சென்னை, June 22, 2017 /PRNewswire/ --
தென்னிந்தியாவின் மிகப் பெரிய பாதுகாப்பு மற்றும் தீ கண்காட்சி
பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு குறித்த சிறப்புக் கண்காட்சியாகிய IFSEC India வின் ஏற்பாட்டாளராகிய UBM India, 'பாதுகாப்பு மற்றும் தீ கண்காட்சி (SAFE) - South India' நிகழ்ச்சியின் மூன்றாவது பதிப்பை ஏற்பாடு செய்வதற்காக முழுமையாக இறங்கியுள்ளது. சென்னை வர்த்தக மையத்தில் 29 ஜூன் - 1 ஜூலை 2017 தேதிகளில் நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, கண்காணிப்பு, நுழைவாயில் மற்றும் ஹோம் ஆட்டோமேஷன் தொழில்துறை மற்றும் தொழில்துறையிலுள்ள ஆலோசகர்கள், வியாபார வல்லுநர்கள் மற்றும் முக்கியமான அரசாங்க அதிகாரிகள் ஆகியோர் ஒன்றுகூடுவதற்கும், தொடர்புகொள்வதற்கும், பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதற்கும், நவீன கண்டுபிடிப்புகளைப் பார்வையிடுவதற்கும், வணிகத் தீர்வுகளைத் தோற்றுவிப்பதற்கும் மற்றும் விலைமதிப்பற்ற வல்லுநர் ஆதரவைப் பெறுவதற்கும் தேவையான வாய்ப்புகள் அனைத்தையும் ஒரே கூரையின் கீழ் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கண்காட்சிக்கு Electronic Security Association of India (ESAI) மற்றும் Asian Professional Security Association (APSA) ஆகியவற்றின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது.
(Logo: http://mma.prnewswire.com/media/525918/SAFE_South_India_2017_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
பாதுகாப்புக்காக செலவழிக்கும் தொகை 2017 ஆம் ஆண்டில் மேலும் அதிகரிக்கும் எனவும், அது $1.24 பில்லியனைத் தாண்டும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதே போல, மேம்பட்ட பாதுகாப்புத் தீர்வுகளுக்கான கடுமையான தேவை காரணமாக பாதுகாப்புச் சேவைகளுக்கான செலவானது (ஆலோசனை, நடைமுறைப்படுத்தல், ஆதரவு மற்றும் நிர்வகிக்கப்பட்ட பாதுகாப்புச் சேவைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது) இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பாதுகாப்புச் சேவைகளின் வருவாய் கடந்த இரண்டு ஆண்டுகளில் செலவிடப்பட்ட மொத்த வருவாயில் 61 சதவீத இடத்தைப் பிடித்துள்ளது, மற்றும் இந்தப் பங்களிப்பு 2020 ஆம் ஆண்டில் 66 சதவீதமாக அதிகரிக்கும்.
முக்கியமான தென்னிந்தியச் சந்தையில் சிறப்பான கவனம் செலுத்துவதன் மூலம், SAFE 2017 ஆனது பார்வையாளர்கள் நவீன தொழில்நுட்பங்களையும் தொழில்துறைப் போக்குகளையும் பற்றி கற்றுக்கொள்வதற்கும் தங்களுடைய வணிகத்தையும் வாடிக்கையாளர்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கும் தேவையான மிகச் சிறந்த தீர்வுகளைக் கண்டறிவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கும். SAFE - South India கண்காட்சியானது தென்னிந்தியச் சந்தையில் CCTV மற்றும் வீடியோ கண்காணிப்பு, பயோமெட்ரிக்ஸ் மற்றும் RFID, ஒருங்கிணைந்த அமைப்புகள், அணுகல் கட்டுப்பாடு, சைபர் பாதுகாப்பு, ஒருங்கிணைந்த அமைப்புகள், புறப் பாதுகாப்பு, சுற்றளவுப் பாதுகாப்பு, தீ கண்டறியும் அமைப்புகள், இன்ட்ரூடர் அலாரங்கள் மற்றும் தீ அலாரங்கள் போன்ற தயாரிப்புகளைக் காட்சிப்படுத்துகிறது.
SAFE 2017 இன் 3 வது பதிப்பு பற்றிய அறிவுப்பு குறித்துப் பேசும்போது UBM India நிர்வாக இயக்குநர் Mr. Yogesh Mudras கூறியதாவது, "இன்று, உலகம் முழுவதும் உள்ள அரசாங்கங்கள் தங்கள் குடிமக்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ்நிலையை வழங்குவதற்கான தேவை குறித்து ஒருமித்த உணர்வைக் கொண்டுள்ளன. இது ஒரு பெரிய சந்தைக்கான வாய்ப்புக்கு வழிகோலியுள்ளது, பாதுகாப்புத் துறையில் முன்னணி நிறுவனங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவுவதற்கான மேடையை அமைத்துக் கொடுத்துள்ளது. உலகளவிலும் இந்தியாவிலும் உள்ள பல நிறுவனங்கள், தங்களுடைய பாதுகாப்பு உத்தியை புதுப்பிப்பதற்கான, மற்றும் விபத்துக்களைக் கண்காணித்து அவற்றைச் சமாளிப்பதற்கான நவீனத் தொழில்நுட்பங்கள் பற்றி விவாதிப்பதற்கான முக்கியமான தேவையை தற்போது உணர்ந்துள்ளன. அதே போன்று, இந்தியாவில் வீடியோ கண்காணிப்புக்கான தேவை பெருநிறுவனங்களில் மட்டுமல்லாது RWAs மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கிடையிலேயும் தீவிரமாக அதிகரித்துள்ளது. அணுகல் கட்டுப்பாடு, பயோமெட்ரிக், அலாரம் அமைப்புகள், போக்குவரத்து பாதுகாப்பு, ஹோம் ஆட்டோமேஷன், சுற்றளவு பாதுகாப்பு மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் போன்ற பாதுகாப்பு அமைப்புகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகின்றன மற்றும் உயிர்களைப் பாதுகாப்பதில் அவற்றுக்கு மகத்தான ஆற்றல் இருக்கிறது."
