சென்னை, March 20, 2017 /PRNewswire/ --
MJDMA மற்றும் UBM India-வின் ஒரு மெகா B2B ஜெம் மற்றும் ஜூவல்லரி கலைவிழா
GJIIE 2017- ஒரு பார்வை:
- 300-க்கும் அதிகமான கண்காட்சியாளர்களுடன்,UBM இந்தியாமற்றும் MJDMA தென்னிந்தியாவின் மிகப்பெரிய B2B ஜூவல்லரி கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தார்கள்
- முக்கிய சங்கங்கள் மற்றும் உயர்நிலைக் குழுமங்களுடன், ஒரு 'அனைத்து தமிழக தலைவைர்கள் மற்றும் செயலாளர்கள் சந்திப்பு', மற்றும் GJF மண்டல சந்திப்பு'-களை நடத்தியது
ஜெம் மற்றும் ஜூவல்லரி சர்வதேச இந்தியக் கண்காட்சியின்(GJIIE 2017)மூன்று நாள் மெகா B2B ஜெம் மற்றும் ஜூவல்லரி கலைவிழாவின் 13-ஆவது பதிப்பு, இந்தியாவின் நவரத்தினக்கல் மற்றும் நகைத் தொழிலுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ஒரு உற்சாகமான முடிவுக்கு வந்தது. இந்தக் கண்காட்சி சென்னை டிரெட் சென்டரில் மார்ச் 10 முதல் 12, 2017 வரை நடந்தது. இந்தக் கண்காட்சி, முக்கிய விருந்தினாராகிய, மதிப்பிற்குரிய வர்த்தக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் , Mr. KC Veeramani அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது, மற்ற முக்கியப் பிரபலங்களாகிய, Mr. Jayantilal Chalani, தலைவர்,MJDMA; Mr. Rajesh Vummidi, தலைவர்,MJDMA-GJIIE; Mr. Rajendra Jain, நிர்வாகச் செயலாளர், ஸ்வரோவ்ஸ்கி ஜேம்ஸ்; Mr. Yogesh Mudras, நிர்வாகச் செயலாளர், UBM India மற்றும் Mr. Abhjit Mukherjee, குழு நிர்வாகி, UBM India ஆகியோர் இந்த மதிப்பிற்குரிய விழாவில் கலந்துகொண்டனர்.
(Logo: http://mma.prnewswire.com/media/471347/GJIIE_2017_01_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
GJIIE-யின் வெற்றிகரமான நிறைவு விழாவில் பேசிய UBM India-வின் நிர்வாக இயக்குனராகிய Mr. Yogesh Mudras, அவர்கள், "பல சர்வதேச மற்றும் பொருளாதாரக் காரணிகளால், நவரத்தினக்கல் மற்றும் நகை தொழில்துறை சென்ற வருடம் பல இன்னல்களைச் சந்தித்தது. அதே சமயம், ஒரு முறைசாரா பிரிவிலிருந்து ஒரு முறையான பண்பட்ட பிரிவாகவும் வளர்ந்துள்ளது. நகைப் பிரிவு இந்தியாவின் ஜிடிபி-க்கு 8% மதிப்புக் கூடுகிறது, மேலும் விலைமதிப்பற்ற மற்றும் குறைமணிக்கற்கள் பதித்த நகைகள், கைவினைஞர்களால் செய்யப்பட்ட நகைகள், வார்ப்பு நகைகள் மற்றும் எடை குறைந்த லேசான நகைகள் ஆகியவற்றின் மையமாகத் திகழும் தென்னிந்தியாவே தங்க மற்றும் வைர நகைகளின் மிக அதிக நுகர்வு செய்யும் பகுதியாகும். இக்காரணிகள் இந்தக் கண்காட்சிக்கும் நகைப் பிரிவிற்கும் ஒரு நல்ல ஊக்கமாக அமைந்தது. UBM India-வால் ஆண்டு முழுவதும் நடத்தபடும் நான்கு நகரக் (கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் டெல்லி) கண்காட்சிகளாகிய GJIIE 2017-உடன், நாங்கள் 2017-இல் தொலைத்த பளபளப்பையும், மெருகையும் மீட்க முயற்சி செய்வோம். தொழில்துறையின் அபரிமிதமான பங்கேற்பு, கண்காட்சியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் இருவருக்குமே தென்னிந்தியச் சந்தையின் ஆற்றலை ஊக்குவிக்க இப்படிப்பட்ட ஒரு பெரிய அளவிலான வர்த்தகத் தளம் தேவையாக இருந்ததை உறுதிப்படுத்துகிறது." என்று கூறினார்.
