மும்பை, April 18, 2017 /PRNewswire/ --
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் வசதி மேலாண்மை பொருட்கள் மற்றும்
சேவைகள் தொழிலுக்கான ஒரு நுழைவாயில்
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM India, வசதி மேலாண்மை பொருட்கள் மற்றும் சேவைகள் தொழிலுக்காக இந்தியாவின் முதன்மையான வர்த்தக நிகழ்வு மற்றும் மாநாட்டை World of Facilities என்கிற பெயரில் Bombay Convention & Exhibition Centre-ல் (BCEC), கோரேகாவ், மும்பையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடத்தவிருக்கிறது. World of Facilities வாயிலாக வசதிகள் மேலாண்மையில் வழங்கும் (சப்ளை) தொழிலைச் சார்ந்தவர்கள் அவர்களுடைய புதுமையான பொருட்களையும், சேவைகளையும் காட்சிப்படுத்தவும், நெட்வொர்க் செய்து கொள்ளவும், பல துறைகளிலும் வெவ்வெறு நிலையில் இருக்கும் முடிவு எடுப்பவர்களில் முக்கியமானவர்களோடு தொடர்பு கொள்ளவும் ஒரு வர்த்தக தளத்தை UBM India வழங்குகிறது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தொழிலின் போக்குகள், சவால்கள், சந்தை குறித்த கருத்தாக்கங்கள் மற்றும் ஆழமான தீர்வுகளையும் வழங்கும் மேம்பட்ட மாநாட்டையும் இந்த எக்ஸ்போவின்போது பார்க்கலாம்.
(Logo: http://mma.prnewswire.com/media/490513/WOF_UBM_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
கட்டிட வசதியின் ஒரு பகுதியை பராமரிக்க மூன்றாம் தரப்பு சேவை வழங்குபவரை உபயோகிப்பது அல்லது அனைத்து வசதிகளையும் தொழில் முறையில் மேலாண்மை செய்யக்கூடிய நிறுவனத்திடம் அயலாக்கம் செய்துவிடுவது என்பதைத்தான் வசதி மேலாண்மை(FM) என்பது குறிக்கிறது. இதில் கடின சேவைகளான எலக்ட்ரிக்கல், எலக்ட்ரோ மெக்கானிக்கல், மெக்கானிக்கல், நீர் மேலாண்மை, ஆற்றல் மேலாண்மையும் மென் சேவைகளான ஹவுஸ்கீப்பிங், பாதுகாப்பு, சுத்தம் செய்தல், கேட்டரிங், போக்குவரத்து, தோட்டம், லேண்ட்ஸ்கேப்பிங், ஃப்ரண்ட் ஆஃபிஸ் மேலாண்மை போன்றவையும் அடங்கும்.
ஸ்மார்ட் தீர்வுகள், பாதுகாப்புத் தீர்வுகள், ஏர்கண்டிஷனிங் & மெக்கானிக்கல் வெண்டிலேஷன், ஆற்றல் மேலாண்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை, சுகாதார சுத்தம் மற்றும் கழிவு மேலாண்மைக்கான தீர்வு, FM மென்பொருள் மற்றும் IT தீர்வுகள், வசதி சேவைகள், பணியிடம், HR மற்றும் அதிகமான உற்சாகத்தைத் தூண்டக்கூடிய பல புதுமையான பொருட்களும், சேவைகளும் இந்த எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படும். Hospitality Purchase Managers Forum (HPMF), Global Infra-facilities and Project Management Association (GIFPMA), The Infrastructure Facility Human Resource & Realty Association (iNFHRA) and Indian Pest Control Association (IPCA); கூட்டாளிகள் - Jones Lang LaSalle (JLL India ), Zeta Express, Cannon Hygiene, HIKVISION மற்றும் Maharashtra Fire Service போன்ற அமைப்புகள் இந்த எக்ஸ்போவுக்கு சிறப்பான முறையில் ஆதரவு அளிக்கின்றன.
HIKVISION, Cannon Hygiene, 3M, Karcher Cleaning, Charnok Cleaning, Uniclean, Haworth, Buzil Rossario, Pure Duct Services Pvt. Ltd., SMS Pvt Ltd, Sierra ODC Pvt. Ltd., Aura facility Management, Arrow Greentech Ltd, Synconext India Pvt Ltd. மற்றும் MCS Solutions (P) Ltd, Fine Grace, HygieneTech போன்ற முக்கியக் காட்சியாளர்களோடு வசதி மேலாண்மையைச் சேர்ந்த மற்றவர்களையும் World of Facilities 2017 ஒன்றாகக் கொண்டுவரும்.
