கொல்கத்தா, March 24, 2017 /PRNewswire/ --
UBM India, இந்தியாவில் நகை கண்காட்சிகளின் மிகப்பெரிய ஒருங்கிணைப்பாளர், இன்று கிழக்கு இந்தியாவில் மூன்றாவது சர்வதேச B2B கண்காட்சியை அறிவித்தனர் - the Kolkata Jewellery & Gem Fair (KJGF) இது 8-10 ஏப்ரல், 2017 தினங்களில் மிலான் மேலா, கொல்கத்தாவில் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. இக்கண்காட்சி நாடு முழுவதிலும் இருந்து 150 கண்காட்சியாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது, குறிப்பாக கிழக்கு இந்தியாவின் நகை கேந்திரம் மற்றும் தென் கிழக்கு ஆசியாவின் அண்டை நாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
(Logo: http://mma.prnewswire.com/media/481743/KJGF_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
KJGF உடைய 3ஆம் நிகழ்வு மூன்று நாள் நிகழ்வாக அளவுகோல்களை உயர்த்துவதோடு இந்தியாவில் நகைத் துறையின் வணிகத்தை ஊக்கப்படுத்தவும் உள்ளது. இந்த ஆண்டு பங்கேற்கும் கண்காட்சியாளர்களில் வைரம், தங்கம், வெள்ளி, ரத்தின கற்கள், இயந்திரங்கள், பேக்கேஜிங் மற்றும் அதோடு தொடர்புடைய சேவைகள் ஆகியவற்றின் உற்பத்தியாளர்கள், மொத்தவியாபாரிகள் மற்றும் டீலர்கள், மற்றும் வணிக மற்றும் அரசாங்க அமைப்புகளில் இருந்து பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளடங்குவர். விழாக்கால கொண்டாட்டங்கள் மற்றும் கோடி திருமண காலத்தின் தொடக்கத்தோடு ஒன்றிணைகின்ற, KJGF 2017 வங்காள புத்தாண்டான போய்லா பாய்சாக்குக்கும் அக்ஷயதிரிதியை என்னும் மங்களகரமான நாளுக்கும் முன்பாக சரியான நேரத்தில் இடம்பெறுகின்றது.
மேற்கு வங்காள அரசாங்கத்தினாலும் முக்கிய கழகங்களான Calcutta Gem & Jewellery Welfare Association (CG&JWA), Bangiya Swarna Shilpi Samity (BSSS) மற்றும் Swarna Shilpa Bachao Committee ஆகியவற்றாலும் நன்கு ஆதரிக்கப்பட்ட KJGF, வாங்குநர்களும் விநியோகஸ்தர்களும் இணையவும், பிணைப்பை ஏற்படுத்தவும், கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும், புதிதாக வரும் போக்குகளை கண்டுபிடிக்கவும், தொழில் வாய்ப்புகளை உருவாக்கவும் அற்புதமான தளத்தை வழங்க உறுதியளிக்கிறது. சர்வதேச அளவில், இலங்கை, நேப்பால், வங்காளதேசம் மற்றும் யு.எஸ் ஆகிய நாடுகளில் இருந்து வாங்குநர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள். கண்காட்சிக்கு முந்தைய நிகழ்வாக, கிழக்கு இந்தியா முழுவதிலும் பங்குரா, குவஹாத்தி, பாட்னா, ராய்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் ராஞ்சி போன்ற நகரங்களில் சாலை காட்சிகள் மற்றும் கடை கடையாக செல்லும் செயல்பாடுகள் நடைபெறும்.
