மும்பை, May 5, 2017 /PRNewswire/ --
100-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தொழில்துறைக் கூட்டம்
UBM India நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற மூன்று நாள் (மே 4 - 6, 2017) வர்த்தகக் கண்காட்சியாகிய இந்திய கான்கிரீட் கண்காட்சி 2017, மும்பையில் உள்ள பாம்பே மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சி West, Indian Concrete Institute நிறுவனத்தின் துணைத்தலைவர் Mr. Samir Surleker என்பவரால் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாட்சிமை பொருந்திய தொழில்துறை வல்லுநர்களுடன், Indian Construction Equipment Manufacturers' Association (ICEMA) உறுப்பினரும் Schwing Stetter India Pvt Ltd நிறுவனத்தின் மண்டல மேலாளருமாகிய Mr. Harshad Patel, UBM Asia நிறுவனத்தின் நிர்வாக துணைத் தலைவர் Mr. Michael Duck, UBM India நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Mr. Yogesh Mudras மற்றும் UBM India குழும இயக்குநர் Mr. Abhijit Mukherjee ஆகிய முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொண்டர்.
(Photo: http://mma.prnewswire.com/media/507959/Concrete_Show_India_2017_Inaugural_Ceremony.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/507958/Concrete_Show_India_2017_Lamp_Lighting_Ceremony.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/492740/UBM_Concrete_Show_India_logo_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
இந்திய கான்கிரீட் கண்காட்சியில் சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள், வீடமைப்பு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின்சாரம், இரயில், அணைகள் மற்றும் பாலங்கள் ஆகியவை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் இடம் பெற்றிருக்கிறது. இந்தக் கண்காட்சி கான்கிரீட் மற்றும் கட்டுமானம், கட்டுமானக் கருவிகள், கட்டுமான இரசாயனங்கள் மற்றும் வர்த்தக மற்றும் தொழில்துறைத் தளம் அமைத்தல் ஆகியவை உட்பட, தொழில்துறையிலிருந்து 100-க்கும் மேற்பட்ட இந்திய மற்றும் சர்வதேச அளிப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது. இந்த ஆண்டு, இந்தக் கண்காட்சியில் Smart BuildTech என்ற புத்தம் புதிய பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது, இதில் ஆட்டோமேஷன், மென்பொருள் மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைப்புகள், மற்றும் கட்டுமானக் கருவிகள் மற்றும் உபகரணங்களின் புதிய கண்டுபிடிப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.
இந்திய கான்கிரீட் கண்காட்சியின் 5வது பதிப்பின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய UBM India நிறுவன மோலான்மை இயக்குநர், Mr. Yogesh Mudras கூறியதாவது, "இந்தியா போன்ற பெரிய நாட்டுக்கு, உள்கட்டமைப்பில் முன்னேற்றம் அவசியமானதாகும். அரசாங்கத்தின் சிறப்பான ஆதரவுடனும், மற்றும் சாதனையாக 2017ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் ரூ. 3.96 இலட்சம் கோடி ஒதுக்கீடு ஆகியவற்றின் உதவியுடனும், இந்தத் துறை 2017-18 ஆம் ஆண்டில் மாபெரும் சாதகமான மாற்றத்தைக் காணவிருக்கிறது. இந்தத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேற்கொண்டு முன்னோக்கிச் செலுத்துவதற்கு உள்கட்டமைப்பில் உள்ள முட்டுக்கட்டைகளை அகற்றுவதையும், வளங்கள் நிலையாக தொடர்ந்து கிடைப்பதை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட எண்ணற்ற கொள்கைகள் மத்திய அரசால் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. 100 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், அளவுக்கு அதிகமான வியப்புக்குரிய தயாரிப்புகளின் காட்சிப்படுத்தல், முக்கிய சங்கங்களிடமிருந்து ஆதரவு மற்றும் அறிவுப் பகிர்வு ஆகியவற்றின் மூலம் இந்திய கான்கிரீட் கண்காட்சி தொழில்துறை வல்லுநர்களுக்கு தொடர்புகளை ஒன்றுதிரட்டுவதற்கும், தொழில்துறைப் போக்குகள், சவால்கள் மற்றும் சந்தை பற்றிய உள்ளார்ந்த பார்வை ஆகியவற்றைப் பற்றி விவாதிப்பதற்கும் நிகரற்ற வர்த்தக வாய்ப்புகளை வழங்கும் இடமாக விளங்குகிறது. UBM India வின் 5வது பதிப்பில் நாங்கள் பெற்றுள்ள தொழில்துறை வரவேற்பு இந்தத் தொழில்துறையின் திறனை மேலும் உறுதிப்படுத்துகிறது."
