மும்பை, March 1, 2017 /PRNewswire/ --
MoneyOnMobile Marlins - Swift மற்றும் Sure, நம்பகமானதும் பாதுகாப்பனதும்
இந்தியாவில் எளிதாகவும், பாதுகாப்பாகவும், பத்திரமாகவும் லட்சக்கணக்கான இந்தியர்களிடையே நிதி பரிவர்த்தனைகளை நடத்த வழிவகுக்கும் மொபைல் பேமெண்ட் செயலாக்கத்தின் மிகப் பெரியத் தளங்களில் ஒன்றான MoneyOnMobile, NEXA P1 Powerboat, Indian Grand Prix of the Seas - டன் இணைந்து அவர்களுடைய MoneyOnMobile Marlins அணியை ஆரம்பித்திருப்பது பற்றி அறிவித்துள்ளது.
(Photo: http://mma.prnewswire.com/media/472781/MoneyOnMobile_Marlins_Team.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/472782/MoneyOnMobile_Marlins_Team2.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/472783/MoneyOnMobile_Marlins_Logo.jpg )
MoneyOnMobile Marlins அணி வைத்திருக்கும் 2 படகுகளை தலா ஒரு பைலட்டும் வழிகாட்டியும் இயக்குவார்கள். இதில் 2014 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று முறை US P1 SuperStock சாம்பியன்ஸ் - ஐ வென்ற James Norvill, Christian Parsons Young மற்றும் பவர் போட்டிங்கில் தலைமுறை, தலைமுறையாக அனுபவம் கொண்ட Norvall சகோதரர்களும் இந்த அணிக்குப் பின் இருக்கிறார்கள், Miss Diva 2015 ல் ரன்னர்-அப் வந்த Natasha Assadi இந்த அணியின் தூதுவராக இருக்கிறார்.
"NEXA P1 Powerboat, Indian Grand Prix of the Seas, இந்தியாவில் ஆரம்பித்து உலக அளவில் விரிந்து பரவ இருக்கும் ஒரு நிகழ்வாகும். நாங்கள், MoneyOnMobile 2010 ஆம் ஆண்டு செயல்பாட்டை ஆரம்பித்து 3,25,000க்கும் மேற்பட்ட சில்லறை வணிக முனைகளை சென்றடையும் அளவுக்கு இந்தியாவின் பெரிய மொபைல் பேமெண்ட் செயலாக்கத் தளங்களில் ஒன்றாகும் அளவிற்கதுவளர்ச்சியடைந்திருக்கிறது. MoneyOnMobile -ன் பண்புகளான சுலபம், பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை MoneyOnMobile Marlins -ம் பிரதிபலிக்கிறது' என்று MoneyOnMobile -ன்" பிரசிடென்ட்டும், சி ஓ ஓ - வும் ஆன Ranjeet Oak தெரிவித்தார்.
NEXA P1 Powerboat, Indian Grand Prix of the Seas -ல் ஆறு உலகப் புகழ்பெற்ற அணிகள் போட்டியிடுகின்றன. ஒவ்வொரு அணியும் இரண்டு P1 Panther பவர்போட்ஸ் வைத்திருக்கும். ஒவ்வொன்றையும் பைலட்டும், வழிகாட்டியும் இயக்க 5.2 கி.மீ தொலைவுக்கு தண்ணீரில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ரேஸ்ட்ராக்கில் போட்டியிடுவார்கள். தண்ணீரில் போடப்பட்டிருக்கும் ரேஸ்ட்ராக்கில் நடக்கும் முதல் பவர்போட் ரேஸிங்கான இது இப்போதிலிருந்து அனைத்து Grand Prix of the Seas நிகழ்வுகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். இது பைலட்கள், வழிகாட்டிகளின் திறனையும், உத்தியையும் நிரூபிப்பதற்கு உண்மையான தேர்வாக அமையும்.
