மும்பை, April 13, 2017 /PRNewswire/ --
UBM India கண்காட்சியிலே உலகளாவிய மற்றும் உள்நாட்டு பிராண்டுகளின்
ஒரு செழிப்பான குழுமம் கவனத்தை நாடுகிறது
UBM India தனித்துவமாக நிலைபடுத்தப்பட்ட Children, Baby Maternity Expo India 2017 (CBME India) உடைய 5வது நிகழ்வை இன்று பாம்பே மாநாடு மற்றும் கண்காட்சி மையம், மும்பையில் தொடங்கி வைத்தது. இந்தியாவின் மாபெரும் குழந்தைகள், கைகுழந்தை மற்றும் மகப்பேறு தயாரிப்புகள் தொழில் கண்காட்சி, CBME India உள்நாட்டு மற்றும் உலகளாவிய குழந்தைகளுக்கான தயாரிப்புகளின் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைவதற்கும், பிணைப்பை ஏற்படுத்துவதற்கும் தொழில் நடத்துவதற்கும் போட்டியில்லாத தொழில் வாய்ப்புகளை வழங்குகின்றது.
(Photo: http://mma.prnewswire.com/media/488972/Key_Dignitaries_CBME_2017.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/480021/CBME_2017_UBM_Event_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
CBME India 2017 உடைய தொடக்க விழா, Mr. Anuj Jain - துணைத்தலைவர் - Brainbees Solutions Pvt. Ltd. (FirstCry); Mr. Rajesh Vohra - மேலாண்மை இயக்குநர், Chicco; Mr. Naresh Khattar - மேலாண்மை இயக்குநர், Mee Mee; Mr. Yogesh Mudras - மேலாண்மை இயக்குநர், UBM India மற்றும் Mr. Abhijit Mukherjee - குழு இயக்குநர், UBM India, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் முன்னிலையில் கணிசமான துறைசார்ந்தோரின் கூட்டத்தின் மத்தியில் நடைபெற்றது. நவீன சில்லரை வர்த்தக தொழில், ஆன்லைன் சில்லரைவர்த்தகர்கள், சேவை வழங்குநர்கள், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் ஃப்ரான்சைசீ தேடுகிறவர்கள் ஆகியோரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்கள், விநியோகஸ்தர்கள், செல்வாக்குமிக்கவர்கள் மற்றும் வர்த்தக தலைவர்கள் உள்ளிட்டோரும் பங்குபெற்றனர்.
இக்கண்காட்சியானது 100க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களையும் 350 முக்கிய இந்திய மற்றும் உலகளாவிய பிராண்டுகளையும் ஒன்றுதிரட்டி கொண்டு வந்தது. இக்கண்காட்சியில் உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளான Chicco, Mee Mee, Mother Touch, Sunehri Exports, Cozy N Safe, Florite Baby, Hip Lik, BabyCenterIndia, Pooja Creation, Adore Baby, Kaboos, Sebamed, Tiny Bee, Rikang மற்றும் GAIA Skin Naturals உள்ளிட்ட பல இடம்பெற்றன. சீனா , ஆஸ்திரேலியா, வியட்நாம், தாய்லாந்து, யுஎஸ், யுகே, கனடா, சிங்கப்பூர் மற்றும் இத்தாலி ஆகிய ஒன்பது நாடுகளில் இருந்து முதல் முறையாக உற்சாகமான பங்கேற்பு இடம்பெற்றது, அவர்கள் இந்திய உற்பத்தியாளர்களுக்கு தொழிற்துறையை கண்காணிப்பவர்களின் கருத்துப்படி சமீபத்திய போக்குகள் மற்றும் தொழில்நுட்பம் குறித்த கருத்துக்களை அளிக்கின்றனர்.
தரம், தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட மற்றும் கலையுணர்வுமிக்க இனிமையான குழந்தை பராமரிப்பு தயாரிப்புகள், பொம்மைகள், குழந்தை உணவு, குழந்தைகளின் ஆடைகள், மகப்பேறு தயாரிப்புகள், ஆர்கானிக் உடை, ஊட்டச்சத்து மருந்துகள், கைவசதியான ஃபர்னீச்சர், ஸ்டேஷனரி, கைக்குழந்தை பாதுகாப்பு தொழில்நுட்பம், மூளை வளர்ச்சி கருவிகள் மற்றும் பல வியக்கவைக்கும் ரகங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக, இந்நிகழ்வானது Toy Association of India (TAI), 500க்கும் மேற்பட்ட தொழிற்துறை அங்கத்தினர்களை பிரதிபலிக்கும் பொம்மை சகோதரத்துவத்தின் ஒரு உச்சகட்ட மன்றம்; All India Association of Industries (AIAI); the Apparel Export Promotion Council (AEPC) and the Indian Importers Chamber of Commerce and Industry (IICCI) போன்ற முக்கிய கழகங்களினால் நன்கு ஆதரிக்கப்பட்டது.
