நியூடெல்லி, February 17, 2017 /PRNewswire/ --
UBM India ஏற்பாடு செய்த இந்தியாவினுடைய மிகச்சிறப்பான ட்ராவல் மற்றும் டூரிஸம் எக்ஸ்போ
- 40 நாடுகள், 28 இந்திய மாநிலங்களிலிருந்தும் 870க்கும் அதிகமான பங்கேற்பாளர்கள்
UNWTO மற்றும் சுற்றுலா அமைச்சகம், இந்திய அரசு ஆதரவு பெற்றது
SATTE Awards 2017 ஆரம்பிக்கப்பட்டது
பிரத்யேகமான ஸ்டார்ட்-அப் (தொடக்கநிலை வணிக) பெவிலியன் அறிமுகப்படுத்தப்பட்டது
மூன்று நாள், அதிக தாக்கத்துடன் கூடிய அறிவுசார் மன்றங்களும், மகாநாடுகளும்
UBM India வுடன் இணைந்து SKAL World Congress - ற்கான நிகழ்விடம் ஹைதராபாத் என்பதை சர்வதேச டூரிஸம் அமைப்பான SKAL ப்ரசண்டேஷன் மூலம் உத்யோகபூர்வமாக அறிவித்தது.
இன்று புது டில்லியிலிருக்கு பிரகதி மைதானத்தில் UBM India `SATTE 2017' என்கிற மிகப்பெரிய ட்ராவல் ட்ரேட் நிகழ்ச்சியை வலுவான செய்தியுடன் ஆரம்பித்தது. மூன்று நாட்கள் நிகழ்வான இந்த 24ஆவது எடிசன் உலக மற்றும் இந்திய ட்ராவல், டூரிஸம் சந்தைகளைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளின் பங்கேற்கேப்பை கண்டு கொண்டிருக்கிறது. மிகவும் முக்கியமாக, சர்வதேச டூரிஸ் துறையின் தலைவர்கள் கொண்ட தொழில் ரீதியிலான அமைப்பான SKAL, அதனுடைய 78 ஆவது SKAL World Congress ஐ UBM India வுடன் இணைந்து இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாத்தில் அக்டோபர் 5-8, 2017 ல் நடத்தப் போவதற்கான மிகவும் முக்கியமான ஒத்துழைப்பை அறிவித்தது.
(Photo: http://mma.prnewswire.com/media/468402/SATTE2017_Ribbon_Cutting_Ceremony.jpg )
(Photo: http://mma.prnewswire.com/media/468403/SATTE2017_Inauguration_Ceremony.jpg )
(Logo: http://photos.prnewswire.com/prnh/20130226/599595-c )
Mr Michael Duck, Executive Vice President, UBM Asia, and Mr Yogesh Mudras, Managing Director, UBM India உடன் இன்னும் பல பிரபலமானவர்களின் முன்னிலையில் சிறப்பு விருந்தினரான Shri Kapil Mishra, Minister for Water, Tourism, Culture, Arts and Language ரிப்பன் வெட்டி தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய, பெருமதிப்பு மிக்க விழாவை அது நிகழுமிடத்தில் முறைப்படி ஆரம்பித்து வைத்தார்.
ஒன்றுகூடி தொழில் செய்யவும், பொருளாதார ஸ்திரமற்ற நிலையில் தீர்வை நோக்கிய புதுமைகளை சென்றடையவும், உள் வருகிற, வெளிச் செல்கிற, உள்ளூர் டூரிஸைத்தை இந்தியாவில் ஊக்குவிக்கவும் உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் வாங்குபவர்கள், தேசிய, மாநில டூரிஸம் போர்டோடு ட்ராவல்,டூரிஸம், விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் என அனைவருக்கும் SATTE ஒரு விலாசமான தளத்தை வழங்குகிறது. மிகவும் சாதகமான தொழில் தளமான இதை இந்திய அரசின் சுற்றுலா அமைச்சகமும், இந்திய அரசின் `மேக் இன் இண்டியா' முயற்சியும் கூட நன்றாக ஆதரவு கொடுக்கிறது.
அனைத்து மாநில டூரிஸம் போர்டுகளும் இந்த எக்ஸ்போவில் பங்கெடுத்துக் கொண்டதைப் பார்க்க முடிந்தது. NTO க்களைப் பொருத்தவரையில் யுஎஸ்ஏ, மெக்சிகோ, செக் ரிபப்ளிக், ஸ்பெயின், ரஷ்யா, சிங்கப்பூர், மலேசியா, சீனா, ஹாங்காக், ஜப்பான், கொரியா, இஸ்ரேல், தாய்லாந்து, இந்தோனேசியா, மக்காவ், ஃபிஜி, பூட்டான், நேபாள், ஸ்ரீலங்கா, அபுதாபி, துபாய், நியூசிலாந்து, ரீயூனியன் தீவு, துருக்கி, எகிப்து ஆகிய நாடுகளோடு முதல் முறையாக பெரு, வியட்நாம், ஷார்ஜா போன்ற நாடுகளும் கலந்து கொண்டன. துருக்கி, SATTE 2017 ல் துபாய், ஸ்ரீலங்கா, தாய்லாந்து ஆகியவை கூட்டாளி நாடுகள், ஷார்ஜா ஒரு தனிச்சிறப்பு நாடு ஆகும். இது போல இந்த ஆண்டு இந்திய மாநிலங்களில் மத்தியப் பிரதேஷ், குஜராத், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா ஆகியவை கூட்டாளி மாநிலங்கள், ஒடிஷா ப்ரிமீய கூட்டாளி மாநிலம், ஜம்மு மற்றும் காஷ்மீர் தனிச்சிறப்பு மாநிலமாகும்.