இந்தக் கண்காட்சியில் Lucid Colloids Ltd.; Bianchi Casseforme India Pvt. Ltd.; Reckli India; Hicrete Decorative Systems Pvt. Ltd; Atlas Copco (India) Ltd.; Concrete Additives & Chemicals Pvt. Ltd.; Skyway RMC Plants Pvt. Ltd.; Godrej Construction; Apollo Infratech Pvt. Ltd.; Ashtech; Shri Ram Panels; Reit Qgreen, MASA Concrete Plants India Ltd.; WAM India Ltd. மற்றும் JK Cement Ltd. போன்ற பிரபலமான நிறுவனங்கள் உட்பட, இதர பல நிறுவனங்களும் கலந்துகொண்டன. இந்தக் கண்காட்சியில் சர்வதேச அளவில் சீனா, ஜெர்மனி, இத்தாலி மற்றும் கொரியக் குடியரசு போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கலந்துகொண்டு அவற்றின் பிராண்டுகளையும் தயாரிப்புகளையும் காட்சிப்படுத்தின.
இந்திய கான்கிரீட் கண்காட்சி 2017 Indian Construction Equipment Manufacturers' Association (ICEMA), Indian Concrete Institute (ICI), Construction Chemicals Manufacturers Association (CCMA), Cement Manufacturers Association (CMA), Consulting Engineers Association of India (CEAI), Construction Industry Development Council (CIDC), Ready Mixed Concrete Manufacturers' Association (RMCMA), Indian Association of Structural Engineers (IAStructE), Indian Institution of Bridge Engineers (IIBE), Logistics Federation of India (ILFI), Indian Society of Structural Engineers (ISSE), Ontario Building Envelope Council (OBEC), Pre Engineered structures Society of India (PSI) போன்றவை உள்ளிட்ட பல்வேறு முக்கிய சங்கங்களின் ஆதரவின் மூலம் தொழில்துறையின் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்திய கான்கிரீட் கண்காட்சி இந்த ஆண்டு தனது தொழில்துறை சகாக்களுக்கிடையே அதிக அளவிலான அறிவுப் பகிர்வை பதிவு செய்துள்ளது. ஒரு-நாள் மாநாட்டில் ஸ்மார்ட் நகரங்கள், நிலைப்புத்தன்மை மற்றும் உறுதியான உள்கட்டமைப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட தொழில்நுட்பக் கருத்தரங்குகள் இடம் பெற்றிருந்தன. இதில் 'ஸ்மார்ட் நகரங்களுக்குத் திட்டமிடுதல்', நேர்த்தியாகவும் நிலைப்புத்தன்மையுடனும் கட்டுதல்', 'கான்கிரீட் உள்கட்டமைப்புக்கான பழுதுபார்த்தல் மற்றும் மறுவாழ்வு', 'ஸ்மார்ட் நகரங்களுக்கான புதிய தலைமுறைப் பொருட்கள்', மற்றும் 'சாலைகள், உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு' ஆகிய தலைப்புகள் இடம் பெற்றிருந்தன.
