-O-Y வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
(Photo: http://mma.prnewswire.com/media/529357/SAFE_EXPO.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/529358/Inauguration_OSH_Expo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
OSH சென்னை மற்றும் SAFE தென்னிந்தியா ஆகியவற்றின் 2017 பதிப்பின் தொடக்க நிகழ்ச்சியில் பேசும்போது, UBM India நிர்வாக இயக்குநர் Yogesh Mudras கூறியதாவது, "உலகளவில், வரையறுக்கப்பட்ட உரிமைகள், பொறுப்புகள் மற்றும் கடமைகளின் ஒழுங்குமுறை வாயிலாக, அனைத்து நிலைகளிலும் ஒரு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பெறுவதற்கான உரிமையை குடிமக்கள் அனைவரும் பெறுவதற்கான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துவது அரசாங்கங்களின் நோக்கமாக இருக்கிறது. மற்றும், இதில் வருமுன் தடுக்கும் கொள்கைக்கு உயர்ந்த முன்னுரிமை வழங்கப்படுகிறது. OSH சென்னை மற்றும் SAFE தென்னிந்தியா ஆகிய எங்களது கண்காட்சிகளில் மூலம், பாதுகாப்பு மற்றும் பத்திரம் சார்ந்த பிரச்சனையை கூட்டுமுயற்சியுடன் தீர்வு காண நாங்கள் விரும்புகிறோம். வெளிப்புற செயற்களத்தில் உள்ள பாதுகாப்பை உட்புறத்தில் நிலவும் பத்திரம் மற்றும் நலவாழ்வின் மூலம் மட்டுமே முழுமை பெறச் செய்ய முடியும் என நாங்கள் நம்புகிறோம். OSH சென்னை மற்றும் SAFE தென்னிந்தியா ஆகியவற்றின் வாயிலாக, உலகம் முழுவதும் உள்ள பாதுகாப்பு மற்றும் உடல்நல வழங்குநர்களும், சேவை வழங்குநர்களும் பரந்த அளவில் பயன்படுத்தப்படாத இந்திய மற்றும் தென்னிந்தியச் சந்தையில் தங்களுடைய கண்டுபிடிப்புகளைக் காட்சிப்படுத்துவதற்கு நாங்கள் வாய்ப்பு வழங்கியுள்ளோம். இது இன்றைய உலகில் மிகுதியாகத் தேவைப்படுகின்ற பாதுகாப்பு மற்றும் பத்திரத்தின் வலுவான கலாச்சாரத்தை மேம்படுத்த உதவும்."
OSH சென்னை கண்காட்சியை Mr. Prem Anand Sinha, IPS, DIG, காவல்துறை கூடுதல் இயக்குநர் (போக்குவரத்து), சென்னை அவர்கள் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்; மற்றும் இத் துறையைச் சார்ந்த மற்ற நிறுவனங்களுக்கு மத்தியில் Shri S.Sreekumar, மண்டல நிர்வாக இயக்குநர், தென் மண்டலம், இந்திய விமானநிலைய ஆணையம், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், இந்திய அரசு; Shri. S Ponsingh Mohanram, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர், சென்னை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், தமிழக அரசு; Shri Varun Buddhiraja, இயக்குநர், Euro Safety Footwear India Pvt. Ltd., Shri. G.M.E.K Raj, நிர்வாக இயக்குநர் (ஓய்வு) DGFASLI, இந்திய அரசு, மற்றும் Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India ஆகிய முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
OSH சென்னை 2017 கண்காட்சி Gujarat Safety Council, Indian Technical Textile Association, Indian Society of Ergonomics, National Small Industries Corporation The International Powered Access Federation (IPAF) மற்றும் Aerial Platform Association of India (APAOI) போன்ற முக்கியச் சங்கங்களால் ஆதரிக்கப்படுகிறது. இந்தக் கண்காட்சியில் Amazon, Acme Safetywears Limited, Accent Industries Ltd., Bata India Ltd., Euro Safety Footwear India Pvt. Ltd., Motorola Solutions India Pvt. Ltd., Oshkosh India Private Limited, Prolite Autoglo Limited, TATA Communications, Tribe, Toughscaff Pvt. Ltd., Udyogi International Pvt. Ltd. ஆகியவை உட்பட, தொழில்துறையின் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்றன.