கார்ல்சன் ரெஸிடார் ஹோட்டல் குழுமம், ITDC, ஸ்டெர்லிங் ரிசார்ட்ஸ், துபாய் பார்க்ஸ் மற்றும் ரிசார்ட்ஸ், மோவென்பிக் ஹோட்டல் மற்றும் ரிசார்ட்ஸ், மைனர் ஹோட்டல்ஸ்,மெலியா ஹோட்டல்ஸ் இண்டர்நேஷனல், ONYX ஹாஸ்பிடாலிடி குழுமம், ராமி குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ்,சாங்க்ரி-லா ஹோட்டல்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ், வெனீசியன் கோட்டெ போன்ற விருந்தோம்பல் துறையைச் சார்ந்தவர்களின் செயல்திறமான பங்கேற்பையும் SATTE 2017 ல் கண்டு கொண்டது. NTO க்கள் மற்றும் மாநில டூரிஸம் போர்டுகளை தவிர ட்ராவல் மற்றும் ஹாஸ்பிடாலிடி நிறுவனங்கள், க்ரூஸ் லைனர்ஸ், DMC, OTA மற்றும் டூரிஸம் பொருட்களும் இந்த நிகழ்வில் சேர்ந்து கொண்டன. வருகையாளர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இந்தத் துறை சம்பந்தமான போக்குகளையும், மேம்பாடுகளையும் பற்றி சிறப்பாக தகவல் கொடுப்பதற்காக SATTE நன்கு அறியப்பட்ட ட்ராவல் அசோஷியேசன்கள், அமைப்புகள், ஊடக நிறுவனங்களுடன் மிகவும் நெருக்கமாகப் பணியாற்றிவருகிறது.
இந்த ஆண்டும், சர்வதேச மற்றும் இந்திய வணிக அமைப்புகளான World Tourism Organisation (UNWTO), Indian Convention Promotion Bureau (ICPB), Pacific Asia Travel Association (PATA), Society for Incentive Travel Excellence (SITE), SKAL International, United Federation of Travel Agents Associations (UFTAA), Indian Association of Tour Operators (IATO), Travel Agents Association of India (TAAI), Federation of Hotel and Restaurant Associations of India (FHRAI), Travel Agents Federation of India (TAFI), Association of Domestic Tour Operators of India (ADTOI), Outbound Tour Operators Association of India (OTOAI) மற்றும் IATA Agents Association of India (IAAI) ஆகியவற்றின் ஆதரவை SATTE பெற்றது.
SATTE க்கான முன்னுரைத் தகவலில், Taleb Rifai, பொதுச் செயலாளர், World Tourism Organization (UNWTO), `உலகப் பயணத்தைப் பொருத்தளவில் ஆசியாவும், பசிபிக்கும் ஈர்ப்பு விசையின் புதிய மையங்களாக ஆகிவருவதோடு சர்வதேச டூரிஸமும் அபரீத வளர்ச்சியடைந்து வருவதை SATTE யின் வளர்ச்சி பிரதிபலிக்கிறது. முக்கியமாக, 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் `இண்டர்நேஷனல் இயர் ஆஃப் சஸ்டெயினபிள் டூரிஸம் ஃபார் டெவலப்மெண்ட்' அறிமுகப்படுத்திலிருந்து தெற்கு ஆசியாவில் சர்வதேச டூரிஸ சமூகத்தினரிடையே நடைபெறும் கூட்டங்களில் SATTE 2017 தான் முதலாவது கூட்டமாகும். பாதுகாப்பானதாகவும், அதிகம் உள்ளடக்கியதாகவும், வளமானதாகவும், அனைவருக்குமான உலகமாகவும் உருவாக்குவதற்கு டூரிஸத்தை சக்தி மிக்க, ஆற்றல் வாய்ந்த ஒரு கருவியாக ஆக்குவதற்கு இந்த சர்வதேச ஆண்டு ஒரு முக்கியமான தருணம் என்று ஐக்கிய நாடுகளின் பொதுசபை பிரகடனப்படுத்தியது" என்று பேசினார்.
Mr Yogesh Mudras, நிர்வாக அதிகாரி, UBM India SATTE - ன் 24 ஆவது எடிசனில் பேசும் போது, 'குறிப்பாக இந்தியாவின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது தற்போதிருக்கும் பொருளாதார நிலைமைகள் உலக டூரிஸத்தை மிகவும் சுவராசியமான ஒரு கட்டத்தில் வைத்திருக்கிறது. இந்த மாதிரியான ஒரு சூழ்நிலையில்தான் SATTE - போன்ற அந்தஸ்து கொண்ட ட்ராவல் மற்றும் டூரிஸம் காட்சி முக்கியமானதாக இருக்கிறது. சர்வதேச அமைப்புகள் மற்றும் இந்திய அசோஷியேசன்களின் ஆதரவுடன் போக்குகளை பகுத்தாயவும், எதிர்கால அபிவிருத்திகளைக் கணிக்கவும், சாத்தியமான் தீர்வுகளைக் காணவும், வணிகத்தை செழிக்கச் செய்யவும் SATTE முயற்சி செய்யும். கண்காட்சியாளர்களின் அபரீத ஆதரவாக இருந்தாலும் அல்லது நீடித்த காலத்திற்கான டூரிஸம், தவிர்க்கமுடியாத ட்ராவல் பேக்கேஜ்களை எப்படி உருவாக்குவது அல்லது GST குறித்த நுணுக்கங்களைப் புரிந்து கொள்வது போன்ற சமகால போக்குகள் சம்பந்தப்பட்ட விஷயங்கள் கொண்ட மகாநாடாக இருந்தாலும் SATTE -ன் அனுபவத்தை எந்தவொரு ட்ராவல் தொழில் வல்லுநரும் தவறவிட முடியாது. ஒவ்வொரு வருடமும், அதற்கு முந்தைய வருட நிகழ்வை விட சிறப்பாக இருக்க வேண்டுமென எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான முயற்சிகளை எடுத்து வருகிறோம். SATTE ன் 2017 எடிசனிலிருந்து சில தீர்க்கப்பூர்வமான, சுவராசியமான அபிவிருத்திகளையும், போக்குகளையும் எதிர்நோக்கியிருக்கிறோம்' எனக் கூறினார்.
மேலும் அவர், `சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் கூட நமது அரசாங்கம் டூரிஸம் துறையின் மேல் நம்பிக்கை காட்டியிருக்கிறது. உள் கட்டமைப்பு வசதி, மாநிலங்களுடன் சேர்ந்து டூரிஸம் பிராந்தியங்களை உருவாக்குவது, கடற்கரையோரமாக 2000 கி.மீட்டர் அளவுக்கான சாலைகள அடையாளங் கண்டு கொண்டு அதை அபிவிருத்தி செய்வது போன்றவற்றிற்கு ரூ 3.9 லட்சம் கோடியும், தேசிய நெடுஞ்சாலைக்காக ரூ 64,000 கோடி ஒதுக்கியிருப்பதும் அரசாங்கத்தின் தொலைநோக்குச் சிந்தனை கொண்ட இந்த நடவடிக்கைகள் டூரிஸத்தையும் பொதுவான வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும்' எனவும் கூறினார்.
