ஹைதராபாத், இந்தியா, March 20, 2017 /PRNewswire/ --
Renewable Energy India Expo (REI India) வழங்குபவர்களின் பிராந்திய பசுமைப் பொருளாதார சமூகத்தின் கூட்டம்
முதலாம் ஆண்டின் பிரமாண்டான வெற்றிக்குப் பிறகு Renewable Energy India Expo (REI India) வின் அமைப்பாளர்களான UBM India, 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7, 8 தேதிகளில் Hitex, ஹைதராபாத்தில் நடக்கவிருக்கும் இரண்டாவது RenewX என்கிற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வர்த்தக எக்ஸ்போ நடப்பது பற்றி அறிவித்தார்கள். RenewX 2017 மூலம் தென்னிந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு இருக்கும் லாபகரமான சந்தையை நிறுவனங்கள் ஊடுருவுவதற்கும், பயன்படுத்திக் கொள்வதற்குமான ஒரு தளத்தை UBM India வழங்குகிறது. தென்னிந்தியாவின் பசுமைப் பொருளாதார சமூகத்தினர் தொழில்துறையின் போக்குகள், சவால்கள் மற்றும் இந்திய ஒழுங்குமுறையின் வடிவமைப்பை உள்ளடக்கிய சந்தை நுண்ணறிவு குறித்த கலந்துரையாடலை இந்த எக்ஸ்போவில் காணமுடியும்.
(Logo: http://mma.prnewswire.com/media/479598/RenewX_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
RenewX 2017 ல் உற்பத்தியாளர்கள், EPCs, விநியோகஸ்தர்கள், சேவை வழங்குபவர்கள் என 130க்கும் அதிகமான கண்காட்சியாளர்களை ஒருங்கே கொண்டுவருவதன் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் அவர்கள் மாற்றத்தை உருவாக்க முயற்சிப்பார்கள். இதில் மற்ற நிறுவனங்களுடன் Renewable Energy Corporation (India) Pvt. Ltd., Greenko Group, Cleantech Solar Energy, Amplus Energy Solutions Pvt. Ltd., Zhuhai Gmee Solar Equipment Co., Ltd., MachinePulse, Oriano Clean Energy Pvt. Ltd., Avi Solar Energy Pvt. Ltd, Brij Encapsulants, Phocos India Solar Pvt. Ltd., MECO Meters Pvt. Ltd., Vision Mechatronics Pvt. Ltd, Bergen Associates, Premier Solar Systems Pvt. Ltd, Premier Solar Powertech Pvt. Ltd, Archimedes Green Energys Pvt. Ltd., Greenvision Technologies, Surana Solar Ltd., Greentek India Pvt. Ltd, Radite Energy, Solar Idea Pvt. Ltd., Nuevosol Energy Pvt. Ltd. and RenewSys India Pvt. Ltd போன்றவையும் அடங்கும்.
சைனா பெவிலியனை முதல் முறையாக இந்த வருடம் RenewX - ல் அறிமுகப்படுத்துவது பிரத்யேக அம்சமாகும். சீன நிறுவனங்களான Sunworld Tech Corp, Ningbo Osda Solar Co., Ltd, Ningbo Aike Electronic Technology Co. Ltd., GuangZhou Mango Energy Technology Co. Ltd, Shanghai Minjian Alu Co. Ltd and Taizhou Hangning Refrigeration Equipment Co. Ltd ஆகியவை வருகையாளர்களுக்கு மகத்தான மதிப்பு கூட்டலை வழங்குவதோடு அறிவார்ந்த விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளும். தெலிங்கான பெவிலியனும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
RenewX 2017 -க்கு Solar Energy Corporation of India Limited (SECI), the Indian Renewable Energy Development Agency Ltd. (IREDA), Telangana New & Renewable Energy Development Corporation Ltd. (TNREDCL) and the National Small Industries Corporation (NSIC) போன்ற மத்திய வழிகாட்டும் முகமைகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றன.