புகைப்பட வரிசை (இடமிருந்து வலமாக)
புகைப்படம் 1 - துவக்க விழா
Mr. Michael Duck, நிர்வாக துணைத் தலைவர், UBM Asia
Mr. Samir Surleker, துணைத் தலைவர், West, Indian Concrete Institute
Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India
Mr. Harshad Patel , Indian Construction Equipment Manufacturers' Association (ICEMA) உறுப்பினர் மற்றும் Schwing Stetter India Pvt Ltd நிறுவனத்தின் மண்டல மேலாளர்
புகைப்படம் 2 - குத்துவிளக்கேற்றுதல்
Mr. Michael Duck, நிர்வாக துணைத் தலைவர், UBM Asia
Mr. Samir Surleker, துணைத் தலைவர், West, Indian Concrete Institute
Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India
இந்திய கான்கிரீட் கண்காட்சி 2017-இன் தொழில்துறை எதிர்விளைவுகள் மற்றும் புதிய அறிமுகங்கள்:
Godrej Construction, Mr. Abhijeet N. Gawde, தலைவர் - வணிக வளர்ச்சி
"இந்தியாவில் உள்ள நகரங்கள் வளர்ந்து வருகின்றன, நகரமயமாதல் இப்பொழுது வேகமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. நகரங்கள் புதிய கட்டமைப்புக்கு இடமளிக்க வேண்டியுள்ளது, மற்றும் இந்தத் தேவைகளை குறுகிய காலத்தில் முடிக்க வேண்டியுள்ளது. கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றுக்கான புதிய கட்டமைப்புகள் நீண்ட காலம் நிலைத்திருப்பதாகவும், நீடித்து உழைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். மேலும் அவை காலத்தால் மட்டும் நீடித்திருப்பதாக அல்லாமல், நீண்டகாலப் பயன்பட்டையும் கொண்டிருக்க வேண்டும். நீடித்து உழைக்கக்கூடிய மற்றும் நிலைப்புத்தன்மையுடைய கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்துவது அடுத்த பத்தாண்டுகளுக்கு முன்னேறிச் செல்வதற்கு முக்கியமானதாக இருக்கும். இந்திய கான்கிரீட் கண்காட்சி, கட்டுமானப் பொருட்கள் பிரிவில் மேம்பாட்டைக் காட்சிப்படுத்துவதற்கான சிறந்த மேடையை வழங்குகிறது. மேலும், அரசாங்கம் உலகம் முழுவதும் இருந்து நீடித்துழைக்கும் ஆக்கப்பொருட்களையும் புதிய கட்டுமானத் தொழில்நுட்பங்களையும் முன்கூட்டியே புகுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும், இது வணிகத்துக்கு மதிப்புச் சேர்ப்பதோடு மொத்தத்தில் இந்திய கட்டுமானத் துறையில் உள்ள புதிய பரிமாணங்களை ஒன்றிணைக்கும். பல ஆண்டுகளாக முதலீடுகள் திரும்ப்ப் பெறப்பட்டதால் அது இந்தியாவின் உள்கட்டமைப்புத் தேவைகளில் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது. இது சமீப வருடங்களில் வீட்டுவசதிக்கான தேவை மற்றும் இதர நகர்ப்புறத் தேவைகளில் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது. உள்கட்டமைப்பு வளர்ச்சிகளை விரைவுபடுத்துவதற்கு ஒரு பெரும் சவாலாக இருக்கின்ற நிலம் வாங்குதல் செயலைத் தவிர, வெளிப்படைத்தன்மை போன்ற பிரச்சனைகளும் தீர்க்கப்பட வேண்டும்."
SKYWAY RMC Plants Pvt. Ltd, Mr. Arvvind Dubeyy, தலைமைச் செயல்பாட்டு அதிகாரி
"விவசாயத் துறைக்குப் பின்னர், இந்தியாவில் கட்டுமானத் துறை இரண்டாவது மிகப்பெரிய தொழில் வாய்ப்பு வழங்குநராகவும், பொருளாதார நடவடிக்கைக்குப் பங்களிப்பாளராகவும் கருதப்படுகிறது. மேலும், கட்டுமானத் துறையானது சேவைத் துறைக்கு அடுத்தபடியாக அதிகமான அந்நிய நேரடி முதலீட்டை (FDI) ஈர்த்துள்ளது, மற்றும் நாடு முழுவதும் 35 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது. இந்தியாவில் கட்டுமான நடவடிக்கைகளுக்கான தேவையில் 50% உள்கட்டமைப்புத் துறையிலிருந்து வருகின்றது, அதே நேரம் எஞ்சியவை தொழில்துறை நடவடிக்கைகள், குடியிருப்பு மற்றும் வர்த்தக மேம்பாடு ஆகியவற்றிலிருந்து வருகின்றன. கான்கிரீட் கண்காட்சி 