தெற்கு ஆசியாவின் முன்னணி B2B ட்ராவல் மற்றும் டூரிஸம் கண்காட்சியான SATTE, எக்ஸ்போவுக்கு வருகைதரும் ஒவ்வொரு பார்வையாளரும் இந்த நிகழ்வு கொடுக்கவிருப்பது குறித்து ஒரு அதிக எதிர்பார்ப்புடன் அணுகுவதால் இது இந்திய ட்ராவல் மற்றும் டூரிஸம் துறையின் கிரியாஊக்கியாக (catalyst) இருக்கிறது. சிக்னேஜர் எக்ஸ்போவின் வருகையாளர்கள் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பிரத்யேக ஸ்டார்ட்-அப் பெவிலியனில் ட்ராவல் ஸ்டார்ட்-அப்ஸ், அறிவுப்பூர்வமான உரையரங்குகள், மாநாடுகள், வணிகரீதியில் மேட்ச் மேக்கராக சேவை செய்யும் B2B Scheduler (திட்டமிட்டாளர்), சாய் அட்டா, பண்பாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள், இலக்கு தீம் இரவுகள் போன்ற பல எண்ணற்ற புதுமையான அம்சங்களை உள்ளடக்கியிருக்கின்றன.
SATTE 2017 ன் முக்கியமான நிகழ்வுகள் துறை சார்ந்த புதிய போக்குகளையும், நுண்ணறிவு விஷயங்களையும் உள்ளடக்கியதாகவும் இருக்கின்றன. முதல் நாளன்று SATTE, துறை சார்ந்தவர்கள் யோசனைகளைப் பரிமாறிக் கொள்வதற்கும், இந்திய டூரிஸத்துக்கு மதிப்பை உருவாக்குவதற்கும் அனைவரையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைக்கக்கூடிய மூன்று குழு கலந்துரையாடல்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. இந்திய அரசாங்கத்தின் `மேக் இன் இண்டியா' திட்டம் முழு வீச்சுடன் செயல்படுகையில், சமகால தலைப்புகளான 'Responsible Tourism', 'Make in India மற்றும் Tourism'மற்றும்'Talk Show on GST' ஆகியவற்றையும் குழு கலந்துரையாடல் உள்ளடக்கியதாக இருக்கிறது.
எக்ஸ்போவுக்கு முந்தைய நிகழ்வாக, UBM India SATTE அவார்ட்ஸ் 2017 ஐ முதல் முறையாக நடத்தியது. இந்த அவார்ட்ஸ் மாலையில் ட்ராவல் மற்றும் டூரிஸம் துறையைச் சேர்ந்த முக்கியமானவர்களை, SATTE - ன் பண்புகளை உள்ளடக்கிய தத்துவமான ஒளிவுமறைவற்ற, நம்பகத்தனம் கொண்ட, உண்மையான காரணிகளின் அடிப்படையில் அங்கீகாரம் செய்வதற்கும் திறமையைக் கொண்டாடுவதற்குமான முயற்சி ஆகும். இந்த அவார்ட்ஸ் இரவு, நெட்வொர்க்கிங் வாய்ப்புகள், பிரசண்டேஷன்கள் என மற்ற அம்சங்களையும் உள்ளடக்கியதாகும். பல்வேறு பிரிவுகள் சம்பந்தப்பட்ட 19 அவார்டுகளில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சில பிரிவுகள்.ஏர்லைன்ஸ், க்ரூஸ், டூர் ஆபரேட்டர்கள், ஹோட்டல்கள், இடங்கள், ஆன்லைன் ட்ராவல் போர்ட்டல்கள் .போன்றவையாகும். இந்த முதல் எடிசனில் அவார்ட்ஸ், ட்ராவல் துறையின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது.
SATTE 2017, நியூ டெல்லியில் தொழில்துறையின் எதிர்வினைகளும் அறிமுகங்களும்
Cox & Kings Ltd - Karan Anand - தலைவர், ரிலேஷன்ஷிப்ஸ்
"எங்களுடைய இலக்குச் சந்தையைச் சென்றடைவதற்கும், புதிய சேவைகளை காட்சிப்படுத்துவதற்கும் மிகவும் பொருத்தமான ஒரு தளத்தையும், பார்வையாளர்களையும் SATTE எங்களுக்கு வழங்கியிருக்கிறது. இந்த வருடம் `கெட்டவே காடஸ்' என அழைக்கப்படும் பெண்கள் மட்டுமே ஆன பிரயாணங்களையும், மூன்று `S' ஆன பாதுகாப்பு (Safety), நீடிப்புத்திறன் (Sustainability), சமூகம் (Social) ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ட்ரிப் 360 என்கிற சாகச பயண தளத்தையும் நாங்கள் ப்ரமோட் செய்கிறோம். எங்களுடைய இலக்குப் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் உலகெங்கிலுமிருந்து புதிய பேக்கேஜ்களையும், இடங்களையும் நாங்கள் வழங்குகிறோம்"
இஸ்ரேல் மினிஸ்ட்ரி ஆஃப் டூரிஸம் - Hassan Madah - இயக்குநர், இந்தியா மற்றும் பிலிஃப்பைன்ஸ் அலுவலகம்
"இந்திய ட்ராவல் துறையில் முன்னணியில் இருப்பவர்களை சந்திக்கவும் ஊடாடவும் SATTE உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. எங்களுடைய DMC -க்கள் தொடர்பு கொள்ளவும் அவர்களுடைய பொருட்களை இந்தியக் கூட்டாளிகளுக்கு அறிமுகம் செய்ய ஒரு தளம் அமைத்துக் கொடுக்கவும் நாங்கள் இதில் பங்கேற்கிறோம். இந்த விஷயத்தில் SATTE எப்பொழுதும் எங்களுடைய கூட்டாளியாகும். நாங்கள் சென்றிராத மூன்று நகரங்களில் - சண்டிஹார், அஹ்மதாபத், ஹைதாரபாத் - மூன்று ரோட்ஷோ நடத்துகிறோம். அதோடு இந்தியாவில் எங்களுடைய இரண்டாவது பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறோம்."