இக்கண்காட்சியில் இந்த மாநிலத்தின் புகழ்பெற்ற நுட்பமாக வடிவமைக்கப்பட்ட மற்றும் கைகளால் செய்யப்பட்ட நகைகள் முன்வைக்கப்படும், இதில் வைரங்கள், முத்துக்கள், ரத்தினக்கற்கள் மற்றும் தங்கம் ஆகியற்றின் தொகுப்பும் இவற்றோடு தொடர்புடைய தயாரிப்புகளும் சேவைகளும் உள்ளடங்கும். பாரம்பரிய திருமண நகைகளான சந்த்பாலீஸ், சூர், ரதன்சூர், மண்டாஷா, சப்தலஹாரி, ஹான்சுலிஸ், நவரத்தின செட்கள், குண்டன், பொல்கி மற்றும் மீனாகாரி செட்கள், உள்ளிட்டவை தவிர கொல்கத்தாவில் ஜோதிட நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் கணிசமான அளவிலான பிற ரத்தினக்கற்களும் கிரஹரத்னா ஜுவல்லரியின் வடிவத்தில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நகரம் மற்றும் இதன் புறநகர் பகுதிகளின் சில்லரை வர்த்தக சந்தை தோராயமாக ரூ.3,000 கோடி அளவில் உள்ளன. பழைய குடும்ப நகைவியாபாரிகள் ஆதரவு பெற்றவர்களாக இருந்தாலும் புதிய உலகளாவிய ஒழுங்குமுறைமை வாடிக்கையாளரின் அனுபவத்தை உயர்வாக வைப்பதல், சுலபமான பரிவர்த்தனைகள், மற்றும் கலாச்சார வேரூன்றுதல்கள், சர்வதேச போக்குகள் மீது கண்ணோட்டமாக இருத்தல் ஆகியவற்றின் மீது கவனமாக இருக்கின்றது. இருக்கிறது, இது சீரமைக்கப்பட்ட சில்லரைவர்த்தகர்களை சந்தையில் ஊக்கப்படுத்துகிறது. மில்லெனியனில் பிறந்தவர்கள் பொதுவாக ஒரேமாதிரியாக இல்லாமல் தரமான, மலிவான புகழ்பெற்ற நகைகளுக்கு நகர்ந்துவிட்டனர். அதற்கேற்ப, பரம்பரை நகைகளை தனிப்பயனாக்கப்பட்ட நகைகளாக மறுவடிவமைப்பு செய்யும் போக்கு மற்றும் லேசான எடையுள்ள நகைகள் மீதான விருப்பமும் காணப்பட்டது.
இந்த ஆண்டின் நிகழ்வில் பங்கேற்கும் குறிப்பிடத்தக்க கண்காட்சியாளர்களில் Unique Chains Private Limited, B.C. Jain Jewellers Pvt. Ltd, Indian Gem & Jewellery Creation Pvt Ltd, Jagdamba Chains Pvt. Ltd., AB Jewels, L Gopal & Sons, Sonar Bangla Jewellers Pvt. Ltd., Occi - Ori Jewels Pvt. Ltd., Shree Siddhi Vinayak Jewellers, Harshwardhan Gems, Jewel India, Jai Gulab Dev, Royal Chains Pvt. Ltd., R.G. Bangle Private Limited, Bond Forever, Emerald Jewel Industry India Ltd. மற்றும் Dharmanandan Diamonds Pvt. Ltd ஆகியோர் உள்ளடங்குவர்.
முதன் முதலாக, UBM India தேர்ந்தெடுக்கப்பட்ட வங்காள காரிகார்களுக்கு இந்த வணிகத்தில் அவர்களுடைய பங்களிப்புக்கான ஒரு தனித்துவமான பாராட்டு விழாவை ஒழுங்குசெய்கின்றது. இந்த பாராட்டுவிழாவில் காரிகார்களுடைய கலைநயத்தை ஊக்குவிப்பதற்கான பண அன்பளிப்பு வழங்குதலும் உள்ளடங்கும். முக்கியமாக, நிறுவனத்தின் நிலைத்தன்மையை உந்துவதற்காக, UBM India ஒரு சிறப்பான நிதியை காரிகார் சமுதாயத்திற்காக அமைக்கிறது. ஆரம்பத்தில் திரட்டப்படும் பணம் இந்த சமுதாயத்தின் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட நல்வாழ்வுக்கான தேவைகளுக்கு உதவுவதற்காக UBM India-ஆல் வழங்கப்படும்.