இந்த கண்காட்சியின் அருகில், கண்காட்சியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தனித்துவமான மற்றும் புதுமையான மதிப்புமிக்க முன்மொழிவுகளை வழங்குவதற்கான ஒரு இரண்டு நாள் மாநாடும் ஒருங்கிணைக்கப்பட்டது. நாள் 1 (அறிவுசார்ந்த சொத்து சட்டம் மற்றும் உரிமம்பெறுதல்) 'Intellectual Property Law and Licensing' என்கிற தலைப்பின் மீது கவனம் செலுத்தப்பட்டது. இந்தியாவில் உள்ள உரிமங்களில் இருந்து உரிமதாரர்கள் எதை எதிர்பார்க்கலாம் மற்றும் உரிமதாரர்களிடம் இருந்து இந்தியாவில் உள்ள உரிமங்களில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதற்கான ஒரு பேனல் விவாதம் நடைபெற்றது. இந்திய தொழில் சமுதாயத்திற்கு உரிமம் வழங்குவதில் இருக்கும் இலாபகரமான பலன்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.
நாள் 2இல் ஒரு Fashion N Kids Conclave நடைபெறும் அதில் குழைந்தைகளுக்கான ஆடைகளில் புதுமைகள், தர கட்டுப்பாடு மற்றும் தொழில்நுட்பம் ஆகியற்றில் போக்கு மாற்றத்தை ஏற்படுத்தும். விவாதிக்கப்படும் தலைப்புகளில் உள்ளடங்குபவை - 'குழந்தைகளுக்கான ஆடை: இந்தியாவில் ஜவுளித் துறையில் வளர்ந்துவரும் பிரிவு', 'குழந்தைகளுக்கான ஆடையில் விஸ்கோசின் பங்கு', 'குழந்தைகளுக்கான ஆடையில் தரக் கட்டுப்பாட்டு பிரச்சனைகள் ', 'குழந்தைகளுக்கான டயப்பர் தொழில்நுட்பத்தில் புதுமை', 'ஆடை தொழில்நுட்பத்தில் புதுமை' மற்றும் 'குழந்தைகளுக்கான ஆடையில் சாயங்கள் மற்றும் இரசாயனங்களின் பயன்பாடு'. பேனல் விவாதங்கள், முன்மொழிதல்கள் மற்றும் வினா-விடை அமர்வுகளும் நாள் 2 இன் ஒரு பகுதியாக இருக்கும்.
அதிக கண்ணோட்டம் அளிப்பதற்காக, Cool Kids Fashion India நிகழ்வானது நன்கு அறியப்பட்ட மற்றும் வளர்ந்து வரும் டிசைனர்கள், பிராண்டுகள் மற்றும் உற்பத்தியாளர்களின் குழந்தைகளுக்கான ப்ரீமியம் நாகரீக துணைப்பொருட்கள் மற்றும் ஆடைகளை (வயது 0 - 14 ஆண்டுகள்) சிறப்பித்து காட்டியது. The Innovation Product Corner சிறப்பான வடிவமைப்பு , தயாரிப்பின் பாதுகாப்பு, புதுமைகள் மற்றும் பலவற்றை சிறப்பித்துக் காட்டும் படைப்புகளை காட்சிப்படுத்தியது.
CBME India 2017 உடைய தொடக்கவிழாவில் பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறுகையில், "உள்நாட்டு குழந்தை, மகப்பேறு மற்றும் குழந்தைபராமரிப்பு தயாரிப்புகள் சந்தை இந்திய கண்ணோட்டத்தில் இருந்து ஒரு அரிதான துறையாக கருதப்பட்டது. இருப்பினும், பெற்றோரின் செலவிடக்கூடிய வருமானத்தின் அதிகரிப்பு, அவர்களுடைய நுகர்வோர் பழக்கங்களில் ஏற்படும் மாற்றம் மற்றும் குழந்தை பாதுகாப்பு மற்றும் நலன் மீதான புதுப்பிக்கப்பட்ட கவனம் ஆகியவற்றுடன் இந்த அதிக ஆற்றல்வாய்ந்த துறை தற்போது ஒரு பெரிய வளர்ச்சி வெளிப்பாட்டுக்கு தயாராக இருக்கிறது, அந்த வளர்ச்சி இதை ஒரு தனித்துவமான மற்றும் வெற்றிகரமான துறையாக மாற்றும். அதிகரிக்கும் ஊடக வெளிப்பாடு, பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு, மால்கள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் கலாச்சாரம் ஆகியவை பிராண்டட் பிரிவு தாங்கள் வழங்குகின்றவற்றை இந்தியாவின் வசதியான நுகர்வோர்களுக்கு வெளியிட்டு நிலைபடுத்துவதற்கான ஒரு தளத்தை அளித்துள்ளது. இருப்பினும், பாரம்பரிய நடைமுறைகள் தவிர, கைக்குழந்தை பராமரிப்பில் உரிமையோடு இருந்து வரும் கருமித்தனமான விதிமுறைகள், இந்த பிரிவில் கிடைக்கும் புதிய தயாரிப்புகள் குறித்த தகவல்கள் மற்றும் இருப்புநிலையில் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன."
அவர் மேலும் கூறியதாவது, "இங்கு தான் CBME India போன்ற தனித்துவமான முயற்சிகள் தகவலையும் கல்வியையும் அளிப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பதோடு குழந்தைகள் மற்றும் மகப்பேறு சந்தையின் அளவுகோலை உயர்த்துவதற்கான ஊக்கத்தையும் அளிக்கிறது. குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கான தயாரிப்புகள் பரினமிக்கும்போது, அறியப்பட வேண்டிய மகப்பேறு தயாரிப்புகள் பிரிவுக்கான இன்னும் மகத்தான ஆற்றல் இருக்கின்றது."