டூரிஸம் ஃபிஜி - Vaijayanthi Kari - இந்தியப் பிரதிநிதி
"நாங்கள் ஒவ்வொரு வருடமும் SATTE பங்கேற்று வருகிறோம். இந்தியாவிலிருக்கும் ட்ராவல் சமூகத்தினரிடையே அறிவையும், நெட்வொர்க்கைப் பகிர்ந்து கொள்வதற்கு இணையாக இந்த நிகழ்வு இருக்கிறது 2017 ஆம் ஆண்டு எடிசனையும் அதற்குக் குறைவாக எதிர்பார்க்க முடியாது. பொருளாதார மாற்ற விளைவுகளால் ஏற்படும் ட்ராவல் தொழிலில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன, அடுத்த நிலைகளை திட்டமிடுவதற்கும், போக்குகள் பற்றி தெரிந்து கொள்ளவதற்கும் SATTE ஒரு நல்ல தளமாகும். மும்பையை மட்டும் சார்ந்து இருக்கும் எங்களுக்கு, இந்தியாவெங்கிலும் இருந்து கலந்து கொள்ளும் ட்ராவல் சமூகத்தைச் சேர்ந்த முக்கியமான உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த தளமாகும். ஃபிஜி ஏர்வேஸ் சிங்கப்பூரிலிருந்து ஃபிஜிக்கு நேரடி விமானச் சேவையைக்கூட ஆரம்பித்திருக்கிறது. ஃபிஜி விடுமுறைகளை இந்தியாவிலிருந்து அதிகமான பிரிவுகளுக்கும், சந்தைகளுக்கும் ஹைலைட் செய்வதற்கான ஒரு நல்ல நிலையை இது எங்களுக்கு வழங்குகிறது. இது தொடர்பாக, SATTE 2017, சந்தைக்காக எங்களது புதிய வழங்கல்களை காட்சிப்படுத்துவதோடு எங்கள் ஸ்டேக்ஹோல்டர்கள் எங்களிடம் கேட்கும் ஆதரவு குறித்து புரிந்து கொள்வதற்கும் இது ஒரு நல்ல தளமாகும்."
Sri Lankan Airlines Ltd
"முக்கியமாக எங்களுடைய சப்ளையர்கள் மற்றும் வணிகக்கூட்டாளிகளை சந்திப்பதற்கான PR காரணங்களுக்காகவே நாங்கள் SATTE ல் பங்கேற்கிறோம். ஓய்வு மற்றும் MICE இயக்கங்களுக்கு சோர்ஸ் செய்யும் எங்களுடைய திட்டங்களை SATTE -ல் உள்ளடக்கியிருக்கிறோம். பெரிய அறிவிப்புகள் எதுவும் செய்வதாக இல்லை"
குளோபல் டெஸ்டினேஷன்ஸ் - Pranav Kapadia, நிறுவனர்
"இந்தியாவில் எங்கள் கூட்டாளிகளுக்காக அதிகமாக காத்திருக்கும் நிகழ்வுகளில் ட்ராவல் வணிக நிகழ்வான SATTE ஒன்றாகும். பெரும்பாலான எங்களது கூட்டாளிகளைப் பொருத்தவரையில் உச்சகட்ட டூரிஸ்ட் காலம் ஆரம்பிப்பதற்கு முன் SATTE நடைபெறும் முக்கிய நிகழ்வு என்பதால் நாங்கள் அவர்களைப் பங்கேற்கும்படு உற்சாகப்படுத்துவதுண்டு. SATTE ல் தரமான வாங்குபவர்கள் வருவது நல்லதாகும். இதன் விளைவுகளை நாங்கள் வருடம் முழுவதும் பார்க்கிறோம். சில சிறந்த கூட்டாளிகள் இந்த வருடம் எங்களோடு சேர்ந்திருப்பதால் இந்திய ட்ராவல் வணிக சமூகத்துக்கு எங்களுடைய போர்ட்ஃபோலியோவை காட்சிப்படுத்துவதற்கு SATTE ஒரு தளம் தந்தி்ருக்கிறது. எங்களுடைய புதிய கூட்டையும், நீண்டகாலம் நீட்டித்திருக்கும் கூட்டுறவின் வலிமையையும் SATTE 2017 ல் ஹைலைட் செய்வதுதான் எங்கள் நோக்கமாகும்"
ட்ராவல் பொட்டிக் ஆன்லைன் - nkush Nijhawan - சி இ ஓ
"இந்தியாவில் இது ஒரு மிகச்சிறந்த ட்ராவல் மற்றும் டூரிஸம் கண்காட்சியாகும். SATTE ல் நாங்கள் எங்களுடைய பல ப்ராண்டுகளைக் காட்சிப்படுத்தும் மிகப்பெரிய காட்சியாளர்களில் ஒருவராக இருந்து வருகிறோம். SATTE க்கு பல ட்ராவல் வருகையாளர்கள் வருகை தருகிறார்கள், அவர்களோடு நாங்கள் ஈடுபாடு கொள்வதற்கு இது மிகப்பெரிய வாய்ப்பை எங்களுக்குக் கொடுக்கிறது. இந்த வருடமும் எங்களோடு சேர்ந்து ஏற்கனவே வேலை செய்தவர்களும், புதியவர்களும் என அதிக வருகையாளர்கள் வருவார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.'
டூரிஸம் அத்தாரிட்டி ஆஃப் தாய்லாந்து - Isra Stapanaseth - இயக்குநர்
"ஓவ்வொரு வருடத்தைப் போல SATTE 2017 ம் எங்களுக்கும், தாய்லாந்தின் தனியார் துறையை பிரநிதித்துவப்படுத்தும் ட்ராவல், ட்ரேட், விருந்தோம்பல் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியாவெங்குமிருக்கும் ட்ராவல் தொழிலைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கவும்ஊடாடவும் நம்பிக்கையளிக்கும் ஒரு சிறந்த தளமாகும். இந்தியாவின் மிகப்பெரிய ட்ராவல் ட்ரேட் காட்சிகளில் முன்னணியிலிருக்கும் SATTE சர்வதேச அளவிலான வாங்குபவர்கள் மற்றும் ட்ரேட் பார்வையாளர்கள் உட்பட அதிகமான பார்வையாளர்களோடு வணிகம் செய்யவும், ஊடாடுவதற்குமான முழுமையான வாய்ப்பினை ஒரே கூரையின் கீழ் மூன்று நாட்களுக்குக் கொடுக்கிறது."