அவர் மேலும் கூறியதாவது, "இந்தியாவில் வர்த்தக மற்றும் வீட்டுப் பாதுகாப்புக்கான முக்கியமான வணிக மையமாக தென்னிந்தியா விளங்குவதால், SAFE-South India 2017 மூலம் UBM India இந்தப் பிராந்தியத்தில் தொழில்துறையின் விநியோகச் சங்கிலி சுழற்சியை வலுப்படுத்துகின்ற அதே நேரத்தில், வளர்ந்துவரும் சந்தைக்கான சந்தை வாய்ப்புகளையும் வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது."
மேலும் இந்தக் கண்காட்சியானது முக்கிய முடிவெடுப்பாளர்களுடனான உறவுகளை உறுதிப்படுத்துகின்ற அதே நேரம், ஒரு வளர்ந்துவரும் சந்தையில் முன்னணி பாதுகாப்பு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கான அறிமுக மையமாகவும் விளங்கும். இந்தக் கண்காட்சியில் தொழில்துறை முழுவதிலும் இருந்து உபசரிப்பு, IT/BPO மற்றும் சேவைத் தொழில், ரியல் எஸ்டேட், துறைமுக ஆணையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள், லாஜிஸ்டிக்ஸ், கட்டுமானம், கட்டிடக் கலை, வாகனம், உற்பத்தி, தொழில்துறை, சில்லறை விற்பனை, நகை, உடல்நலம், கல்வி, IT, நெட்வொர்க்கிங், தொலைத்தொடர்புத் துறை, ஆட்டோமேஷன், BFSI போன்ற துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்பார்கள்.
தனது மூன்றாவது ஆண்டில், SAFE India ஆனது அளவிலும் ஆழத்திலும் வளர்ந்துள்ளது, தொழில்துறையில் முன்னணியில் உள்ள நிறுவனங்களையும் முக்கியக் கண்காட்சியாளர்களையும் கவர்ந்திழுத்துள்ளது; இதில் அதன் பிரீமியர் பிளஸ் கூட்டாளர்களாகிய ESSL, Hikvision, Mark Electronics, GPS, UNICAM Systems மற்றும் TVT; பிரீமியர் கூட்டாளர்களாகிய In4 Solutions, Road Point India, Starex, Orbit மற்றும் ZKT Eco ஆகியவை உள்ளடங்கும். Vamosys, Hash Control, Swipe Technologies, Spectra, Main Hardware, Vitaran, Matrix Comsec, Mantra, ERD, TS Infosystems, Commnet, Swaraj Secutech, Pictor, Copper Connections, WYSE, Green Field, Supreme Computers, Micro மற்றும் Super Micro உள்ளிட்ட இதர முக்கிய நிறுவனங்களும் கண்காட்சியில் கலந்துகொள்கின்றன.
UBM India பற்றி:
UBM India, கண்காட்சித் தொகுப்புகள், உள்ளடக்கம் நிறைந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றின் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கிணைக்கும் களங்களை தொழில்துறையினருக்கு வழங்குகின்றது. UBM India ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் சுமார் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகின்றது; அதன்மூலம் பல தொழில்துறை நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகத்துக்கு உதவுகின்றது. UBM Asia நிறுவனமாகிய UBM India வின் அலுவலகங்கள் மும்பை, புதுதில்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. UBM Asia நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும். UBM Asia நிறுவனம் ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும், மற்றும் அது சீனா, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டு நிறுவனமாகவும் உள்ளது. கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் ubmindia.in.
UBM plc பற்றி:
UBM plc ஆனது உலகின் மிகப் பெரிய பியூர்-பிளே B2B நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ஆகும். பெருகிய டிஜிட்டல் மயமாக்க உலகில், பொருளார்ந்த, மனித நிலைத் தொடர்பின் மதிப்பு ஒருபோதும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததில்லை. UBM இல், நாங்கள் செயல்படும் தொழில்துறைப் பிரிவுகளின் ஆழ்ந்த அறிவும் மிகுந்த ஆர்வமும் மக்கள் வெற்றிபெறக்கூடிய மதிப்புமிக்க அனுபவங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது. எங்களது நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளையும், நெருங்கிய வியாபாரங்களையும் உருவாக்கிக் கொண்டு அவர்களது வணிகங்களை வளர்க்கிறார்கள். 20 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த எங்களது 3,750க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஃபேஷன் முதல் மருந்துத் தயாரிப்பு உட்பொருட்கள் வரை, 50 க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் வேலை செய்கிறார்கள். இந்த உலகளாவிய பிணைப்பு, பயிற்சி பெற்ற, ஆர்வமிக்க பணியாளர்கள் மற்றும் சந்தையின் முன்னணி நிகழ்வுகள் ஆகியவை வணிகர்கள் தங்களுடைய குறிக்கோள்களை அடைவதற்கான அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
கூடுதல் தகவல்களுக்கு, பார்வையிடவும் http://www.ubm.com; UBM கார்ப்பரேட் செய்திகளுக்கு, Twitter இல் @UBM மற்றும் LinkedIn இல் UBM Plc இல் எங்களை பின்தொடருங்கள்.
செய்தித் தொடர்பாளர்:
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
UBM India Pvt Ltd.
Mili Lalwani
[email protected]
UBM India Pvt Ltd.
Share this article