மும்பை, June 5, 2017 /PRNewswire/ --
இந்தியா முழுவதும் 1500 க்கும் மேற்பட்ட MOM ATM சாதனங்கள் வெற்றிகரமாக நிறுவப்பட்டுள்ளன
MoneyOnMobile, (OTCQX: MOMT), 18 மே 2017 அன்று மும்பையில் நடைபெற்ற எலிட்ஸ் டிஜிட்டல் பேங்கிங் மற்றும் பேமெண்ட்ஸ் கூட்டத்தில் 'இந்த ஆண்டுக்கான மிகச் சிறந்த மொபைல் பேமெண்ட் தீர்வு' என்ற விருதையும், புதுதில்லியில் 26 மே 2017 அன்று நடைபெற்ற பிசினஸ் வேர்ல்டு டிஜிட்டல் இந்தியா மாநாட்டில் 'டிஜிட்டல் பேமெண்ட்களை மிகச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்திய நிறுவனம்' என்ற விருதையும் பெற்றுள்ளது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161026/432722LOGO )
MoneyOnMobile-இன் ரீடெய்ல் நெட்வொர்க் பான் இந்தியாவில் பணம் எடுப்பதற்கான செயலை எளிதாக்குவதற்காக தனது ATM சேவையைத் தொடங்கியுள்ளது மற்றும் 1500 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனைக் கடைகளில் வெற்றிகரமாக ATM சேவையை நிறுவியுள்ளது.
"இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட்களை ஜனநாயகப்படுத்துவதற்கான நமது முயற்சிகள் நமக்கு பெரும் அங்கீகாரத்தைக் கொடுத்துள்ளன என்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருக்கிறது. சமீபத்தில் டிஜிட்டல் பேமண்ட் தொழில்துறையிலிருந்து இரண்டு மதிப்புமிக்க விருதுகளை MOM ATM பெற்றுள்ளது. இந்தப் பெருமையைச் சாத்தியமாக்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகளுக்காக MoneyOnMobile அணியினரை வாழ்த்துவதற்கு இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்," என்றார் துணை நிர்வாக இயக்குநர் Mr Ranjeet Oak.
"இந்த மதிப்புமிக்க நிறுவனங்கள் மூலம் நமது அணிக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பதன் மூலம் நமக்கு பெருமையும் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. எங்கள் விற்பனையாளர்களின் வணிகத்துக்கு உதவக்கூடிய மிகச் சிறந்த தயாரிப்புகளையும் தீர்வுகளையும் அவர்களுக்கு எவ்வாறு வழங்க முடியும் என்பது பற்றி அணியினர் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். இதைப் போன்ற அங்கீகாரம் நமது அணியினர் வெளிப்படுத்தும் சிந்தனை ஆற்றலையும் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்துகிறது மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்காக எப்பொழுதும் கடுமையாக முயற்சிப்பதற்கு அவர்களை ஊக்கப்படுத்துகிறது," என்றார் MoneyOnMobile, Inc. நிறுவனத்தின் தலைவர் மற்றும் CEO, Harold Montgomery.
MoneyOnMobile பற்றி
MoneyOnMobile, Inc. நிறுவனம் தனது இந்தியத் துணை நிறுவனங்கள் வாயிலாக மொபைல் பேமெண்ட் சேவைகளை வழங்குகின்ற உலகளாவிய மொபைல் பேமெண்ட் தொழில்நுட்ப மற்றும் செயலாக்க நிறுவனம் ஆகும். MoneyOnMobile ஆனது இந்திய நுகர்வோர்கள் மொபைல் போனைப் பயன்படுத்தி பொருட்களுக்கும் சேவைகளுக்கும் பணம் செலுத்துவதற்கு அல்லது ஒரு செல்போனிலிருந்து மற்றொன்றுக்கு பணப் பரிமாற்றம் செய்வதற்கு உதவுகிறது. இதை எளிமையான உரைச் செயலாகவோ அல்லது செயலி அல்லது இன்டர்நெட் தளமாகவோ பயன்படுத்த முடியும். இந்தியா முழுவதும் 330,000 க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை இடங்களைக் கொண்டுள்ளது.
விதி மீறாமைக்கான ஒழுங்குமுறை அறிக்கை
இந்த வெளியீடு விற்பனை செய்வதற்கான சலுகையையோ அல்லது எந்த ஒரு நிறுவனத்தின் பத்திரங்களையும் வாங்குவதற்கான சலுகைகளுக்கான பரிந்துரைகளையோ வழங்குவதில்லை. இந்த வெளியீடு அபாயங்களையும் நிச்சயமற்ற தன்மைகளையும் உள்ளடக்கியுள்ள நமது தற்போதைய எதிர்பார்ப்புகள், கணிப்புகள் மற்றும் அனுமானங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலமைந்த குறிப்பிட்ட சில முன்னோக்கு அறிக்கைகளையும் கொண்டுள்ளது. இந்த வெளியீட்டில் உள்ள முன்னோக்கு அறிக்கைகள் இன்றைய தேதி வரை எங்களுக்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையிலமைந்தவை ஆகும். நமது வணிகம் தொடர்பான அபாயங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளின் காரணமாக நமது உண்மையான முடிவுகள் அத்தகைய முன்னோக்கு அறிக்கைகளில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தெரிவிக்கப்பட்டவைகளிலிருந்து வேறுபடக்கூடும், இதில் ஆகஸ்டு 19, 2016 அன்று தாக்கல் செய்யப்பட்ட நமது படிவம் 10-K யில் தெரிவிக்கப்பட்டுள்ள அபாயக் காரணிகளும் உள்ளடங்கும். முன்னோக்கு அறிக்கைகள் எதிர்காலம் தொடர்பான நமது எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், நோக்கங்கள் அல்லது உத்திகளை உள்ளடக்கியதாக இருக்கும் மற்றும் அவற்றை "எதிர்பார்க்கிறோம்," "நம்புகிறோம்," "வேண்டும்," "மதிப்பிடுகிறோம்," "தவிர," "கருதுகிறோம்," "அநேகமாக," "கட்டாயமாக," மற்றும் "இருக்கலாம்" அல்லது அதுபோன்ற இதர வார்த்தைகளைக் கொண்டு நாம் கண்டறிய முடியும். புதிய தகவல்கள், எதிர்காலச் சம்பவங்கள் அல்லது மற்ற விஷயங்களின் விளைவாக இந்தச் செய்தி வெளியீட்டில் இடம் பெற்றுள்ள தகவல்களைப் புதுப்பிப்பதற்கான எந்தக் கடமைப்பொறுப்பையும் நாங்கள் ஏற்கவில்லை.
நிறுவனத் தகவல்தொடர்புகளுக்கு தொடர்புகொள்ளவும்:
Navaz Damania
Vice President - Corporate Communications
61, MoneyOnMobile House
Ramchandra Lane, Malad West
Mumbai - 400064
Tel: +91-22-45021541
இணையதளம்: http://MoneyOnMobile.in
Twitter: https://twitter.com/MoneyOnMobile
Facebook: https://www.facebook.com/MoneyOnMobile
LinkedIn: https://www.linkedin.com/company/MoneyOnMobile
YouTube: https://www.youtube.com/channel/UCxqO4N1z9acnQmEysjqfBaQ
Share this article