மும்பை, April 24, 2017 /PRNewswire/ --
நாட்டில் கட்டிட மற்றும் கட்டமைப்புத் துறைக்கென்றே பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரே எக்ஸ்போவான ஐந்தாவது Concrete Show India (CSI) குறித்த UBM India அறிவித்தது. சாலைகளும் நெடுஞ்சாலைகளும், வீட்டுவசதி, விமானநிலையங்கள், துறைமுகங்கள், ஆற்றல், ரயில், அணைகள் மற்றும் பாலங்கள் போன்ற முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியது; Bombay Convention & Exhibition Centre (BCEC), கோரேகாவ், மும்பையில் 2017 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதிகளில் CSI 2017 நடைபெறவிருக்கிறது.
(Logo: http://mma.prnewswire.com/media/492740/UBM_Concrete_Show_India_logo_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
கான்க்ரீட்டும் கட்டுமானமும், கட்டுமானக் கருவிகள், கட்டுமான வேதிப்பொருட்கள் மற்றும் வணிக மற்றும் தொழிற்சாலை தளமிடல் போன்ற முக்கியப் பிரிவுகளின் சமீபத்திய பொருட்களை காட்சிப்படுத்தக்கூடியதாக இந்த CSI அமையும். இந்த காட்சியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Smart BuildTech என்கிற பெயரிலான பிரிவில் ஆட்டோமேஷன், மென்பொருள், IT சிஸ்டம் மற்றும் கட்டுமான கருவிகள் மற்றும் சாதனங்களில் வந்திருக்கும் புதுமை அம்சங்கள் இடம்பெறும். கட்டிடக்கலை நிபுணர்கள், சிவில் இன்ஜினீயர்கள், ஆலோசகர்கள், காண்ட்ராக்டர்கள், டெவலப்பர்கள், கொள்முதல் மேலாளர்கள், பெரிய கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனங்களைச் சேர்ந்த ஆலோசகர்கள் போன்றவர்கள் இந்தத் தொழில் துறை சார்ந்த கண்காட்சியளர்களிடம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும், நெட்வொர்க் செய்து கொள்ளவும், நுண்ணறிவை பரிமாறிக்கொள்ளவும் இந்த மூன்று நாள் காட்சி அற்புதமான வாய்ப்புகளை இத் தொழில் சார்ந்த தொழில்வல்லுநர்களுக்கு வழங்கும்.
இந்த முழுமையான நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் கலந்து கொள்வதாக உறுதியளித்திருக்கிறார்கள். Lucid Colloids Ltd.; Bianchi Casseforme India Pvt. Ltd.; Reckli India; Hicrete Decorative Systems Pvt. Ltd; Atlas Copco (India) Ltd.; Concrete Additives & Chemicals Pvt. Ltd.; Skyway RMC Plants Pvt. Ltd.; Godrej Construction; Apollo Infratech Pvt. Ltd.; Ashtech; Shri Ram Panels; Reit Qgreen; MASA Concrete Plants India Ltd.; WAM India Ltd. மற்றும் JK Cement Ltd. போன்ற பிரபலமான நிறுவனங்களுடன் மற்ற பிற நிறுவனங்களும் இதில் அடங்கும். சீனா, ஜெர்மனி, இத்தாலி, கொரியா குடியரசு போன்ற நாடுகளின் ப்ராண்ட்களையும், பொருட்களையும் இந்தக் கண்காட்சிக்கு வருகைதருபவர்கள் நெருக்கமாக பரிசோதித்துப் பார்க்கலம்.
இந்தியப் பொருளாதாரத்தின் முக்கிய உந்து சக்தியாக இருக்குமளவிற்கு இந்திய அரசாங்கத்தால் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உள்கட்டமைப்புத் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கக்கூடிய சமயத்தில் CSI எக்ஸ்போ நடப்பது யதேச்சையான ஒரு செயலாகும். மத்திய அரசு முன்னெடுத்துள்ள எண்ணற்ற கொள்கைகள் வரையறைக்கு உட்பட்ட நேரத்திற்குள் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை நாட்டில் உருவாக்குவதை உறுதி செய்வதோடு அதனுடைய அனைத்து மேம்பாட்டையும் உந்தக்கூடியதாக இருக்கும்.