2017இல், கட்டுமானதாரர்கள், கட்டிடக் கலைஞர்கள், கொள்முதல் தலைவர்கள் மற்றும் தொழில்துறையைச் சார்ந்த இதர சம்பந்தப்பட்ட பார்வையாளர்கள் பெருமளவில் வருகை தருவார்கள், இது கண்காட்சியாளர்கள் தங்களது நிபுணத்துவத்தைக் காட்சிப்படுத்துவதற்கு மேற்கொண்டு கூடுதலான வாய்ப்புகளை வழங்கும். நிலம் கையகப்படுத்தலில் உள்ள பிரச்சனைகள், சுற்றுச்சூழல் தடையின்மை பெறுதல், ஒருங்கிணைப்பு இல்லாமை, திட்டங்களின் பொருத்தமற்ற கட்டமைப்பு, அரசாங்கம் மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே ஆபத்துகள் மற்றும் பரிசுகள் குறித்த எல்லை வரையறை, தனியார் நிறுவனங்களுக்கும் அரசாங்க முகமைகளுக்கும் இடையே முறையான சர்ச்சை தீர்த்தல் அமைப்பு இல்லாமை கட்டுமானத் தொழிலில் உள்ள சில பெரிய சவால்கள் ஆகும். 'SKYCOOL', 'SKYFLOW', 'SKYFILL', 'DURASKY', 'EASYSKY' மற்றும் 'SUPER STRENGTH SKY' போன்ற எங்களது நவீன புதுமையான தயாரிப்புகளை நாங்கள் காட்சிக்கு வைத்துள்ளோம். ஒவ்வொரு வருடமும் பல்வேறு புதுமையான தயாரிப்புகளைச் சேர்ப்பதன் மூலம் நாங்கள் எங்களது இலக்குகளை தொடர்ந்து வேறு நிலைக்கு அமைத்துக்கொண்டிருக்கிறோம்."
REIT QGREEN MACHINES PVT LTD, Mr. SOJI T.P, வணிகக் கூட்டாளர்
"மத்தியில் அமைந்துள்ள, நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் கவனம் செலுத்துகின்ற வலுவான ஆட்சியின் மூலம், இந்தியாவில் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு உபகரணங்கள் தொழில்துறை கிட்டத்தட்ட 5% CAGR உடன் துரித வேகத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது. வளர்ந்துவரும் நாடு என்ற முறையில் இந்தியா உள்கட்டமைப்புத் துறையில் சில வேலைகளைச் செய்ய வேண்டியுள்ளது, துறைமுக இணைப்புத் திட்டங்கள், கண்டெய்னர் முனையங்கள், மெட்ரோ இரயில்கள், புல்லட் இரயில்கள், அதிவேக இரயில் இடைவழிகள், கிழக்கு-மேற்கு மற்றும் வடக்கு-தெற்கை இணைக்கின்ற இணை நெடுஞ்சாலைகளின் வலையமைப்பு போன்ற திட்டங்களை உருவாக்க வேண்டியுள்ளது. மும்பை நாக்பூர் சிறப்பு இணைப்பு நெடுஞ்சாலை என்பது இந்த இலட்சியத் திட்டத்தின் தொடக்கமாக உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள ஒப்பந்ததாரர்கள், கட்டுமானதாரர்கள் மற்றும் கட்டுமானப் பொருட்கள் மற்றும் பிரீகாஸ்ட் தயாரிப்பாளர்கள் கான்கிரீட் பேவர் பிளாக்குகள், துளையில்லாத / துளையுள்ள செங்கற்கள், ஃப்ளை ஆஷ் கற்கள், கெர்ப்ஸ்டோன்கள், ரீடெய்னிங் வால் பிளாக்குகள் போன்றவற்றைத் தயாரிப்பதற்கான தானியங்குத் தொழிற்சாலைகளுக்கான தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எங்களது அரங்கைப் பார்வையிட வர வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதைத் தவிர, இந்திய கான்கிரீட் கண்காட்சி எங்களது தற்போதைய வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், நமது துறையின் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கும் ஒரு சிறந்த களமாக இருக்கும். விலைக் குறைப்பு இருந்த போதிலும் கூட, வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் வட்டி விகிதங்கள் அதிகமாக உள்ளன. அதிக வட்டிச் செலவு என்பது இந்தியாவில் உள்ள பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கிறது. அடுத்த பிரச்சனை என்னவெனில் இந்த நவீனத் தொழிற்சாலைகளை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான திறமை வாய்ந்த நபர்கள் இல்லாதது ஆகும். இந்த வருடம், எங்களது தானியங்கி கான்கிரீட் பிளாக் ஆலையின் மாதிரி, வேலை செய்யும் வீடியோக்கள் மற்றும் இந்தியாவின் முன்னணித் தயாரிப்பாளர்களால் உருவாக்கப்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட தயாரிப்புகள் ஆகியவற்றை எங்களது அரங்கில் நாங்கள் காட்சிப்படுத்தியுள்ளோம்."