வசதி மேலாண்மைச் சந்தை 2016 ஆம் ஆண்டிலிருந்த USD 28.90 பில்லியன் டாலரிலிருந்து 2021 ஆம் ஆண்டு 56.67 பில்லியன் டாலருக்கு, 14.42% என்கிற ஆண்டு கூட்டு வளர்ச்சி விகித்தில் வளர்ச்சியடையும்(CAGR) என கணக்கிடப்பட்டிருக்கிறது. வீடு மற்றும் ஹோட்டல்கள், அலுவலகங்கள், ஷாப்பிங் மால்கள், ஆஸ்பத்திரிகள் போன்ற வணிக ரீதியிலான கட்டிடங்களின் கட்டுமான எண்ணிக்கையின் அதிகரிப்பும் இந்தத் துறைக்கு அபரிதமான வளர்ச்சியை வழங்கும் சாத்தியக்கூறாகும். தொழில் செயல்பாடு விரைவாகவும், திறமையாகவும் செயல்படுவதற்கு வசதி மேலாண்மை தீர்வுகள் வழிவகுப்பதால் அதற்கான முக்கியத்துவம் நிறுவனங்களிடையே அதிகரித்து வருகிறது. வசதி மேலாண்மை கருதுகோள் என்பது பணியிடத்தில் திறமையான மேலாண்மையை சாத்தியமாக்கும் மென்பொருள்களும், தீர்வுகளூம், ரியல் எஸ்டேட், சொத்துகள், அலுவலகங்கள் மற்றும் கட்டிடங்கள் இடமாற்றம், ஆற்றல் மேலாண்மை போன்றவற்றை உள்ளடக்கியதாகும். இது சேவையை தரப்படுத்துவதோடு செயல்பாடுகளையும் ஒழுங்குபடுத்துகிறது. வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப மாற்றங்களை சமாளிக்க நிறுவனங்கள் பாரம்பரிய கருதுகோளான வசதி மேலாண்மைக்கு அப்பால் செல்ல ஆரம்பித்திருக்கிறது. இன்றைய தொழில் தேவைகளும் இந்த தீர்வுகளை அதிகமாக ஏற்றுக் கொள்வதற்கு உதவுகிறது.
இந்த எக்ஸ்போவின் முக்கியமான சிறப்பம்சம் இரண்டு நாட்கள் நடைபெறவிருக்கும் மாநாடாகும். ஃபெசிலிட்டி மேலாளர்கள், நிர்வாக, செயல்பாட்டு மேலாளர்கள், கொள்முதல் மேலாளர்கள், செலவு மேலாண்மை, மனித ஆற்றல் மேலாண்மை, ஒருங்கிணைந்த வசதி மேலாண்மை ஆட்டோமேஷன், பாதுகாப்பு மற்றும் புதிய தொழில்நுட்பங்கள்/மென்பொருள் போன்ற ஃபெசிலிட்டி டெக்னிக்கல் பிரிவுகளின் தலைவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து இது கவனம் செலுத்தும். இந்த மாநாடு இரண்டு நாட்களும் இணையான இரண்டு ட்ராக்குகளைக் கொண்டிருக்கும் அதில் இந்தியா மற்றும் உலகத்தின் பல நாடுகளைச் சேர்ந்த தொழில்நிபுணர்கள் வசதி மேலாண்மை சம்பந்தமாகக் கையாண்ட வெற்றிகரமான கேஸ் ஸ்டடிகள் இடம்பெறும்.
மாநாட்டில் இடம் பெறவிருக்கும் தலைப்புகளில் சில - போர்ட்ரூமுக்கு வசதி மேலாண்மையை எடுத்துச் செல்லுதல், தொழில்நுட்பமும், ஃபெசிலிட்டி மேலாளர்களின் மாறிவரும் பங்கும், 2016 க்கும் அதற்கு அப்பாலும் வசதி மேலாண்மைத் தொழிலை பாதிக்கும் போக்குகளும், தொழில்நுட்பம் மேம்படுத்தும் கொள்முதல் வழியாக உந்தப்படும் மதிப்பு, நீட்டிப்புத்திறன்: ஸ்ட்ராடெஜிக் அணுகுமுறையா அல்லது டாக்டிக்கல் அணுகுமுறையா?; சுத்தப்படுத்துதல், ஆரோக்கியம், கழிவு மேலாண்மை & பசுமைத் தீர்வுகள்: தரவு, பகுப்பாய்வு & இண்டெர்நெட் ஆஃப் திங்க்ஸ்; ஸ்மார்ட் கட்டிடங்களும், ஆற்றல் கொள்முதலும், மாறிவரும் பங்கான்மையும்.
