மும்பை, February 21, 2017 /PRNewswire/ --
CPhI கான்பரன்சஸ்,பல வெற்றிகரமான பார்மசியூடிக்கல் நடத்தும், UBM Indiaவின் ஒரு பகுதியாகிய இது, மும்பையில் த வெஸ்டின்-இல் 16 முதல் 17 மார்ச் 2017 வரை நடக்கவுள்ள 5-ஆவது வருடாந்திர பார்மா திட்ட மேலாண்மை மாநாட்டை அறிவித்துள்ளது. இந்த மாநாடு, ஒரு தனிப்பட்ட மாநாடு-பட்டறை மாதிரியின் மூலம், அபாயங்கள், நேரம் மற்றும் செலவை கண்காணித்து திட்டங்களை வெற்றிகரமாக செய்துமுடிப்பதில் கவனம் செலுத்துகிறது. இது, ஒன்று கூடி, கருத்துக்களையும் யோசனைகளையும் பரிமாறிக்கொண்டு, எதிர்கால நட்புறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும் பொருட்டு பார்மா தொழில் துறையின் நிபுணர்களை ஒன்றிணைக்கிறது.
(Logo: http://mma.prnewswire.com/media/469711/5th_Annual_Pharma_Project_Management_Conference_Logo.jpg )
(Logo: http://mma.prnewswire.com/media/469712/UBM_India_Logo.jpg )
இந்த மாநாடு,பார்மசியூடிக்கல் துறையில் திட்ட மேலாண்மையாளர்கள் சந்துக்கும் பல்வேறு முக்கியச் சவால்களில் கவனம் செலுத்துகிறது. இந்த நிகழ்ச்சி, உலகம் முழுவதிலும் உள்ள அறிவாற்றல் மற்றும் அனுபவச் செரிவை ஓரிடத்தில் திரட்டும் வகையிலான ஒரு கூட்டமைப்புத் தளத்தை வழங்கவே தனிப்பட்ட முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் திட்டங்களைக் கையாள்வதில் உள்ள நடைமுறை செயல்பாடுகள் மற்றும் திட்டங்களை சரியான நேரத்தில் செய்து விநியோகம் செய்வது பற்றிய கல்விமுறைக் கலந்துரையாடல்களும், அதைத் தொடர்ந்து கேள்வி பதில் நேரங்களும் நடைபெறும்.
இந்த ஆண்டு, மாநாட்டின் தலைமை உரை Mr. Sanjay Bhanushali, சர்வதேச வர்த்தகம், Cipla-வினால் வழங்கப்படும், இவர் மற்ற தொழில் துறைகளின் திட்ட மேலாண்மையிலிருந்து பார்மா திட்ட மேலாண்மை எவ்வகையில் மாறுபட்டு உள்ளது என்பதைப் பற்றி விரிவாகப் பேசுவார்.
Ms. Cynthia Shafer, துணை நிறுவனர் - திட்ட மேலாண்மை நோவார்டிஷ்; Ms. Sangbreeta Moitra, பெருநிறுவனப் பேச்சாளர் மற்றும் கதை கூறுபவர், பைண்ட் த ஸ்பீக்கர் விதின்; Mr. Subbu Parameswaran, சிஇஓ, Learning Curve Life Skills Foundation; Mr. Bishnu Mohanty, தலைவர் - குலோபல் ப்ராஜக்ட் மேனேஜ்மெண்ட், Alkem Lab Ltd; Mr. Rajaram Iyer, துணை முதல்வர், Mankind Pharma; Mr. Shibasish Pramanik, தலைவர், I&D இந்தியா, Abbott; Mr. Abhishek Gupta, நிறுவனர் மற்றும் தலைவர், RDI, AstraZeneca, ஆகிய புகழ்பெற்ற பேச்சாளர்கலும் இந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கு பெறுகின்றனர்.
5-ஆவது வருடாந்திர பார்மா திட்ட மேலாண்மை மாநாட்டை அறிவிக்கும்போது, Mr. Yogesh Mudras, நிர்வாக இயக்குனர் கூறியதாவது, "மருந்து மற்றும் சாதனங்களின் உற்பத்தியில் உள்ள சிக்கலான செயல்பாடுகளுக்கு சிறந்த பார்மா திட்ட மேலாண்மை மிகவும் முக்கியமாகும்.மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களின் உற்பத்தியை இன்னும் குறைவான கால அவகாசத்தில் செய்து முடிக்கவேண்டிய கட்டாயம் அதிகரித்து வருவதால், இதை செயல்படுத்தத் தேவையான கருவிகளையும் தொழில்நுட்பங்களையும் பெற திட்ட மேலாண்மையைப் பயன்படுத்தலாம். இந்த பார்மா திட்ட மேலாண்மை மாநாடு, கலந்துரையாடல் அமர்வுகள் மற்றும் கல்விமுறை சூழ்நிலை கலந்துரையாடல்கள் மூலம் திட்ட மேலாண்மையில் உள்ள சவால்கள் மற்றும் அதன் பல அம்சங்களின் மேல் தனி கவனம் செலுத்தும். இந்தக் கூட்டம் தொழில் துறையில் ஒரு வெளிக்கொணர்தலை உண்டாக்கி ஊட்டுருவாத சந்தைப்பிரிவுகளில் நுழையவும் வழி வகுக்கிறது."
UBM India-வைப் பற்றி
UBM India,கண்காட்சிகளின் போர்ட்ஃபோலியோ, உள்ளடக்க மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளின் மூலம், தொழில்துறைக்கும் வாங்குபவர்களையும் விற்பவர்களையும் ஒரே இடத்டில் சேர்க்கும் ஒரு தளத்தை உருவாக்கித் தரும் இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளராகும். UBM India 25-க்கும் மேலான பெரிய அளவிலான கண்காட்சிகளையும் 40-க்கும் மேற்பட்ட மாநாடுகளையும் நாடெங்கிலும் ஆண்டு முழுவதும் நடத்துகிறது; இதன் மூலமாக பலவிதமான தொழில்துறைகளில் வர்த்தகத்தை ஊக்குவிக்கிறது. ஒரு UBM Asia நிறுவனமாகிய, UBM India-விற்கு மும்பை, புது தில்லி, பெங்களூரு மற்றும் சென்னையில் அலுவலகங்கள் உள்ளன. UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள UBM plc -க்கு சொந்தமான நிறுவனமாகும். UBM Asia, ஏசியாவிலேயே முன்னணி கண்காட்சி அமைப்பாளராகும், மேலும் இது சீனா, இந்தியா மற்றும் மலேசியாவிலும் மிகப்பெரிய வணிகமுறை கண்காட்சி அமைப்பாளராகும். மேலும் விவரங்களுக்கு,ubmindia.in.-ஐப் பார்க்கவும்.
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani
[email protected]
+91-22-6172-7000
UBM India
Share this article