இரண்டாம் நாளான 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4 ம் தேதி சனிக்கிழமை நடக்கவிருக்கும் ரேஸ் 1 ல் தங்களுடைய ஆரம்ப நிலையை நிர்ணயிப்பதற்கு அனைத்து அணியினரின் படகுகளும் 2017 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி நடைபெறும் டைம் ட்ரையல்ஸில் பங்கு கொள்ளும்.இதைத் தொடர்ந்து இரண்டாம் நாள் நடைபெறும் ரேஸ் 2 ல் ரிவர்ஸ் க்ரிட் இடம் பெறும். 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் கிராண்ட் ஃபினாலே உலகச் சாம்பியனை நிர்ணயிக்கும்.
MoneyOnMobile Marline -ஐ பிரதிநிதிப்படுத்துபவர்கள்:
படகு A
இந்த ஜோடி 2014 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்று வருடங்களாக US P1 SuperStock சாம்பியன்ஷிப் -ஐ வென்றிருக்கிறது.
படகு B
இந்த க்ரிடில் இருக்கும் மூன்றாவது சகோதர இரட்டையர்களான இவர்களுக்கு இந்த விளையாட்டை பவர்போட் ரேஸரான அவர்களது அப்பா அறிமுகப்படுத்தியதோடு அவர்கள் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிட்டிஷ் P1 SuperStock -ல் டாப் 5 -ல் ஒன்றாக வருவதற்கு அவர்களை உருவாக்கியவர்.
MoneyOnMobile, பற்றி:
MoneyOnMobile ஒரு மொபைல் மூலம் பணம் செலுத்தும் சேவையை வழங்கும் தொழில்நுட்ப மற்றும் செயலாக்க நிறுவனம் ஆகும் . இந்திய நுகர்வோர்கள் பொருள்களுக்கும், சேவைகளுக்கும் மொபைல் ஃபோன் மூலம் பணம் செலுத்துவதற்கு அல்லது ஒரு செல் போனிலிருந்து இன்னொன்றுக்கு பணம் அனுப்புவதற்கு MoneyOnMobile வழிவகுக்கிறது. ஒரு எளிய குறுஞ்செய்தியாகவோ, MoneyOnMobile செயலி மூலமோ அல்லது இணையத்தளம் வழியாகவோ இதை உபயோகிக்க முடியும். இந்தியாவெங்கிலும் 3,25,000 க்கும் அதிகமான சில்லறை வணிக தளங்களை MoneyOnMobile கொண்டுள்ளது.
The New York Times ல் MoneyOnMobile பற்றி படிக்க New York Times - MoneyOnMobile.
NEXA P1 Powerboat, Indian Grand Prix of the Seas பற்றி
The Grand Prix of the Seas இந்தியாவின் முன்னணி விளையாட்டு மேலாண்மை நிறுவனமான Procam International மற்றும் உலகத்தின் முன்னனி மாரிடைம் மோட்டார் ஸ்போர்ட்ஸின் ப்ராண்டான P1 Global ன் குழந்தை ஆகும். Union Internationale Motonautique (UIM) முதல்முறையாக ஒப்புதல் அளித்த Yachting Association of India (YAI) ன் கீழ் நடக்கும் Grand Prix of the Seas நிகழ்வாகும். Procam International - ம் P1 Global - ம் படிவத்தையும், ரேங்கிங் முறையையும் உருவாக்கியிருக்கிறது. அதன்படி ஐந்து வருடங்களில் இந்தியாவைச் சேர்ந்த 5 நகரங்கள் உட்பட உலக அளவில் 12 நகரங்களில் The Grand Prix of the Seas (உலக சாம்பியன்ஷிப் தொடர்) நடத்தப்படும்.
வார இறுதியிலான The Grand Prix of the Seas பந்தயத்தில் தலா 2 படகுகள் வீதம் 6 அணிகளும், உலகத்தில் தலைசிறந்த 24 பைலட்கள் மற்றும் வழிகாட்டிகளும் முதல்முறையாக தண்ணீரில் போடப்பட்டிருக்கும் ரேஸ்ட்ராக்கில் போட்டியிடுவார்கள்.
எங்களைத் தொடர்பு கொள்ள:
Navaz C. Damania
+91-9167122661
[email protected]
Vice President - Corporate Communications
http://www.moneyonmobile.in
Share this article