KJGF 2017 என்பது ஆண்டு முழுவதும் இந்திய நகை மற்றும் ரத்தினக்கற்கள் சந்தையின் ஆற்றலை பயன்படுத்துவதற்காக UBM India நடத்தும் நான்கு நகர நகை கண்காட்சிகளில் ஒன்று (மற்றவை சென்னை, ஹைதராபாத் மற்றும் தில்லி).
கிழக்கு இந்தியாவில் வளர்ந்துகொண்டே இருக்கும் நகை துறையின் வாய்ப்புகள் குறித்து பேசிய, Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India Pvt. Ltd. இவ்வாறு கூறினார், "கிழக்கு இந்திய நகை சந்தைக்குள் ஒரு புதுப்பிக்கப்பட்ட ஊடுருவலை மேற்கொண்டு சபையின் முக்கிய உற்பத்தியாளர்கள், சில்லரைவர்த்தகர்கள் மற்றும் இந்த பிரிவில் உள்ள கழகங்களின் வணிகத்திற்கு கணிசமான ஊக்கத்தை அளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். கிழக்குப்பகுதி நகையில் அதற்குள்ள செழிப்பான பாரம்பரியத்துக்கும் திறன்வாய்ந்த காரிகார்களுக்கும் பெயர்பெற்றது. பொருளாதார மாற்றங்களில் இந்த பாரம்பரியத்தை பாதுகாக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறோம், மற்றும் இதை உலகிற்கு சமகால மற்றும் புதுமையான கருவிகள் மூலம் விளம்பரப்படுத்த இருக்கிறோம். இது தொடர்பாக வங்காள கைவினை கலைஞர்களுக்காக நாங்கள் தொடங்கும் சிறப்பான நிதியை குறித்து சிறப்பாக மகிழ்ச்சி அடைகிறோம் மற்றும் இந்த நிலைத்தன்மை பணியில் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பலனளிக்கும் என்று நம்புகிறோம்.
"2014-2019 காலகட்டத்தில் இந்திய ரத்தினக்கற்கள் மற்றும் நகை துறை ஒரு கலப்பு ஆண்டு வளர்ச்சி விதிதமான (CAGR) 15.95 சடவிகிதத்தை அடைந்துள்ளது. ஏற்றுமதி சார்ந்தும் வேலையாட்களை அதிகமாக சார்ந்தும் இருக்கிற இந்த துறையில் அபரிவிதமான வாய்ப்புகள் உள்ளன, இவை இந்தியாவை உலக நகை சந்தையின் கேந்திரமாக மாற்றுகின்றன. பணமதிப்புநீக்கல் மற்றும் ஜிஎஸ்டி உடைய கொள்கைகளை பிரதிபலித்து, நகை துறையானது வெளிப்படைத்தன்மையை கொண்டு வருவதில் கவனமாக இருக்கிறது. இந்த சமுதாயம் ஒரே தளத்தின் கீழ் சந்தித்து இந்த மாற்றங்களை குறித்து விவாதித்து இவை கொண்டு வந்துள்ள சவால்களை மேற்கொள்ள திட்டமிட வேண்டும்," என்று அவர் கூடுதலாக தெரிவித்தார்.
KJGF உடைய 3ஆம் நிகழ்வின் தருணத்தில் பேசிய, Mr. Ashok Bengani, தலைவர், CG&JWA இவ்வாறு கூறினார், " KJGF'17 உடைய 3ஆம் நிகழ்வு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. CG&JWA கிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய B2B கண்காட்சி KJGFஉடைய தொடர்ச்சியான வெற்றியினால் மிகவும் பெருமைப்படுகிறது, இந்த கண்காட்சி UBM India துணையுடன் நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் இக்கண்காட்சியில் பங்குபெற மொத்த வியாபாரிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்கவும் உற்பத்தியாளர்கள் தங்கள் பாரம்பரிய மற்றும் கலைநயம்மிக்க படைப்புகளை காட்சிப்படுத்தவும் பெரும் வரவேற்பு கிடைத்தது."
