சென்னை, February 24, 2017 /PRNewswire/ --
MJDMA மற்றும் UBM India-வால் நடத்தப்படும், முக்கியச் சந்தைப் போக்குகள் மற்றும் தொழில்துறை நுண்ணறிவைப் பிரதிபலிக்கும்ஒரு மெகா B2B Gem and Jewellery Extravaganza
Madras Jewellers and Diamond Merchants Association (MJDMA) மற்றும் UBM India ஆகிய இரு அமைப்புகளும் இணைந்து, ஒரு மெகா B2B நிகழ்ச்சியின் மூலம், ஜெம்ஸ் மற்றும் ஜூவல்லரி தொழில்பிரிவின் பிரகாசத்தைத் திரும்பக் கொண்டுவரத் தயாராகியுள்ளன - Gem & Jewellery India International Exhibition (GJIIE) சென்னை டிரெட் சென்டரில் மார்ச் 10 முதல் மார்ச் 12, 2017 வரை. GJIIE-வின் இந்த 13-ஆவது பதிப்பு,சென்ற வருடம் உலக அளவிலும் இந்தியாவிலும் சுமாரான வியாபாரத்தையே கண்ட தங்க நகைத் தொழிலுக்குத் தேவையான உந்துதலை அளித்து வர்த்தகத்தை உயர்த்த சரியான நேரத்திலேயே வந்துள்ளது.
(Logo: http://mma.prnewswire.com/media/471347/GJIIE_2017_01_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/471349/UBM_Logo.jpg )
350-க்கும்அதிகமான கண்காட்சியாளர்களும் பங்கேற்பாளர்களும் பங்குபெறும் இந்த மூன்று நாள் கண்காட்சியில், சில்லறை வியாபாரிகள், கலைஞர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் 50 இயந்திர உற்பத்தியாளர்கள், இந்த பளபளக்கும் பிரிவில் சமீபத்திய சந்தைப் போக்குகளைக் காட்சிப்படுத்துவார்கள். GJIIE தொடர்ந்து புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச நுகர்வோரை ஈர்த்து, தொழிலில் ஒரு நிரூபிக்கப்பட்ட நம்பகமான சோர்சிங் மையமாக கண்காட்சியின் நிலையை நிலைநாட்டுகிறது. நடக்கவிருக்கும் நிகழ்ச்சியில்,நகைகளின் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்கள், நகை உற்பத்தியாளர்கள், வைரம், நவரத்தினக்கற்கள், முத்து வினியோகஸ்தர்கள் மற்றும் வணிகர்கள், விலைமதிப்பில்லா உலோகம் மற்றும் தங்க நகை வார்ப்பு வணிகர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள், மேலும் வர்த்தக மற்றும் அரசாங்க நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகிய அனைவரும் ஒரே கூரையின் கீழ் சந்தித்து, இணைந்து, தங்கள் வணிகத்தை முன்னேற்றும் முயற்சி செய்வதைப் பார்க்கலாம்.இந்தியாவின் I, II, III -ஆம் நிலை நகரங்களின் பிரதிநிதித்துவம் மட்டுமல்லாமல், துபாய் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று, 2017-இல் GJIIE-யின் சர்வதேச முன்னிலையையும் இருப்பையும் பறை சாற்றுகின்றன.
இந்த வருடம், இந்தக் கண்காட்சியில், ஹைதபாபாத், பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், கொல்கத்தா, மும்பை, ஜெய்ப்பூர், டெல்லி, அகமதாபாத், சூரத் மற்றும் பல நகரங்களிலிருந்து முன்னணி தொழில்முனைவர்கள் பங்கேற்கின்றனர். இவற்றில் சில கண்காட்சியாளர்கள், Mohanlal Jewellers Pvt. Ltd, Laxmi Jewellery Chennai Pvt. Ltd, Jai Gulab Dev Jewellers, J. C Jewellers (Chennai) Pvt Ltd, Mukti Gold, Krizz, Emerald Jewel Industry India Ltd, Unique Chain Pvt Ltd, White Fire Diamonds India Pvt Ltd, Prakash Gold Palace Pvt Ltd, Vijay Gems & Jewellery, Grurukrupa Exports, Peeyar Manufacturers, Gitanjali Jewellery Retail Limited, Swarnshilp Chains & Jewellers Pvt Ltd, Chain N Chains, ORO, JKS Jewels, Anmol Swarn, Matushree Gold மற்றும் Mehta Gold இன்னும் பல நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
MSME & SBI, வாங்கிக் கடன்கள், BIS, DIC ஆகியவை பற்றிய தொழில்நுட்பக் கருத்தரங்குகளும், GST கருத்தரங்குகளும், சிந்தனைத் தலைவர்களால் தொழில் தொடர்பான பிரச்சினைகளைப் பற்றிய குழு கலந்துரையாடல்களும் இந்தக் கண்காட்சியின் முக்கிய சிறப்பம்சங்களாக்கும். தனிச்சிறப்பான டிசைங்களைக் முதல் முறையாகக் கண்காட்சியில் காட்சிப்படுத்தும் ஒரு சிறப்புத் தொகுதியான -'புதிமைப் பகுதி'-யும் இக்கண்காட்சியில் இடம்பெறும். 'ஹால் ஆஃப் ஃபேம்' எனப்படும் விலைமதிப்பில்லா உலோகங்கள் மற்றும் நவரத்தினங்கள் கொண்டு செய்யப்பட்ட நுட்பமான வடிவ மாதிரிகளின் கண்காட்சியும் இந்தத் தொகுப்பின் ஒரு சுவாரசியமான சிறப்பம்ஸமாகும்.