அரசாங்க நிதி வழங்கும் உத்வேகத்தில் நாட்டினுடைய ஆற்றல் உற்பத்தித் துறையில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான இடம் தொடர்ந்து பெரிதாகி வருகிற இந்த நேரத்தில் இரண்டாவது RenewX குறித்த அறிவிப்பு வந்திருக்கிறது. உதாரணமாக, மேற்கூரை, ஆஃப் கிரிட் திட்டங்கள் உட்பட மொத்த நிறுவப்பட்ட சூரிய ஆற்றலில் பசுமை ஆற்றல் இந்தியாவின் மின்சார உற்பத்தி வளர்ச்சியை உந்திச் செல்கிறது. சமீபத்திய அரசாங்கம் மற்றும் சந்தை தரவின் படி இது 10 gW - வை தாண்டிவிட்டது. இந்தியா முழுவதிலும் தமிழ்நாடு அதிக சூரிய ஆற்றல் திறனை அதிகமாக நிறுவியிருக்கிறது, இதற்கு நெருக்கமாக ஆந்திரபிரதேசம், தெலிங்கானாவும் அதைத் தொடர்ந்து ராஜஸ்தான், குஜராத்தும் ஆகும். மேம்பாட்டளர்களின் ஆரம்பகால திட்டச் செலவில் 30 சதவிகிதம் நிதிக்கென்று ஒதுக்கப்பட்ட ரூ 8,100 கோடி உதவியுடன் 2020 ஆம் ஆண்டுக்குள் சூரிய ஆற்றல் உற்பத்தித் திறனை சோலார் பார்க் திட்டத்தின் மூலம் 40,000 மெகா வாட்ஸ் அளவுக்கு இரட்டிப்பாக்கக்கூடிய திட்டத்தை அறிவித்ததன் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை மேலும் உத்வேகம் அடைந்திருக்கிறது. 2017 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவின் சூரிய ஆற்றல் 8-10 gW சூரிய அதிகரிக்கும் என்றும் இது கடந்த ஆண்டை விட 137 சதவிகித வளர்ச்சி என்றும் பசுமை ஆற்றல் மேல் கவனம் கொண்ட ஆலோசகரான Bridge To India தனது சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வணிகத்தை ஒருங்கிணைப்பது பற்றியும், சுத்தமான ஆற்றலை வணிகமாக்குவதற்கு முன்னெடுக்கும் வகையில் சிறந்த தீர்வுகள் மற்றும் நடைமுறைகளிடையே ஒருங்கிணைப்பை அதிகமாக்குவதை கண்டறியவும் இந்த எக்ஸ்போவில் `Sourcing the Sun' என்கிற பெயரில் இரண்டு நாள் மாநாடும் நடக்கவிருக்கிறது.
நிகழ்வுகளுக்கான தலைப்புகள்:
-`Converting Curiosity into Demand' (ஆர்வத்தை டிமாண்ட் ஆக மாற்றுவது) - யோசனைகளைப் பெறுவதும், வாடிக்கையளர்கள் தங்கள் தொழிலோடு புதுப்பிக்கத்தக்கதை ஒருங்கிணைக்கும் வகையில் எப்படி ஈடுபாடுகொள்வது, ஊக்குவிப்பது, அறிவூட்டுவது என்கிற வழிகளையும் கலந்தாராயும்.
- 'International Perspective on the Indian Solar Rooftop Market' (இந்திய சோலார் ரூஃப்டாப் சந்தை மீதான சர்வதேச கண்ணோட்டம்)-வீடு/பொது/வணிகத் துறைகள் குறித்த தொழில்நுட்ப ப்ரசன்டேஷனை வழங்கும்.