மேலும் OSH கண்காட்சியில், 'உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பை அடைவதற்கு மிகச் சிறந்த தொழில் நடைமுறைகளை ஏற்றுக்கொள்ளல்', 'உளவியல் ரீதியாக ஆரோக்கியமான பணியிடங்களை உருவாகுதல்', 'பெண்கள் மற்றும் OSH - ஒரு முழுமையான அணுகுமுறை' மற்றும் 'கடுமானத் தொழிலில் உள்ள பாதுகாப்புப் பிரச்சனைகள்' போன்ற தலைப்புகளில் கவனம் செலுத்தக்கூடிய இரண்டு-நாள் அறிவுப் பகிர்வு கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு ஆகியவை இடம்பெற்றுள்ளன. Reliance Industries Limited, Mahanagar Gas Limited, DGFASLI (Retd), AcuiZen Technologies Singapore Pte. Ltd. போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்களும் ஆலோசகர்களும் மாநாட்டில் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டனர். இந்தக் கண்காட்சி Tribe Ltd. நிறுவனத்துடன் இணைந்து, முதன்மை மாநாட்டின் ஒரு பகுதியாக 'நடத்தை மற்றும் கலாச்சாரம் சார்ந்த பாதுகாப்பு' என்பது குறித்த இரண்டு நாள் பயிலரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் பயிலரங்கு Tribe Cultural Change இயக்குநர் Nick Wharton ஆல் தெரிவிக்கப்பட்ட நடத்தை மற்றும் கலாச்சார உலகம் சார்ந்த பாதுகாப்பு பற்றிய விரிவான புரிதலை வழங்குகிறது.
OSH சென்னை கண்காட்சியுடன் இணைந்து, பத்திரம் மற்றும் தீ கண்காட்சி 2017 (SAFE தென்னிந்தியா) இன் 3வது பதிப்பையும் UBM India நடத்தியது. Mr. Abhay Kumar Singh, கூடுதல் காவல்துறை ஆணையர் (போக்குவரத்து), சென்னை, தமிழ்நாடு; மற்றும் Mr. Yogesh Mudras , நிர்வாக இயக்குநர், UBM India ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்ட இந்தக் கண்காட்சியில் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்த மூன்று-நாள் வர்த்தகக் கண்காட்சி Electronic Security Association of India (ESAI) மற்றும் Asian Professional Security Association (APSA) ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.
SAFE - தென்னிந்தியா 2017 ஆனது பத்திரத்தை ஒரு சிந்தனையற்ற, தானியங்கு விளைவாகப் பார்ப்பதை விட நன்கு திட்டமிடப்பட்ட, முன்னுரிமைப்படுத்தப்பட்ட மற்றும் மூலோபாய முதலீடாகப் பார்க்கின்ற, பிராந்தியத்தில் உள்ள தொழில்துறை வல்லுநர்களுக்கு சந்தை அறிமுகத்தையும் வணிக வாய்ப்புகளையும் வழங்குகிறது. மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள SAFE இந்தியா, தனது அளவிலும் ஆழத்தில் வளர்ச்சி கண்டுள்ளது மற்றும் தொழில்துறையில் முன்னணி நிறுவனங்கள் மற்றும் முக்கியக் கண்காட்சியாளர்களைக் கவர்ந்திழுத்துள்ளது. இதில் அதன் பிரைமர் பிளஸ் கூட்டாளர்களாகிய eSSL, Hikvision, Mark Electronics GPS, Unicam Systems மற்றும் TVT; அதன் பிரைமர் கூட்டாளர்களாகிய In4 Solutions & Zkteco, Road Point India, Starex & Orbit ஆகியவை உள்ளடங்கும். Vamosys, Hash Control, Swipe Technologies, Spectra, Main Hardware, Vitaran, Matrix Comsec, Micro & Super Micro ஆகியவை உள்ளிட்ட இதர முக்கிய நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்றன. வளர்ந்துவரும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சுமார் 15 புதிய பிராண்டுகள் மற்றும் இலாபம் தரும் வணிகத் தொகுதிகளுடன் சேர்த்து 70 க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற இந்திய மற்றும் சர்வதேச பாதுகாப்பு பிராண்டுகள் காட்சிப்படுத்தப்பட்டன. இந்தக் கண்காட்சி தொழில்துறையில் செல்வாக்குடன் விளங்கும் நிறுவனங்களுடன் தொழில்முறை உறவுகளை நிறுவுவதற்கு ஒரு உகந்த சூழ்நிலையை உருவாக்கியது. உபசரிப்பு, IT/BPO மற்றும் சேவைத் துறை, ரியல் எஸ்டேட், துறைமுக ஆணையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், லாஜிஸ்டிக்ஸ், கட்டுமானம், கட்டிடக்கலை, வாகனம், உற்பத்தி, சில்லறை வணிகம், நகை, உடல்நலம், கல்வி, IT, நெட்வொர்க்கிங், தொலைத்தொடர்பு, தன்னியக்கமாக்கல் மற்றும் BFSI ஆகிய துறைகளைச் சேர்ந்த பத்திர மற்றும் பாதுகாப்பு மேலாளர்களும் பங்கேற்றனர்.