நகைகளின் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், நகை உற்பத்தியாளர்கள்,இயந்திர உற்பத்தியாளர்கள்,வைரம், நவரத்தினக்கற்கள், முத்து வினியோகஸ்தர்கள் மற்றும் வணிகர்கள், விலைமதிப்பில்லா உலோகம் மற்றும் தங்க நகை வார்ப்பு வணிகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள், மேலும் வர்த்தக மற்றும் அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகிய அனைவரையும் உள்ளடக்கிய 300-க்கும்அதிகமான கண்காட்சியாளர்களும் பங்கேற்பாளர்களும் பங்குபெற்ற இந்த மூன்று நாள் GJIIE 2017 கண்காட்சி இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய ஜெம்ஸ் அண்ட் ஜூவல்லரி B2B கண்காட்சியாகும். தென்னிந்தியாவின் நகை வரிசைகளுக்கு முக்கியத்துவத்துடன், இந்தக் கண்காட்சி இந்திய நகைச் சந்தைக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்தது, மேலும் வாங்குபவர்களும் வழங்குனர்களும் ஒரே கூரையின் கீழ் சந்தித்து, இணைந்து,யோசனைகளைப் பகிர்ந்துகொண்டு, வளர்ந்து வரும் புதிய போக்குகளைக் கண்டறிந்து, வணிக வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள இது ஒரு சிறந்த தளமாக அமைந்தது.இந்தக் கண்காட்சி, புகழ் பெற்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நுகர்வோரையும் ஈர்ப்பதில் வெற்றியடைந்து, தொழில்துறையில் நிரூபிக்கப்பட்ட நம்பகமான சோர்சிங் மையமாக தனது நிலையை வலுவாக்கிக் கொண்டுள்ளது.இந்தியாவின் I,II III-ஆம் நிலை நகரங்களின் பிரதிநிதித்துவம் மட்டுமல்லாமல்,நியூயார்க்,துபாய், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று, 2017-இல் GJIIE-யின் சர்வதேச முன்னிலையையும் இருப்பையும் பறை சாற்றின.
வைரங்கள், முத்துக்கள், நவரத்தினங்கள்,கல் பதித்த நகைகள், வேலைப்பாடுகளுடன் கூடிய தென்னிந்திய தங்க நகைகளாகிய டெம்பில் நகாசு நகைகள், கற்கள் பதித்த நகைகள் மற்றும் மாங்கா மாலை, காசு மாலை மற்றும் பட்சி வடிவங்கள் கொண்ட நகைகள் போன்ற திருமண நகைகள் ஆகியவை இந்தக் கண்காட்சியில், கண்காட்சியாளர்கள் காட்சிக்கு வைத்த சில வகைகளாகும். தயாரிப்பு செயல்முறையில் பயன்படுத்தப்படும் அதிநவீன இயந்திரங்களும் மற்ற தொடர்புள்ள பொருட்களும் சேவைகளும் கூட காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
இந்த வருடம், இந்தக் கண்காட்சியில், ஹைதபாபாத், பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், கொல்கத்தா, மும்பை, ஜெய்ப்பூர், டெல்லி, அகமதாபாத், சூரத் மற்றும் பல நகரங்களிலிருந்து முன்னணி தொழில்முனைவர்கள் பங்கேற்றனர். இவற்றில் சில கண்காட்சியாளர்கள், Jewellers Pvt. Ltd, Laxmi Jewellery Chennai Pvt. Ltd, Jai Gulab Dev Jewellers, JC Jewellers (Chennai) Pvt Ltd, Mukti gold, Krizz, Emerald Jewel Industry India Ltd, Unique Chain Pvt Ltd, White Fire Diamonds India Pvt Ltd, Prakash Gold Palace Pvt Ltd, Vijay Gems & Jewellery, Grurukrupa Exports, Peeyar Manufacturers, Gitanjali Jewellery Retail Limited, Swarnshilp Chains & Jewellers Pvt Ltd, Chain N Chains, ORO, JKS Jewels, Anmol Swarn, Matushree Gold மற்றும் Mehta Gold இன்னும் பல நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த வருடம்,முதல் முறையாக GJIIE,முக்கிய சங்கங்கள் மற்றும் உயர்நிலைக் குழுமங்களுடன், ஒரு 'அனைத்து தமிழக தலைவைர்கள் மற்றும் செயலாளர்கள் சந்திப்பு'மற்றும் 'GJF மண்டல சந்திப்பு'ஆகியவற்றை நடத்தி, முக்கிய சாதனைகளையும், மாநிலத்தில் வர்த்தகம் செய்வதில் உள்ள சவால்களைப் பற்றியும் விவாதித்தது. தங்கத்தையும் நகைகளையும் ஒரு சொத்தாகப் பார்க்காமல், அதிக ஆடம்பரமில்லாத. ஸ்டைலான, நாள்தோறும் அணியக்கூடிய நகைகளை எதிர்பார்க்கும் இளைய தலைமுறை நுகர்வோருக்காக, இந்தக் கண்காட்சியில்,GIA-வால் நடத்தப்பட்ட இரண்டு நாள் தொழில்நுட்பக் கருத்தரங்கு, வர்க்தகத்தில் ஈடுபட்டிருப்போருக்கு குறிப்பிடத்தக்க நுண்ணறிவை வழங்கியது. 'ஜெம்மாலஜி மற்றும் செயற்கையின் மீதான கவன ஈர்ப்பு' இயற்கை கற்களைப் போலவே பார்ப்பதற்கும், வேதியியல், இயற்பியல் மற்றும் ஒளியியல் கூறுகள் உள்ள ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்ட கற்களின் அணிவகுப்பை முன்வைத்தது. எம்எஸ்எம்இ மற்றும் எஸ்பிஐ,'நகைகளில் உள்ள திட்டங்கள்' மற்றும் உலோகத் தங்கக் கடன்'ஆகியவை பற்றிய ஒரு நாள் தொழில்நுட்பக் கருத்தரங்குகளை நடத்தி விலை மதிப்பில்லா உலோகங்கள் மற்றும் கற்களின் வணிகம் செய்ய விரும்புபவர்களுக்கு குறிப்பிடத்தக்க தேர்வுகளை வழங்கின. 'புதுமையான சிந்தனை' மற்றும்' நகை தொழில்நுட்ப மாற்றம் பற்றிய சிந்தனைத் தலைவர்களின் குழு விவாதங்கள் தொழில் துறையில் புதியவர்களுக்கு உதவியாக இருந்தன.
