மும்பை, April 25, 2017 /PRNewswire/ --
வசதிகள் மேலாண்மை தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொழில்துறைக்கான இந்தியாவின் முதன்மை வணிக நிகழ்ச்சி மற்றும் மாநாடு
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM India, World of Facilities -இன் (WOF) முதல் பதிப்பை இன்று Bombay Convention & Exhibition Centre (BCEC), கோரேகான், மும்பையில் வெளியிட்டது. ஒரு மூன்று நாள் கண்காட்சியாகிய (24 - 26 ஏப்ரல் 2017), World of Facilities, வசதிகள் மேலாண்மை தயாரிப்புகள் மற்றும் சேவைகள் தொழில்துறைக்கான இந்தியாவின் முதன்மை வணிக நிகழ்ச்சி மற்றும் மாநாடு ஆகும்.
(Photo: http://mma.prnewswire.com/media/493270/UBM_Lamp_Lighting_Ceremony_of_World_of_Facilities_2017.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/490513/WOF_UBM_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
World of Facilities 2017-இன் தொடக்க விழா Mr. Sandeep Sethi, நிர்வாக இயக்குனர் - West Asia, Integrated Facilities Management - JLL India; Mr. Dharminder Salwan, இயக்குனர் Blackrock APAC மற்றும் குழு உறுப்பினர் iNFHRA; Mr. Yogesh Mudras - எம்டி, UBM India மற்றும் Mr. Abhijit Mukherjee - குழு இயக்குனர், UBM India ஆகிய முக்கியப் பிரமுகர்களின் முன்னிலையில், கணிசமான தொழில்துறை சார்ந்த அவையின் மத்தியில் நடைபெற்றது.
கண்காட்சியின் வாயிலாக, வசதிகள் மேலாண்மை விநியோகத் தொழில்துறை அவர்களது புதுமையான தயாரிப்புகளையும் சேவைகளையும் காட்சிக்கு வைத்து, பல்வேறு வகையான பகுதிகளின் ஒவ்வொரு நிலையிலிருக்கும் முக்கிய முடிவு எடுக்கும் அமைப்பாளர்களுடன் இணைந்து தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளத் தக்க வர்த்தகத் தளத்தை UBM India அளித்தது. உலகின் முன்னணி நிலைச் சொத்து நிறுவனமாகிய JLL-ஐஅவர்களுடைய அறிவாண்மைப் பங்குதாரராகக் கொண்டு, இந்த கண்காட்சியில், இத்தொழில்துறையின் பிரமுகர்கள் தொழில் நடைமுறைகள், எதிர்கால சாத்தியக்கூறுகளைப் பற்றிய ஒரு பார்வை, சவால்கள் மற்றும் சந்தை நுண்ணறிவு ஆகியவற்றைப் பற்றி கலந்தாலோசித்த்து ஆழமான தீர்வுகளை வழங்கிய உயர் தரத்திலான மாநாட்டையும் காணமுடிந்தது.
இந்தக் கண்காட்சி, HIKVISION, Zeta, NESTLE, Cannon Hygiene, 3M, Karcher Cleaning, Charnok Cleaning, Uniclean, MCS, Buzil Rossario, Pure Duct Services, SMS, Sierra ODC, Aura Facility Management, Arrow Greentech Ltd, Synconext India Pvt Ltd., MCS Solutions (P) Ltd, Fine Grace மற்றும் HygieneTech,போன்ற மற்றும் பல நிறுவனங்ளிலிருந்து, 100-க்கும் அதிகமான கண்காட்சியாளர்களையும், வசதிகள் மேலாண்மை தொழில்துறையின் இந்தியா மற்றும் உலகளாவிய200-க்கும் அதிகமான பிராண்டுகளையும் ஒன்று சேர்த்தது.