World of Facilities 2017 ஆரம்பம் குறித்து அறிவித்த Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குநர், UBM India பேசுகையில், "உள்கட்டமைப்புக்கு அரசாங்கம் தொடர்ந்து அளித்து வரும் உந்துதலினால் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறை முழுவதும் வளர்ச்சி வேகத்தை தூண்டிவிட்டிருக்கிறது. இது அது சார்ந்த மற்ற சேவைகளின் வளர்ச்சியையும் தூண்டியிருக்கிறது. அது சார்ந்த சேவைகள் என வரும்போது, வசதி மேலாண்மை அதில் மைய இடத்தைப் பெறுகிறது. சமீபத்திய ஆய்வு அறிக்கை, 2021 ஆம் ஆண்டுக்குள் வசதி மேலாண்மைச் சந்தை US$ 56.67 பில்லியன் டாலர் அளவுக்கு வளர்ச்சியடையும் எனத் தெரிவிக்கிறது. இந்த மாதிரி வளர்ச்சியடைந்துவரும் வேளையில் வசதிகள் மேலாண்மை மீது தனிகவனம் செலுத்துவது நம்மைப் பொருத்தவரை முற்றிலும் பொருத்தமானதாகும். வசதி மேலாண்மையின் முக்கியத்துவம் மற்றும் தொழில் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் இந்தியத் துணைக்கண்டத்துக்கு World Facilities ன் ஆரம்ப எடிசனை கொண்டுவருவது UBM India -ன் பல முயற்சிகளில் ஒன்றாகும். இந்த நிகழ்வு தேவைப்படக்கூடிய அறிவு இடைவெளியை பூர்த்தி செய்வதோடு வசதி மேலாண்மையில் காத்திருக்கும் பல துறைகளை `டாப்' செய்வதற்கும் பயன்படும் என நான் நம்புகிறேன். எண்ணற்ற வாய்ப்புகளையும், மகத்தான நெட்வொர்க்கிங் சாத்தியங்களையும் கண்டறிய ஒருங்கிணைப்பட்டிருக்கும் இந்த முதன்முதல் காட்சியில் இத்தொழிலைச் சேர்ந்த அனைவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுமென்று தாழ்மையுடன் நான் கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.
UBM India- பற்றி:
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM India பல வகையான கண்காட்சிகள், துறை சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள் வாயிலாக உலகமெங்கும் இருக்கும் வாங்குபவர்களையும், விற்பனையார்களையும் ஒருங்கே ஒரு தளத்துக்குக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய காண்காட்சிகளையும், 40 கருத்தரங்குகளையும் UBM India நடத்தி வருகிறது. இது பலவகையான தொழில்களுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வழிவகுக்கிறது. UBM ஏசியா நிறுவனமான UBM India-வுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM ஏசியா, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கும் UBM plc -க்கு சொந்தமானது. UBM ஏசியா ஆசியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரும், சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும்.
மேலதிகத் தகவலுக்கு தயவு செய்து ubmindia.in என்கிற இணையத் தளத்துக்குச் செல்லவும்
UBM plc பற்றி:
UBM plc உலகத்தில் மிகப் பெரிய B2B நிகழ்வு அமைப்பாளர்கள் ஆவர். அதிகரித்துவரும் இந்த டிஜிட்டல் உலகில், அர்த்தமுள்ள வகையில் மனிதநிலையில் தொடர்பு கொள்வதற்கான மதிப்பு ஒருபோதும் முக்கியமானதாக இருக்கப் போவதில்லை. UBM ல் இருக்கும் எங்களுடைய ஆழ்ந்த ஞானமும், நாங்கள் சேவை செய்யும் தொழில்களின் மேல் இருக்கும் பேரார்வமும் மக்கள் வெற்றிபெறுவதற்கான மதிப்புமிக்க அனுபவத்தை உருவாக்க அனுமதிக்கிறது. எங்களுடைய நிகழ்வுகளில் மக்கள் உறவுகளை உருவாக்கி, பரிவர்த்தனைகளை முடித்து அவர்களுடைய தொழில்களை வளர்த்துக் கொள்கிறார்கள். 20-க்கும் மேலான நாடுகளில் இருக்கும் 3,750+க்கும் மேற்பட்ட எங்கள் பணியாளர்கள் ஐம்பதுக்கும் அதிகமான பல்வேறு துறைகளில் - ஃபேஷனிலிருந்து மருந்துப் பொருட்கள் வரை - பணியாற்றி வருகிறார்கள். இந்த உலகளாவிய நெட்வொர்க், திறமையான, பேரார்வம் கொண்ட பணியாளர்கள், சந்தையை முன்னெடுத்துச் செல்லும் நிகழ்வுகள் எல்லாம் தொழில்சார்ந்தவர்கள் அவர்களுடைய லட்சியத்தை அடைவதற்கு அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
மேலதிக தகவலுக்கு, http://www.ubm.com என்கிற இணையத்தளத்துக்குச் செல்லவும்
UBM கார்ப்பொரேட் செய்திகளுக்கு, எங்களை Twitter ல் @UBM மிலும் LinkedIn ல் UBM Plc யையும் தொடரவும்.
ஊடகத் தொடர்பு:
UBM India
Roshni Mitra
[email protected]
+91-22-61727000
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
Share this article