விலைமதிப்பில்லா உலோகங்கள் மற்றும் நவரத்தினங்கள் கொண்டு செய்யப்பட்ட நுட்பமான புகழ்பெற்ற ஒரிஜினல்களின் வடிவ மாதிரிகளின் காட்சியாகிய 'ஹால் ஆஃப் ஃபேம்'-இன் மூலம் இந்தக் கண்காட்சி கண்கள் மற்றும் மனம்கவரும் அம்சத்திலும் உயர்ந்து விளங்கியது. இந்தக் கண்காட்சி, தனது பளபளக்கும் க்ரிஸ்டல்களின் புதிய வரிசையை காட்சிப்படுத்திய ஒரு 'ஸ்வரோவ்ஸ்கி காலரி'யையும் அமைத்திருந்தது. நாள் 2-இன் மாலையில் இந்தக் காலநிலையின் போக்கைக் காட்டும் பல மலைப்பூட்டும் நகைகளைக் கட்சிப்படுத்தும் ஒரு ஃபேஷன் ஷோவும் அதைத் தொடர்ந்து கண்காட்சியாளர்களின் ஒரு சந்திப்பு இரவும் நடத்தப்பட்டது.
UBM India-வைப் பற்றி
UBM India, கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியோ, உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளின் மூலம், தொழில்துறைக்கும் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒரே இடத்தில் சேர்க்கும் ஒரு தளத்தை உருவாக்கித் தரும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளராகும். UBM India 25-க்கும் மேலான பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளையும் நாடெங்கிலும் ஆண்டு முழுவதும் நடத்துகிறது; இதன் மூலமாக பலவிதமான தொழில்துறைகளில் வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது. ஒரு UBM Asia நிறுவனமாகிய, UBM India-விற்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் உள்ளன. UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc-க்கு சொந்தமான நிறுவனமாகும். UBM Asia, ஏசியாவிலேயே முன்னணி கண்காட்சி அமைப்பாளராகும், மேலும் இது சீனா, இந்தியா மற்றும் மலேசியாவிலும் மிகப்பெரிய வணிகமுறை கண்காட்சி அமைப்பாளராகும். மேலும் விவரங்களுக்கு,ubmindia.in.-ஐப் பார்க்கவும்.
UBM plc:-யைப் பற்றி:
UBM plc உலகிலேயே மிகப்பெரிய, ஒரே ஒரு துறை சார்ந்த, B2B நிகழ்ச்சி வடிவமைப்பாளர்கள் ஆகும். டிஜிட்டல்மயமாகிக் கொண்டிருக்கும் உலகில், ஒரு அர்த்தமுள்ள மனித நிலைத் தொடர்பு என்பது முன்பெப்போதையும் விட முக்கியமாகிவிட்டது. UBM-இல், நாங்கள் சேவை செய்யும் பிரிவுகளைப் பற்றிய ஆழ்ந்த அறிவும் ஆர்வமும், மக்கள் வெற்றியடையக்கூடிய விலைமதிப்பில்லா அனுபவங்களை உருவாக்க எங்களை அனுமதிக்கிறது. எங்கள் நிகழ்ச்சிகளில், மக்கள் உறவுகளை உருவாக்கி, வியாபாரங்களை முடித்து, அவர்களுடைய வணிகத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். எங்களுடைய 3750+ ஊழியர்கள், 20 நாடுகளில் இருந்து, 50-க்கும் அதிகமான பிரிவுகளில் - ஃபேஷன் முதல் மருத்துவப் பொருட்கள் வரையிலான துறைகளில் சேவை செய்கிறார்கள். இந்த சர்வதேச வலையங்கள், ஆர்வமிக்க ஊழியர்கள் மற்றும் சந்தை முன்னணி நிகழ்ச்சிகள் ஆகியவை வணிகர்கள் தங்களுடைய குறிக்கோள்களை எட்ட உற்சாகமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
மேலும் விவரமறிய,http://www.ubm.com-க்கு செல்லவும்; UBM கார்பரேட் செய்திகளுக்கு, எங்களை @UBM-யில் ட்விட்டரில் அல்லது LinkedIn-இல் UBM Plcதொடருங்கள்.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-6172-7000
UBM India
Share this article