CBME 2017 நிகழ்விலே கருத்துப்பரிமாற்றங்களும் வெளியீடுகளும்
Mr. Dinanath Upmanyu, இயக்குநர் - Brand & Marketing, Olele Kids Clothing
"'குழந்தையே மனிதனுக்கு தந்தை' என்கிற ஒரு பிரபலமான வழக்குச்சொல் இருக்கிறது மற்றும் இந்நாட்களில் இந்த பழமொழி அர்த்தமுள்ளதாக இருக்கிறது. பெருகிவரும் தனிக்குடித்தனங்களுடன், தீர்மானம் எடுப்பதில் குழந்தையே மையமாக இருக்கிறது மற்றும் நமது துறை முன்னேறிச் செல்லும் வழியையும் இது மாற்றியுள்ளது. வேலைசெய்யும் தாய்மார்களின் எண்ணிக்கையில் அதிகரித்து இருப்பதால், நாங்கள் ஒரு புதிய தயாரிப்பு வரிசையை பரினமிக்கச் செய்து இருக்கிறோம். வளர்ந்துவரும் குழந்தைகளின் ஆடை பிராண்டாக , Oleleவில் இருக்கும் நாங்கள் உண்மையாகவே மாற்றத்தை மகிழ்ந்து அனுபவித்து எதிர்காலத்தில் மகத்தான வாய்ப்பை பார்க்கிறோம். CBME India என்பது B2B பிரிவிற்கு ஒரு மகத்தான தளம் ஆகும். ஈ-காமர்ஸ் பிரிவில் இருந்து மகத்தான அங்கீகரிப்பையும் மரியாதையையும் பெற்றுக்கொண்ட பிறகு, நாங்கள் அனைவரும் ஆஃப்லைன் சந்தைக்குள் நுழைய முற்றிலும் தயாராகிவிட்டோம், அத்தகைய பெரிய வடிவிலான சில்லரை வர்த்தகர்கள், மொத்த வியாபார டீலர்கள் மற்றும் சில்லரை வர்த்தகர்கள். எங்கள் குழந்தைகளுக்கான ஆடை ரகங்களின் வரிசையை வெளியிடுவதன் மூலம் CBME India வழங்கும் வாய்ப்பை ஆராய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். கண்காட்சியிலே மொத்த வியாபாரம் மற்றும் சில்லரை வர்த்தக தொழில்களில் இருந்து நல்ல எண்ணிக்கையில் மக்கள் வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். CBME India உலகின் முன்னணி நிகழ்வு மேலாண்மை நிறுவனமான UBM Indiaவால் நிர்வகிக்கப்படுகின்றது மற்றும் அவர்களுடைய அமைப்புசார்ந்த திறன்களையும் தன் கண்காட்சியாளர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் வசதியை அளிக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளையும் பார்க்க நன்றாக இருக்கிறது. CBME India 2017 எங்கள் முதல் கண்காட்சியாக இருக்கப்போகிறது மற்றும் இந்தக் கண்காட்சி எவ்வளவு மகத்தாக மாறப்போகிறது என்று பார்க்கும்போது வழக்கமான கண்காட்சியாளராக நாங்கள் இருப்போம் என்றும் நம்புகிறோம்."
Ms. Namita Saxena, நிறுவனர் இயக்குநர், Baby Essentials Private Limited
"என் கண்ணோட்டத்தின்படி, மகப்பேறு மற்றும் குழந்தை பிரிவு என்று அழைக்கப்படுவது இருக்கிறது என்றபோதிலும், அதை ஒரு துறை என்று அழைக்கும் நிலையை இன்னும் அடையவில்லை. தற்போது, இது மிகவும் சிதறிப்போயும் ஒருங்கிணைக்கப்படாமலும் இருக்கிறது, இதில் பின்பற்றப்படுவதற்கான ஒரு தெளிவான தர அளவீடுகளோ அல்லது விவரிக்கப்பட்ட தரநிலைகளோ இல்லை. தாய்க்கும் புதிதாய் பிறந்த குழந்தைக்குமான மகப்பேறுகாலத்திற்கு பிந்தைய காலத்தின் முக்கியத்துவத்தை எங்கள் நிறுவனம் புரிந்துகொண்டு உள்ளது, ஆகையால், இதன் தனித்துவமான தயாரிப்பு ரகமானது புதிதாய் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கான அப்புறப்படுத்தக்கூடிய மற்றும் சுத்தீகரிக்கப்பட்ட ஆடை தீர்வுகளை அளித்து, தாய்ப்பால் கொடுக்கும் தாயின் அழுத்தத்தை தளர்த்துவதில் கவனம் செலுத்துகின்றது. ஒரு நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதை காண்பதற்காக பெரிய அளவில் சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில் இருந்து மக்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். நோய்த்தொற்று இல்லாத சுற்றுச்சூழலில் புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கும் தாய்மாருக்கும் CBME India 2017 ஒரு புதுமையான ஆடை ரகத்தைக் காணும், இதன் மூலம் புதிதாய் பிறந்த குழந்தைக்கு ஒரு பாதுகாப்பான சுகாதாரமான தொடக்கம் Baby Essentials Pvt. Ltd நிறுவனத்தால் உறுதிசெய்யப்படும்"
