சென்னை, June 22, 2017 /PRNewswire/ --
தென்னிந்தியாவின் ஒரே தொழில்முறை பாதுகாப்பு மற்றும்
ஆரோக்கிய வர்த்தகக் கண்காட்சி
UBM இந்தியா, சென்னையில், சென்னை டிரெட் சென்டரில் 29 மற்றும் 30 ஜூன் 2017-இல் நடைபெறவிருக்கும் Occupational Safety & Health (OSH) India-வின் நான்காவது பதிப்பின் அறிமுகத்தை அறிவித்தது. புகழ்பெற்ற இந்திய மற்றும் சர்வதேச கண்காட்சியாளர்களையும், ஆலோசகர்களையும், வணிக நிபுணர்களையும், முக்கிய அரசாங்க அதிகாரிகளையும் ஒரு தொழில்முறைத் தளத்தில் ஒன்றாகக் கொண்டுவந்து, பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த சிறந்த சர்வதேச செயல்பாடுகளை பரிமாறிக்கொண்டு, அவற்றில் உள்ள சவால்களுக்கு தீர்வு காண்பதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும். இந்த கண்காட்சிக்கு Gujarat Safety Council, Indian Technical Textile Association, Indian Society of Ergonomics, National Small Industries Corporation, The International Powered Access Federation (IPAF) and Aerial Platform Association of India (APAOI) ஆகிய அமைப்புகள் ஆதரவளித்துள்ளன.
(Logo: http://mma.prnewswire.com/media/525922/OSH_Exhibition_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
OSH இந்தியாவில் தொழில்முறை பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத் தொழில்துறையின் மிகப்பெரிய கண்காட்சியாகும், இது தொழில்துறையை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கும். இந்தக் கண்காட்சி, குறிப்பாக பணியிடத்தில் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் ஊக்குவித்து, அங்கு சிறந்த செயல்பாடுகளைப் பின்பற்ற வழிவகுக்கும். OSH இந்தியா 2017, உலகெங்கிலுமுள்ள தொழில்முறை பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உபகரணங்களின் விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குனர்களுக்கும் தங்களுடைய புதுப்புனைவுகளையும் அறிவாண்மையையும், மிகவும் பரந்த தொழிற்சாலை நிலவமைப்புகளை உடைய பெரும்பாலும் ஊடுருவப்படாத இந்தியச் சந்தைக்கு காட்சிப்படுத்த அனுமதிக்கிறது. பிரதிபலிக்கும் பாதுகாப்பு மேலாடைகள், பாதுகாப்புக் காலணிகள், பாதுகாப்புச் செனங்கள், தலைக்கவசங்கள், கையுறைகள், பாதுகாப்புக் கண்ணாடிகள், பாதுகாப்பு மூக்குகண்ணாடிகள், உயரத்கில் பாதுகாப்பளிக்கும் உபகரணங்கள், வாயு உணர் கருவிகள் மற்றும் பணிச்சூழலியல் தடவாளங்கள் போன்ற தயாரிப்புகளை உள்ளடக்கிய தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களும் மற்றவைகளுடன் காட்சிக்கு வைக்கப்படும்.
இந்தக் கண்காட்சியில், இத்தொழில்துறையில் முன்னணி நிறுவனங்களாகிய Amazon, Acme Safetywears Limited, Accent Industries Ltd., Bata India Ltd., Euro Safety Footwear India Pvt. Ltd., Motorola Solutions India Pvt. Ltd., Mallcom (India) Ltd., Midas Safety Pvt. Ltd., Oshkosh India Private Limited, Prolite Autoglo Limited, TATA Communications, Tribe, Toughscaff Pvt. Ltd., Udyogi International Pvt. Ltd., Uniphos Envirotronic Pvt. Ltd. and Victor Imports, மற்றும் பல நிறுவனங்கள் பங்குபெறுவதைக் காணலாம்.
'உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பை எட்டுவதற்கான சிறந்த தொழில்முறை நடவடிக்கைகலைப் பின்பற்றுவது', 'விபத்து மற்றும் நிகழ்வுகளின் புலனாய்வு', 'மனவியல் ரீதியான ஆரோக்கியமான பணியிடங்களை உருவாக்குதல்', 'பணியிடப் பணிச் சூழலியல்', 'பெண்கள் மற்றும் OSH - ஒரு முழுமையான அணுகுமுறை' மற்றும் 'கட்டுமானத் தொழிலில் உள்ள பாதுகாப்புப் பிரச்சினைகள், போன்ற தலைப்புகளை உள்ளடக்கிய இரண்டு நாட்கள் அறிவாற்றல் பகிர்வு கருத்தரங்கு மற்றும் பயிலரங்கையும் உள்ளடக்கியதாக OSH இருக்கும். கருத்தரங்கில் உரையாற்றிய முக்கியப் பேச்சாளர்களில், Reliance Industries Limited, Mahanagar Gas Limited, DGFASLI (Retd), AcuiZen Technologies Singapore Pte. Ltd., ONGC, Siemens Ltd., RECOUP Neuromusculoskeletal Rehabilitation Centre, Bangalore, Sri Ramachandra Medical College & Research Institute and International Powered Access Federation மற்றும் பல நிறுவனங்களில் இருந்து நிபுணர்களும் ஆலோசகர்களும் அடங்குவர். அவர்கள் இத்தொழில்துறையில் உள்ள சமீபத்திய போக்குகளையும் அறிவாற்றலையும் பற்றிப் பகிர்ந்துகொள்வார்கள்.
முக்கியக் கருத்தரங்குடன் கூடுதலாக, OSH இந்தியா TRIBE-உடன் இணைந்து Behaviour and Culture Based Safety(நடத்தை மற்றும் கலாச்சாரம் சார்ந்த பாதுகாப்பு என்பதைப் பற்றிய ஒரு இரண்டு நாள் பயிலரங்கை ஏற்பாடு செய்யவுள்ளது, இப்பயிலரங்கு, புகழ்பெற்ற பயிற்சியாளராகிய Mr. Tribe Culture Change-இன் நிறுவனராகிய Nick Wharton-ஆல் நடத்தப்படும். இந்தப் பயிலரங்கில், ஒரு ஈடுபாட்டுடன் கூடிய புதுமையான முறையில், பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் குறித்த ஒரு விலைமதிப்பில்லா அணுகுமுறையின் முன்னணிப் பங்கேற்பாளரால் நடத்தை மற்றும் கலாச்சாரம் சார்ந்த பாதுகாப்பைப் பற்றிய ஒரு விரிவான நுண்ணறிவு வழங்கப்படும். இந்த நான்கு அமர்வுகளின் வாயிலாக, பங்கேற்பாளர்கள், கலாசாரம் மற்றும் நடத்தையைப் புரிந்துகொள்வதில் உள்ள அத்தியாவசியக் கூறுகள், தலைவர்கள் வகிக்கும் முக்கியப் பங்கைக் கண்டுணர்தல், தொழிலாளர்களுடன் ஈடுபடுவதற்கான சிறந்த முறையைக் கற்றுக்கொள்வது, மேலும் தனிநபர் பொறுப்பிற்கான உண்மையான ஏற்றுக்கொள்ளளை உருவாக்க அவர்களை எப்படி ஈடுபட வைப்பது ஆகியவற்றைப் பற்றிய புரிதலுக்கான ஒரு பயணத்தை மேற்கொள்வர்.
OSH சென்னை 2017-இன் 4-ஆவது பதிப்பிற்கான அறிவிப்பு விழாவில் பேசிய UBM இந்தியாவின் நிர்வாக இயக்குனர் Mr. Yogesh Mudras கூறியதாவது, "இன்று, பாதுகாப்பாற்ற பணியிடங்களில் அதிகரித்துவரும் விபத்துக்கள், உலக அளவில் வளர்ந்துவரும் விழிப்புணர்வு மற்றும் தொழில்முறை பாதுகாப்பிற்கான தேவையை அதிகரித்து, இந்தியா நிறுவனங்களில் தொழில்முறை பாதுகாப்பு & ஆரோக்கிய இணக்கங்களுக்கான முக்கியக்த்துவத்தை அதிகரித்துள்ளது. பணியிடப் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கங்களின் தொடர்ந்த அறிவுறுத்தல், இந்தப் பிரிவில் சர்வதேச முதலீட்டின் வளர்ச்சியுடன் இணைந்தௌ, உலகெங்கிலும் உள்ள வினியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குனர்களுக்குத் தங்களுடைய தயாரிப்புகளையும், தீர்வு வழங்குதல்களையும் காட்சிப்படுத்த ஒரு மிகப் பெரிய விவைப்பை வழங்குகிறது. சென்னை, நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தொழில் மையமாகத் திகழ்வதோடு, பல தொழிற்சாலைகளின் அடிப்படையாகவும் திகழ்கிறாக்து. UBM இந்தியா, இந்தப் பகுதியில் உள்ள பங்குதாரர்களுக்கு ஒரு தளத்தை அமைத்து, அவர்களுடைய புதுப்புனைவுகளையும் தொழில்நுட்பத்தையும் காட்சிப்படுத்தி, அறிவாற்றலைப் பரிமாறிக்கொண்டு, இணைப்புகளை உண்டாக்கி, வர்த்தகத்தை உருவாக்கிக்கொண்டு, அதனால் இந்தப் பிராந்தியத்தில் ஒரு வலுவான பாதுகாப்புக் கலாசாரத்தை மேம்படுத்துவதே எங்கள் தொடர்ந்த முயற்சியாக இருந்து வந்துள்ளது."