-`Sunny Side Up' (வெளிச்சமான பக்கம் மேலே / சன்னி சைட் அப்)- சோலார் ரூஃப்டாப் துறையிலிருக்கும் முக்கியமான பிரச்சனைகள் குறித்து தொழில் சார்ந்த தலைவர்கள் அவர்களுடைய கருத்துக்களையும், சுத்தமான ஆற்றலை சிறப்பாக எப்படி சந்தைப்படுத்துவது என்பதையும் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளமாகும்
-நிஜமாக நடந்த சில உதாரணங்களைக் கொண்ட Comparative Assessment of Net Metering Policies and Implementation (நெட் மீட்டரிங் கொள்கைகளும் நிறைவேற்றலும் குறித்த ஒப்பீட்டு மதிப்பீடு) என்கிற கேஸ் ஸ்டடி.
-Today or Tomorrow (இன்று அல்லது நாளை) -தனித்துவமான கேள்வி, பதில் நிகழ்வான இதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களினுடைய நிதி தாக்கங்கள் குறித்தும், இந்தப் பிரிவில் உள்ள மிகப் பெரிய பிரச்சனைகள் என்னென்ன என்பதைப் பற்றியுமான கலந்துரையாடல்
- Third Party Financing: Game changer for achieving the Rooftop target?' (மூன்றாம் தரப்பினரின் நிதி: ரூஃப்டாப் இலக்கை சாதிப்பதற்கான கேம் சேஞ்சர்?)- இந்தியாவில் ரூஃப்டாப் சூரிய ஆற்றல் வளர்ச்சிக்கு இருக்கும் மூன்றுதடைகள் - நிறுவும் போது ஏற்படக்கூடிய அதிக செலவு, குறைவாகவே கடன் நிதியை அணுகுவது, செயல்திறன் ரிஸ்க் குறித்த கண்ணோட்டம் - குறித்து இந்த நிகழ்வில் பேசப்படும்
- The importance of Solar Simulator Selection for Module Manufacturers' (தொகுதி/மாட்யூல் உற்பத்தியாளார்களுக்கான சோலார் சிமுலேட்டர் தெரிவினுடைய முக்கியத்துவம்) என்கிற ஒரு தொழில்நுட்ப ப்ரசண்டேஷன்
- 'Walking the double-edged word: Project Financing and Risk Management in the Indian Scenario' (இரு முனை சொல்லில் நடப்பது / வாக்கிங் டபுள் எட்ஜ்ட் வேர்ட் : இந்திய சூழ்நிலையில் செயல்திட்ட நிதியும், நேரிடர் மேலாண்மையும்) - இந்த இரண்டு பெரிய சவால்களோடு கடன் பொறுப்பு அல்லாத கடன் நிதி பற்றியும், இறுதி நுகர்வோரின் கடன் திறன், தொழில்நுட்பம் காலாவதி ஆவதில் உள்ள ரிஸ்க் மற்றும் தொழிலை தொடர்வதில் உள்ள ரிஸ்க் பற்றியும் இந்த நிகழ்வில் பேசப்படும்.
-இது தவிர, உண்மையான அனுபவங்களையும், தொழில்நுட்பத்தில் இருக்கும் குறிப்பிடப்படக்கூடிய பெரிய பிரச்சனைகள் பற்றியுமான கேஸ் ஸ்டடி, தொழில்நுட்ப ப்ரசன்டேஷன்களும் இந்த நிகழ்வில் அடங்கும்.
Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குநர் UBM India இந்த அறிவிப்பு குறித்து பேசுகையில், `அபரிதமான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கிடைத்தாலும், சாத்தியமாக இருக்கிற போதும் குடிமக்கள் அனைவருக்கும் ஆற்றல் பாதுகாப்பு வழங்குவதற்கு, குறிப்பாக சுத்தமான ஆற்றல் மூலம் வழங்குவது நமது நாட்டில் ஒரு சவாலாகவே இருக்கிறது. 2022 ஆம் ஆண்டுக்குள் 175 GW புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேர்க்க வேண்டுமென்கிற அரசாங்கத்தின் லட்சிய இலக்கு நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதோடு, வேல்யூ செயினில் மாபெரும் முதலீடுக்கான வாய்ப்புகளைக் கொடுக்கும். தெலிங்கானா, ஆரம்பமான நாளிலிருந்து சூரிய ஆற்றலுக்கு கடுமையாக ஆதரவு தெரிவிப்பதோடு மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ப்ரமோட் செய்யும் மற்றும் மாநிலங்களோடு இந்தத் துறைக்கு லாபகரமான, சாதகமான அரசு மற்றும் தொழில் கொள்கைகளையும் இந்தப் பிராந்தியம் கொண்டிருக்கிறது. இந்தப் பிராந்தியத்தில் பெரிய திட்டங்களின் முதலீட்டால் இந்தத் துறை பயனடைந்திருக்கிறது. 2015 ஆம் ஆண்டில் எங்களுடைய வெற்றிகரமான முதல் நிகழ்வுக்குப் பிறகு தென்னிந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் வளர்ச்சியையும், நாட்டின் நீண்டகால பொருளாதார மேம்பாட்டுக்கான பங்களிப்பையும் முடுக்கி விடும் நோக்கத்துடனும் இரண்டாவது RenewX ஹைதராபாத்தில் நடத்த நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம்' என்றார்.
UBM India பற்றி:
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM India பல வகையான கண்காட்சிகள், துறை சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள் வாயிலாக உலகமெங்கும் இருக்கும் வாங்குபவர்களையும், விற்பனையார்களையும் ஒருங்கே ஒரு தளத்துக்குக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய காண்காட்சிகளையும், 40 கருத்தரங்குகளையும் UBM India நடத்தி வருகிறது. இது பலவகையான தொழில்களுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வழிவகுக்கிறது. UBM Asia நிறுவனமான UBM India-வுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கும் UBM plc -க்கு சொந்தமானது. UBM Asia ஆசியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரும், சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும்.
மேலதிகத் தகவலுக்கு தயவு செய்து ubmindia.in. என்கிற இணையத் தளத்துக்குச் செல்லவும்
UBM plc பற்றி:
UBM plc உலகத்தில் மிகப் பெரிய B2B நிகழ்வு அமைப்பாளர்கள் ஆவர். அதிகரித்துவரும் இந்த டிஜிட்டல் உலகில், அர்த்தமுள்ள வகையில் மனிதநிலையில் தொடர்பு கொள்வதற்கான மதிப்பு ஒருபோதும் முக்கியமானதாக இருக்கப் போவதில்லை. UBM ல் இருக்கும் எங்களுடைய ஆழ்ந்த ஞானமும், நாங்கள் சேவை செய்யும் தொழில்களின் மேல் இருக்கும் பேரார்வமும் மக்கள் வெற்றிபெறுவதற்கான மதிப்புமிக்க அனுபவத்தை உருவாக்க அனுமதிக்கிறது. எங்களுடைய நிகழ்வுகளில் மக்கள் உறவுகளை உருவாக்கி, பரிவர்த்தனைகளை முடித்து அவர்களுடைய தொழில்களை வளர்த்துக் கொள்கிறார்கள். 20-க்கும் மேலான நாடுகளில் இருக்கும் 3,750+க்கும் மேற்பட்ட எங்கள் பணியாளர்கள் ஐம்பதுக்கும் அதிகமான பல்வேறு துறைகளில் - ஃபேஷனிலிருந்து மருந்துப் பொருட்கள் வரை - பணியாற்றி வருகிறார்கள். இந்த உலகளாவிய நெட்வொர்க், திறமையான, பேரார்வம் கொண்ட பணியாளர்கள், சந்தையை முன்னெடுத்துச் செல்லும் நிகழ்வுகள் எல்லாம் தொழில்சார்ந்தவர்கள் அவர்களுடைய லட்சியத்தை அடைவதற்கு அற்புதமான வாய்ப்புகளை வழங்குகின்றன.
மேலதிக தகவலுக்கு, http://www.ubm.com என்கிற இணையத்தளத்துக்குச் செல்லவும்
UBM கார்ப்பொரேட் செய்திகளுக்கு, எங்களை Twitter at @UBM and UBM Plc on LinkedIn ல் தொடரவும்.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani,
[email protected]
022-61727000
UBM India
Share this article