ஹைதராபாத், இந்தியா, April 10, 2017 /PRNewswire/ --
UBM India வழங்கும் தென்னிந்தியாவில் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் துறைக்கான தொழிற்த்துறை தளம்
UBM India, Renewable Energy India (REI) கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் RenewX உடைய இரண்டாம் நிகழ்வாகிய, ஒரு இரண்டு நாள் கண்காட்சியை (ஏப்ரல் 7-8) ஹைடெக்ஸ், ஹைதராபாத்தில் இன்று தொடங்கிவைத்தனர். இக்கண்காட்சியில் தென்னிந்தியாவின் பசுமை பொருளாதார சமுதாயத்தின் சபை ஒன்று திரண்டு வந்து தொழிற்துறை போக்குகள், சவால்கள் மற்றும் சந்தை கண்ணோட்டங்களை விவாதித்தன. ஆடம்பரமான தென்னிந்திய புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் சந்தையை பயன்படுத்திக்கொள்ளவும், அதற்குள் ஊடுருவவும் ஒரு தொழிற்துறை தளமாக அது சேவை செய்தது.
(Photo: http://mma.prnewswire.com/media/487629/RenewX_2017_UBM_India.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/479598/RenewX_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
RenewX 2017 உடைய தொடக்க விழா முக்கிய பிரமுகர்களான Shri Ajay Mishra, IAS, தலைவர் TNREDCL மற்றும் சிறப்பு தலைமை செயலாளர் ஆற்றல்துறை, தெலுங்கானா அரசு; Shri A. Sudhakar Rao, துணை தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், Telangana New மற்றும் Renewable Energy Development Corporation Limited; Mr. Shantanu Jaiswal, Bloomberg New Energy Finance;
Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India மற்றும் Mr. Rajneesh Khattar, குழு இயக்குநர், UBM India ஆகியோர் முன்னிலையில் திரளான தொழிற்துறை கூட்டத்தின் முன்பாக நடைபெற்றது.
இந்த கண்காட்சி 130 கண்காட்சியாளர்களை ஒன்றிணைத்து அழைத்து வந்தது, அதில் உற்பத்தியாளர்கள், EPCs, விநியோகஸ்தர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் உள்ளடங்குவர். இதன் இரண்டாம் நிகழ்வில், RenewX அளவிலும் ஆழத்திலும் வளர்ச்சி அடைந்து, தொழிற்துறை தலைவர்களையும் முக்கிய கண்காட்சியாளர்களையும் ஈர்த்துள்ளது, அதில் Greenko Energy Projects Pvt Ltd, REC Solar, Cleantech Solar Energy, Amplus Energy Solutions Pvt Ltd., Zhuhai Gmee Solar Equipment Co., Ltd, MachinePulse Tech Pvt. Ltd, Oriano Clean Energy Pvt. Ltd., Avi Solar Energy Pvt. Ltd, Brij Encapsulants, Sileaf Pvt Ltd, Relyon Solar Pvt Ltd, Hero Future Energies, Phocos India Solar Pvt Ltd., MECO Meters Pvt Ltd., Vision Mechatronics Pvt. Ltd, Bergen Associates, Premier Solar Systems Pvt. Ltd, Premier Solar Powertech Pvt. Ltd, Archimedes Green Energys Pvt Ltd., Greenvision Technologies, Surana Solar Ltd., Greentek India Pvt Ltd, Radite Energy, Solar Idea Pvt Ltd., Nuevosol Energy Pvt. Ltd., மற்றும் RenewSys India Pvt Ltd., உள்ளிட்ட பல அடங்கும்.
இந்த ஆண்டு, முதல் முறையாக ஒரு அர்ப்பணிக்கப்பட்ட சீன முகாமை கொண்டு இருக்கிறது. Sunworld Tech Corp, Ningbo Aike Electronic Technology Co. Ltd., GuangZhou Mango Energy Technology Co. Ltd, Shanghai Minjian Alu Co. Ltd, Taizhou Hangning Refrigeration Equipment Co.Ltd, உள்ளிட்ட பல சீன நிறுவனங்கள் மகத்தான மதிப்புப் கூட்டலையும் அறிவு பகர்தலையும் பார்வையாளர்களுக்கு வழங்கின.