ரூம்ஸ் XML Solutions Limited - Mr. Prakash Bang - ஃபவுண்டர் மற்றும் எக்ஸிக்யூடிவ் சேர்மன்
"நாங்கள் 100% B2B நிறுவனமாக இருப்பதால், இந்தப் பிராந்தியத்திலிருந்து வரும் தற்போதைய வாடிக்கையாளர்களோடு புதிய ட்ராவல் ஏஜண்டுகளைச் சந்திப்பதற்கான வாய்ப்பையும் SATTE எங்களுக்குக் கண்டிப்பாக கொடுக்கிறது. இல்லையென்றால் அனைவரையும் தனிப்பட்ட முறையில் நேராக சந்திப்பது என்பது ஒரு ஹெர்குலிய வேலையாகும். எங்களுக்கு 2017 இன்னுமொரு `பாத் ப்ரேக்கிங்' வருடமாக இருக்கும். நாங்கள் அடுத்த தலைமுறை API ஐ சமீபத்திய அம்சங்களோடு அறிமுகப்படுத்துகிறோம். அவைகள் இரண்டு: ஒரு வினாடிக்கும் குறைவான எதிர்வினை, ஒரே வேண்டுகோளில் பல ஹோட்டல்கள் பற்றிய தேடல்கள்."
ரீயூனியன் ஐலாண்ட் டூரிசம் போர்ட் - Mr. Vineet Gopal - இயக்குநர் இந்தியா
"நாட்டில் ஆரம்பத்திலிருந்தே SATTE ஒரு மிகப் பிரபலமான ட்ராவல் ட்ரேட் காட்சிகளில் ஒன்றாக இருந்து வருவதோடு பொதுத் தளத்தில் இந்திய ட்ராவல் வணிகம் குறித்த முக்கியமான பிரச்சனைகளுக்கு எப்போதும் முறையீடு செய்தும் வருகிறது. இந்தத் தளம் வழியாக இந்தியாவைச் சேர்ந்த வணிகக் கூட்டாளிகள் மட்டுமல்லாமல் உலகெங்கிலும் இருந்து வருபவர்களையும் சந்திக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைப்பதால் எங்களுடைய B2B கூட்டாளிகளுக்கு எங்களுடைய வழங்கல்களை காட்சிப்படுத்த உதவுகிறது, நாளடைவில் அது ஒரு மிகப்பெரிய விற்பனைக்கான விளைவை ஏற்படுத்தும். '
RezLive.com பை ட்ராவல் டிசைனர் - Mr. Jaal Shah - க்ரூப் மேனேஜிங் டைரக்டர் - ட்ராவல் டிசைனர் க்ரூப்.
"SATTE ஒரு எழுச்சியூட்டும் நிகழ்வாகும். இது புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு ட்ராவல் சந்தையின் நோக்கத்தையும் எதிர்கால வளர்ச்சியையும் நிதர்சனத்துக்குக் (reality) கொண்டுவருகிறது. இது OTAக்கள், ஹோட்டல் நடத்துபவர்கள், ஏஜண்டுகள், DMC க்கள் போன்றவர்கள் அவர்களுடைய பொருட்களை உலகெங்கிலுமிருந்து வரும் குறிப்பிடத்தக்க வருகையாளர்களிடம் காட்சிப்படுத்தி சந்தைப்படுத்துவதற்கான சரியான தளத்தை வழங்குகிறது. ட்ராவல் ட்ரேடிடமிருந்து எப்போதும் நாங்கள் ரொம்பவும் நேர்மறையான எதிர்வினையைத்தான் பெற்றிருக்கிறோம். ட்ராவல் கூட்டாளிகளுடன் அரங்கு நிரம்பியிருக்கும். இந்த வருடமும் நாங்கள் இதை எதிர்ப்பார்ப்பதோடு அதிகமான பார்வையாளர்களையும் பார்ப்போம் என நம்புகிறோம். ட்ராவல் டிசைனர் க்ரூப் அதனுடைய குடைக்குக் கீழ் வெவ்வேறு ப்ராண்டுகளை வைத்திருந்தாலும் SATTE யின் போது RezLive.com - ன் புதுமையான அம்சங்களையும், தொழில்நுட்ப மேலாதிக்கத்தையும் தான் ட்ராவல் ட்ரேடுக்கு முக்கியமாகக் காட்சிப்படுத்தப்படும். இந்த வருடம் RezLive.com அதனுடைய ஆன்லைன் இயக்கத்தின் 10 ஆவது ஆண்டைக் கொண்டாடுவதால் எங்கள் அனைவருக்குமே இது ஒரு சிறப்பான ஆண்டாகும்."