Mr. Deepak Raghavan, தலைவர், Posh Baby and Kids India
"இந்தியாவில், பாதுகாப்பு, கல்வி மற்றும் வளர்ச்சி மீது கவனம் செலுத்தும் ப்ளே மேட்களுக்கு எதிர்கால வாய்ப்பு இருக்கிறது. வெளியே என்ன இருக்கின்றன என்பதை குறித்து பெற்றோர்கள் இந்நாட்களில் அறிந்து இருக்கிறார்கள். அவர்கள் அதிகமாக வாசிக்கிறார்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் தலைப்புகள் குறித்து நன்கு அறிந்து இருக்கிறார்கள். எங்கள் Dwinguler, Babycare & Bebe Dom play mats ஆகியவை சந்தையில் தற்போது கிடைக்கின்றவற்றை காட்டிலும் ஏன் சிறந்தவை என்பதை குறித்து புரிந்துகொள்ள அவர்களுக்கு மகத்தான வாய்ப்பு இருக்கிறது. குழந்தைகளுக்கான உயர்தர விளையாட்டு எழுதுகோல் மற்றும் சோஃபாக்களையும் நாங்கள் வழங்குகிறோம். எங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி, புதிய தொழில் வாய்ப்புகளையும் தொடர்புகளையும் பெறுவதற்கான CBME India தான். "
Mr. Suresh Menon, இயக்குநர், Arete Marketing LLP
"குழந்தைகள் கைக்குழந்தை மகப்பேறு துறை என்பது வளர்ந்துவரும் ஒன்று; அதிகமாக செலவிடக்கூடிய இளம் மக்கள்தொகை இருப்பதால் நுகர்வோர் விருப்பங்கள் இந்த துறையை வரும் ஆண்டுகளில் மகத்தான உயரங்களுக்கு கொண்டு செல்லும். எங்கள் நிறுவனத்தையும் நாங்கள் பிரதிநிதித்துவம் செய்யும் சர்வதேச பிராண்ட்களையும் பொருத்தமான தொழில் பங்காளர்களுக்கு காட்சிப்படுத்துவதற்கான அகன்ற தளத்தை CBME India அளிக்கிறது. இக்கண்காட்சியில் நாங்கள் நேயகர்களை சந்தித்து இந்த வாய்ப்பை பயன்படுத்தி 'Bentley Tricycle'ஐ வெளியிட இருக்கிறோம், இது உலக அளவில் மே 2017இலும் வெளியிடப்படும். குழந்தைகள் நகர்விலும் குழந்தை பராமரிப்பிலும் உலகளாவிய முன்னோடியாகிய 'Graco'வையும் நாங்கள் வெளியிடுகிறோம். இந்தத் துறையை வழிநடத்துவது புதுமையும் சமீபத்திய நாகரீக போக்குகளுமாக இருப்பதால், நாங்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பான, பாதுகாப்பான மற்றும் சிறந்த தரத்திலான பொம்மைகளை உருவாக்குவதிலும், நுகர்வோர் நடத்தையை மாற்றுகின்ற சிறந்த குழந்தை மற்றும் சிறந்த உலகத்தை உருவாக்குகின்ற நீடிக்கும் விளையாட்டு போன்ற புதிய கருத்துக்கள் மீதும் கவனம் செலுத்துகின்றோம்."
Mr. Neil Gadihoke, தலைமை மேலாளர் விற்பனை, Browntape Technologies Pvt. Ltd.
"ஈ-காமர்ஸ் தளங்களில் உள்ள சாத்தியமுள்ள விற்பனைகள் அபரிவிதமானவை. குழந்தைகள், கைக்குழந்தை மற்றும் மகப்பேறு தயாரிப்புகள் குறிப்பாக டையர் 2 மற்றும் டையர் 3 நகரங்களில் செழிக்கும், இங்கே விருப்பங்கள் அதிகமாக இருக்கும், வாங்கும் சக்தி அதிகரித்துக்கொண்டு இருக்கிறது, ஆனால் பிராண்டட் கடைகள் அல்லது சரக்குகள் கிடைப்பது ஒரு சவாலாக இருக்கிறது. ஈ-காமர்ஸ் தான் இந்த சந்தைக்கான பாதை. CBME 2017 இடம் இருந்து நல்ல வெளிப்பாட்டை நாங்கள் எதிர்பார்க்கிறோம்."
Mr. Anil Dagade, இயக்குநர், Kudos Kids Utilities Pvt Ltd.
"கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் CBME இந்தியாவுக்கு வருகை புரிந்து வருகிறோம் மற்றும் கண்காட்சியாளராக இதுவே எங்களுக்கு முதல் முறை. இந்த தளமானது எங்கள் தயாரிப்புக்கான உலகளாவிய வெளிப்பாட்டை அளிக்கிறது. இந்த கண்காட்சியின் மூலமாக எங்கள் பிராண்டை வளர்க்கவும் எங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும் நாங்கள் எதிர்நோக்குகின்றோம்."
