Jindal மாணவர்கள் Oxford, Harvard மற்றும் Columbia பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு படிப்பை தொடர இருக்கிறார்கள்
சோனிபட், இந்தியா, June 5, 2017 /PRNewswire/ --
- சர்வதேச ஒருங்கிணைப்புகள் இந்திய மாணவர்களுக்கான உலகளாவிய வாய்ப்புக்களுக்கு வழிவகுத்துள்ளன
- வெளிநாட்டில் படிக்கும் பல்கலைக்கழக நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 120க்கும் மேற்பட்ட மாணவர்கள் உலகம் முழுவதிலும் பிரயாணம் மேற்கொள்வார்கள்
வெளிநாட்டில் செலவிடப்படும் படிப்புக் காலம் மாணவர்களின் வாழ்க்கையை கல்வி மற்றும் தொழில் களங்களில் மட்டும் மேம்படுத்தாமல், மொழி, வேற்று கலாச்சாரம் மற்றும் சுய விழிப்புணர்வு திறன்களையும் மேம்படுத்த உதவும். இந்த அனுபவங்கள் மாணவர்கள் உலகளாவிய வெளிப்பாட்டை கணிசமாக பெற்று பணிமயர்த்துகிறவர்களால் அதிகமாக மதிப்பிடப்படும் முக்கிய உயர்தர நிபுணத்துவத்தை வலிமைப்படுத்தவும் உதவிசெய்யும்.
உலகளாவிய வாய்ப்புக்களை தன் மாணவர்களுக்காக விளம்பரப்படுத்துவதில் முன்னோடியாக முயற்சி செய்வது O.P. Jindal Global University, இதன் பட்டதாரிகள் முன்னணி உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விநிறுவனங்களில் வெளிநாட்டில் கற்கும் நிகழ்ச்சிகளை படித்தார்கள் மற்றும் தொடர்ந்து படித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, 120க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் இந்த கோடை காலத்திலே உலகம் எங்கிலும் உள்ள சில முன்னணி கல்விநிறுவனங்களில் கல்வி பயில்வார்கள்.
Harvard T. H. Chan School of Public Health இல் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் வளர்ச்சியில் மனித உரிமைகள் நிகழ்ச்சியில் மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சி என்னும் கருத்தியலில் முன்பதிவுசெய்துள்ளனர் , மேலும் 30 மாணவர்கள் Somerville College, Oxford இல் சர்வதேச சட்டம் மற்றும் உலகளாவிய ஆளுமையை படிப்பார்க, 15 மாணவர்கள் Columbia University இல் வர்த்தகம் மற்றும் கார்ப்பரேட் சட்டங்களை படிக்க முன்பதிவுசெய்துள்ளனர்.
மேலும் 17 மாணவர்களை கொண்ட குழுவானது பதினோரு முதன்மையான கிழக்கு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களுக்கு கல்விச் சுற்றுலா செல்வதற்காக ஐரோப்பாவிற்கு செல்வார்கள் மற்றும் இன்னும் சிலர் ITAM, மெக்சிகோவில் உள்ள Law Schools Global League மற்றும் China University of Political Scienceஇல் கல்விபயில்வார்கள் . மொழி பயிற்சியை தொடர்வதற்காகவும் மாணவர்கள் University of Granda மற்றும் Instituto Superior de Derecho Economia, மேட்ரிடில் முன்பதிவுசெய்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் உள்ள வெளிநாட்டில் படிக்கும் மற்றும் பரிமாற்ற நிகழ்ச்சிகள் குறித்த தரிசனத்தை விவரிக்கும், JGU நிறுவனர் துணை வேந்தர், பேராசிரியர் (டாக்டர்.) C. Raj Kumar இவ்வாறு கூறினார், "உலகத்தின் குடிமக்களை உருவாக்குவதில் நாங்கள் அர்ப்பணிப்போடு இருக்கிறோம் மற்றும் எங்கள் மாணவர்களுக்கான உலகளாவிய வாய்ப்புக்களை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். எங்கள் பரிமாற்ற நிகழ்ச்சிகள் எங்கள் மாணவர்களை பல கலாச்சார மற்றும் வளமூட்டும் சூழ்நிலைகளுக்கு அறிமுகம் செய்வது மட்டுமல்லாமல் உலகமயமாக்கபப்ட்ட சந்தைவெளியில் அவர்களுக்கு தேவையான தகுதிகளையும் திறமைகளையும் அளிக்கவும் இலக்குவைத்துள்ளது."
"ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டும் பல்வேறு களங்களாகிய சட்டம், தொழில், உலக ஆளுமை உள்ளிட்டற்றை கற்பிப்பதாகவும் இருக்கிறது; உதாரணமாக, University of Oxford இல் இருக்கும் நிகழ்ச்சி Somerville College, Oxford உடன் ஒருங்கிணைந்துள்ளது மற்றும் மூன்று வாரங்களுக்கு 'சர்வதேச சட்டம் மற்றும் உலகளாவிய ஆளுமை' தொடர்பானதாக இருக்கிறது, மாணவர்கள் உலகின் சிறந்த சட்ட பேராசிரியர்களின் கீழ் பயில்வார்கள் மற்றும் Oxford உடைய தனித்துவமான கல்வி கற்றுத்தரும் அமைப்பை அனுபவிப்பார்கள். அதே போல, Harvard University இல் உள்ள நிகழ்ச்சி மூன்று வார கல்லூரியினுள் நடைபெறும் நிகழ்ச்சி, இதன் தலைப்பு 'மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சி' இது Harvard T. H. Chan School of Public Health உடன் ஒருங்கிணைந்து இதை நடத்துகிறது, இவை எங்களுடைய பல்வேறு பரிமாற்ற நிகழ்ச்சிகளில் சில ஆகும்," என்றார் Aditya Swarup, துணை பேராசிரியர் மற்றும் துணை டீன் (சர்வதேச ஒருங்கிணைப்புகள்) Jindal Global Law School.