DeeTech ToolsLLP, Mr. Gaurang Doongursee, நிர்வாக இயக்குநர்
"நாங்கள் இந்தியாவின் மும்பையில் அமைந்துள்ள தயாரிப்பு நிறுவனம் ஆவோம். நாங்கள் கல் மற்றும் கட்டுமானத் தொழிற்சாலைக்குத் தேவையான நவீன வைரக் கருவிகளைத் தயாரிக்கிறோம். சமீபத்தில் நாங்கள் எங்களது வைரக் கருவிகள் வரிசையில் கட்டுமானத் துறையில் வால் சா, ஃப்ளோர் சா, வயர் சா மற்றும் டிரில்லிங் பயன்பாடுகளுக்கான உலகத் தரம் வாய்ந்த கருவிகளை எமது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற புதிய தயாரிப்பை ProHybrid என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளோம். பிராண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், ஒட்டுமொத்த சந்தையில் வாய்ப்பினைப் பெறுவதும் எங்களது எதிர்பார்ப்பு ஆகும். இறுதிநிலை வாடிக்கையாளருக்கு தரம் மற்றும் பிராண்டு பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு சேர்ப்பது என்பது கட்டுமான வேலைக்கான வைரக் கருவிகளின் இந்தப் புதிய வரிசையில் நாங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. நாங்கள் உயர் தரமுடைய கருவிகள் தயாரிப்பு நிறுவனமாக எங்களைப் பார்க்கிறோம், இது இந்தியாவில் மட்டுமல்லாது மேலே குறிப்பிட்ட தயாரிப்புகளின் ஏற்றுமதியிலும் உறுதிப்படுத்தப்படுகிறது. மேலே தெரிவித்தவாறு, நாங்கள் ProHybrid சீரிஸ் என்ற பெயரில் புதிய வைரக் கருவிகள் வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளோம். எங்களது கோர் டிரில், வயர் சா, ஃப்ளோர் சா மற்றும் வால் சா கருவிகள் அனைத்தும் இறுதிநிலைப் பயனருக்கு சிறந்த சேவையுடன் கூடிய விரைவான கட்டிங் போன்ற பலன்களைக் கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எங்களது ProHybrid சீரிஸ் வைரம் வைத்தல் தொழில்நுட்பம், வெல்டிங் போன்றவற்றில் பல்வேறு புதுமைகளைக் கொண்டுள்ளது, மற்றும் எங்களது கருவிகள் அனைத்தும் மேம்பட்ட ஹாட் ஐசோஸ்டாட்டிக் பிரெஸ்ஸிங் வழி வாயிலாக செயலாக்கப்படுகின்றன.