Ms. Shreya Bhartia, உரிமையாளர், Draaz Impex
"குழந்தைகளுக்கான பாரம்பரிய ஆடைகளே எங்கள் தனித்திறமை மற்றும் இதனால் CBME India 2017வில், நாங்கள் கூட்டணியை ஏற்படுத்தகூடிய பல்வேறு பலசங்கிலி மற்றும் தனிமையான கடை உரிமையாளர்களை சந்திப்போம் என்று எதிர்பார்க்கிறோம். பல்வேறு சர்வதேச பிராண்ட்கள் இந்திய சந்தைக்குள் நுழைந்து இருப்பதை நாங்கள் கண்டோம் மற்றும் இந்திய பிராண்டுகள் இந்த போட்டியில் நிலைநிற்க வேண்டும். CBME India நிகழ்வில் பங்குபெறுவது இதுவே எங்களுக்கு முதல்முறை மற்றும் எங்கள் பிராண்டை விளம்பரப்படுத்தி, விழிப்புணர்வை உண்டாக்கி இந்த துறையின் பல்வேறு நிறுவனங்களுடன் இணைய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."
Mr. Sriram Prabhu, உரிமையாளர், Sri Ram Garments
" CBME India நிகழ்வில் பங்குபெறுவது இதுவே எங்களுக்கு முதல் முறை. நாங்கள் இந்த தளத்திற்கு புதியவர்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்குபெறுவதால் CBME India எங்களுக்கு எங்கள் பிணைப்பையும் தொழிலையும் விரிவுபடுத்தவும் வாய்ப்பை வழங்கும் என்றும் நம்புகிறோம். மகத்தான வெளிப்படுத்தலை நாங்கள் எதிர்பார்க்கிறோம் மற்றும் தயாரிப்புகளின் வெளியீடு மற்றும் பல்வேறு பிராண்டுகளை பார்ப்போம் என்றும் நம்புகிறோம்."
Mr. Sendilkumaar Muthukaruppan, உரிமையாளர், Meenakshi Overseas
"குழந்தைகள், கைக்குழந்தை மற்றும் மகப்பேறு தயாரிப்புகள் துறையானது இந்திய சந்தையிலே வளர்ச்சி அடைவதற்கான மகத்தான வாய்ப்புகள் உள்ளன, ஏனெனில் பிராண்டிங்குடன் எந்த ஆக்கப்பூர்வமான தயாரிப்புகளும் இதுவரை இருக்கவில்லை. CBME India குழந்தைகள், கைக்குழந்தை மற்றும் மகப்பேறு தயாரிப்புகள் துறையை இந்தக் காட்சியின் மூலம் ஒரு பாதையாக மாற்ற முயற்சிக்கிறது. இக்கண்காட்சியில் நாங்கள் முதல் முறையாக பங்குபெறுவதால், சமீபத்திய நல்ல தரமான குழந்தைகள் தயாரிப்புகள், பொம்மைகள், ஆடைகள் உள்ளிட்டவற்றுடன் எங்கள் தொழிலை மேம்படுத்த உதவக்கூடிய நல்ல வரவேற்பை நாங்கள் விநியோகஸ்தர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்."
Mr. Nikhil Ranade, விநியோக சங்கிலியின் தலைவர், RBG Trading & Ecommerce Private Limited
"இந்தத் துறையிலே ஒருங்கிணைக்கப்படாத வர்த்தகத்தை நாங்கள் பார்த்து இருக்கிறோம் ஆனால் ஈ-காமர்சில் இருக்கும் ஊக்கத்தின் காரணமாகவும் வர்த்தகம் செய்யும் செயல்முறையில் மாற்றம் ஏற்பட்டதாலும், புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளன, அவை வருகின்ற 3-4 ஆண்டுகளில் 20% - 30% வரை தொழிற்துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். நாங்கள் புதியவர்கள் என்பதால், பல சில்லரைவர்த்தகர்கள் வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், அது அவர்கள் சந்தையை புரிந்துகொள்ளவும் இத்துறையில் மக்களுடைய தேவைகளை புரிந்துகொள்ளவும் வழிவகுக்கும். ப்ளேஸ்கூலில் இருந்து பலர் வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், ஏனெனில் நாங்கள் காட்சிப்படுத்துகின்ற தயாரிப்புகள் அவர்களை சார்ந்தவை."
Mr. Bharatveer, மேலாண்மை இயக்குநர், Rondeyvoo Eurasia Pvt. Ltd.
"CBME Indiaவில் நாங்கள் இரண்டாவது முறையாக பங்கேற்கிறோம் மற்றும் இதிலிருந்து நாங்கள் அதிகமாக லாபம் அடைய முடியும் என்று நம்புகிறோம். பிராண்ட் உரிமையாளர்களாக நாங்கள் இந்த கண்காட்சியில் இவ்வாண்டு பெரிய பிராண்டுகள் பங்கேற்கும் என்று எதிர்பார்க்கிறோம், இது எங்களுக்கு சந்தையில் இருக்கும் பெரிய நிறுவனங்களுக்கான வெளிப்பாட்டை எங்களுக்கு தரும். ப்ரெஸ்ட் பம்புகள் மற்றும் பிற குழந்தைகள் மற்றும் மகப்பேறு தயாரிப்புகள் போன்ற புதிய தயாரிப்புகளை வெளியிட நாங்கள் எதிர்பார்க்கிறோம் மற்றும் அது வெற்றிகரமாக நிகழ்வும் என்றும் நம்புகிறோம்."
Mr. Mitul Vira, தொழில் வளர்ச்சி மேலாளர் , Prem Ratna Games and Toys
"நாங்கள் CBME Indiaவில் முதல் முறையாக பங்கேற்கிறோம் மற்றும் அதனால் நாங்கள் வெளிநாட்டு வாங்குநர்களுடன் இணைக்க எதிர்நோக்கம் கொண்டு இருக்கிறோம் ".
