மும்பை, March 30, 2017 /PRNewswire/ --
பயன்பாட்டு கட்டண சேவைக்கான நுகர்வோரின் பயன்பாடு செயல்முறை அளவையும் வருவாயையும் ஊக்கப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
MoneyOnMobile, Inc. (OTCQX: MOMT) நிறுவனம் BSES Yamuna Power Limited உடன் ஒரு கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தத்தை அறிவித்தது , இது தன் 1.60 மில்லியன் நுகர்வோரும் MoneyOnMobile தன் 3,30,000 சில்லரை அவுட்லெட்கள் அல்லது MoneyOnMobile மொபைல் வாலெட் ஆப் மூலமாகவோ தங்கள் மின் கட்டணத்தை செலுத்துவதற்கான திறனை அளிக்கும்.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161026/432722LOGO )
"MoneyOnMobile பல 100 மில்லியன் வாடிக்கையாலர்கள் இந்தியா முழுவதிலும் இருந்து தங்கள் நிதிநிலை பரிவர்த்தனைகளை செய்ய உதவி இருக்கிறது, மற்றும் இப்போது BSES Yamuna Power Limited, உடனான கூட்டணியுடன், இன்னும் அதிகமானோருக்கு எங்களால் உதவ முடியும்," என்று Ranjeet Oak, MoneyOnMobile உடைய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, கருத்து தெரிவித்தார்.
"இந்தியாவில் உள்ள பல நுகர்வோர் தங்கள் கட்டணங்களை ரொக்கமாக செலுத்துகிறார்கள். அவர்கள் ஒரு வசதியான சில்லரை அவுட்லெட்டில் அல்லது மொபைல் வாலெட் மூலமாக தங்கள் கட்டணங்களை செலுத்துவதற்கான ஒரு தீர்வை நாங்கள் அளிக்கிறோம். இது எங்கள் சில்லரைவர்த்தகர்கள் செய்யப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் MoneyOnMobile இடம் இருந்து கமிஷன் பெறுவதற்கு உதவுகின்றது," என்றார் Harold Montgomery, MoneyOnMobile Inc.உடைய தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி
BYPL -ஐ பற்றி
BSES Yamuna Power Ltd தோராயமாக 200 சதுர கிமீ பரப்பளவில் இந்தியாவின் தலைநகரமான மத்திய மற்றும் கிழக்கு தில்லியில் மின்சாரம் விநியோகிக்கிறது. கீழ்காணும் பகுதிக்கான மின் விநியோக சேவை BSES Yamuna Power Ltd நிறுவனத்தால் வழங்கப்படுகின்றது: பாஹர்கஞ்ச், படேல் நகர், தார்யகஞ்ச், யமுனா விஹார், கரவால் நாகா, லக்ஷ்மி நகர், ஜி டி ரோடு, மயூர் விஹார், சாந்தினி சவுக், கிருஷ்ண நகர், ஜிமில், நந்த் நாக்ரி, உள்ளிட்டவை. BSES Yamuna Power Ltd உடைய மின் விநியோகத்தின் கீழ் வரும் பகுதிகளுக்கு கிலோமீட்டருக்கு 4203 நபர்கள் என்கிற மக்கள் தொகை அடர்த்தி இருக்கின்றது. இந்த மின்சார நிறுவனம் சுமார் 16 லட்சம் நுகர்வோருக்கு சேவை வழங்குகிறது. BYPL குறித்து மேலும் விவரங்களுக்கு, தயவுசெய்து பார்க்கவும் http://www.bsesdelhi.com/.
MoneyOnMobile Inc.-ஐ பற்றி
MoneyOnMobile Inc. என்பது ஒரு உலகளாவிய மொபைல் கட்டண தொழில்நுட்பம் மற்றும் செயல்முறைபடுத்துதல் நிறுவனம். MoneyOnMobile என்பது ஒரு எளிய SMS உரை செயல்பாட்டின் மூலம் அல்லது ஒரு MoneyOnMobile பயன்பாட்டின் மூலம் அல்லது இணைய போர்டல் மூலம் இந்திய நுகர்வோர் மொபைல் தொலைப்பேசிகளை பயன்படுத்தி சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் பணம் செலுத்த அல்லது ஒரு செல்போனில் இருந்து மற்றொன்றிற்கு பணப்பரிவர்த்தனை செய்ய உதவுகின்ற ஒரு மொபைல் கட்டண சேவை வழங்குநர் ஆகும். இந்த சேவை இப்போது இந்திய நுகர்வோருக்கு நாடு முழுவதிலும் இருந்து 3,30,000 சில்லரைவர்த்தக இடங்களில் வழங்கப்படுகின்றது. MoneyOnMobile குறித்து The New York Times இல் வாசியுங்கள் New York Times - MoneyOnMobile.
தற்காப்பு அறிக்கை
இந்த வெளியீடு எந்த பொருளின் பாதுகாவலையும் விற்பதற்கான முன்வைப்பு அல்லது வாங்குவதற்கான கோரிக்கைகளையும் கொண்டு இருக்கவில்லை. இந்த வெளியீட்டில் இடர்களும் நிச்சயமற்றத்தன்மைகளும் இருக்கும் எங்களுடைய தற்போதைய எதிர்பார்ப்புகள், கணிப்புகள் மற்றும் யூகங்களின் அடிப்படையிலான சில முன்னோக்கு அறிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வெளியீட்டில் இருக்கும் முன்னோக்கிய அறிக்கைகள் இன்றைய தேதியில் எங்களுக்குக் கிடைத்து இருக்கும் தகவல்களின் அடிப்படையிலானவை. ஆகஸ்டு 19, 2016 அன்று பூர்த்திசெய்யப்பட்ட படிவம் 10-K இல் வெளியிடப்பட்ட இடர் காரணங்கள் உள்ளிட்ட எங்கள் தொழிலோடு தொடர்புடைய இடர்கள் மற்றும் நிச்சயமற்றத்தன்மைகளின் காரணமாக இத்தகைய முன்னோக்கு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள அல்லது குறிப்பால் உணர்த்துகின்றவற்றில் இருந்து எங்கள் உண்மையான முடிவுகள் பொருளாதாரரீதியாக வேறுபடலாம். முன்னோக்கு அறிக்கைகளில் எதிர்காலம் குறித்த எங்கள் எதிர்பார்ப்புகள், நம்பிக்கைகள், உள்நோக்கங்கள் அல்லது உக்திகள் உள்ளடங்கும் மற்றும் அவை "எதிர்பார்க்கிறோம்", "நம்புகிறோம்", "எதிர்நோக்குகிறோம்", "முற்படுகிறோம்", "ஒருவேளை நடக்கலாம்", "வேண்டும்" மற்றும் "செய்யும்" அல்லது அது போன்ற முன்னோக்கு வார்த்தைகளினால் அடையாளம் காணப்படலாம். புதிய தகவல்கள், எதிர்கால நிகழ்வுகள் அல்லது வேறு எவற்றின் முடிவினாலும் இந்த அச்சு வெளியீட்டிலே இந்த தகவல்களை வெளியிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நாங்கள் யூகிக்கிறோம்.
கார்ப்பரேட் தகவல்தொடர்புகள் தொடபுக்கு:
Navaz Damania
துணை தலைவர், கார்ப்பரேட் தகவல்தொடர்புகள்
61, MoneyOnMobile ஹவுஸ்
ராமசந்திரா லேன், மலாட் மேற்கு
மும்பை - 400064
தொ: +91-22-45021520
மொபைல்: +91-9167122661
[email protected]
Share this article