ஸ்மார்ட் தீர்வுகள், பாதுகாப்பு தீர்வுகள், ஏர் கண்டிஷனிங் மற்றும் இயந்திர காற்றோட்டம் முதல் எரிசக்தி மேலாண்மை வரை,சுற்றுச்சூழல் மேலாண்மை, சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை தீர்வுகள், FM மென்பொருள் மற்றும் IT தீர்வுகள், வசதிகள் சேவைகள், பணியிடங்கள், அலுவலக சேவைகள், HR சேவைகள் மற்றும் பல வியப்பூட்டும் புதுமையான எதிர்கால நோக்குடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் வரிசையை WOF காட்சிப்படுத்தியது. குறிப்பாக, இந்த நிகழ்ச்சி Maharashtra Fire Service துறையுடன் பங்குதாரராக இணைந்து - Hospitality Purchase Managers Forum (HPMF), Global Infra-facilities and Project Management Association (GIFPMA), The Infrastructure Facility Human Resource & Realty Association (iNFHRA) and Indian Pest Control Association (IPCA); ஃநாலேட்ஜ் பார்ட்ணர் - Jones Lang LaSalle (JLL India) ஆகிய முக்கிய நிறுவனங்களால் நன்முறையில் ஆதரவளிக்கப்படுகிறது.
இரண்டு நாள் நடந்த மாநாடு கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருக்கும் தனிச்சிறப்பான புதுமையான மதிப்பு முன்மொழிவுகள் வழங்கப்பட்டன. இது இந்தத் தொழில்துறையில் உள்ள முடிவில்லா சாத்தியக்கூறுகளையும், வசதி மேலாளர்கள், நிர்வாக மற்றும் செயல் மேலாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், செலவு மேலாண்மையின் வசதி தொழில்நுட்ப தலைவர்கள், மனிதவள் மேலாண்மை, ஒருங்கிணைந்த வசதி மேலாண்மை, இயந்திரமயமாக்கம், பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் சந்திக்கும் சவால்களிலும் கவனம் செலுத்தியது.
இந்த மாநாட்டில் Mr. Sandeep Sethi, நிர்வாக இயக்குனர் - West Asia, Integrated Facilities Management, JLL; Mr. Subroto Mukherjee, Head Administration & Facilities Management, Cipla Ltd.; Mr. Sandeep Sudan, Head - Centre of Excellence - Global Corporate Security, Reliance Industries Limited; Ms. Ratna Pawan, Global Head of Security Risk, GSCs and Technology; HSBC Operations, Service and Technology - Operations, HSBC Electronic Data Processing India Pvt. Ltd.; Mr. Manish Kachhy, Head Intelligence and Vigilance, Reliance Jio Infocomm Ltd., மற்றும் Ms. Gandhali Samant, Senior Technology Evangelist - Microsoft, போன்ற சில தொழில்துறையின் புகழ்பெற்ற பேச்சாளர்களின் சிறந்தத் தேர்வைப் பெற்றிருந்தது.
நாள் 1-இல், பிரசித்தி பெற்ற தொழில் துறை சிந்தனைத் தலைவர்கள்,'FM-ஐ போர்டுரூமுக்கு கொண்டுவருவது';'பொருட்களின் தரவு, பகுப்பாய்வு மற்றும் இணையம்;''நிலைத்துநிற்கும் தன்மை: மூலோபாய அல்லது தந்திரோபாய அணுகுமுறை?' ஆகியவைப் பற்றிய குழு கலந்தாலோசனைகளையும், மேலும் 'தொழில்நுட்பம் மற்றும் வசதி மேலாளர்களின் மாறிவரும் பங்கும்';'FM தொழில்துறையை பாதிக்கும் போக்குகள்';' தொழில்நுட்பத்தால் செயல்படுத்தப்பட்ட கொள்முதல் மூலம் மதிப்பை உண்டாக்குவது'; ஆற்றல் கொள்முதல்' மற்றும் 'வளர்ந்துவரும் பங்களிப்பு மாதிரிகள்' ஆகியவற்றைப் பற்றிய அறிவாண்மை கூட்டங்களையும் நடத்தினர்.
நாள் 2 க்கான அட்டவணை,'பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கல் - ஒரு தொழில் நுட்ப காலப்பாணியா அல்லது வலுவான வணிக உணர்வா?' 'சுத்தம், சுகாதாரம், கழிவு மேலாண்மை மற்றும் பசுமை தீர்வுகள்'; FM தொழில் நுட்பத்திற்கு திறன்களை ஈர்ப்பது(தொழில்துறை உதாரணங்கள்)'; 'பூச்சி கட்டுப்பாடு: சொத்துகள் மீது பூச்சிகளின் தாக்கம் - ஐபிஎம், எஃப்எம் தொழில்துறை மற்றும் பொது சுகாதாரத்தின் பங்கு' மற்றும் 'புதிய தலைமுறையின் திறமையை நிர்வகிப்பதில் FM-இன்பங்கு'பற்றிய குழு விவாதங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.மேலும், 'எதிர்கால வேலை' பற்றிய அறிவாண்மை அமர்வுகளும் இருக்கும்; 'தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாப்பை உறுதி செய்தல்'; மற்றும் 'இணக்கம் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் மீதானமாறும் சூழ்நிலை',பற்றிய அறிவாண்மை அமர்வுகளும் இருக்கும்.
Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குனர், UBM India, World of Facilities 2017-இன் மிதல் அறிமுகத்தில் பேசும்போது,"பல காரணிகளின் கூட்டு இந்தியாவில் FM சேவைகளுக்கான மிகப்பெரிய சாத்தியக்கூற்றை உருவாக்கியுள்ளது. இதில் ரியல் எஸ்டேட் முன்னேற்றம், சில்லறை வணிகம் மற்றும் விருந்தோம்பல் பிரிவுகளில் வளர்ச்சி, தொழில்நுட்பத்தின் நவீனமயமாக்கல், வாழ்க்கைத் தரத்தில் உயர்வு, மால்கள், மருத்துவமனைகள், விமான நிலையங்கள் மற்றும் பணியிட திறள்களில் உள்ள பரந்த மற்றும் அதிகரித்துக்கொண்டே வரும் மனிதப் போக்குவரத்துகளை சிறந்தமுறையில் மேலாண்மை செய்வதற்கான தேவை ஆகியவையும் அடங்கும். 2020-க்குள் இந்தத் தொழில்துறையின் மதிப்பு தோராயமாக $19.4 பில்லியன் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், எதிர்காலத்திற்காக ஆற்றலையும் வள ஆதாரங்களையும் சேமிக்க உதவும் சுற்றுச்சூழல் நட்பான, பசுமை முயற்சிகளுக்கான போக்கும் வசதி மேலாண்மை சேவைகளுக்கான கூடுதல் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது." என்று கூறினார்.
மேலும் அவர், "புதுப்புனைவாளர்கள் மட்டும் சமூகத்தை ஊக்குவிப்பவர்களாக, World of Facilities-ன் முதல் பதிப்பை இந்தியாவுக்கு வழங்கி, உயர்தரமான, புதுமையான மிகவும் சுற்றுச்சூழல் நட்பான தயாரிப்புகளை காட்சிப்படுத்த இதுவே சரியான தருணம் என்று UBM India கருதியது. World of Facilities இந்த தொழில்துறையின் வளர்ச்சிக்கு இன்னும் ஊக்கமளிக்குமென்றும், அதன் மாநாடுகள் தொழில்துறை தொழில் வல்லுனர்களின் சிந்தனைக்குத்தகுந்த உணவாக அமையுமென்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன்." என்றும் கூறினார்.
Sandeep Sethi, எம்டி - ஒருங்கிணைந்த வசதி மேலாண்மை, JLL West Asia, மேலும் தலைவர், Steering Committee, World of Facilities, கூறியதாவது, "வசதிகள் மேலாண்மை தொழில்துறை $7.5 பில்லியன் அளவு பெரியதாகும். கடந்த மூன்று ஆண்டுகளில் இது 15% வரை வளர்ச்சி அடைந்துள்ளது. 2020 வரை அது இதே அளவிலேயே வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய நல்ல நேரத்தில் World of Facilities -ஐ அறிமுகம் செய்ய JLL அறிவாண்மைப் பங்குதாரராக UBM India-வுடன் இணைந்துள்ளது. இதுவே வசதிகள் மேலாண்மை தொழில்துறைக்கான இந்தியாவின் முதன்மையான மற்றும் மிகவும் ஒருங்கிணைந்த B2B தளமாக அமையப்போகிறது. இந்த நிகழ்ச்சி இரு வடிவங்களைக் கொண்டது - கண்காட்சி மற்றும் மாநாடு. இந்த நிகழ்ச்சி பல்வேறு நிலைகளிலிருந்து ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களுடன், பல உள்நாட்டு மற்றும் சர்வதேச வினியோகஸ்தர்கள், உற்பத்தியாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் சேவை வழங்குனார்கள் ஆகியவர்களுக்கு வாய்ப்பளித்தது. பங்கேற்கும் எல்லா நிறுவனங்களும், வசதிகள் மேலாண்மை தொழில்துறையால் வழங்கப்பட பரந்த கற்றல் மற்றும் சமீபத்திய முயற்சிகளின் காட்சிப்படுத்துதலால் பயனடைவர். JLL-ஐ அறிவாண்மை பங்குதாரராகக் கொண்டு, Maharashtra Fire Services, iNFHRA போன்ற பல்வேறு நிறுவனங்களின் ஆதரவுடன், உலகெங்கிலுமுள்ள, பல தொழில்துறைகளின் பல்வேறு பங்குதாரர்களுக்கு ஈடுபட்டு, இணைந்து ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ள World of Facilities ஒரு தனிச்சிறப்பான தளத்தை அமைத்துக்கொடுக்கப் போகிறது. JLL, UBM-உடன் இணைந்து இந்த சக்திவாய்ந்த நிகழ்ச்சிக்கு ஒரு வசதிகள் மேலாண்மை நிலப்பரப்பை உருவாக்கித் தருவதில் பெருமிதம் கொள்கிறது."
