மும்பை, March 21, 2017 /PRNewswire/ --
UBM India நடத்தும் ஒரு தனித்துவமாக நிலைபடுத்தப்பட்ட தொழில் கண்காட்சி
UBM India தனித்துவமாக நிலைபடுத்தப்பட்ட சில்ட்ரன்-பேபி-மெட்டர்னிட்டி எக்ஸ்போ இந்தியா 2017 (CBME India) நிகழ்வை 11-13 ஏப்ரல் 2017 தினங்களில் பாம்பே மாநாடு மற்றும் கண்காட்சி மையம், மும்பையில் நடத்த திட்டமிட்டு உள்ளது, இந்தியாவில் மிகப்பெரிய குழந்தைகள் மற்றும் மகப்பேறு தயாரிப்பு தொழில் கண்காட்சி, CBME India, குழந்தைக்கான தயாரிப்புக்களின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட டீலர்கள், விநியோகஸ்தர்கள், செல்வாக்குடையவர்கள் மற்றும் நவீன தொழில்கள், ஆன்லைன் சில்லரை வர்த்தகர்கள், சேவை வழங்குநர்கள், தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் ஃப்ரான்சைசீ தேடுநர்களின் வர்த்தக தலைவர்களுடன் இணையவும், பிணைப்பை ஏற்படுத்தவும் தொழில் செய்யவும் போட்டியில்லாத தொழில் வாய்ப்பை வழங்கும்.
(Logo: http://mma.prnewswire.com/media/480021/CBME_2017_UBM_Event_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
CBME 2017 புதிய போக்குகளை விவாதித்து, முழுமையான குழந்தை பராமரிப்பு தயாரிப்புகள், பொம்மைகள், குழந்தைக்கான உணவு, ஆர்கானிக் உடை, ஊட்டச்சத்து பொருட்கள், கைக்கு வசதியான ஃபர்னிச்சர், ஸ்டேஷனரி, கைக்குழந்தை பாதுகாப்பு தொழில்நுட்பம், மூளை வளர்ச்சி கருவிகள் மற்றும் பலவற்றை காட்சிப்படுத்தி வெளியிடும். மிகவும் முக்கியமாக, இந்த நிகழ்வானது முக்கிய கழகங்களான டாய் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (TAI), 500 தொழிற்துறை அங்கத்தினர்களை பிரதிபலிக்கும் ஒரு விளையாட்டுபொம்மை சகோதரத்துவத்தின் தலைமை அமைப்பு, ஆல் இந்தியா அசோசியேஷன் ஆஃப் இண்டஸ்ட்ரீஸ், (AIAI), தி அப்பேரல் எக்ஸ்போர்ட் ப்ரமோஷன் கவுன்சில் (AEPC), மற்றும் இண்டியன் இம்போர்டர்ஸ் சேம்பர் ஆஃப் கமர்ஸ் அண்டு இண்டஸ்ட்ரி (IICCI) ஆகியவற்றால் ஆதரிக்கப்பட்டுள்ளது.
CBME உடைய 5ஆம் நிகழ்வில் 150 பெரிய உலகளாவிய மற்றும் இந்திய கண்காட்சியாளர்களின் சபையை காணும், துறையில் காணத்தவறக்கூடாத நிகழ்ச்சியாக இது உயர்த்தப்படும். இந்த கண்காட்சி 3 நாட்களுக்கு நடைபெறும், இது அறிவு-பகிரும் கருத்தரங்குகள், பயிலரங்குகள் மற்றும் ஏற்புடைய தலைப்புகளில் பேனல் விவாதங்கள் போன்ற ஊடாடல்மிக்க மன்றங்களை ஏற்பாடு செய்யும். உலக புகழ்பெற்ற முக்கிய பிராண்டுகளாகிய Chicco, MeeMee, BabyCenterIndia, Adore Baby, Kaboos, Sebamed, Tiny Bee, Rikang, GAIA Skin Naturals மற்றும் பல உலக புகழ்பெற்ற பிராண்டுகள் ஒரு செழிப்பான தரம், தொழில் ரீதியாக மேம்பட்ட மற்றும் அழகுநயத்தில் இனிமையான சர்வதேச தயாரிப்புகள் மூலம் தங்கள் இருப்பை உணரச் செய்வார்கள். இந்த ஆண்டு, வணிக கண்காட்சியானது ஆஸ்திரேலியா, சீனா, வியட்னாம், தாய்லாந்து, யூஎஸ், யூகே, கனடா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் இருந்து ஆர்வம் மிக்க பங்கேற்ப்பை கொண்டு இருக்கும்.