இந்தத் தொழில் சார்ந்தவர்கள் CSI 2017 -ஐ வரவேற்றிருப்பதுடன் இந்த வருட முதல் முறையாக துறை கூட்டாளியாக உள்ள Indian Construction Equipment Manufacturers' Association (ICEMA), மாநாட்டு கூட்டாளியான the Indian Concrete Institute (ICI), Construction Chemicals Manufacturers Association (CCMA), Cement Manufacturers Association (CMA), Consulting Engineers Association of India (CEAI), Construction Industry Development Council (CIDC), Ready Mixed Concrete Manufacturers' Association (RMCMA), Indian Institution of Bridge Engineers (IIBE), Infrastructure Industry and Logistics Federation of India (ILFI), Indian Association of Structural Engineers (IAStructE), Indian Society of Structural Engineers (ISSE), Ontario Building Envelope Council (OBEC) மற்றும் Pre Engineered structures Society of India (PSI) போன்ற அமைப்புகளுடன் மற்ற அமைப்புகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
ஐந்தாம் ஆண்டு CSI குறித்து அறிவிப்பின் போது Mr Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India பேசுகையில், FY 2017-18 ஆம் நிதி ஆண்டுக்கான இந்தியாவின் மத்திய நிதிநிலை அறிக்கையைப் பார்க்கும்போது உள்கட்டமைப்பு மீது அரசாங்கத்தின் மாபெரும் தூண்டுதல் அத்துறையைச் சார்ந்த அனைவருக்கும் மிகப் பெரிய சாத்தியக்கூறை வழங்கவிருக்கிறது. சாலைகள், ரயில்வேஸ், விமானநிலையங்கள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி முன்னெடுப்புகள் ஆகியவற்றில் முனைப்புடன் எடுக்கப்பட்ட கொள்கைகள், முதலீடு உண்மையிலேயே பலனளிக்கக்கூடியவை ஆகும். அதோடு 2016 ஆம் ஆண்டு உலகவங்கியின் Logistics Performance Index (LPI) 2016 இந்தியா 19 இடங்கள் முன்னேறி 160 நாடுகளில் 35 ஆவது இடத்தில் இருக்கிறது. இடையில் சில ஆண்டுகள் தடைபட்டுப் போன இந்தியாவின் கட்டுமானத் துறை புத்துயிர் பெற்றிருக்கிறது. 2019-20 ஆம் நிதியாண்டில் இது US$ 5 அளவுக்கு வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"தங்கமான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது எப்படி என்பது குறித்த நுண்ணறிவை இந்தத் தொழில் சார்ந்த தொழில் வல்லுநர்களுக்கு வழங்கும் ஒரு நிகழ்வாகவும் அதே வேகத்தில் முன்னெடுப்பு நடவடிக்கைகள் தொடரும் என்பதை உறுதிபடுத்தும்படியாகவும் கான்க்ரீட் ஷோ நிலைப்படுத்தப்பட்டிருக்கிறது. எண்ணற்ற அற்புதமான பொருட்கள் காட்சிப்படுத்தப்படுவது, சிறந்த கண்காட்சியாளர்களும், முக்கியமான அமைப்புகளின் ஆதரவு, பொருத்தமான அறிவுசார் பகிர்வும் இருப்பதால் இதை எளிதாக சாதிக்க முடியும்" என்று கூறினார்.
பிரதானமான கண்காட்சியுடன், சக தொழில்துறையுடன் அறிவைப் பகிர்ந்து கொள்வதில் CSI 2017 ஒரு சிறந்த இடத்தில் இருக்கிறது.இந்தக் காட்சியில் இரண்டு நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கம் 'நிலைத்து நிற்கும் ஸ்மார்ட் நகரங்களுக்கான நடைமுறைகள்: 2017 மற்றும் அதற்காப்பால், செயல்முறைகள், பிரௌட்கள், இயந்திரங்கள் மற்றும் மனிதவளம்' மீது கவனம் செலுத்தும். இதோடு, 'ஸ்மார்ட் நகரங்களைத் திட்டமிடுதல்: சிட்கோ/ஜிஐஎஃப்டி'; 'ஸ்மார்டாகவும் நிலைத்து நிற்கும் தன்மையுடனும் கட்டுமானம் செய்தல்'; 'ஸ்மார்டான கட்டுமானத்திற்கான திறம் வளர்ச்சி'; சாலைகள், உள்கட்டமைப்பு மற்றும் இணைப்புநிலைகள்'; மற்றும் 'ஸ்மார்டான நிலைத்து நிற்கும் கட்டுமான இயந்திரங்கள்' போன்ற தலைப்புகளில் தொழில்சார்ந்த சிந்தனையாளர்களுடன் கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது.
UBM India- பற்றி
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM India பல வகையான கண்காட்சிகள், துறை சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள் வாயிலாக உலகமெங்கும் இருக்கும் வாங்குபவர்களையும், விற்பனையார்களையும் ஒருங்கே ஒரு தளத்துக்குக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய காண்காட்சிகளையும், 40 கருத்தரங்குகளையும் UBM India நடத்தி வருகிறது. இது பலவகையான தொழில்களுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வழிவகுக்கிறது. UBM ஏசியா நிறுவனமான UBM India-வுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கும் UBM plc -க்கு சொந்தமானது. UBM ஏசியா ஆசியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரும், சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும்.
மேலதிகத் தகவலுக்கு தயவு செய்து ubmindia.in. என்கிற இணையத் தளத்துக்குச் செல்லவும்
UBM plc பற்றி:
UBM plc உலகத்தில் மிகப் பெரிய B2B நிகழ்வு அமைப்பாளர்கள் ஆவர். அதிகரித்துவரும் இந்த டிஜிட்டல் உலகில், அர்த்தமுள்ள வகையில் மனித நிலையில் தொடர்பு கொள்வதற்கான மதிப்பு ஒருபோதும் முக்கியமானதாக இருக்கப் போவதில்லை. UBM ல் இருக்கும் எங்களுடைய ஆழ்ந்த ஞானமும், நாங்கள் சேவை செய்யும் தொழில்களின் மேல் இருக்கும் பேரார்வமும் மக்கள் வெற்றிபெறுவதற்கான மதிப்புமிக்க அனுபவத்தை உருவாக்க அனுமதிக்கிறது. எங்களுடைய நிகழ்வுகளில் மக்கள் உறவுகளை உருவாக்கி, பரிவர்த்தனைகளை முடித்து அவர்களுடைய தொழில்களை வளர்த்துக் கொள்கிறார்கள். 20-க்கும் மேலான நாடுகளில் இருக்கும் 3,750+க்கும் மேற்பட்ட எங்கள் பணியாளர்கள் ஐம்பதுக்கும் அதிகமான பல்வேறு துறைகளில் - ஃபேஷனிலிருந்து மருந்துப் பொருட்கள் வரை - பணியாற்றி வருகிறார்கள். இந்த உலகளாவிய நெட்வொர்க், திறமையான, பேரார்வம் கொண்ட பணியாளர்கள், சந்தையை முன்னெடுத்துச் செல்லும் நிகழ்வுகள் எல்லாம் தொழில்சார்ந்தவர்கள் அவர்களுடைய லட்சியத்தை அடைவதற்கு அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article