இந்த நிகழ்ச்சிகளில் மூழுகுதல் பிரையாணங்கள் உள்ளடங்கும், இது மாணவர்கள் நடைமுறை, தொழிலுக்கான முதல் முறை அனுபவங்கள் மற்றும் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கான மொழி குறித்த பிரயாணங்கள் ஆகியவற்றை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளனர். The Jindal Global Business School ஆனது Naveen Jindal School of Management, University of Dallas, டெக்சசிலும் ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளது.
Shubham Dayma, 1ஆம் ஆண்டு B.A. LLB மாணவர், Oxford இல் கோடை கல்லூரிக்காக தயாராகும் இவர் இவ்வாறு கூறினார், "நான் Oxfordஇல் உள்ள ஆசிரியருடன் இணைந்து செயலாற்றவும் சவதேச சட்டம் குறித்த என் கருத்துக்களை விவாதிக்கவும் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன், Oxford Unionஇல் பங்கேற்பதும் என் பட்டியலில் முதன்மையாக இருக்கிறது."
இதன் தொடக்கத்தில் இருந்து, O.P. Jindal Global University உலகெங்கிலும் 45 நாடுகளிலுள்ள 175க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்விநிறுவனங்களுடன் கூட்டுறவை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டுறவு முயற்சிகள் 10 வித்தியாசமான பங்காளர்த்துவங்களை செயல்படுத்த உதவியுள்ளது: ஆசிரியர் பரிமாற்ற நிகழ்ச்சிகள், மாணவர் பரிமாற்ற நிகழ்ச்சிகள், கூட்டு போதனை, கூட்டு ஆராய்ச்சி, கூட்டு மாநாடுகள், கூட்டு வெளியீடுகள், இரட்டை பட்டப்படிப்பு நிகழ்ச்சிகள், கூட்டு செயல்பாட்டு கல்வி நிகழ்ச்சிகள், கோடை மற்றும் குளிர்கால கல்லூரிகள் மற்றும் வெளிநாட்டில் பயிலும் நிகழ்ச்சிகள்.
JGU மாணவர்கள் Brooklyn Law School, Bond University, East China University of Political Sciences and Law, ESADE Law School, SGV Sao Paolo, National Taiwan University, Queens Mary University, லண்டன், Singapore Management University, Stockholm University, Tel Aviv University, Tilburg University, University of California, Temple University, Cornell Law School and Trinity College, Dublin உள்ளிட்ட பல முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வெளிநாட்டில் படிக்கும் நிகழ்ச்சிகளுக்கும் சென்றுள்ளனர்.
பரிமாற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மாணவர்கள் ஒரு செமஸ்டரை வெளிநாட்டிலுள்ள கூட்டணி பல்கலைக்கழகத்தில் செலவிட்டு நடத்துகின்ற பல்கலைக்கழகத்திலே கிரெடிட்களை சம்பாதிக்கின்றன, இது JGUவில் உள்ள கல்வி தேவைகளை நிறைவேற்றுகின்றது. இந்த நிகழ்ச்சி பரஸ்பர இயல்பை உடையது மற்றும் JGU கூட்டணி பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்களை ஏற்றுக்கொள்கிறது. இந்த நிகழ்ச்சி வருமானரீதியாக - நடுநிலையான கட்டணம் உடையது, அதனால், மாணவர்கள் தங்கள் தாயகத்தில் செலுத்தும் கட்டணத்தையே தொடர்ந்து செலுத்துகிறார்கள், அதேசமயம் பல மாணவர்கள் கூட்டணி கல்விநிறுவனங்களில் ஊக்கத்தொகையையும் பெறுகிறார்கள்.
வெளிநாட்டில் பயிலும் நிகழ்ச்சிகள் பணியமர்த்துகிறவர்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களிடமும் உயர்ந்த மதிப்பைப் பெற்றுள்ளன, ஏனெனில் அவை உலகளாவிய தரநிலைகள் மற்றும் சர்வதேச தோற்றத்துக்கான அறிவு பெற்ற மாணவர்களுக்கே முன்னுரிமை அளிக்கின்றனர் என்று அறியப்பட்டுள்ளனர்.
O.P. Jindal Global University (JGU) குறித்து
JGU என்பது ஒரு அதிக ஆராய்ச்சி நடைபெறும் பல்கலைக்கழகம், இதன் ஆறு கல்லூரிகளில் பல்வேறு ஆராய்ச்சி மையங்களின் வடிவத்தில் ஆராய்ச்சி தொகுப்புகள் இருக்கின்றன மற்றும் தற்போது 42 நாடுகளில் 150 முன்னணி பல்கலைக்கழகங்களுடன் சர்வதேச கூட்டணியை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் செய்து வருகின்றது. குறுகிய ஆறு ஆண்டு காலத்தில், ஹரியானா மாநிலத்தில் National Assessment and Accreditation Council (NAAC) இடம் இருந்து உயர்ந்த தரநிலையான "ஏ" பெற்ற என்னும் தனிச்சிறப்பை முதல் தனியார் பல்கலைக்கழகம் JGU.
மேலும் தகவல்களுக்கு வருகைதாருங்கள்: http://www.jgu.edu.in/
ஊடக தொடர்பு:
Kakul Rizvi
கூடுதல் மேலாளர்
தகவல்தொடர்பு மற்றும் பொது விவகாரம்
O.P. Jindal Global University
+91-8396907273
[email protected]
Share this article