இந்தியாவில் குழந்தை பராமரிப்பு துறையானது இன்னமும் ஆரம்பகட்டத்தில் இருந்தாலும், வளர்ந்துவரும் மக்கள் தொகையில் 39% குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதால் இது ஒரு மகத்தான ஆற்றல் உடைய ஒன்றாக இருக்கும். வரும் ஆண்டுகளில் 13.66% CAGR விகிதத்தில் வளர்சி அடைய இலக்குவைத்துள்ளது மற்றும் மிகவும் சிறு சிறு பிரிவுகளாக இருந்தாலும், கைக்குழந்தை மற்றும் குழந்தை பராமரிப்பின் நெறி சார்ந்த இயல்பின் காரணமாக ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனங்களின் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது, இதில் ஊட்டச்சத்து, நலவாழ்வு, அறிவுத்திறன் தூண்டல், மென்மையான சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு ஆகியவை உள்ளடங்கும்.
3 நாட்களில், CBME 2017 அதிக தனித்துவமான அம்சங்களை பெற்று இருக்கும். கண்காட்சியாளர்களுக்கும் பார்வையாலர்களுக்கும் தனித்துவமான மற்றும் புதுமையான மதிப்புவாய்ந்த பரிந்துரைகளை வழங்குவதற்கான தன் வேட்கையில், CBME India உரிமம் வழங்குதல் மீது ஒரு பிரத்தியேக முகமையை காணும். ஆடம்பரமான உரிமம் வழங்கும் மற்றும் வர்த்தகம் செய்யும் துறையானது இந்திய நுகர்வோருக்கு சர்ந்வதேச பொழுதுபோக்குக்கான அதன் சுலபமான அணுகல்தன்மை காரணமாகவும், அவற்றுக்கான ரசிகர் பட்டாளத்தின் அதிகரிப்புக் காரணமாகவும் வளர்ந்து வருகின்றது, உதாரணமாக, உலக இசை பேண்டுகள் அல்லது கார்ட்டூன் கதாபாத்திரங்கள் காரணமாக வளர்ந்து வருகின்றது.
முதன் முறையாக இதுபோன்ற ஒரு நிகழ்வில், CBME உடைய இந்தியா பிராண்ட் லைசென்சிங் பேவிலியோன் உலகம் முழுவதிலும் உரிமம் வழங்குதலின் வளர்ச்சி மற்றும் விரிவுபடுத்தலை ஊக்கப்படுத்தி, உரிமம் வழங்குபவர்களின் தொழில்முறையின் அளவை உயர்த்தி, இந்திய தொழில் சமுதாயத்திற்கு உரிமம் வழங்குவதற்கான பலன்கள் குறித்த பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும். இந்த முகமை பல்வேறு உரிமம் வழங்கும் வாய்ப்புகளை காட்சிப்படுத்தி உரிமம் வழங்கும் நிபுணர்கள் உலக பிராண்டு உரிமம் வழங்குதல் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கச் செய்யும்.
இக்கண்காட்சியில் ஸ்டார்ட்-அப் பேவிலியோன் ஒன்றும் இருக்கிறது இது இந்த துறையில் உள்ள புதுமையான கருத்துக்களை ஊக்கப்படுத்துகிறது; Cool Kids Fashion India நிகழ்வானது ப்ரீமியம் நன்கு அறியப்பட்ட மற்றும் வளர்ந்துவரும் வடிவமைப்பாளர்கள், பிராண்டுகள் மற்றும் உற்பத்தியாளர்கள் இருவரிடமும் இருந்து சிறுவர்களுக்கான நாகரீக துணைபொருட்கள் மற்றும் ஆடைகளை சிறப்பித்துக் காட்டுகிறது (வயது 0-14 ஆண்டுகள்); இன்னோவேஷன் புராடக்ட் கார்னர் (Innovation Product Corner) வடிவமைப்பு சிறப்புத்தன்மை, தயாரிப்பின் பாதுகாப்பு மற்றும் புதுமை மற்றும் பலவற்றை காட்சிப்படுத்தும்.
