பெங்களூர், April 7, 2017 /PRNewswire/ --
IMA® (இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அக்கவுன்டன்ட்ஸ்), பெங்களூரில் மார்ச் 25, 2017 அன்று தனது வருடாந்திர மாணவர் வழக்கு போட்டியை நடத்தியது. சுமார் 50 மாணவர் குழு சமர்ப்பிப்புகளின் தொகுப்பில் இருந்து நடைபெற்ற இறுதிப்போட்டியை தொடர்ந்து பூனேவில் உள்ள Brihan Maharashtra College of Commerce (BMCC) மகத்தான வெற்றியாளராக வெளிவந்தனர்.
(Photo: http://mma.prnewswire.com/media/487250/1st_Place_Team_Brihan_Maharashtra_College_of_Commerce.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/487251/2nd_Place_Team_Chennai_s_Ethiraj_College_for_Women.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/487252/3rd_Place_Team_Symbiosis_College_of_Arts_and_Commerce_Pune.jpg )
பங்கேற்பதற்காக, கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் ஒரு மேலாண்மை வழக்குக்கான சிறந்த தீர்வை தீர்மானிப்பதற்காக மூன்று முதல் ஐந்து மாணவர்கள் உள்ளடங்கிய குழு ஒன்றை தேர்வுசெய்தனர். மாணவர் குழுக்கள் தங்கள் வழக்கு மதிப்பாய்வுகளை சமர்ப்பித்தனர், அவை ஒரு முதற்கட்ட மதிப்பாய்வை கடந்துசென்றன. முதன்மையான எட்டு குழுக்கள் தேர்வுசெய்யப்பட்டு தங்கள் வழக்கை ஒரு நடுவர் மன்றத்திடம் முன்வைக்க அழைக்கப்பட்டனர். இறுதிப்போட்டிக்கு வந்த குழுக்களில் Brihan Maharashtra College of Commerce, பூனே; Christ University, பெங்களூர்; Ethiraj College for Women, சென்னை; Indian Institute of Technology (IIT), குவஹாத்தி; Indian Institute of Technology (IIT), சென்னை; Jain College, பெங்களூர்; Manav Rachna International University, ஹரியானா; மற்றும் Symbiosis College of Arts and Commerce, பூனே ஆகியவை உள்ளடங்கும்.
BMCC எவ்வாறு இந்த போட்டிக்கு தயாரானது என்று கேட்டபோது "முதலாவதாக, நாங்கள் முழு வழக்கையும் மனதில் பதியவைக்கும் வரை வழக்கின் மீது தாக்குதலை ஏற்படுத்த தொடங்கினோம். பின்னர், நாங்கள் உயர் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகள் மற்றும் சாத்தியமுள்ள பிரச்சனைகளின் பட்டியல் ஒன்றை ஏற்படுத்தி ஒன்றன் பின் ஒன்றாக அவற்றின் மீது கவனம் செலுத்தினோம்," என்றார் Aditya Sudhir Shelar. "எங்கள் உரைநடை கல்வியை நடைமுறை உலகத்திலே சோதிப்பதற்கான சிறந்த வாய்ப்பாக இந்த வழக்கு ஆய்வு இருந்தது. பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதிலும், தீர்மானம் எடுப்பதிலும் ஒரு மேலாளரின் கண்ணோட்டத்தை உருவாக்கவும் இது எங்களுக்கு உதவியது."
அதேநேரம், சென்னையில் உள்ள Ethiraj College for Women இருந்து வந்த குழுவினர் முதல் இரண்டாம்நிலை வெற்றியாளராக வந்தனர், பூனேவின் Symbiosis College of Arts and Commerce இரண்டாம் இரண்டாம்நிலை வெற்றியாளராக வென்றனர்.