Mr. R.G Tantia, இயக்குநர், VT Exports Pvt. Ltd.
"குழந்தைகள், கைக்குழந்தை மற்றும் மகப்பேறு தயாரிப்புகள் துறையானது ஒவ்வொரு ஆண்டும் 2-3% விகிதத்தில் வளர்ந்து வருகின்றது. CBME India புதிய தயாரிப்புகளை வெளியிடுவதற்கும் காட்சிப்படுத்துவதற்கும் மகத்தான தளத்தை அளிக்கிறது. சந்தையில் போட்டி அதிகரித்து உள்ளதால் எங்கள் நிறுவனத்தில் நேர்மறையான வளர்ச்சியை நாங்கள் பார்த்துள்ளோம், சந்தை தொடர்ந்து வளரும்போது, நாங்கள் தானாகவே அதிகமாக உற்பத்தி செய்வோம், அதனால், இந்த கண்காட்சிக்காக எதிர்பார்ப்புடன் இருக்கிறோம்."
Mr. Vikas Jain, தொழில் பங்காளர், Vikas Cycle
" CBME Indiaவில் நாங்கள் வாக்கர்கள், பைக்குகள், கார்கள், மிதிவண்டிகள் உள்ளிட்ட குழந்தைகள் தயாரிப்புகள் பலவற்றை நாங்கள் வெளியிடுவோம். CBME India ஒரு நல்ல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உறவுகளை கட்டமைக்கவும் சந்தையில் புதிய நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கவும் எங்களுக்கு உதவும்."
Mr. Sreehari Peddireddi, இயக்குநர், Jungly World Pvt. Ltd.
" குழந்தைகள், கைக்குழந்தை மகப்பேறு துறை என்பது இந்தியாவில் வளர்வதற்கான அதிகமான ஆற்றல் உடைய வளர்ந்துவரும் ஒரு துறையாகும். வரும் ஆண்டுகளில் குறைந்தபட்சம் 20% வளர்ச்சியை பார்க்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம். CBME Indiaவில் நாங்கள் பங்கேற்பது இதுவே முதல் முறை; எங்களுக்கு மகத்தான எதிர்பார்ப்புகள் உள்ளன மற்றும் இது ஒரு மகத்தான வெற்றியாக அமையும் என்றும் நம்புகிறோம்."
Mr. Sanjay Xavier, தலைமை நிர்வாக அதிகாரி, Tiny Bee Apparels Private Limited
"என் கருத்துப்படி, குழந்தைகள், கைக்குழந்தை மற்றும் மகப்பேறு துறை என்பது பெரிய மற்றும் பசுமைமாறாத துறையாகும். இத்துறை என்றுமே பொருளாதார வீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டது கிடையாது. நாங்கள் இத்துறையில் 15% வருடாந்தர வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். இந்த ஆண்டு நாங்கள் குழந்தைகளுக்கான பிரிவை காட்சிப்படுத்துகிறோம் (0-5 ஆண்டுகள்). CBME Indiaவிடம் இருந்து எங்களுக்கு மகத்தான எதிர்பார்ப்புகள் உள்ளன, அதில் புதிய விற்பனையாளர்கள், நுகர்வோர் ஆகியோரை சந்தித்தல் மற்றும் சந்தைக்கு கணிசமான வெளிப்பாட்டை பெறுதல் ஆகியவை உள்ளடங்கும்."
Mr. Dipesh Savla, உரிமையாளர், M/s. A Star Marketing Pvt. Ltd.
"இந்தியா முழுவதிலும் நல்ல நெட்வொர்க்கை பெற விரும்பும் எவருக்கும் CBME India ஒரு மகத்தான தளம் என்று நாங்கள் நினைக்கிறோம். இந்தத் துறை ஒவ்வொரு ஆண்டும் 20% முதல் 30% வரை வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கண்காட்சியின் மூலம் சந்தையில் உள்ள பல்வேறு நிறுவனங்களிடம் எங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துவதற்கான மகத்தான வாய்ப்பை நாங்கள் பெறுகிறோம். வாய்ப்புள்ள வாடிக்கையாளர்களை சந்திக்க போதிய வாய்ப்புகளை நாங்கள் கடந்து வருவோம் என்றும் எங்கள் தொழிலை விரிவுபடுத்துவோம் என்றும் நாங்கள் நம்புகிறோம்."
Mr. Tushar Nakhate, தயாரிப்பு மேலாளர், Nobel Hygiene Pvt. Ltd.
"நாங்கள் பெரும்பாலும் குழந்தைகள் பராமரிப்பு தயாரிப்புக்களில் இருக்கிறோம் மற்றும் வருடந்தோறும் 27% வளர்ச்சியை கண்டு வரும் டயப்பர் சந்தையை கையாள்கிறோம். வரும் ஆண்டுகளில் இத்துறை 22%-24% வளர்ச்சியை காணும் என்று எதிர்பார்க்கிறோம் மற்றும் இந்த கண்காட்சியில் பல சில்லரை வர்த்தகர்களை பயன்படுத்திக்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கிறோம்."
Mr. Hurbert C. C Huang, தேசிய மேலாளர் - இந்திய செயல்பாடு Indian Operation Hip Lik Packaging Products Corp India Pvt. Ltd.
