Jindal Global Law School இரண்டாம் நிலை வெற்றியை வியன்னாவில் நடந்த சர்வதேச விவாதத்தில் வென்றது
சோனிபட், இந்தியா, April 20, 2017 /PRNewswire/ --
O.P. Jindal Global University (JGU) உடைய Jindal Global Law School (JGLS) ஆஸ்திரியாவை சார்ந்த வியன்னாவில் நடந்த 24ஆம் Willem C Vis வர்த்தக மத்தியஸ்தர் விவாதத்தில், இரண்டாம்நிலை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டனர். சர்வதேச வர்த்தக சட்டம் மற்றும் சர்வதேச தொழில் தகராறுகளுக்கு தீர்வு காண்பதற்கான மத்தியஸ்தம் செய்தல் குறித்த படிப்பை முன்னேற்றுவதற்கு நாடுகின்ற கௌரவம்மிக்க மத்தியஸ்தர் விவாதத்தில் JGLS அணி 2ஆம் பரிசை வென்றது.
JGLS அணிக்கு பிரதிநிதித்துவம் செய்த Sayantan Chanda, Amartya Ashish Sharan, Vasudhaa Ahuja, Anubhav Khamroi, Ananyaa Mazumdar மற்றும் Harsha Pisupati ஆகியோர் உலகின் கௌரவம்மிக்க கல்லூரிகளான FGV Rio Law School, the University of Zurich, Institut d' Etudes Politique de Paris, University of Cambridge, மற்றும் Columbia Law School உள்ளிட்டவைக்கு எதிராக வெற்றி அடைந்தனர்.
அணிக்கு வாழ்த்து தெரிவித்த, JGU, துணை வேந்தர், Prof. C Raj Kumar, இவ்வாறு கூறினார், "வியன்னாவில் நடந்த சர்வதேச வர்த்தக மத்தியஸ்த விவாத மன்றத்தில் இரண்டாம் பரிசை வென்ற Jindal Global Law School மாணவர்கள் அடைந்த தனிச்சிறப்பு வாய்ந்த வெற்றியானது JGUவுக்கு கிடைத்த வெற்றியைப் போலவே இந்தியாவுக்கும் கிடைத்த வெற்றி தான். இது இந்திய சட்ட மாணவர்களின் சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய மற்றும் விவாதத்திலும் வழக்காடுதல் நிகழ்ச்சிகளிலும் சிறந்து விளங்குவதற்கான தனிச்சிறப்புவாய்ந்த திறன்களையும் வெளிப்படுத்தியுள்ளது. JGLS வழங்கிய உலக சட்டப் படிப்பானது இந்நிறுவனத்தின் தரிசனத்திற்கும் பல்துறை பாடதிட்டத்திற்கும், மாணவர்களின் கடின உழைப்பு மற்றும் வாஞ்சைமிக்க அர்ப்பணிப்புக்கும் ஆசிரியர்களின் திறனுக்கும் அர்ப்பணிப்புக்கும் சான்றாகும்."
Willem C Vis Moot என்பது பரவலாக உலகின் தலைசிறந்த மத்தியஸ்த விவாத போட்டியாக கருதபப்டுகின்றது. ஆண்டுதோறும் வியன்னாவில் நடைபெறும் இந்நிகழ்ச்சி, சர்வதேச மத்தியஸ்த சட்டங்கள் மற்றும் சர்வதேச சரக்குகள் விற்பனைக்கான ஒப்பந்தங்கள் குறித்த (CISG) ஐக்கிய நாடுகள் மாநாடு குறித்த பிரச்சனைகளை சுற்றி உலகளாவிய மத்தியஸ்த சமூகத்தை கொண்டு வருகிறது.
இந்த போட்டி ஆண்டுதோறும் ஆஸ்திரியாவில் உள்ள வியன்னாவில் 1994 முதல் நடத்தப்படுகின்றது மற்றும் இதற்கு Willem Cornelis Vis எனும் உலகப் புகழ்பெற்ற சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகள் மற்றும் தகராறு தீர்வு நடைமுறைகள் நிபுணரின் பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த சாம்பியன்ஷிப் ஆண்டுதோறும் இருபதுக்கும் மேற்பட்ட முன் விவாதங்கள் உருவாக்கப்படுவதற்கு தூண்டுகோலாகவும் இருந்திருக்கிறது.
