மும்பை, May 12, 2017 /PRNewswire/ --
மருந்து தொடர்பான பல வெற்றிகரமான மாநாடுகளை நடத்தும் UBM India-வின் பிரிவான CPhI Conferences, மும்பையில் தி சஹாரா ஸ்டாரில் ஜூன் 2017ல், 1 மற்றும் 2ஆம் தேதியன்று 6வது ஆண்டு Innopack Pharma Confex-ஐ நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. ஒரே இடத்தில் ஒன்றுகூடி, நெட்வொர்க்கை ஏற்படுத்தி, யோசனைகளையும் அறிவையும் பரிமாறி, ஒருங்கிணைந்து, ஃபார்மா பேக்கேஜிங் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்க மருந்து பேக்கேஜிங் (packaging) துறையைச் சேர்ந்தவர்களுக்கு இந்த கான்ஃபெக்ஸ் மிகப் பெரிய மேடையாக இருக்கும்.
(Logo: http://mma.prnewswire.com/media/510763/Innopack_2017_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
இந்த ஆண்டு, இந்திய அரசாங்கத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் வர்த்தகத் துறைச் செயலர் Ms. Rita A. Teaotia இந்த கான்ஃபெக்ஸை துவங்கிவைத்து, இந்திய மருந்து துறையின் வளர்ச்சிப் பற்றிய தனது கருத்தைப் பகிர்ந்து கொள்வார். Dr. K Bangarurajan, துணை மருந்து கட்டுப்பாட்டாளர் (இந்தியா), Central Drugs Standard Control Organization (CDSCO); Dr. N.C.Saha, இயக்குநர் முதன்மை செயல் அலுவலர், Indian Institute of Packaging மற்றும் Mr. Chakravarthi AVPS, நிர்வாக இயக்குநர், Ecobliss India Pvt. Ltd ஆகியோர் இந்த இரண்டு நாள் மாநாட்டின் முக்கிய குறிப்பு அமர்வுகளை வழங்குவார்கள். இந்த மாநாட்டில் மருந்து பேக்கேஜிங்கின் வளர்ச்சி, கட்டுப்பாடுகள் மற்றும் எதிர்காலம் பற்றி விரிவாகக் கலந்துரையாடப்படும்.
இந்த கான்ஃபெக்ஸில் பேக்கேஜிங் க்ளினிக் அண்டு ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டின் (PCRI) இயக்குநர் பேராசிரியர் B K Karna, Dr. Reddy's Laboratories Ltd; பேக்கேஜிங் டெவலப்மென்ட் இயக்குநர் Ms. Neelam Lalwani, ஆரோபிந்தோ ஃபார்மாவின் பேக்கேஜிங் டெவலப்மென்ட் தலைவர் (GM) Mr. Prasad Satam, மைலன் துணைத் தலைவர் Mr. Prabir Das, டாக்டர் ரெட்டி'ஸ் லெபாரட்டரீஸின் பேக்கேஜிங் டெவலப்மென்ட் இயக்குநர் Mr. Barun Dey, Dr Reddy's Laboratories; இந்திய வணிக துணைத் தலைவர் Mr. Manish Bajaj, Alembic Pharmaceutical Limited; பேக்கேஜிங் டெவலப்மென்ட் பிரிவின் மூத்த மேலாளர் செல்வி. Ms. Anahita Karande, Unichem Laboratories Limited, பேக்கேஜிங் டெவலப்மென்ட் தலைவர் Mr. Pradeep Dhargalkar, போன்ற சிறந்த பேச்சாளர்களும், மேலும் பலரும் மருந்து துறையில் பேக்கேஜிங்கின் பல்வேறு அம்சங்கள் பற்றிய தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.
InnoPack Pharma ஏற்கனவே தன்னைப் புதுமையான மருந்து பேக்கேஜிங்கிற்கான தரமான மேடையாக நிலைநிறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு இரண்டு நாட்கள் நடைபெற்ற 5வது மாநாட்டில் நாடு முழுவதிலுமிருந்து 650க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டைத் தொடர்ந்து, Accupack-ஐ டைட்டில் பார்ட்னராகக் கொண்டு இரண்டாவது முறையாக The India Packaging Awards வழங்கப்பட உள்ளன. இந்த விருதுகள் பேக்கேஜிங் துறையில் சிறந்து விளங்குபவர்களையும், புதுமையைக் கையாள்பவர்களையும் அங்கீகரித்து, பேக்கேஜிங்கில் புதிய சிறப்பம்சங்களைச் சேர்த்த சிந்தனையாளர்களையும் படைப்பாளர்களையும் கெளரவிக்க உள்ளது.