RenewX 2017 நிகழ்வானது மத்திய பொதுத்துறை நிறுவனங்களான Solar Energy Corporation of India Limited (SECI), the Indian Renewable Energy Development Agency Ltd. (IREDA), Telangana New மற்றும் Renewable Energy Development Corporation Ltd (TNREDCL) மற்றும் National Small Industries Corporation (NSIC) ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டுள்ளது.
கண்காட்சிக்கு அருகாமையில் 'Sourcing the Sun' (சூரியனிடம் இருந்து ஆற்றல் பெறுதல்) என்னும் கருத்து உடைய ஒரு இரண்டு நாள் கருத்தரங்கு நடைபெற்றது, இது தொழிலில் புதுப்பிக்கக்கூடிய ஆற்றலை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தை சிறப்பித்துக் காட்டியது. இந்த மாநாடானது தொழிலுக்குள் சுத்தமான ஆற்றலை ஒருங்கிணைப்பதை அதிகரிக்கக்கூடிய சிறந்த தீர்வுகள் மற்றும் நடைமுறைகள் மீது கவனம் செலுத்தியது. இந்த மாநாடு 45 பேச்சாளர்களையும், 150க்கும் மேற்பட்ட துறைசார்ந்த பிரமுகர்களையும் ஈர்த்தது, மற்ற துறையில் இருந்து துறை தலைவர்களை அழைத்து சூரியசக்தி துறை மற்றும் அதன் ஆற்றலையும் குறித்த ஒரு கண்ணோட்டத்தை அளிக்க முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
கண்காட்சியின் முதல் நாளில் 'ஆர்வத்தை தேவையாக மாற்றுதல்' ' இந்திய சூரியசக்தி மேற்கூரை சந்தை மீதான சர்வதேச கண்ணோட்டம்', 'சூரியவொளி பக்கம் மேலே' (இதில் துறை தலைவர்கள் இந்த துறையில் உள்ள மிகவும் அழுத்தம் மிக்க பிரச்சனைகள் குறித்த கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்), 'இன்றா அல்லது நாளையா?' (செயல்திட்ட செலவுகள் முதல் டேரிஃப்கள் முதல் நிதிநிலை வரை வாடிக்கையாளரின் மனதிலும் தொழில்நுட்ப முன்வைப்புகளிலும் இருக்கும் கேள்விகளை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு தனித்துவமான அமர்வு) உள்ளிட்ட அமர்வுகள் இடம்பெற்றன.
இரண்டாம் நாளில் 'மூன்றாம் தரப்பினர் நிதிவழங்குதல்: கூரைக்கு மேலான இலக்குகளை அடைவதில் ஒரு போக்கை மாற்றும் கருவி?', 'இருபுரமும் கூர்மையான வாளின் மீது நடத்தல் : இந்திய சூழ்நிலையில் செயல்திட்ட நிதியளிப்பு மற்றும் இடர் மேலாண்மை', 'மாற்றுப் புள்ளி: பீவி செல்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மற்றும் செலவை உகந்ததாக்குவதற்கான உற்பத்தி போக்குகள்' , 'இந்தியாவில் ஆர்ஈ செயல்திட்டங்களுக்கு நிதிவழங்குதல்' மீதான ஒரு முன்வழங்கல், ஆகியவற்றோடு ஒரு கருத்துமிக்க முன்வழங்கல்கள் ஆகியவை இடம்பெற்றன.