ராமி குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ் - Nihit Srivastava - இயக்குநர், ஆபரேஷன்ஸ் மற்றும் பிசினஸ் டெவலப்மெண்ட் (இந்தியா)
"மத்திய கிழக்கு நாடுகளில் பெரிய இருப்பைக் கொண்டிருக்கும் Ramee Group of Hotels SATTE 2016 கண்காட்சியில் கலந்து கொள்வதில் அர்த்தம் இருக்கிறது எனக் கருதினோம். 2016-17 நிதிநிலை ஆண்டு மிகவும் கடினமாக இருந்தாலும் இந்திய டூரிஸ்ட்கள் வணிக ரீதியில் பெரிய வலுவாக இருந்தார்கள், இந்தத் தளத்துக்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த கண்காட்சிக்கு வந்தவர்களை விட அதிகமானவர்கள் வந்ததை நாங்களும் பார்த்தோம். ஆகையால், பிரதிநிதித்துவப்படுத்துவதுன், எங்களுடைய குழுமத்தைக் காட்சிப்படுத்துவதும் மிகவும் முக்கியமானதாகும். SATTE 2017 ல் கடந்த ஆண்டை விட அதிகமாக வாங்குபவர்களுடன் ஊடாடல் செய்வோம் என எதிர்பார்க்கிறோம். நாங்கள் 32 சொத்துக்களுடன் மத்திய கிழக்கில் மட்டும் விரிவாக்கம் செய்யாமால் இந்தியாவில் இப்போது 13 சொத்துக்களை வைத்திருக்கிறோம். இதில் பத்து 2017 ஆம் ஆண்டின் மத்தியில் இயங்க ஆரம்பித்துவிடும். Ramees International 144 Key சூரத்திலும், Ramee Casa புது தில்லியிலும், Ramee Suites மும்பையிலும் இந்த வருடத்திற்கான அறிமுகமாகும்"
அபுதாபி டூரிஸம் கல்ச்சர் அண்ட் அதாரிட்டி - Ahmed Al Mansoori - இண்டர்நேஷனல் ப்ரமோஷன் எக்ஸிக்யூட்டிவ் - டெஸ்டினேஷன் ப்ரமோஷன் டிபார்ட்மென்ட்
"SATTE இந்தியா அளவிலான காட்சியாக இருப்பதால் ட்ராவல் சமூகத்தைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாம் ஒரே கூரையின் கீழ் சந்திப்பார்கள். இந்த முன்னணி ட்ராவல் காட்சியின் 24 ஆவதி எடிசனில் கலந்து கொள்வதில் மிகவும் பூரிப்படைகிறோம். எங்களுடைய திட்டத்தில் இது எப்போதும் ஒருங்கிணைந்தப் பகுதியாகும், இது உயர்ந்த ட்ரேட் காட்சியாக இருப்பதால் எங்களுடைய இருப்பை எப்போதும் பதிவு செய்ய விரும்புவதுண்டு. இந்த வருடம் கூட எங்களது முக்கியமான பங்குதாரர்களான Etihad, Emirate Palace, Lama Tours ஆகியோர் எங்களோடு சேர்ந்து முன்னணியில் இருக்கிறார்கள். ஒரே குடும்பமாகிய நாங்கள் எங்களுடைய இடங்கள் குறித்த தகவலை பரப்புவதன் மூலம் எங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொள்கிறோம். குறிப்பாக எந்த அறிவிப்பும் இல்லையென்றாலும் ட்ராவல் மற்றும் டூரிஸம் தொழிலுடனான எங்களது நல்ல உறவை அழுத்தமாக பதிவு செய்து கொள்ள நாங்கள் விரும்புகிறோம்.'’
கோடெஸ்க் - Narayan VS - துணை நிறுவனர்
"நாம் வாட்ஸப் யுகத்தில் இருக்கிறோம். ஹோட்டல் விருந்தினர்களில் 99% பேர் வாட்ஸப்பில் இருக்கிறார்கள். ஹோட்டல்களுக்கென்று வாட்ஸப்பின் மூலம் உடனடி விருந்தினர் சேவை வழங்குவதற்கென்றே நாள் முழுவதும் (24/7), அர்பணிப்புடன் இயங்கும் ஹெல்ப்டெஸ்க் மென்பொருளை முதல் தடவையாக GoDesk அறிமுகம் செய்கிறது."
டூரிஸம் ஆஃபிஸ் ஆஃப் ஸ்பெயின் - Ignacio Ducasse - டைரக்டர்
"2011 ஆண்டிலிருந்து SATTE -ல் டூரிஸம் ஆஃபிஸ் ஆஃப் ஸ்பெயின் வழக்கமாக கலந்து கொண்டு வருகிறது. 2016 ஆம் ஆண்டு டெல்லிக்கும் மாட்ரீட்டுக்கும் இடையில் நேரடியான விமானத் தொடர்பு ஆரம்பிக்கப்பட்டதால் குறிப்பாக இந்த ஆண்டு SATTE எங்களுக்கு முக்கியமானதாகும். இந்த நேரடித் தொடர்பினால் இந்தியாவிலிருந்து ஸ்பெயினுக்கான டூரிஸம் நிலையான வளர்ச்சியடையும் என நாங்கள் நம்புகிறோம். எங்களுடைய ஸ்டாண்டில் 8 ஸ்பானிஷ் நிறுவனங்கள் சேர்ந்து காட்சிப்படுத்த விருக்கின்றன. முதல் தடவையாக SATTE 2017 ல் இரண்டு பிராந்திய டூரிஸம் போர்டுகளான Andalucía மற்றும் Comunidad de Madrid. Tour operator, Trapsatur - ம் கூட கலந்து கொள்கின்றன. மீதமுள்ள நிறுவனங்களான Madrid Tourist Board, Palladium Hotel Group, Across Spain, Century Incoming மற்றும் Warq Events SATTE ல் இப்போது வழக்கமாக கலந்து கொள்கின்றன"
யூடியான் பிசினஸ் சொல்யூஷன்ஸ் - Sandiip Srivastava - இயக்குநர்
"இந்த வருட SATTE ல் நாங்கள் ஈரோப்பின் ரயில் பேக்கேஜை அறிமுகவாதை அறிவிக்கிறோம். இந்தப் பேக்கேஜ்கள் எல்லாம் வடிவத்தில் மாடுலர் ஆகும் எனவே க்ளையண்ட்டின் விடுமுறைக் காலத்திற்கேற்ப ஒன்றாக சேர்த்துக் கொள்ளமுடியும். இந்தப் பொருட்கள் எல்லாம் இந்த வகையில் இந்தியாவுக்கு முதலாவதாகும்.Youdian, Nokkie Tours, Baltic Vitalis and South American Tours ஆகியவற்றின் பொருட்களை இந்தியாவில் வழங்க கூட்டு சேர்ந்திருக்கிறது."