"மேம்பட்ட பொருளாதாரம் வாங்குநரின் கொள்முதல் சக்தியை ஊக்குவித்துள்ளது மற்றும் கோடை திருமண காலத்திற்கும் மங்களகரமான விழாக்களுக்கும் சில வாரங்கள் முன்பாக KJGF நடத்தப்பட இருக்கின்றது. KJGF அண்டை மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் உண்மையான வாங்குநர்களால் நிரம்பி இருக்கும் என்கிற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் 150க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் முன்பே இந்த காட்சியில் தங்கள் பங்கேற்பை உறுதிசெய்து, சமீபத்திய, மிகவும் ஆர்வத்தைத்தூண்டும் படைப்புகளை சேமித்து வைத்துள்ளனர். உண்மையில் தொழில் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும் ரத்தினக்கல் மற்றும் நகை துறையின் அனைத்து பிரிவுகளிலும் வளர்வதற்கான வாய்ப்புள்ள சிறந்த தளமாக KJGF உள்ளது. இந்த முக்கியத்துவமான தொழில் வாய்ப்பை ஆராய்ந்து இதிலிருந்து நாம் அனைவரும் பலன் அடைய வேண்டும் என்று விரும்புகிறேன்," என்று அவர் கூறினார்.
UBM India பற்றி:
UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடத்துபவராகும்.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து ubmindia.in என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
UBM plc பற்றி
UBM plc உலகின் மிகப்பெரிய ப்யூர் ப்ளே B2B நிகழ்வு ஒருங்கிணைப்பாளர். இது அதிக டிஜிட்டல்மயமாக மாறிய உலகம், மிகவும் அர்த்தமுள்ள, மனித அளவிலான இணைப்பை ஏற்படுத்துவதன் மதிப்பு இவ்வளவு முக்கியத்துவமாக இருந்தது கிடையாது. UBMஇல், நாங்கள் சேவைசெய்யும் தொழிற்துறை பிரிவுகளுக்கான எங்கள் ஆழமான அறிவும் பற்றுதலும் மக்கள் வெற்றியடையக்கூடிய ஒரு மதிப்புமிக்க அனுபவத்தை உருவாக்க எங்களை அனுமதித்தது. எங்கள் நிகழ்வுகளில் நாங்கள் உறவுகளை உருவாக்குகிறோம், ஒப்பந்தங்களை முடிவுசெய்கிறோம் மற்றும் அவர்களுடைய தொழில்களை வளர்க்கிறோம். எங்கள் 3,750+ மக்கள், 20 நாடுகளுக்கு மேல் இருக்கிறார்கள், 50 வெவ்வேறு துறைகளில் சேவைசெய்கிறார்கள், அதில் நவநாகரீகம் முதல் மருந்து உட்பொருட்கள் வரை இருக்கின்றன. இந்த உலகளாவிய நெட்வொர்க்குகள், திறனுள்ள, பற்றுள்ள மக்கள் மற்றும் சந்தையை வழிநடத்தும் நிகழ்வுகள் தொழில்செய்யும் மக்கள் தங்கள் இலட்சியங்களை அடைவதற்கான உற்சாகமூட்டும் வாய்ப்புகளை அளிக்கின்றன.
மேலும் தகவல்களுக்கு, செல்லுங்கள் www.ubm.com; UBM கார்ப்பரேட் செய்திகளுக்கு, எங்களை டிவிட்டரில் பின் தொடருங்கள் @UBM, UBM Plc LinkedIn
ஊடக தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-6172-7000
UBM India
Share this article