GJIIE,தொழில்துறை, சந்தை மற்றும் சந்தைப்போக்கைப் பற்றிய அறிவாண்மைப் பகிர்தலை ஊக்குவிப்பதில் புகழ்பெற்றதாகும். பொதுவாக, நவயுக இளைஞர்கள் ஒரே மாதிரியான நகைகளிலிருந்து நகர்ந்து, உயர்ரக, விலை அதிகமில்லாத, தங்க விருப்பத்திற்குத் தகுந்தபடி வடிவமைக்கப்பட்ட நகைகளையே விரும்புகிறார்கள். அதே போல, பாரம்பரை நகைகளை தங்கள் விருப்பபடி மாற்றியமைத்துக் கொள்ளும் போக்கும் இப்போது அதிகரித்துள்ளது. உயர்ந்த வாடிக்கையாளர் அனுபவம், பயன்படுத்துவதில் எளிமை, வேலைப்பாடு மற்றும் சர்வதேசப் போக்கில் கவனத்துடன் ஆழமாக வேரூன்றிய கலாசாரம் ஆகியவையே இந்தப் பிரிவில் புதிய சர்வதேச விருப்பமாக உள்ளது. தங்கத்தில், கோல்ட் காரட் - வைட் மற்றும் கோல்ட் காரட் - ரோஸ் ஆகியவை கோல்ட் காரட் - யெல்லோவை விட அதிகம் விரும்பப்படுகிறது., அதே போல நவரத்தினஞாளின் பிரிவில், ஆச்சரியாமே இல்லாமல், வைரங்களே முன்னணி விருப்பமாக உள்ளன, முத்துக்களும் மாணிக்கங்களும் அதற்கடுத்த இடத்தைப் பெறுகின்றன.
இதேபோன்ற புகழ்பெற்ற தங்க நகைக் கண்காட்சிகளை உலகெங்கிலும் நடத்தி, கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக UBM தங்க நகைத் தொழிலின் ஒரு முக்கியப் பகுதியாக இருந்து வந்துள்ளது. GJIIE,UBM India-வால் ஆண்டு முழுவதும் நடத்தப்படும் நான்கு-நகர (கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் டெல்லி) நகைக் கண்காட்சிகளில் ஒன்றாகும். நான்கு அரங்கௌகளில் அமைக்கப்பெற்ற இந்த கண்காட்சியில் எலிட் பெவிலியன், கோல்ட் பெவிலியன், சில்வர் மற்றும் ஜெம்ஸ்டோன் பெவிலியன் மற்றும் இயந்திரங்கள் மற்றும் வணிகம் சார் பிரிவு ஆகிய வகைவாரியான பெவிலியன்களை இந்தக் கண்காட்சியில் காணலாம்.
GJIIE 2017-இன் அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய Mr. Jayantilal Challani, பிரசிடெண்ட், MJDMA, "இந்தத் தொழிலில், வாடிக்கையாளர்கள் நகைகள் குறிப்பாகத் தங்கத்தில், சொத்துக் கண்ணோட்டத்தில் அல்லாமல் முதலீடு செய்யும் மாற்றத்தைக் கண்டு கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள நுகர்வோர்,பருவங்களுக்குத் தகுந்த வகையில் வடிவமைக்கப்பட்ட டிசைன், ஸ்டைல் மற்றும் ஆக்ராமிப்புத் தன்மாயுடைய வர்த்தக யுக்தியும் தயாரிப்பு நிலைப்பாடும் உள்ள சில்லறை வர்த்தகத்தை எதிர்ப்பார்க்கும் இளைய தலைமுறையினர் ஆவார். வாடிக்கையாளர்கள், சான்றுபெற்ற, தரக்குறியீடு செய்த நகைகளையும் விரும்புகின்றனர். எங்களுடைய தயாரிப்புகள், தரக்குறியீடு செய்யப்பட்டிருப்பது மட்டுமன்றி,மூன்றாம் தரப்பு சர்வதேச ஆய்வகங்களாலும் சான்றளிக்கப்பட்டிருக்குன்றன," என்று கூறினார்.