இண்டியா அசிஸ் ட்ராவல்ஸ் - Mr Harish Khatri
"ட்ராவல் மற்றும் டூரிஸம் தொழில் அந்தத் துறைக்கு வலுவான ஈக்கோ சிஸ்டத்தை உருவாக்கும் பொருட்டு அந்தத்துறை சார்ந்த வெவ்வேறு அம்சங்களை ஒருங்கே கொண்டுவருவதற்கு SATTE ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. SATTE மூலமாக நாங்கள் India Assist ஐ இந்தியாவுக்கு வருகைதரும் வெளிநாட்டுப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்துகிறோம். டூரிஸ்ட்கள் இந்தியாவுக்கான ட்ரிப்பை என்ஜாய் பண்ண வேண்டுமென்பது தான் இதன் முதன்மையான நோக்கமாகும். ஒருவேளை அவர்கள் துயரம் அல்லது தொந்தரவு ஏதேனும் ஏற்பட்டால் அவர்களுக்கு உதவி செய்ய நாங்கள் அங்கே இருப்போம். டூரிஸ்ட்கள் அவர்களுடைய மொபைலில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால் எந்தப் பிரச்சனையானாலும் அதைத் தீர்க்க அது எங்களது அழைப்பு மையத்தைத் தொடர்பு கொள்ளும்'
கொரியா டூரிஸம் ஆர்கனைசேஷன்
"இந்திய ட்ராவல் ட்ரேடுக்கான முக்கியமான B2B காட்சி SATTE ஆகும், எங்களுடைய மார்க்கெட்டிங் திட்டத்தில் இது முக்கியமானதாகும். நாங்கள் பங்குபெறும் இந்த மூன்று நாட்களில் ட்ராவல் சமூகத்தினரிடம் நெட்வொர்க் செய்வதின் மூலம் 2017 ஆம் ஆண்டுக்கான எங்களுடைய மார்க்கெட்டிங் திட்டத்துக்கு சிறந்த கூட்டணிகளை உருவாக்குவோம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். 2015 ஆம் ஆண்டின் 150,000 உடன் ஒப்பிடும்போது 2016 ஆம் ஆண்டு கொரியா 195,579 வரப்பெற்றது. இனி வரும் ஆண்டுகளில் வருடா வருட வளர்ச்சி இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம்"
க்ரூஸ் ப்ரஃபொஷனல்ஸ் - Nishith Saxena, நிறுவனர் மற்றும் இயக்குநர்
"இந்திய B2B வெளியில் SATTE எப்போதும் முன்னணியில் இருந்து வருகிறது. 2017 ஆம் ஆண்டில் யோசனைகளைப் பரிமாறிக் கொள்வது, தகவல் மற்றும் சேவை அதிகமாக இருக்கும் என்று நாங்கள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். மாபெரும் எழுச்சியை கண்டு கொண்டிருக்கும் இத்துறைக்கு இந்த ஆண்டு SATTE 2017 மிகவும் பொருத்தமானதாகும். ஆழமான ஈடுபாடும், கூர்மையான கேள்விகளுக்கும் பதிலளிக்கப்படுவதும் அவசியமானதாகும். ட்ராவல் ட்ரேட் முழுவதுக்குமான அளவில் MECCA நிலையைப் பெற்ற சில ட்ரேட் காட்சிகளில் SATTE - ம் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் அதற்கே உரிய சவால்களுடன் வந்து கொண்டிருக்கிறது என்பதைச் சொல்லத் தேவையில்லை, ஆனால் SATTE - உடனான முந்தைய தொடர்பும் தற்போது SATTE 2017 ல் எங்களுடைய பங்கேற்பும் இனிவரும் நீண்ட காலத்துக்கானதாகும்.
"வருவாய் வாய்ப்புகளை வளர்ச்சியடைய செய்வதற்கும், விநியோகத்தைப் பரவலாக்கும் கண்ணோட்டத்துடனும் பிப்ரவரி 2017 -லிருந்து Hurtigruten, Cruise Professionals - ஐ அவர்களுடைய பிரத்யேக GSA ஆக இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு நியமித்திருக்கிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் அவர்களுடைய அர்பணிப்பை மேம்படுத்துவதின் மூலம், இரண்டு நிறுவனங்களின் நிர்வாகமும் இனிவரும் ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சியுடன் இந்தியாவில் Hurtigruten -ஐ பெரிய க்ரூஸ் ப்ராண்டாக ஆக்குவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது' என மேலும் கூறினார்.
மெலியா ஹோட்டல்ஸ் இண்டர்நேஷனல் - Tonia Sehan - டைரக்டர் சேல்ஸ் ஆஃப் இண்டியா
"SATTE இந்தியவேங்கிலும் இருக்கும் ட்ராவல் தொழிலின் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்த சாத்தியமான ட்ராவல் தொழில் வல்லுநர்களைச் சந்திக்கவும், நெட்வொர்க் செய்யவும், பேச்சுவார்த்தை மற்றும் வணிகம் நடத்தவும் Melia Hotels International க்குக் கிடைத்த ஒரு ஒப்பற்ற வாய்ப்பாகும். இந்திய ட்ராவல் ட்ரேடில் ப்ரான்ட் விழிப்புணர்வை அதிகப்படுத்துவதற்கான சரியான தளமாக இருக்கும் என்றுகூட நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவெங்கிலும் உள்ள ட்ராவல் ஏஜண்ட்களுக்கு எங்களுடைய பொருட்கள் மீதான காட்சித்தன்மையை அதிகரிப்பதற்கான மிகப் பெரிய தளங்களில் ஒன்றாகும். SATTE 2017 ல் எங்களுடைய பங்கேற்பிற்குப் பின்னால் இருக்கும் நோக்கம் Melia Hotels International மீதான விழிப்புணர்வை இந்திய ட்ராவல் ஏஜண்ட்களிடம் அதிகரிப்பதும், கவர்ச்சிகரமான சலுகைகளை MICE, திருமண குழுக்கள், ஓய்வுக்கென்று பயணிப்பவர்கள் முதலானவர்களிடம் பகிர்ந்து கொள்வோம். எங்களுடைய Melia pro reward திட்ட பிரச்சாரத்தின் பிரத்யேக சலுகைகளையும், சமீபத்திய போட்டியான `Book and win fabulous prizes' ல் வெற்றிபெறுபவர்களில் ஒருவராக பயனடைய அந்தத் திட்டத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு ட்ராவல் ஏஜண்ட்களையும் கூட கேட்டுக் கொள்வோம்.