Elematic India Pvt Ltd., Mr. Shrikant Luktuke, வணிக வளர்ச்சி மேலாளர்
"இந்தியா தன்னுடைய இலட்சியக் குறிக்கோளாகிய அனைவருக்கும் வீடு என்பதை நிறைவேற்ற வேண்டுமென்றால், அதில் புதிய கட்டுமான முறைகள் முக்கியப் பங்கு வகிக்கும். வித்தியாசமான முறையில் சிந்திப்பதற்கான நேரம் வந்துவிட்டது, விரைவான கட்டுமான முறையையும் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. அதே நேரத்தில், புதிய கட்டுமானத் தொழில்நுட்பங்களுக்கு இணையாக நாம் நம்முடைய திறமையையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஸ்மார்ட் நகரங்கள் மற்றும் செங்குத்துக் கட்டுமானம் ஆகிய கருத்துக்களை அறிமுகப்படுத்தியதன் மூலம் கட்டுமானத் தொழில்நுட்பங்கள், கழிவு மேலாண்மை, அறிவார்ந்த கட்டிட மேலாண்மை அமைப்புகள் ஆகிய வேகமான மற்றும் புதுமையான துறைகளில் நிறுவனங்கள் முன்னிலை வகிப்பதன் மூலம் HVAC, MEP ஆகியவை கான்கிரீட் கண்காட்சியில் முக்கியமாக தங்களை முன்னிலைப்படுத்தியுள்ளன. என்னைப் பொறுத்தவரை இது இந்தக் கண்காட்சியின் மிகவும் சாதகமான அம்சம் ஆகும். இது மும்பையில் கட்டுமானதாரர்கள், ஒப்பந்ததாரர்கள், கட்டிடக் கலைஞர்கள் அல்லது கட்டுமான ஆலோசகர்கள் என அனைத்துப் பிரிவையும் சேர்ந்த சாத்தியமுள்ள பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரேயொரு களமாக விளங்குகிறது. இந்த முறையும் கூட, புதிய தொழில்நுட்பங்களையும் மாதிரிகளையும் ஏற்றுக்கொள்ளத் தயாரான மனநிலையுடன் பல பார்வையாளர்கள் வருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்."
UBM India பற்றி
UBM India, கண்காட்சித் தொகுப்புகள், உள்ளடக்கம் நிறைந்த மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றின் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் ஒருங்கிணைக்கும் களங்களை தொழில்துறையினருக்கு வழங்குகின்றது. UBM India ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் சுமார் 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் நடத்துகின்றது; அதன்மூலம் பல தொழில்துறை நிறுவனங்களுக்கிடையேயான வர்த்தகத்துக்கு உதவுகின்றது. UBM Asia நிறுவனமாகிய UBM India வின் அலுவலகங்கள் மும்பை, புதுதில்லி, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. UBM Asia நிறுவனம் லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc நிறுவனத்துக்குச் சொந்தமானது ஆகும். UBM Asia நிறுவனம் ஆசியாவின் முன்னணி கண்காட்சி ஏற்பாட்டாளர் ஆகும், மற்றும் அது சீனா, இந்தியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வர்த்தக ஏற்பாட்டு நிறுவனமாகவும் உள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்வையிடவும் ubmindia.in.
UBM plc பற்றி:
UBM plc ஆனது உலகின் மிகப் பெரிய பியூர்-பிளே B2B நிகழ்ச்சி ஏற்பாட்டு நிறுவனம் ஆகும். பெருகிய டிஜிட்டல் மயமாக்க உலகில், பொருளார்ந்த, மனித நிலைத் தொடர்பின் மதிப்பு ஒருபோதும் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததில்லை. UBM இல், நாங்கள் செயல்படும் தொழில்துறைப் பிரிவுகளின் ஆழ்ந்த அறிவும் மிகுந்த ஆர்வமும் மக்கள் வெற்றிபெறக்கூடிய மதிப்புமிக்க அனுபவங்களை உருவாக்க எங்களுக்கு உதவுகிறது. எங்களது நிகழ்ச்சிகளில் மக்கள் உறவுகளையும், நெருங்கிய வியாபாரங்களையும் உருவாக்கிக் கொண்டு அவர்களது வணிகங்களை வளர்க்கிறார்கள். 20 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த எங்களது 3,750க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஃபேஷன் முதல் மருந்துத் தயாரிப்பு உட்பொருட்கள் வரை, 50 க்கும் மேற்பட்ட வெவ்வேறு துறைகளில் வேலை செய்கிறார்கள். இந்த உலகளாவிய பிணைப்பு, பயிற்சி பெற்ற, ஆர்வமிக்க பணியாளர்கள் மற்றும் சந்தையின் முன்னணி நிகழ்வுகள் ஆகியவை வணிகர்கள் தங்களுடைய குறிக்கோள்களை அடைவதற்கான அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
கூடுதல் தகவல்களுக்கு, பார்வையிடவும் http://www.ubm.com; UBM கார்ப்பரேட் செய்திகளுக்கு, UBM, UBM Plc LinkedIn இல் எங்களை Twitter இல் பின்தொடருங்கள்.
செய்தித் தொடர்பாளர்:
UBM India
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
Share this article