"இந்த போட்டி ஒரு மகத்தான கற்கும் அனுபவமாக இருந்து வந்தது. எங்கள் கருத்துக்களையும் கண்ணோட்டத்தையும் தன்னம்பிக்கையோடும் உறுதியோடும் முன்வைக்க நாங்கள் கற்றுக்கொண்டோம். இந்த நிகழ்வில் இருந்து நாங்கள் பெற்றுக்கொண்ட மகத்தான காரியம் இது தான்," என்றார் Niveditha K, Ethiraj College for Women குழுவின் ஒரு அங்கத்தினர்.
வெற்றிபெற்ற குழுக்கள் முறையே US$1500, US$1000, மற்றும் US$500 பெற்றுக்கொண்டனர். நிதிநிலை வெகுமதியோடு கூடுதலாக, முதல் மூன்று குழுக்களின் அங்கத்தினர்களுக்கும் ஒவ்வொருவரும் தலா US$850 மதிப்புவாய்ந்த CMA® (Certified Management Accountant) உதவித்தொகையை பெறுவதற்கான வாய்ப்பை பெறுவார்கள்.
உலக அளவில், IMA பல்வேறு வகையான விருதுகள், போட்டிகள் மற்றும் உதவித்தொகை நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி அளித்து தங்கள் சாதனைகளுக்கான அங்கீகரிப்பை மாணவர்கள் பெற்றுக்கொள்ளவும் எதிர்கால கணக்கு மற்றும் நிதிநிலை தொழில்முறையாளர்கள் இடையே ஒரு ஆர்வத்தை தூண்டும், சோதித்துபார்க்கும் மற்றும் சூழ்நிலைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்கவும் உதவுகின்றது.
இந்தியாவில் மாணவர் வழக்கு போட்டியானது John Wiley and Sons, Inc. (Wiley), CMA Learning System உடைய பிரசுரிப்பாளர் மற்றும் Miles Professional Education (Miles), இந்தியாவில் IMA ப்ளாட்டினம் - அங்கீகரிக்கப்பட்ட விமர்சனம் வழங்குநர் ஆகியோரின் கூட்டணியினால் வழங்கப்படுகின்றது.
IMA® (இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அக்கவுன்டன்ட்ஸ்) குறித்து
IMA, தொழிலில் கணக்கர்களாகவும் நிதிநிலை தொழில்முறையாளர்களாகவும் இருப்பவர்களின் கழகம், மேலாண்மை கணக்கு தொழில்முறையை முன்னேற்றுவதில் சிறப்பான கவனம் செலுத்தும் மிகப்பெரிய மற்றும் அதிகம் மதிக்கப்படுகின்ற ஒரு கழகம் ஆகும். உலக அளவில், IMA ஆராய்ச்சி CMA® (Certified Management Accountant) நிகழ்ச்சி, தொடரும் கல்வி, நெட்வொர்க்கிங் மற்றும் உயர்ந்த நெறிமுறையான தொழில் நடைமுறைகளின் ஆலோசனை ஆகியவற்றின் மூலமாக இந்த தொழிலுக்கு ஆதரவு அளிக்கிறது. IMAவிடம் 140 நாட்களில் இருந்து 85,000க்கும் அதிகமான அங்கத்தினர்களின் உலகளாவிய பிணைப்பும் மற்றும் 300 தொழில்முறையாளர்கள் மற்றும் மாணவர் குழுக்கள் இருக்கின்றனர். . மாண்ட்வேல், நியூ ஜெர்சி, யூ.எஸ்.ஏ-வில் தலைமையகத்தைக் கொண்டுள்ள IMA தனது நான்கு உலகளாவிய பிராந்தியங்கள் மூலமாக அந்தந்த பகுதிகளுக்கான சேவைகளை வழங்குகின்றது: அமெரிக்கா, ஆசியா/பசிபிக், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு/இந்தியா.
IMA குறித்த மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து வருகைதாருங்கள் http://www.imanet.org.
ஊடக தொடர்பு:
Chandan Kumar
[email protected]
+91-8897502340
Pranesh Krishnan
[email protected]
+971-55-9677-974
IMA® (இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அக்கவுன்டன்ட்ஸ்)
Share this article