GJIIE 2017-இன் அறிவிப்பு நிகழ்ச்சியில் பேசிய Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குனர்,
UBM India "தொழில்துறை ஆய்வறிக்கைகளின்படி, இந்திய நவரத்தினங்கள் மற்றும் தங்க நகைத் தொழில் 2014-19-க்கு இடையேயான காலகட்டத்தில் 16%-த்திற்கும் அதிகமான வருடாந்திரக் கூட்டு வளர்ச்சி விகிதத்தில் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேசத் தாக்கத்தின் காரணமாக இந்தப் பிரிவு நுகர்வோர் விருப்பத்தில் பல மாற்றங்களைக் கண்டு வருகிறது. நுகர்வோர், புதிய, விருப்பத்திற்கு ஏற்ப செய்யப்பட்ட டிசைன்கலையே விரும்புகிறார்கள், இவர்களுடைய எதிர்பார்ப்புகளை உள்நாட்டு அமைப்புசாரா வியாபாரிகளை விட பண்பட்ட அமைப்பு சார் நகை வியாபாரிகள் செவ்வனே பூர்த்தி செய்கிறார்கள். வருடாந்திரத் தங்கத் தேவையாகிய 1000 டன்களுடன்,உலகின் இரண்டாவது மிகப்பெரிய தங்க நுகர்வு செய்யும் நாடாகிய இந்தியாவில், நாட்டின் தென்பகுதியே தொடர்ந்து தங்க நுகர்வில் முன்னணியில் இருக்கிறது, மேலும் பண்பட்ட அமைப்புசார் நகை வியாபாரச் சங்கிலிகளின் விரிவாக்கம் செய்யும் ஆர்வத்தையும் பார்த்து வருகிறது. மேலும், தொழில்துறையை அதிகக் கட்டமைப்போடு வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றும் பொருட்கள் மற்றும் சேவை வரி மசோதா (GST) அமலுக்கு வந்த பிறகு, பண்பட்ட அமைப்புசார் தங்க நகை சில்லறை வியாபாரிகள் தகளுடைய சந்தைப் பங்கில் முன்னேற்றம் இருப்பதை உணர்கின்றனர். நவரத்தின மற்றும் தங்க நகை தொழிலில் இருக்கும் முன்னணி மற்றும் வளர்ந்துவரும் வியாபாரிகள், தங்களுடைய முதன்மையான நகைத் தொகுப்புகளின் மூலம்,உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலான பார்வையாளர்களைச் சென்றடைய ஊக்கமளிக்கும் ஒரு கருவியாகGJIIEதிகழ்கிறது. இந்தக் கண்காட்சியில்,தற்காலப் பாங்கிற்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட டெம்பில் நக்ஷி நகைகள், கற்கள் பதித்த நகைகள் மற்றும் மாங்கா மாலை, காசு மாலை மற்றும் பட்சி வடிவங்கள் கொண்ட நகைகள் போன்ற பாரம்பரிய நகைகள் காட்சிக்கு வைக்கப்படும்." என்று கூறினார்.
UBM India-வைப் பற்றி
UBM India,கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியோ, உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளின் மூலம், தொழில்துறைக்கும் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒரே இடத்தில் சேர்க்கும் ஒரு தளத்தை உருவாக்கித் தரும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளராகும். UBM India 25-க்கும் மேலான பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளையும் நாடெங்கிலும் ஆண்டு முழுவதும் நடத்துகிறது; இதன் மூலமாக பலவிதமான தொழில்துறைகளில் வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது. ஒரு UBM Asia நிறுவனமாகிய, UBM India-விற்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் உள்ளன. UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc -க்கு சொந்தமான நிறுவனமாகும். UBM Asia, ஏசியாவிலேயே முன்னணி கண்காட்சி அமைப்பாளராகும், மேலும் இது சீனா, இந்தியா மற்றும் மலேசியாவிலும் மிகப்பெரிய வணிகமுறை கண்காட்சி அமைப்பாளராகும்.
மேலும் விவரங்களுக்கு, ubmindia.in.-ஐப் பார்க்கவும்.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-6172-7000
UBM India
Share this article