புதுதில்லி, March 30, 2017 /PRNewswire/ --
தென்னாப்ரிக்கா மற்றும் இந்தியாவில் Luxury Maison ஐ தென்னாப்ரிக்க நட்சத்திரம் பிரநிதித்துவப்படுத்துவார்.
உலகத்தின் முன்னனி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான AB de Villiers,தென்னாப்ரிக்கா மற்றும் இந்தியாவில் luxury Maison - ஐ பிரநிதித்துவம் செய்ய மாண்ட்ப்ளாங் ப்ராண்டின் புதிய தூதராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். கடிகாரங்கள், எழுதுபொருட்கள், ஆண்கள் உபயோகிக்கும் பொருட்கள், தோல் பொருட்கள் உள்ளடக்கிய மாண்ட்ப்ளாங்கின் அனைத்துப் பொருள் வகைகளின் முகமாக அவர் இருப்பார்.
(Photo: http://mma.prnewswire.com/media/483778/Montblanc_AB_de_Villiers_Brand_Ambassador.jpg )
தென்னாப்ரிக்காவில் பிறந்த Abraham Benjamin de Villiers கிரிக்கெட் விளையாட்டில் நேர்த்தியான திறமையாளர் எனப் போற்றப்படுகிறார். பன்முகத் திறமை கொண்ட விளையாட்டு வீரரும் 33 வயதானவருமான இவர் வல்லமைமிக்க பேட்ஸ்மேன், திறமையான விக்கெட் கீப்பர், பொறாமையூட்டக்கூடிய ஃபீல்டர் ஆவார். இவர் தற்சமயம் தென்னாப்ரிக்காவின் ஒரு நாள் சர்வதேச அணிக்கு கேப்டனாக இருக்கிறார்.
எங்களுடைய மாண்ட்ப்ளாங் குடும்பத்தின் புதிய தூதராக AB de Villiers-ஸை வரவேற்பதில் நாங்கள் மிகவும் பூரிப்படைகிறோம். இன்றைக்கு உலகத்திலிருக்கும் மிகவும் அற்புதமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருக்கிறார்" என்று மாண்ட்ப்ளாங்கின் சி இ ஓ - ஆன Jérôme Lambert, கூறினார். மேலும் அவர், ` அவருடைய விளையாட்டில் தகர்த்தெறியக்கூடிய உள்ளுணர்வோடு கூடிய புதுமைகளைச் செய்யக்கூடிய அணுகுமுறை கொண்ட AB de Villiers அதே முன்னோடி முயற்சியில் மான்ட்ப்ளாங்கின் எல்லைகளையும் உந்தி முன்னெடுத்துச் செல்வார்" என்றும் சொன்னார்.
De Villiers தொழில்முறையிலான டென்னிஸை தனது தொழில்வாழ்க்கையாக பின்பற்றிச் சென்றிருக்கலாம் ஆனால் அவர் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறும் போது கிரிக்கெட்டில் அக்கறை செலுத்த தீர்மானித்ததுடன் 2004 ஆம் ஆண்டு தனது 20 ஆவது வயதில் சர்வதேச விளையாட்டில் அறிமுகமானார். அவருடைய பேட்டிங் சாதனைகளுடன் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட்டில் விரைவான 50, 100, 150 எடுத்த சாதனைகளையும், தென்னாப்ரிக்க விளையாட்டு வீரர்களில் விரைவாக சதம் அடித்த சாதனையும், T20I பந்தயத்தில் விரைவாக 50 எடுத்த தென்னாப்ரிக்கர் என்கிற சாதனையையும் செய்தவர். பூஜ்யம் எடுக்காமல் அதிக டெஸ்ட் இன்னிங்ஸ் (78) ஆடியவர் என்கிற சாதனையையும் வைத்திருக்கிறார்.
கடந்த பத்தாண்டிற்கும் மேலாக தென்னாப்ரிக்காவுக்காக திறம்பட செயல்பட்டதோடு AB de Villiers அவருடைய வழக்கத்திற்கு மாறான திறமையை இந்தியாவுக்கும் கொண்டு சென்று இந்திய ப்ரிமீயர் லீக்கின் முதல் மூன்று ஆண்டுகள் டெல்லி டேர்டெவில்ஸுக்காக விளையாடினார். 2011 ஆம் ஆண்டில் அவர் ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணியில் சேர்ந்து அதிலேயே இருந்து வருகிறார்.