அவர் மேலும், "இந்தக் கண்காட்சியில் ஒரு ஆற்றல் மிகுந்த இரண்டு நாள் கருத்தரங்கும் இடம்பெறும், இதில் கலாசாரம் மற்றும் நடத்தை அடிப்படையிலான பாதுகாப்பு குறித்த ஒரு பயிலரங்கும் அடங்கும். பணியிடத்தில் சரியான கலாச்சாரமும் நடத்தைமுறையும் நடைமுறைப்படுத்தப் படாவிட்டால், அமைப்புகளும் சட்டதிட்டங்களும் எதையும் சாதிக்கமுடியாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். இந்த அறிவாண்மைப் பகிர்வு அமர்வுகள், சந்தேகமே இல்லாமல், நிறுவனங்களுக்கு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை ஒரு முதன்மைக் கருத்தாக அறிவுறுத்தி, முழுமையான பாதுகாப்பிற்கு வழிவகுத்து, பணியாளர்களின் ஆரோக்கியத்தையும், செயல்திறனையும் மேம்படுத்தி, நிறுவனத்தையும், பெரிய அளவில் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும்.
OSH சென்னை 2017-ஐ தொழில்துறைத் தளமாக அங்கீகரித்து, சென்னையில் இந்த வருடாந்திர கண்காட்சியின் குறிக்கோளை அறிவுறுத்துகிறது.
Mr. Roopak Jakhmola, Tribe Culture Change Limited, கூறியதாவது, "Occupational Safety and Health India 2017-இல் நடக்கும் கருத்தரங்கு, முற்போக்கு எண்ணங்களை உடைய வணிகங்களை ஈர்க்கும். இது யோசனைகளைப் பரிமாறிக்கொள்ள அதிக வாய்ப்பளிக்கும். இது மக்கள் உண்மையிலேயே என்ன செய்கிறார்கள் மற்றும் அதற்கு என்ன காரணம் என்பதைப் புரிந்து கொள்வதில் கவனம் செலுத்தி, நடத்தை மற்றும் கலாசார அடிப்படையிலான பாதுகாப்பு என்னும் நோக்கத்தை முன்னேற்ற உதவும். இது, ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு விஷயங்களில் இன்னும் அதிக பேரை ஈடுபடுத்தி, குழுப்பணியை ஊக்குவித்து, கருத்துப் பரிமாற்றத்தை மேம்படுத்துகிறது."
Mr Ankur Jain, Bata India Limited, கூறியதாவது, "இந்தியாவில் அடுத்த 4 ஆண்டுகளில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களில் 20% வளர்ச்சியைக் காணலாம். காலணிகளில் கப்வனம் செலுத்தும், பாட்டா இண்டஸ்ட்ரீஸ், காலணிகளில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஸ்டீல், உலோக மற்றும் சுரங்க தொழில் துறைகளுக்காக பாலியூரிதேன் ரப்பர் காலணிகளை OSH 2017-இல் அறிமுகம் செய்யவுள்ளது. அரசாங்கம் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் தொழில்முறை பாதுகாப்பைப் பற்றி மிகவும் கவநாமாகவும், அதை நடைமுறைப்படுத்தி, அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவத்தில் முனைப்பாக உள்ளன."