தொழில்துறை பேச்சுகளும் World of Facilities 2017-இல் அறிமுகங்களும்
Prashant Sule - பிராண்ட் இயக்குநர், Cannon Hygiene (India) Pvt. Ltd.
"இந்தியாவில் வசதிகள் மேலாண்மைத் (FM) தொழில்துறை கிட்டத்தட்ட 17% CAGR உடன் தொடர்ந்து வளர்ச்சிகண்டு வருகிறது, மேலும் இது சொத்து மேலாண்மை மற்றும் ரியல் எஸ்டேட் சந்தை வளர்ச்சியால் முதன்மையாக ஊட்டமளிக்கப்பட்டு வருகிறது. சர்வதேச நிறுவனங்கள், பல இடங்களை சென்றடையும் ஒற்றை ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு, செலவினத்தை சீரமைத்து, செயல்முறைகளை தரநிலைப்படுத்தி, ஒரே சீரான தரத்தை வழங்குகிறார்கள். இந்தத் துறையில் பண்படுத்தப்பட்ட பங்கேற்பாளர்கள் தேவை, Cannon Hygiene, ஐக்கிய நாடுகளின் OCS Group-ன் ஒரு மதிப்பிற்குரிய அங்கமாகும், மேலும் இது அந்தக் குழுமத்தின் வளர்ச்சியோடு வளரத் தயாராக உள்ளது. கண்காட்சிக்கான விளம்பரத்தாலான எதிர்பார்ப்பு நன்றாகவே உள்ளது, மேலும் பங்குதாரர்களுக்கு நல்ல வெளிப்படுதலை அளிக்க இது தொழில்துறையின் தரமான பங்கேற்பாளர்களை ஈர்க்கவேண்டும். எங்கள் சுகாதார பிரிவின் வாயிலாக நாங்கள் புதிய தாயாரிப்புகளையும் சேவைகளையும் அறிமுகப்படுத்திக்கொண்டே இருப்போம்."
Karan Thakkar - நிறுவனர் மற்றும் எம்டி, EcoCentric Management Pvt. Ltd.
"வசதிகள் மேலாண்மை கடந்த இரண்டு வருடங்களில் தீவிர வளர்ச்சி கண்டுள்ளது, இனி வரும் ஆண்டுகளிலும் வளர்ச்சி அடைந்துகொண்டே போகும். வசதிகள் மேலாண்மை ஒரு பரந்த தலைப்பாகும், இடத் துறையில் இருக்கும் ஒவ்வொரு பணிக்களமும் தனியே ஒரு தொழில்துறையாகும். இதுவரை, இத்தொழில்துறையில் எல்லா நிறுவனங்களும் சிறந்த பணியாற்றியுள்ளன, மேலும் உத்திகளில் கவனம் செலுத்தினால் ஒட்டுமொத்த செயல்திறனின் எண்ணிக்கை அதிகாரிக்கும். பல இளைய தொழில்முனைவோரும் இந்தக் காலத்தில் இறங்கியுள்ளனர், இப்பிரிவின் வளர்ச்சிக்கு வழி செய்யும்படியாக, அவர்கள் மனிதவளம் மற்றும் பிற செலவினங்களைக் குறைக்கும் புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளனர். இந்தக் கண்காட்சியில் பங்குபெறும் தொழில்துறை வல்லுனர்களின் கண்ணோட்டங்களைத் தெரிந்துகொள்ளவும் நான் ஆர்வமாக இருக்கிறேன். நாங்கள், ஒரு நல்ல வரவேற்பைப் பெற்ற இ-கழிவுகளுக்கான 48-மணிநேர கழுவாகற்றும் திட்டத்தை அறிமுகப்படுத்டியுள்ளோம், இது வசதிகள் தலைவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது, ஏனென்றால் அவசரகாலத்தில் அவர்கள் அச்சமடையாமல், எங்களைத் தொடர்பு கொண்டால் போதும்."
