புதுதில்லி, June 13, 2017 /PRNewswire/ --
IMA® (மேலாண்மைக் கணக்கியல் நிறுவனம்), உலகளாவிய சந்தை சவால்கள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு மத்தியில் நிதி மற்றும் கணக்கியல் செயல்பாட்டின் மாறிவரும் பங்கு பற்றிப் பேசுவதற்காக தொடர்ச்சியான கார்ப்பரேட் பார்வையிடல்களை நடத்துகிறது. மே 17 முதல் 24 ஆம் தேதி வரை, Benjamin R. Mulling, CMA, CPA, CITP, IMA வின் உலகளாவிய இயக்குநர்களின் ஓய்வுபெற்ற தலைவர்; TENTE கேஸ்டர்ஸின் தலைமை நிதி அதிகாரி (CFO); மற்றும் Jim Gurowka, CAE, IMA முதுநிலை துணைத் தலைவர், Global Business Development ஆகியோர் தில்லி, நொய்டா, குர்கான், பெங்களூர் மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய இந்திய நகரங்களைப் பார்வையிட்டு இதர CFOக்கள் மற்றும் நிதித் தலைவர்களுடன் கலந்துரையாடினார்கள்.
(Logo: http://mma.prnewswire.com/media/510711/IMA_Logo.jpg )
"தொழில்நுட்ப சக்திகள் கணக்கியல் துறை உட்பட, பல துறைகளில் வேலைகளை மாற்றத் தொடங்கியுள்ளன. ஆஃப்ஷோரிங் என்பது பெரும்பான்மையான மாற்றங்களின் முதலாவது சமிக்கையாக பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது ஆஃப்ஷோரிங்குக்கு பதிலாக ஆட்டோமேஷன் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளது," என்றார் Mulling. இந்தியாவில் வணிகச் செயல்முறையில் அயலாக்கத் தொழில் மதிப்பு $150 பில்லியனாக இருக்கிறது, இதில் பெரும்பாலான வேலைகள் கம்ப்யூட்டர் புரொகிராமர்கள், மென்பொருள் பொறியாளர்கள், கணக்காளர்கள், தணிக்கையாளர்கள் மற்றும் காப்பீட்டு முகவர்கள் ஆகியோருக்குச் செல்கின்றன.
தில்லியில், Tata Power தில்லி விநியோகம், IBM, Amex மற்றும் குர்கானில் உள்ள AIG மற்றும் நொய்டாவில் உள்ள Metlife இன் உலகளாவிய செயல்பாடுகள் ஆதரவு மையம் ஆகியவற்றை Mulling பார்வையிட்டார். அதன் பின் அவர் பெங்களூர் சென்று Axa Business Services, VMware, Viteos மற்றும் Societe Generale Global Solution Center ஆகிய நிறுவனங்களின் நிதி மற்றும் கணக்கியல் தலைவர்கள் மற்றும் அணி உறுப்பினர்களுடன் பேசினார். மேலும் பெங்களூரில், Jain University மற்றும் Miles Education, IMA's Platinum அனுமதி பெற்ற வழங்குநர் ஆகியோருடன் இணைந்து IMA Bangalore Chapter உறுப்பினர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு பெருநிறுவனக் கூட்டத்தில் முதன்மைப் பேச்சாளராக கலந்துகொண்டார்.
சென்னையில், Cognizant மற்றும் WNS நிறுவனங்களை அவர் பார்வையிட்டார், அங்கு தற்போதைய போக்குகளைப் பயன்படுத்திக்கொள்வதற்குத் தேவைப்படுகின்ற நேரடித் திறன்களை அவர்கள் எவ்வாறு வளர்த்துக்கொள்ள முடியும் என்பது பற்றி அவர் பேசினார்.
"புள்ளிவிவரங்களில் வல்லுநராக இருங்கள். நிதித் தொழிலில் புதிதாக காலடி எடுத்து வைப்பவர்கள் மற்றும் நிதிச் செயல்பாடு, வணிகங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள வாடிக்கையாளர்கள் ஆகியோரின் மாறிவரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்," என்றார் Mulling. அவர் தனது 28வது வயதில் CFO ஆனார். அன்றிலிருந்து, நிதித் தலைமைக்கான பாதை பற்றியும் மாற்றத்தின் முன்னோடியாக விளங்குவது பற்றியும் அவர் விவாதித்து வருகிறார்.