Ms. Meeta Rani, Udyogi Plastics Pvt Ltd, கூறியதாவது, தொழில்முறை பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் பெருமளவில் வளர்ந்துள்ளது. MNC-க்கள் இப்போது பாதுகாப்பிற்கான சர்வதேசத் தரநிலைகளை நடைமுறைப்படுத்தி, நிர்வாகம் பணியாளர்களின் நலனைப் பற்றி அக்கறை காட்டத் தொடங்கியுள்ளன. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கலாசாரம், அடுத்த தசாப்தத்தில் ஒரு மேல்நோக்கிய வளர்ச்சியைக் காணும். தொழில்முறை பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைப் பற்றி அரசாங்கமும் கவனமாக இருக்கிறது. பாதுகாப்பு உபகரணங்கள், குறிப்பாக PPE முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. கையுறைகளே, அவற்றின் பணிச்சூழலியல் இசைவு/அளவுகள், நெகிழ்வுத்தன்மை/துல்லியத்தன்மை மற்றும் வாழ்நாள் ஆகியபண்புகளைக் கொண்டு, PPE-யில் வாடிக்கையாளர்கள்/நிபுணர்கள், பயன்படுத்துவதில்/மீண்டும் பயன்படுத்துவதில் மிகவும் கவனம் அளிக்கத் தொடங்கியுள்ள ஒரு சாதனமாகும். OSH 2017-இன் மீது எங்களுக்குள்ள எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாகும். இது எல்லா பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், நிறுவனங்கள், பாதுகாப்புத் தொழில்முனைவோர் மற்றும் அரசாங்க பாதுகாப்பு கண்காணிப்பாளர் ஆகியோரின் கூட்டமைப்பாகும், இதில் அதிகம் வரவேற்புள்ள ப்ரோட்டான் ரிட்ராக்டபிள் ஃபால் அரேஸ்டர், பிரோட்டான் கையுறைகள் மற்றும் காற்றுச் சேணம் ஆகியவையும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன."
UBM India-வைப் பற்றி
UBM India, கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியோ, உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளின் மூலம், தொழில்துறைக்கும் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒரே இடத்தில் சேர்க்கும் ஒரு தளத்தை உருவாக்கித் தரும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளராகும். UBM India 25-க்கும் மேலான பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளையும் நாடெங்கிலும் ஆண்டு முழுவதும் நடத்துகிறது; இதன் மூலமாக பலவிதமான தொழில்துறைகளில் வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது. ஒரு UBM Asia நிறுவனமாகிய, UBM India-விற்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் உள்ளன. UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc-க்கு சொந்தமான நிறுவனமாகும். UBM Asia, ஏசியாவிலேயே முன்னணி கண்காட்சி அமைப்பாளராகும், மேலும் இது சீனா, இந்தியா மற்றும் மலேசியாவிலும் மிகப்பெரிய வணிகமுறை கண்காட்சி அமைப்பாளராகும். மேலும் விவரங்களுக்கு,ubmindia.in.-ஐப் பார்க்கவும்.
UBM plc:-யைப் பற்றி:
UBM plc உலகிலேயே மிகப்பெரிய, ஒரே ஒரு துறை சார்ந்த, B2B நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள் ஆகும். டிஜிட்டல்மயமாகிக் கொண்டிருக்கும் உலகில், ஒரு அர்த்தமுள்ள மனித நிலைத் தொடர்பு என்பது முன்பெப்போதையும் விட முக்கியமாகிவிட்டது. UBM-இல், நாங்கள் சேவை செய்யும் பிரிவுகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவும் ஆர்வமும், மக்கள் வெற்றியடையக்கூடிய விலைமதிப்பில்லா அனுபவங்களை உருவாக்க எங்களை அனுமதிக்கிறது. எங்கள் நிகழ்ச்சிகளில், மக்கள் உறவுகளை உருவாக்கி, வியாபாரங்களை முடித்து, அவர்களுடைய வணிகத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். எங்களுடைய 3750+ ஊழியர்கள், 20 நாடுகளில் இருந்து, 50-க்கும் அதிகமான வேறுபட்ட பிரிவுகளில் - ஃபேஷன் முதல் மருத்துவப் பொருட்கள் வரையிலான துறைகளில் சேவை செய்கிறார்கள். இந்த சர்வதேச வலையங்கள், ஆர்வமிக்க ஊழியர்கள் மற்றும் சந்தை முன்னணி நிகழ்ச்சிகள் ஆகியவை வணிகர்கள் தங்களுடைய குறிக்கோள்களை எட்ட உற்சாகமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
ஊடகத் தொடர்பு:
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
Mili Lalwani
[email protected]
UBM India Pvt Ltd
Share this article