Vivek Mata - நிர்வாக இயக்குநர், Charnock Equipments Pvt. Ltd.
"தற்போது வசதிகள் மேலாண்மை துறை ஒரு வியக்கத்தக்க கதியில் விரிவடைந்து வருகிறது. இந்தியாவில் உள்ள வசதிகள் மேலாண்மைத் துறையில் புதுமைகள் இருந்தாலும், அது வளர்ந்த சந்தைகளாகிய மத்தியகிழக்கு அல்லது ஐரோப்பாவிற்கு இணையாக இல்லை. சர்வதேச அளவிலான முன்னணி நிறுவனங்களுக்கு இந்தியா முதலீட்டுக்கான ஒரு நாற்றாங்கால் ஆகும். இந்தியாவில் உள்ள வசதி மேலாண்மை நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த சேவைகளை வழங்குகின்றன. இதுவே அபரிமிதமான வளர்ச்சி விகிதத்திற்கான ஒரு வலுவான அடிப்படையாக அமைகிறது. நாங்கள் முன்னணி வசத்து மேலாண்மை நிறுவனங்களின் எல்லா பிரதிநிதிகளையும் சந்தித்து, அவர்களுடன் ஒரு நல்ல ஆரோக்கியமான தொழில்முறை உறவை ஏற்படுத்திக்கொண்டு, அதனால் வடிக்கையாளர்களுக்கு ஒரு வெற்றிகரமான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுக்க ஆர்வமாக இருக்கிறோம். Charnock தனது நவீன மைக்ரோ பைபர் சுத்டப்படுத்தும் அமைப்பு வரிசையை அறிமுகப்படுத்டுகிறது. இந்த மைக்ரோ பைபர் சுத்தப்படுத்தும் அமைப்புகள், தயாரிப்புத் தரத்தில் மிகச் சிறந்ததாகும் மேலும் இந்தியா சந்தைக்கான தகுந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது."
Vishal Jain - நிறுவனர் மற்றும் சிஈஓ, Syncolite India Pvt Ltd (பிராண்ட் பெயர்: Synconext)
"வணிகம் சார்ந்த ரியல் எஸ்டேட்டின் தேவை ஆண்டிற்கு 40 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பால், எதிர்காலம் ஒளிமயமாகக் காட்சியளிக்கிறது. எங்கள் சென்சார்-கேட்வே-சாஃப்ட்வேர் அமைப்பு, ஊழியர் வசதி, ஆற்றல் சேமிப்பு மற்றும் எல்லா எலக்ட்ரானிக் பொருட்களும் ஒன்றோடொன்று 'உரையாட' உதவும் கைபடாத கட்டுப்பாடுகளும் அதனால் சீரான, எங்கிருந்து வேண்டுமானாலும் இயக்கக்கூடிய வகையிலான மற்றும் விலைகுறைந்த சேவையை உறுதி செய்கிறது."
Amarjot Joura - சிஈஓ மற்றும் நிறுவனர் இயக்குநர், Pureera India Pvt. Ltd.