மேலும், புது தில்லியில் Hotel Lalit இல் நடைபெற்ற CFO வட்டமேசை விவாதத்துக்கும் அவர் தலைமை தாங்கினார். அதில் கலந்துகொண்ட 12 CFOக்கள் பகுப்பாய்வு மற்றும் தொழில்நுட்பக் காலத்தில் தாங்கள் எதிர்கொண்டிருக்கும் சவால்கள் பற்றிப் பேசினார்கள். CFO வட்டமேசை விவாதம் MyCFO, Miles Education மற்றும் John Wiley and Sons, Inc. (விலி) CMA Learning System நிறுவனத்தின் வெளியீட்டாளர் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
"இப்பொழுது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, நிதி மற்றும் கணக்கியல் வல்லுநர்களை வணிகக் கூட்டாளிகளாக பார்க்க வேண்டியுள்ளது. இதைச் செய்வதற்கு, CFOக்கள் மற்றும் அவர்களின் நிதிக் குழுவினர் தரவுகளையும் முடிவுகளையும் விநியோகிப்பது என்ற நிலையிலிருந்து தகவல்களை விளக்கிக் கூறுவது மற்றும் முடிவெடுத்தல் செயல்பாடுகளில் பங்களிப்பை வழங்குவது என்ற நிலைக்கு மாறுவதன் மூலம் மிகவும் மதிப்புக் கூட்டப்பட்ட சேவைகளை வழங்க வேண்டியுள்ளது," என சக CFOக்களுக்கு அறிவுறுத்தினார்.
2012 லிருந்து, IMA ஆனது CFO மற்றும் நிதிச் செயல்பாட்டின் மாறிவரும் பங்கு பற்றிப் பறைசாற்றுவதாக உள்ளது. இந்த கார்ப்பரேட் வருகைகள் மற்றும் வட்டமேசை விவாதங்களின் வாயிலாக, நிதி மற்றும் கணக்கியல் செயல்பாட்டின் மூலம் தற்பொழுது வணிகப் பகுப்பாய்வை ஒருங்கிணைக்க வேண்டியுள்ள மேலாண்மைக் கணக்காளர்களுக்கான மறுகருவியாக்கல் மற்றும் தொடர்ச்சியான கற்றலின் மதிப்பை IMA வலியுறுத்துகிறது.
IMA® (மேலாண்மைக் கணக்கியல் நிறுவனம்) பற்றி
வணிகத்தில் கணக்காளர்கள் மற்றும் நிதி வல்லுநர்களின் சங்கமாகிய IMA, மேலாண்மைக் கணக்கியல் தொழிலை மேம்படுத்துவதில் பிரத்தியேகமாக கவனம் செலுத்துகின்ற மிகப் பெரிய மற்றும் மிகவும் மதிப்புமிக்க சங்கங்களில் ஒன்று ஆகும். உலகளவில், ஆராய்ச்சி, CMA® (சான்றளிக்கப்பட்ட மேலாண்மைக் கணக்காளர்) பயிற்சி, தொடர்ச்சியான கல்வி, நெட்வொர்க்கிங் மற்றும் உயர்ந்த நன்னெறி வணிக நடைமுறைகளின் ஆதரவு ஆகியவற்றின் வாயிலாக IMA ஆனது தொழிலுக்கு ஆதரவு வழங்குகிறது. IMA ஆனது 140 நாடுகளைச் சேர்ந்த 85,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் மற்றும் 300 தொழில்முறை மற்றும் மாணவர் சங்கங்கள் ஆகியவற்றின் உலகளாவிய பிணைப்பைக் கொண்டுள்ளது. மாண்ட்வேல், N.J., USA நகரை தலைமையிடமாகக் கொண்ட IMA தனது நான்கு உலகளாவிய பிராந்தியங்களாகிய அமெரிக்கா, ஆசியா/பசிபிக், ஐரோப்பா மற்றும் மத்தியக் கிழக்கு/இந்தியா ஆகியவற்றின் வாயிலாக உள்ளூர் சேவைகளை வழங்குகிறது.
IMA பற்றிய கூடுதல் தகவல்களுக்கு, தயவுசெய்து பார்வையிடுங்கள் http://www.imanet.org.
ஊடகத் தொடர்புநபர்:
Janice Sevilla
Communications Specialist
Institute of Management Accountants (IMA)
[email protected]
+91-900-316-2258
Share this article