"எங்கள் வாடிக்கையாளர்களை சந்திக்க இது எங்களுக்கு ஒரு மகத்தான தளம் ஆகும். தேவை, எதிர்பார்ப்பு மற்றும் இத்துறையில் உள்ள இலக்கிற்கு ஏற்ப இத்துறை சுமார் 30% வளர்ச்சி அடைய எதிர்பார்க்கப்படுகின்றது. இது பெரிய தளம் என்பதால், இது எங்கள் தொழிலுக்கும் சாத்தியமுள்ள வாடிக்கையாளர்களை பயன்படுத்திக்கொள்ளவும் சிறந்ததாக இருக்கும்."
Mr. Krishna Karanth, இயக்குநர், Buzz Bazzar Trading Pvt. Ltd.
"துறையில் இருந்து நான் 15%-20% வளர்சியை வருடா வருடம் எதிர்பார்க்கிறேன். CBME Indiaவிற்கு முதல் முறையாக வருபவர்களாக, நாங்கள் எங்கள் பிராண்டை பார்த்துக்கொண்டு நாடு முழுவதிலும் அதை வெளியிடக்கூடிய நல்ல விநியோகஸ்தர்களை எதிர்பார்க்கிறோம், ஏனெனில் நாங்கள் குழந்தை தயாரிப்புகளில் இயற்கை தயாரிப்புகள் தொழிலில் இருக்கிறோம்."
Mr. Rajendra Hemnani, உரிமையாளர், Pooja Creation
"நாங்கள் குழந்தைகளுக்கான ஆடைகள் தொழிலில் இருக்கிறோம் மற்றும் இக்கண்காட்சி எங்களுடைய தயாரிப்பை இந்த துறையில் காட்சிப்படுத்துவதற்கான சிறந்த தளத்தை எங்களுக்கு அளிக்கிறது."
Mr. Vinod, உரிமையாளர் Gada, Kush Fashion
" CBME 2017இல், எங்கள் தொடர்புகளை விநியோகஸ்தர்களுடன் மேம்படுத்தி எங்கள் பிராண்டை பெரிய அளவில் முன்னேற்ற உதவக்கூடிய மகத்தான வரவேற்பையும் அதிகமான மக்களின் வருகையையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்."
Mr. William Georg, மேலாண்மை இயக்குநர், Aleva Naturals
"CBME India அனைத்து முக்கிய நிறுவனங்களையும் ஒன்றுதிரட்டி கொண்டு வந்து அவர்கள் துறையில் உள்ள புதிய போக்குகளை விவாதிப்பதற்கான தளத்தை அமைத்துக்கொடுப்பதன் மூலம் துறைக்கு உதவுகின்றது. குழந்தைகள் கைக்குழந்தை மகப்பேறு தயாரிப்புகள் துறையானது வளர்ச்சியடைகின்றது, மற்றும் சந்தையிலே ப்ரீமியம் குழந்தைகள் தயாரிப்புகளுக்கு அதிக தேவை இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. CBME India எங்களுக்கு பல வாய்ப்புகளை அளிக்கிறது மற்றும் பிற சர்வதேச சந்தைகளுக்குள் விரிவுபடுத்த எதிர்பார்க்கும் எங்களுக்கு ஒரு மகத்தான தளம் ஆகும் . நாங்கள் ப்ரீமியம் குழந்தைகள் சரும பராமரிப்பு அத்தியாவசியங்களையும் மகப்பேறு பராமரிப்பையும் கனடாவில் இருந்து CBME கண்காட்சியில் காட்சிப்படுத்துவோம்."
Mr. Ashish Gada, உரிமையாளர்/பங்காளர், Kute Kids
"நாங்கள் CBME இந்தியாவின் நிரந்தர குடும்பத்தினர், நாங்கள் அடைந்த முந்தைய அனுபவங்களில் இருந்து அதிக வளர்ச்சியை எதிர்பார்க்கிறோம். நாங்கள் மகத்தான கடைகளின் சங்கிலியோடு சந்தையில் பிராண்ட் நன்றாக தெரிவதையும் எதிர்பார்க்கிறோம், இது எங்கள் தொழிலை 25% வரை வளர்ச்சி அடையச் செய்யலாம்."
Mr. Ankita Wadhwa, பிராண்ட் மேலாளர், Sunheri Marketing Pvt Ltd
"CBME Indiaவில் நாங்கள் பங்குபெறுவது இதுவே முதல் முறை. எங்கள் ஐரோப்பா சார்ந்த பிராண்டை இந்தியாவில் வெளியிடுவதற்காக இந்த கண்காட்சியை நாங்கள் தேர்வுசெய்துள்ளோம். தொடர்புகளை பொருத்தவரை நாங்கள் ஒரு நல்ல வரவேற்பை எதிர்பார்க்கிறோம் மற்றும் நல்ல முதலீட்டாளர்கள், விநியோகஸ்தர்கள், ஆன்லைன் போர்டல்கள் உள்ளிட்டவற்றால் சந்தையில் நன்றாக தெரியக்கூடியவர்களாக இருப்போம் என்றும் எதிர்பார்க்கிறோம்."