பாதுகாப்புக்கான பட்ஜெட்டை அதிகபட்சமாக 35 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் முடிவெடுத்துள்ள இந்த நேரத்தில், SAFE தென்னிந்தியா கண்காட்சி பாதுகாப்பு வல்லுநர்களின் மீது கவனம் செலுத்திகிறது, இதில் அர்ப்பணிக்கப்பட்ட குடியிருப்பிட பாதுகாப்புத் துறையை உருவாக்குதல், ஒருங்கிணைக்கப்பட்ட கூர்மதிக் கூட்டத்தை உருவாக்குதல், முக்கிய உள்கட்டமைப்பைப் பாதுகாத்தல் மற்றும் கடல்வழிப் பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகியவை உள்ளடங்குகின்றன.
UBM India பற்றி:
UBM India, கண்காட்சித் தொகுப்புகள், உள்ளடக்கம் நிறைந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றின் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கிணைக்கும் களங்களை தொழில்துறையினருக்கு வழங்குகின்றது. UBM India ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் சுமார் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகின்றது; அதன்மூலம் பல தொழில்துறை நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகத்துக்கு உதவுகின்றது. UBM Asia நிறுவனமாகிய UBM India வின் அலுவலகங்கள் மும்பை, புதுதில்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. UBM Asia நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும். UBM Asia நிறுவனம் ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும், மற்றும் அது சீனா, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டு நிறுவனமாகவும் உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் ubmindia.in.
UBM plc பற்றி:
UBM plc ஆனது உலகின் மிகப் பெரிய பியூர்-பிளே B2B நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ஆகும். பெருகிய டிஜிட்டல் மயமாக்க உலகில், பொருளார்ந்த, மனித நிலைத் தொடர்பின் மதிப்பு ஒருபோதும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததில்லை. UBM இல், நாங்கள் செயல்படும் தொழில்துறைப் பிரிவுகளின் ஆழ்ந்த அறிவும் மிகுந்த ஆர்வமும் மக்கள் வெற்றிபெறக்கூடிய மதிப்புமிக்க அனுபவங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது. எங்களது நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளையும், நெருங்கிய வியாபாரங்களையும் உருவாக்கிக் கொண்டு அவர்களது வணிகங்களை வளர்க்கிறார்கள். 20 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த எங்களது 3,750க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஃபேஷன் முதல் மருந்துத் தயாரிப்பு உட்பொருட்கள் வரை, 50 க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் வேலை செய்கிறார்கள். இந்த உலகளாவிய பிணைப்பு, பயிற்சி பெற்ற, ஆர்வமிக்க பணியாளர்கள் மற்றும் சந்தையின் முன்னணி நிகழ்வுகள் ஆகியவை வணிகர்கள் தங்களுடைய குறிக்கோள்களை அடைவதற்கான அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
ஊடகத் தொடர்புநபர்:
Roshni Mitra
UBM India Pvt. Ltd.
[email protected]
+91-22-61727000
Mili Lalwani
UBM India Pvt. Ltd.
[email protected]
+91-22-61727000
Share this article