CBME 2017 உடைய தொடக்கவிழாவில் பேசிய, Mr. Yogesh Mudras, மேலாண்மை இயக்குநர், UBM India இவ்வாறு கூறினார், "உள்நாட்டு குழந்தை, மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளின் சந்தையானது அபரிவிதமான வளர்ச்சிக்கு தயாராகி உள்ளது. இந்த சந்தை எவ்வளவு பெரியது என்பதற்கான அறிகுறியை சமீபத்திய ASSOCHAM அறிக்கை மூலம் அறியலாம், அதில் குழந்தை பராமரிப்பு தயாரிப்புகள் துறை 53% இ-காமஸ் பிரிவுகளில் the baby care products segment grew by 53%, வளர்ந்து இருப்பதாகவும், இது ஆடைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸுக்கு மட்டுமே பின்னதாக இருப்பதாகவும் கூறுகிறது. இந்த தேவைக்கு காரணமாக இருக்கும் சில முக்கிய காரணிகளில் பெற்றோரின் செலவளிக்கும் வருமானம், தங்கள் நுகர்வோர் பழக்கங்களில் மாற்றம் மற்றும் குழந்தை பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு மீதான கவனம் ஆகியவை உள்ளடங்கும்."
அவர் கூடுதலாக தெரிவித்தது, "முக்கியமாக, அதிகமான தாய்மார்கள் தங்கள் வேலைகளுக்கு திரும்பிச் சென்றாலும், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இயன்றவரை சிறந்த பராமரிப்பை தாங்கள் இல்லாதபோதும் வழங்க நினைக்கிறார்கள் என்பதால் அத்தகைய பொருட்களுக்கான சந்தைகளான ஃபீடிங் பம்புகள், ஆர்கானிக் ஆடைகள், மற்றும் குழந்தைகளை 'ஸ்மார்ட்' உலகத்தில் இருந்து விலக்கி வைக்கக்கூடிய அறிவுபூர்வமான மற்றும் புதுமையான பொம்மைகள் அதிகரித்துள்ளன. CBME இதன் மூலம் குழந்தை வளர்ப்பதை உண்மையாகவே சுலபமானதாகவும் மகிழ்ச்சியானதாகவும் மாற்றக்கூடிய புதுமையான தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஒட்டுமொத்த வாங்குநர் மற்றும் விற்பனையாளர் சமுதாயத்தையும் ஊடுருவலை அதிகரிக்கச் செய்து, அடையச்செய்தலையும், குழந்தை, மகப்பேறு மற்றும் குழந்தை பராமரிப்பு தயாரிப்புகளின் வகைகளையும் நாட்டில் அதிகரிக்கிறது. "
UBM India பற்றி:
UBM India என்பது இந்திய அளவில் கண்காட்சிகளை ஏற்பாடு செய்யும் முன்னணி நிறுவனமாகும். இது இத்துறையில் வாங்குபவர்களையும் விற்பனையாளர்களையும் உலகம் முழுவதிலுமிருந்து கண்காட்சிகள், உள்ளடக்கமிக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குள் வழியாக ஒரே தளத்தில் சேர்க்கிறது. UBM India 25 பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40 மாநாடுகளையும் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடத்துகிறது. பல துறைகளுக்கிடையே வர்த்தகத்தை இயலச் செய்கிறது. UBM Asia நிறுவனமான, UBM India மும்பை, புது டில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. UBM plc-யினால் UBM Asia நடத்தப்படுகிறது. இது லண்டன் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் பட்டியலில் உள்ளது. UBM Asia என்பது ஆசியாவில் கண்காட்சியை நடத்தும் முன்னணி நிறுவனமாகும். சைனாவின் முக்கியப் பகுதி, இந்தியா மற்றும் மலேசியாவில் மிகப்பெரிய கண்காட்சி நடத்துபவராகும்.
கூடுதல் தகவல்களுக்குத் தயவுசெய்து ubmindia.in என்ற எமது வலைதளத்தைப் பாருங்கள்.
ஊடக தொடர்பு
Mili Lalwani
[email protected]
+91-22-6172-7000
UBM India
Share this article