Sish Chaudhary, நிறுவனர், Baby N Mom LLP
"CBME India புதிய பிராண்டுகளை காட்சிப்படுத்துவதற்கு இந்தியாவிலேயே 'சிறந்த' தளம் ஆகும். சாத்தியமுள்ள வாங்குநர்களிடம் இருந்து நாங்கள் பெரிய இணைப்பை உருவாக்கக்கூடிய இந்த நிகழ்வில் இருந்து நாங்கள் மகத்தான வரவேற்பை எதிர்பார்க்கிறோம்."
Mr. Manjeet Singh, உரிமையாளர், Variety New Born
" குழந்தைகள், கைக்குழந்தை மற்றும் மகப்பேறு தயாரிப்புகள் துறையானது இன்னமும் வளர்ந்துகொண்டு இருக்கும் ஒரு பிரிவு, இது வருடத்திற்கு மும்மடங்காக வளர்ச்சி அடையும். எங்கள் தயாரிப்புகளுக்கு வாடிக்கையாளர் மத்தியில் இந்த நிகழ்வின் மூலமாக நல்ல வெளிப்பாட்டை பெறுவோம் என்று எதிர்பார்க்கிறோம். இந்த நிகழ்வு நாங்கள் எதிர்பார்க்கும் பலனை அளிக்கும் என்று நம்புகிறோம்."
Ms. Chandrani Agarwal, இயக்குநர், Druidendo Softek Pvt. Ltd.
"CBME India போன்ற நிகழ்வின் மூலமாக சாத்தியமுள்ள வாகுநர்களை சென்றடைவதற்கு இது ஒரு நல்ல தளம், இதில் அனைத்து வாங்குநர்களும், சில்லரைவர்த்தகர்களும் தங்கள் புதிய படைப்புகள் மற்றும் சர்வதேச பிராண்டுகள் ஆகியோர் ஒரே கூரையின் கீழ் வந்து, தங்களிடம் இருக்கும் சிறந்ததை காட்சிப்படுத்துகிறார்கள். இக்கண்காட்சி எங்கள் தொழிலுக்கான புதிய வாடிக்கையாளர்களை பெற உதவும்."
Mr. Vaibhav Pahwa, தயாரிப்பு தொழில் வளர்ச்ச்சி மேலாளார் Bonny Products Pvt. Ltd.
"நாங்கள் எப்போதுமே CBME India உடைய ஒரு பகுதியாக இருந்து வருகிறோம்; ஒவ்வொரு ஆண்டும் இந்த கண்காட்சியில் இணைவது எப்போதுமே ஒரு மகத்தான அனுபவமாக இருந்து வருகிறது. குழந்தைகள், கைக்குழந்தை மற்றும் மகப்பேறு தயாரிப்புகள் துறையானது ஒரு வளர்ந்து வரும் துறையாகும், இதில் நுகர்வோர் குழந்தைகள் மற்றும் அவர்கள் சார்ந்த தயாரிப்புகளுக்கு பிராண்ட் உணர்வுள்ளவர்களாக மாறிக்கொண்டு வருகிறார்கள், ஆகையால் நாங்கள் இந்த ஆண்டும் நாங்கள் மகத்தான வரவேற்பை எதிர்பார்க்கிறோம்."
UBM India பற்றி:
UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடத்துபவராகும்.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து ubmindia.in என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
UBM plc பற்றி:
UBM plc உலகின் மிகப்பெரிய ப்யூர் ப்ளே B2B நிகழ்வு ஒருங்கிணைப்பாளர். இது அதிக டிஜிட்டல்மயமாக மாறிய உலகம், மிகவும் அர்த்தமுள்ள, மனித அளவிலான இணைப்பை ஏற்படுத்துவதன் மதிப்பு இவ்வளவு முக்கியத்துவமாக இருந்தது கிடையாது. UBMஇல், நாங்கள் சேவைசெய்யும் தொழிற்துறை பிரிவுகளுக்கான எங்கள் ஆழமான அறிவும் பற்றுதலும் மக்கள் வெற்றியடையக்கூடிய ஒரு மதிப்புமிக்க அனுபவத்தை உருவாக்க எங்களை அனுமதித்தது. எங்கள் நிகழ்வுகளில் நாங்கள் உறவுகளை உருவாக்குகிறோம், ஒப்பந்தங்களை முடிவுசெய்கிறோம் மற்றும் அவர்களுடைய தொழில்களை வளர்க்கிறோம். எங்கள் 3,750+ மக்கள், 20 நாடுகளுக்கு மேல் இருக்கிறார்கள், 50 வெவ்வேறு துறைகளில் சேவைசெய்கிறார்கள், அதில் நவநாகரீகம் முதல் மருந்து உட்பொருட்கள் வரை இருக்கின்றன. இந்த உலகளாவிய நெட்வொர்க்குகள், திறனுள்ள, பற்றுள்ள மக்கள் மற்றும் சந்தையை வழிநடத்தும் நிகழ்வுகள் தொழில்செய்யும் மக்கள் தங்கள் இலட்சியங்களை அடைவதற்கான உற்சாகமூட்டும் வாய்ப்புகளை அளிக்கின்றன.
மேலும் தகவல்களுக்கு, செல்லுங்கள் http://www.ubm.com;UBM கார்ப்பரேட் செய்திகளுக்கு, எங்களை டிவிட்டரில் பின் தொடருங்கள் @UBM ,UBM Plc LinkedIn
ஊடக தொடர்பு:
Roshni Mitra
[email protected]
+91-22-6172-7000
Mili Lalwani
[email protected]
+91-22-6172-7000
UBM India
Share this article