இந்த ஆண்டு இந்த சர்வதேச போட்டியில் 330 அணிகளுக்கும் மேலாக உலகெங்கிலும் இருந்து பங்குபெற்றனர், இதன் மூலம் உலகின் ஒற்றை மிகப்பெரிய விவாத நிகழ்ச்சியாக இது மாறியுள்ளது.
Shaun Star, துணை பேராசிரியர், JGLS மற்றும் விவாதக் குழுவுக்கான ஆசிரியர் பயிற்சியாளர், இவ்வாறு கூறினார், "விவாத சுற்றுக்கள் வரையிலும் வழிநடத்துவதற்காக அயராது உழைத்த மாணவர்களுக்கே முழு பாராட்டுதல்களும் செல்ல வேண்டும். உலகெங்கிலும் இருந்து 330க்கும் மேற்பட்ட பிற பல்கலைக்கழகங்களை கடந்து இறுதிச்சுற்றை அடைந்தது உண்மையில் குறிப்பிடத்தக்க சாதனை தான் என்றாலும், உலகின் மகத்தான விவாத போட்டிகளில் வெற்றிபெற்றதில் இருந்து கிடைத்த கற்றல் அனுபவமே எங்கள் மாணவர்களுக்கான உண்மையான வெகுமதி. இந்த சமீபத்திய சாதனையானது எங்கள் மாணவர்களும் ஆசிரியர்களும் உண்மையில் உலகத்தரம் வாய்ந்தவர்கள் என்பதற்கான மேலும் ஒரு உதாரணமாக இருக்கிறது."
விவாத இயக்குநர் மற்றும் துணை பேராசிரியர், Faiz Tajuddin, இவ்வாறு கூறினார், "இந்த செயல்பாடானது தொழில்முறை, சிறப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை அடிப்படையிலான விவாத மன்றத்தை ஏற்படுத்துவதற்கான Jindal உடைய முயற்சியின் ஒரு படி மட்டுமே ஆகும். மூன்றாண்டு மற்றும் ஐந்து ஆண்டு நிகழ்ச்சிகள் இரண்டில் இருந்தும் வரும் மாணவர்கள் ஒன்றாக பணிசெய்து ஒருவரை ஒருவர் சார்ந்து இருக்க கற்றுக்கொள்கிறார்கள், மற்றும் கல்வி நிறுவனம்சார்ந்த ஆதரவானது இந்த அணிகள் எண்ணற்ற முன் விவாத நிகழ்வுகளில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் ஈடுபட அனுமதிக்கிறது. உலக அரங்கில் பெற்ற இந்த வெற்றி ஒரு முத்திரையாக நின்று வரவிருக்கும் காலங்களில் மைய சட்டக் கல்லூரி செயல்பாடான விவாதத்தில் அதிகமாக ஈடுபடுவதற்கு ஊக்கம் அளிக்கும்."
கடந்தகாலத்தில், JGLS மாணவர்கள் Oxford Media Law Moot Court Competition, Herbert Smith Freehills Moot Court Competition, Philip C. Jessup International Law Moot Court Competition, ULC Bangalore Moot, 10th Nani Palkhiwala Tax Moot Court Competition, உள்ளிட்டவற்றில் பல கௌரவங்களை வென்றுள்ளனர்.
2009இல் நிறுவப்பட்ட, JGLS தான் O.P. Jindal Global university என்னும் லாபம் சாராத முதல் கல்லூரி. இந்த கல்லூரி ஒரு பிரகாசமான விவாத கலாச்சாரத்தை விளைவித்து உலக தரம்வாய்ந்த சட்ட தொழிலாளர்கள், அறிஞர்கள், தலைவர்கள் மற்றும் பொதுத்துறை சேவகர்களை உருவாக்கும் கண்ணோட்டத்துடன் ஒரு கடுமையான மற்றும் பல்துறை சட்டக்கல்வியை ஒருங்கிணைத்து உள்ளது. இக்கல்லூரியின் நிபுணத்துவமான ஆசிரியர்கள் உலகெங்கிலும் இருந்து வருகிறார்கள் மற்றும் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பொது விவாதங்களுக்கு பங்களிப்பு கொடுக்கும் முக்கியமான கல்வி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
JGLS உலகெங்கிலும் இருந்து உயர்தரமான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் கூட்டணிகள், பரிமாற்ற நிகழ்ச்சிகள் மற்றும் ஆராய்ச்சி கூட்டணிகளுக்குள் நுழைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் http://www.jgu.edu.in.
ஊடக தொடர்பு:
Kakul Rizvi
[email protected]
+91-8396907273
Additional Director
Communication and Public Affairs
O.P. Jindal Global University
Share this article