RenewX 2017 உடைய தொடக்க விழாவில் பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் என்பது இந்தியாவின் முழுமையான மின்சாரம் வழங்கும் திட்டத்திற்கான முக்கிய காரணி ஆகும். எண்ணற்ற மரபு சாரா எரிசக்தி வளங்களை பெற்று இருந்தாலும் சுத்தமான ஆற்றல் பாதுகாப்பை வழங்குவது என்பது நமது நாடு சந்தித்து வரும் சவால்களில் ஒன்றாகும். 175 GW புதுப்பிக்கக்கூடிய மின்சக்தியை 2022 ஆம் ஆண்டுக்குள் பெற வேண்டும் என்கிற அரசாங்கத்தின் ஆர்வம் மிக்க இலக்கானது உலகளாவிய ஆர்வத்தைப் பெற்றுள்ளது மற்றும் மதிப்பு சங்கிலியில் மகத்தான முதலீட்டு வாய்ப்புகளை இது அளிக்கும். தென்னிந்தியாவின் பிற மாநிலங்களுடன், சூரிய சக்திக்கு தீவிரமான ஆதரவு அளிப்பதில் தெலுங்கானாவும் ஒரு ஈடுபாடான பங்கை வகிக்கிறது மற்றும் தனது லாபகரமான மற்றும் சாதகமான அரசாங்க மற்றும் தொழிற்துறை கொள்கைகள் மூலமாக இத்துறைக்கான உத்தரவாதங்களையும் வைத்துள்ளது. இதன் விளைவாக, இந்த பகுதியில் உள்ள இந்த துறையானது சர்வதேச ஆர்வத்தின் ஒரு உட்புகுதலை கண்டுள்ளது, இதன் விளைவாக முக்கிய செயல்திட்டங்களில் முதலீடுக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், RenewX உடைய நமது இரண்டாம் நிகழ்வு தென்னிந்தியாவில் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் துறைக்கான வளர்ச்சியை துரிதப்படுத்தி நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்க முற்படுகின்றது."
UBM India பற்றி:
UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடத்துபவராகும்.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து ubmindia.in என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
UBM plc பற்றி:
UBM plc உலகின் மிகப்பெரிய ப்யூர் ப்ளே B2B நிகழ்வு ஒருங்கிணைப்பாளர். இது அதிக டிஜிட்டல்மயமாக மாறிய உலகம், மிகவும் அர்த்தமுள்ள, மனித அளவிலான இணைப்பை ஏற்படுத்துவதன் மதிப்பு இவ்வளவு முக்கியத்துவமாக இருந்தது கிடையாது. UBMஇல், நாங்கள் சேவைசெய்யும் தொழிற்துறை பிரிவுகளுக்கான எங்கள் ஆழமான அறிவும் பற்றுதலும் மக்கள் வெற்றியடையக்கூடிய ஒரு மதிப்புமிக்க அனுபவத்தை உருவாக்க எங்களை அனுமதித்தது. எங்கள் நிகழ்வுகளில் நாங்கள் உறவுகளை உருவாக்குகிறோம், ஒப்பந்தங்களை முடிவுசெய்கிறோம் மற்றும் அவர்களுடைய தொழில்களை வளர்க்கிறோம். எங்கள் 3,750+ மக்கள், 20 நாடுகளுக்கு மேல் இருக்கிறார்கள், 50 வெவ்வேறு துறைகளில் சேவைசெய்கிறார்கள், அதில் நவநாகரீகம் முதல் மருந்து உட்பொருட்கள் வரை இருக்கின்றன. இந்த உலகளாவிய நெட்வொர்க்குகள், திறனுள்ள, பற்றுள்ள மக்கள் மற்றும் சந்தையை வழிநடத்தும் நிகழ்வுகள் தொழில்செய்யும் மக்கள் தங்கள் இலட்சியங்களை அடைவதற்கான உற்சாகமூட்டும் வாய்ப்புகளை அளிக்கின்றன.
மேலும் தகவல்களுக்கு, செல்லுங்கள் http://www.ubm.com ; UBM கார்ப்பரேட் செய்திகளுக்கு, எங்களை டிவிட்டரில் பின் தொடருங்கள் @UBM ,UBM Plc LinkedIn
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-61727000
UBM India
Share this article