மும்பை, March 7, 2017 /PRNewswire/ --
பேனல் விவாதித்தது - நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஏமாற்றுதல் தடுப்பின் மீது MobileConnect கொண்டு இருக்கும் தாக்கம்
MoneyOnMobile Inc. இன்று Will Dawson, நிர்வாக துணை தலைவர் அவர்கள் PayPal மற்றும் E-Parkஇல் இருந்து வந்த பிரதிநிதிகளுடன் Mobile World Congress 2017இல் பேனலிஸ்டாக இடம் பெற்றார் என்று அறிவித்தது. நுகர்வோர் பாதுகாப்பு தேவைகள் மற்றும் ஏமாற்றுதலில் இருந்து பாதுகாப்பு ஆகியவற்றை உலகளாவிய பிராண்டுகள் எவ்வாறு சந்திக்கின்றன என்பது பற்றியும், MobileConnect, என்னும் ஒரு GSMA தயாரிப்பு இந்த முயற்சியில் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது பற்றியும் இந்த பேனல் விவாதித்தது.
(Photo: http://mma.prnewswire.com/media/475458/Will_Dawson__MoneyOnMobile_Infographic.jpg )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161026/432722LOGO )
"GSMA மற்றும் இந்திய மொபைல் ஆப்பரேட்டர்களுடன் எங்கள் பேமண்ட் நெட்வொர்க்கில் MobileConnectஐ பயன்படுத்துவதில் இணைந்து பணியாற்றுவது குறித்து MoneyOnMobile உற்சாகம் அடைந்துள்ளது. எங்கள் சில்லரை வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் இருவரையும் மதிப்பாய்வு செய்வதற்கான எளிமையான வழியை இந்த சேவை வழங்குகிறது, இது கட்டணங்களை சுலபமாக்கும் எங்கள் இலக்கை அடைவதற்கு உதவும் என்று எதிர்பார்க்கிறோம்," என்று Will Dawson கருத்து தெரிவித்தார்.
இந்த பேனல் ஸ்பெயினில் உள்ள பார்சினோலாவில், மார்ச் 1, 2017ஆம் தேதி Mobile World Congress 2017 உடைய 3ஆம் நாள் நடைபெற்றது.
அமர்வு குறித்த தகவல்களுக்கு தயவுசெய்து வருகை தாருங்கள்: http://www.gsma.com/personaldata/event/mobile-connect-global-brands-protecting-consumers-reducing-fraud.
MoneyOnMobile பற்றி
MoneyOnMobile, என்பது ஒரு உலகளாவிய மொபைல் கட்டண தொழில்நுட்பம் மற்றும் செயல்முறைபடுத்துதல் நிறுவனம், இது நுகர்வோர் மொபைல் தொலைப்பேசிகளை பயன்படுத்தி சரக்குகளுக்கும் சேவைகளுக்கும் பணம் செலுத்த அல்லது ஒரு செல்போனில் இருந்து மற்றொன்றிற்கு பணப்பரிவர்த்தனை செய்ய உதவுகின்றது. இது ஒரு எளிய SMS உரை செயல்பாட்டின் மூலம் அல்லது ஒரு MoneyOnMobile பயன்பாட்டின் மூலம் அல்லது இணையதளம் மூலம் பயன்படுத்தப்படலாம். MoneyOnMobileக்கு இந்தியா முழுவதிலும் 325,000 சில்லரைவர்த்தக இடங்கள் இருக்கின்றன.
இணையதளம்: http://MoneyOnMobile.in.
டிவிட்டர்: https://twitter.com/MoneyOnMobile
ஃபேஸ்புக்: https://www.facebook.com/MoneyOnMobile
லிங்க்டின்: https://www.linkedin.com/company/moneyonmobile
யூட்யூப்: https://www.youtube.com/channel/UCxqO4N1z9acnQmEysjqfBaQ
கார்ப்பரேட் தகவல் தொடர்புகளுக்கு தொடர்புகொள்ளவும்:
Navaz Damania
[email protected]
+91-9167122661
துணை தலைவர், கார்ப்பரேட் தகவல்தொடர்புகள்
MoneyOnMobile
Share this article