"இந்தியா வசதிகள் மேலாண்மை (FM) தொழில்துறை ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்பட்ட வசதிகள் மேலாண்மைக்கான தேவைக்கான முக்கிய பங்குதாரர்களின் அதிகரித்துவரும் ஒப்புதல் மற்றும் சர்வதேச FM நிறுவணக்களின் நுழைவால் வளர்ந்துவரும் போட்டியும், அதிகரித்த புதுப்புனைவிற்கு வித்திட்டுள்ளது. நாங்கள் எங்களுடைய கைகள் மற்றும் பரப்பு சுகாதாரத் தயாரிப்புகளை, ஆரோக்கியப்பாதுகாப்பு, விருந்தோம்பல், IT, ITES, BPO, உற்பத்தி, சில்லறை வணிகம், உள்கட்டமைப்பு, அரசாங்க மற்றும் கல்வித்துறைகளின் வசதிகள் மேலாண்மைத் துறையின் முக்கிய பங்குதாரர்களுக்கு காட்சிப்படுத்தவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நாங்கள் இரண்டு புரட்சிகரமான ஆண்டிமைக்ரோபியல் கைகள் மற்றும் பரப்பு சுகாதாரத் தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளோம். முதலாவது, ஒரு 24-மணிநேர கை சுத்துகரிபானாகிய safe touch 24, மற்றும் இரண்டாவது ஒரு நீடித்து நிற்கும் பரப்பு கிருமிநாசினியாகிய Surface SHIELD ஆகும். இவ்விரண்டு தயாரிப்புகளும் தனிச்சிறப்பு வாய்ந்தவை, மேலும் சிறப்பான சுகாதாரம் மற்றும் நோய்த் தொர்டுக் கட்டுப்பாட்டின் ஓடு புதிய யுகத்தைத் தொடங்கும் சாத்தியக் கூறுகள் கொண்டவையாகும்."
UBM India பற்றி:
UBM India, கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியோ, உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளின் மூலம், தொழில்துறைக்கும் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒரே இடத்டில் சேர்க்கும் ஒரு தளத்தை உருவாக்கித் தரும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளராகும். UBM India 25-க்கும் மேலான பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளையும் நாடெங்கிலும் ஆண்டு முழுவதும் நடத்துகிறது; இதன் மூலமாக பலவிதமான தொழில்துறைகளில் வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது. ஒரு UBM Asia நிறுவனமாகிய, UBM India-விற்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் உள்ளன. UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM Plc-க்கு சொந்தமான நிறுவனமாகும். UBM Asia, ஏசியாவிலேயே முன்னணி கண்காட்சி அமைப்பாளராகும், மேலும் இது சீனா, இந்தியா மற்றும் மலேசியாவிலும் மிகப்பெரிய வணிகமுறை கண்காட்சி அமைப்பாளராகும்.
மேலும் விவரங்களுக்கு,ubmindia.in.-ஐப் பார்க்கவும்.
UBM plc -யைப் பற்றி:
UBM plc உலகிலேயே மிகப்பெரிய, ஒரே ஒரு துறை சார்ந்த, B2B நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள் ஆகும். டிஜிட்டல் மயமாகிக் கொண்டிருக்கும் உலகில், ஒரு அர்த்தமுள்ள மனித நிலைத் தொடர்பு என்பது முன்பெப்போதையும் விட முக்கியமாகிவிட்டது. UBM-இல், நாங்கள் சேவை செய்யும் பிரிவுகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவும் ஆர்வமும், மக்கள் வெற்றியடையக்கூடிய விலைமதிப்பில்லா அனுபவங்களை உருவாக்க எங்களை அனுமதிக்கிறது. எங்கள் நிகழ்ச்சிகளில், மக்கள் உறவுகளை உருவாக்கி, வியாபாரங்களை முடித்து, அவர்களுடைய வணிகத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். எங்களுடைய 3750+ ஊழியர்கள், 20 நாடுகளில் இருந்து, 50-க்கும் அதிகமான பிரிவுகளில் - ஃபேஷன் முதல் மருத்துவப் பொருட்கள் வரையிலான துறைகளில் சேவை செய்கிறார்கள். இந்த சர்வதேச வலையங்கள், ஆர்வமிக்க ஊழியர்கள் மற்றும் சந்தை முன்னணி நிகழ்ச்சிகள் ஆகியவை வணிகர்கள் தங்களுடைய குறிக்கோள்களை எட்ட உற்சாகமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
மேலும் விவரமறிய, http://www.ubm.com-க்கு செல்லவும்; யுபிஎம் கார்பரேட் செய்திகளுக்கு, எங்களை @UBM-யில் Twitter-ல் அல்லது LinkedIn-இல் UBM Plc தொடருங்கள்.
ஊடகத் தொடர்பு:
Roshni Mitra
[email protected]
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article