இந்த மாலை வேளையில் இந்தத் துறையின் சாதனையாளர்கள் அனைவரையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். இதில் விருதுகள் மற்றும் பாராட்டு விழாவுடன் காட்சியளிப்புகள், பிரத்யேக ப்ராடக்ட் அறிமுகங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஆகியவையும் நடைபெறும்.
The India Packaging Awards, பின்வரும் பிரிவுகளில் விருதுகளை வழங்குகிறது. இவற்றிற்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது:
6வது ஆண்டு InnoPack Pharma Confex குறித்த அறிவிப்பு பற்றி பேசும்போது, UBM India-வின் Mr. Yogesh Mudras கூறியதாவது: "மருந்து பேக்கேஜிங் என்பது ஒரு வெற்றிகரமான துறை. இது மருந்து தயாரிப்பு துறைகளின் வெற்றிக்கு பங்களிக்கிறது. InnoPack Pharma Confex பேக்கேஜிங்கின் சிறப்பம்சங்களை வலியுறுத்த உதவும். இது மருந்தை பேக் செய்வது தொடர்பாக புதுமையான முயற்சிகள் மூலம் நிலைத்திருத்தல் போன்ற தொழிற்சாலையின் சிறந்த நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தும். இந்தத் துறையில் பயன்படுத்தப்படாத சந்தைகளுக்குள் நுழைவதை இந்த மாநாடு ஊக்குவிக்கும்."
மேலும் அவர், "UBM India இரண்டாவது India Packaging Awards-ஐ வழங்குவதிலும் மிகவும் பெருமையடைகிறது. இது பேக்கேஜிங் துறையில் சிறந்து விளங்குபவர்களையும், புதுமையைக் கையாள்பவர்களையும் அங்கீகரிக்கும், ஊக்குவிக்கும், பாராட்டும். மேலும், சர்வதேச அளவிலான வாடிக்கையாளர்களுக்கு பேக்கேஜிங்கில் உள்ள வெற்றிவாய்ப்புகளை வெளிப்படுத்தி, உலகளவில் அதற்கானத் தேவையை உணர்த்தும்."
UBM India பற்றி:
UBM India, இந்தியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது உலகம் முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களையும் விற்பனையாளர்களையும் பல கண்காட்சிகள், மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் மூலம் இணைப்பதற்கான மேடைகளை வழங்குகிறது. UBM India ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதிலும் பெரிய அளவில் 25 கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகிறது. இதனால் பல துறைகளின் வணிகத்திற்கு வழிவகுக்கிறது. UBM Asia கம்பெனியின் UBM India மும்பை, புது டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM Asia-வின் உரிமையாளர் UBM plc ஆகும். இது லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளது. UBM Asia என்பது ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளராகும். இது மெய்ன்லேண்ட் சீனா, இந்தியா மற்றும் மலேசியாவில் உள்ள மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளராகும். மேலும் விவரங்களுக்கு, ubmindia.inஐ பாருங்கள்.
UBM plc பற்றி:
UBM plc என்பது உலகிலேயே மிகப் பெரிய பிரத்யேக B2B நிகழ்ச்சி ஏற்பாட்டாளராகும். வளர்ந்துவரும் டிஜிட்டல் உலகில், மனிதர்கள் ஒரு காரணத்திற்காகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது மிகவும் அவசியம். UBM-ல் எங்களின் ஆழமான அறிவும், நாங்கள் செயல்படும் இந்தத் துறையில் எங்களுக்கு உள்ள ஆர்வமும் மக்கள் வெற்றிப் பெறுவதற்கான சிறந்த அனுபவங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது. எங்களின் நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளைக் கட்டமைத்து, வணிகம் செய்து, தங்கள் தொழிலை வளர்ச்சியடைய செய்கின்றனர். எங்களின் 3,750+ உறுப்பினர்கள் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளனர், இவர்கள் 50க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் செயல்படுகின்றனர். இதில் ஃபேஷன் முதல் மருந்து தயாரிப்பு உட்பொருட்கள் வரை அனைத்தும் அடங்கியிருக்கும். இந்த உலகளாவிய நெட்வொர்க் திறமிக்க, ஆர்வமுள்ளவர்களை ஒருங்கிணைத்து, வியாபாரிகள் தங்கள் இலங்குகளை அடைய அற்புதமான வாய்ப்புக்களை அளிக்கும் நிகழ்ச்சிகளை வழங்குகிறது.
ஊடகத் தொடர்பு:
UBM India
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
Share this article