உலகெங்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியவராக இருந்து வரும் AB de Villiers அவருடைய தனித்துவமான ஆளுமையையும், பன்முகத் திறமையையும் அவருடைய மாண்ட்ப்ளாங் தூதர் என்கிற புதிய ரோலுக்கும் கொண்டு வருவார்.
மாண்ட்ப்ளாங் பற்றி:
1906 ஆம் ஆண்டிலிருந்து முன்னோடி ஊக்கத்தின் வழிக்காட்டலில் தடைதகர் புதுமைகளால் எழுத்துக் கலாச்சாரத்தில் ஒரு புரட்சியை மாண்ட்ப்ளாங் ஏற்படுத்தியது. இன்றைக்கு, Maison அதனுடைய ஒவ்வொரு பொருள் வகையிலும் தடைகளை மீறி நேர்த்தியான கலையாக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது: ஆடம்பரமான எழுது பொருட்கள், கடிகாரங்கள், தோல்பொருட்கள், உபபொருட்கள், நறுமணப் பொருட்கள், கண்ணாடிகள் என அனைத்திலும் உச்சத்தில் இருக்கிறது. ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் தயாரிக்கப்படும் எழுது பொருட்கள், Le Locle மற்றும் Villeret ல் இருக்கும் ஸ்விஸ் ஜூராவில் தயாரிக்கப்படும் கடிகாரங்கள் அல்லது இத்தாலியின் ஃப்ளோரன்ஸில் தயாரிக்கப்படும் தோல் பொருட்கள் என ஒவ்வொரு பொருளின் புதுமையாக்கத்திலும் மாண்ட்ப்ளாங் புதிய செயல்பாட்டையும், தகர்த்தெறியும் வடிவங்களையும் Maison - ன் பாரம்பரியமான நளினத்துடனும், அதனுடைய திறமைவாய்ந்த கலைஞர்களின் மூலமாக உயர் தரத்துடன் வடிவமைக்கிறது. மிகவும் முன்னோடியான யோசனைகளிலிருந்து பிறந்து வாழ்நாள் தோழமையாக பிரதிபலிக்கும் அதனுடைய பணியில் மாண்ட்ப்ளாங் சின்னம் என்பது ஒப்பற்ற செயல்பாட்டுக்கும், புதுமையாக்கத்துக்கும், தரத்துக்கும், பாணியை வெளிப்படுத்துவதற்குமான ஒரு முத்திரையாக இருக்கிறது. அதனுடைய தொடக்க காலம் கையெழுத்துக் கலாச்சாரத்தோடு ஆழமாக வேரூன்றியிருப்பதால் மாண்ட்ப்ளாங் தொடர்ந்து அதனுடைய கலாச்சார கடமையை உலகெங்கிலும் பல வடிவங்களில் கலைகளையும், பண்பாட்டையும் பலவிதமான முயற்சிகள் மூலம் உருவாக்கி ப்ரமோட் செய்து வருவதோடு கலைகளின் முன்னேற்றத்துக்கு ஆதரவளிக்கும் நவீன கால புரவலர்களையும் கெளரவித்து வருகிறது.
பத்திரிக்கைக்கான தகவல்
மாண்ட்ப்ளாங் ப்ரஸ் லவுஞ்சில் அனைத்துத் தகவல்களும், புகைப்படங்களும் தரவிறக்கம் செய்யக் கிடைக்கிறது.
எங்களைத் தொடர:
ஃபேஸ்புக்: http://www.facebook.com/montblanc
இன்ஸ்டாக்ரம்: http://www.instagram.com/montblanc
ட்விட்டர்: http://www.twitter.com/montblanc_world
ஸ்நாப்சாட்: MontblancWorld
யூ ட்யூப்: http://www.youtube.com/montblanc
ஊடகத் தொடர்பு
Prerika Rao
அக்கவுண்ட் டைரக்டர், VTY கம்யூனிகேஷன்ஸ்
[email protected]
+91-11-46010311
Share this article