ஸ்டார்ட்-அப்ஸ் SATTE 2017, நியூடெல்லி
1. ட்ரிப்ஷெல்ஃப்
Ms. Sukhmani Singh
பதவி - இணை நிறுவனர்
"ஸ்டார்ட்-அப் பெவிலியன் மூலமாக ட்ரிப்ஷெல்ஃப் போன்ற ட்ராவல் ஸ்டார்ட்-அப்களின் ஊடறு பொருட்களை காட்சிப்படுத்துவதற்கான தளத்தை வழங்கிய SATTE க்கு பாராட்டுகள். SATTE - ல் சிறிய, மத்திய தர டூர் ஆப்பரேட்டர்களை நாங்கள் தொடர்பு கொண்டது எங்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்ததோடு அவர்களுக்கு உதவும் பொருட்டு அவர்களுடைய ப்ராண்டுகளையும், ஹாலிடே பேக்கேஜ்களையும் tripshelf.com - டூர் ஆப்பரேட்டர்களுக்கான எங்களுடைய ad-tech தளமாகும் - வழியாக ப்ரமோட் செய்ய உதவுகிறோம்"
2. ஹைவ் ட்ராவல் மீடியா சொல்யூஷன்ஸ் எல் எல் பி
Mr Pankaj Sawardekar
"SATTE போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பது என்பது எந்தவொரு தொடக்க நிலை நிறுவனத்துக்குமான கனவு ஆகும். ஸ்டார்ட் அப் பெவிலியன் எங்களுக்கு அதை சாத்தியமாக்கிருக்கிறது. SATTE க்கு எங்களது நன்றி. சக தொடக்க நிலை உரிமையாளர்களுடனும், ட்ராவல் தொழிலின் `ஹூஸ்ஹூ'க்களுடனும் ஊடாடுவதை எதிர்ப்பார்க்கிறோம்."
3. இதாகா
Mr Ameya Sahasrabudhe
"ட்ராவலுக்கான ஈக்கோ சிஸ்டத்தை இத்தாகாவில் நாங்கள் உருவாக்குகிறோம். சரியான கூட்டாளிகள், அது டிக்கெட்டிங்காக இருக்கட்டும், ஹோட்டல் அல்லது மற்ற சேவை வழங்குபவர்களாக இருக்கட்டும், இல்லையென்றால் அந்த ஈக்கோ சிஸ்டம் ஒரு முழுமையற்றதாகும். அதனால் நாங்கள் இங்கிருக்கிறோம், நீங்கள் ட்ராவல் தளத்தில் சிறந்த வேலைகளை செய்து கொண்டிருந்தால் நாங்கள் உங்களோடு பேசி வாய்ப்புகளை ஆராய விருப்பப்படுகிறோம்."
4. ஓயேசேவா
Ms Shalini Tripathi
"சிறந்த ட்ராவல் தொழில் வல்லுநர்களை சந்திப்பதற்கு SATTE ஒரு மிகப்பெரிய தளம் ஆகும். ட்ராவல் துறையைச் சேர்ந்த முன்னணி பிரதிநிதிகளுடன் ஊடாடவும், தோற்றம் மற்றும் வீச்சை அதிகரிக்கவும், உறுதியான வணிக லீடுகளைப் பெறவும் OyeSeva வுக்கு ஓர் இணையற்ற வாய்ப்பாகும்."
5. நாஃபெக்ஸ்
Mr Jeethmal Mutha
"இந்திய ட்ராவல் மற்றும் டூரிஸம் தொழில் பல்வேறு சாதகமான நிலைமைகளின் விளைவாக வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது. SATTE ட்ராவல் ட்ரேட்ஷோ தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்றாற்போல இந்தத் தொழிலைச் சேர்ந்தவர்களும், எங்களைப் போன்று - வெளிநாடு செல்பவர்களுக்கு அந்நியச் செலாவணி வழங்குபவர்கள் - இந்தத் தொழிலுக்கு சம்பந்தப்பட்டவர்களும் கிடைக்கக்கூடிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். Nafex.com ஆகிய நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு அன்னியச் செலாவணிக்கு சிறப்பான ரேட்டுகளை பெற்றுத் தருவதன் மூலம் ஆன்லைனில் விரைவாகவும், செளகரியமான அனுபவத்தையும் கொடுப்பதோடு அன்னியச் செலாவணி என்று வரும்போது அவர்களுடைய விருப்பமான தெரிவாகவும் இருப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். ட்ராவல் ஏஜண்ட்களின் வாடிக்கையாளர்கள் அவர்களுடைய டிக்கெட்டுகளை புக் செய்த பின்பு அன்னியச் செலாவணிக்கு சிறந்த ரேட்டுகளைப் பெறுவதற்கு அலையத் தேவையில்லை. ட்ராவல் ஏஜண்ட்களே அதை வழங்குவதன் மூலம் அதிகம் தேவைப்படக்கூடிய நிவாரணத்தைக் ஒரே இடத்தில் அவர்கள் கொடுப்பார்கள். அவர்கள் செய்ய வேண்டுவதெல்லாம் எங்களுடைய வலைத்தளமான http://www.nafex.com ல் லாக்-இன் செய்து சில நிமிடங்களில் அவர்கள் இருக்கும் பகுதியில் சிறந்த ரேட்டைப் பெறுவதற்கு வாடிக்கையாளர் கரன்சி தேவையை பதிவு செய்யவேண்டும். இதனால், பணம் மாற்றிக் கொடுப்பவர்களை பல முறை அழைத்து ஒவ்வொருவரிடமிருந்தும் வெவ்வேறு ரேட்டுகளை பெறவேண்டியதில்லை. அங்கீகரிக்கப்பட்ட முன்னணி பணம் மாற்றுபவர்களுடன் நாங்கள் கொண்டிருக்கும் கூட்டானது பரிவர்த்தனையை எளிதாக்குவதோடு மட்டுமல்லாமல் அனைத்து அம்சங்களிலும் நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கிறது"
6. ப்ரபோசல் OTG
Mr Arun Nagpal
"தொடக்க நிலை நிறுவனங்கள் அவர்களுடைய புதிய யோசனைகளையும், புதுமைகளையும் காட்சிப்படுத்துவதற்கு ஸ்டார்ட்-அப் பெவிலியன் ஒரு சிறந்த தளம் ஆகும். இது சாத்தியமான முதலீட்டாளர்களை சந்திப்பதற்கான முதல் படியை எடுத்து வைப்பதற்கான கதவுகளைத் திறப்பதோடு பெரிய தளத்தில் அவர்களுடைய பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான நெட்வொர்க்கையும் வழங்குகிறது.'
7. த ட்ரிப் ஒர்க்ஸ்
Mr Satish Singh
டைரக்டர் மற்றும் சி இ ஓ
"புதிய, வரவிருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த கோட்பாடுகளைப் பெறுவதற்கும் அவர்களுடைய பொருட்களை தொழில் துறைக்கும், முதலீட்டாளர் சமூகத்திற்கும் காட்சிப்படுத்துவதற்குமான சிறந்த முயற்சி SATTE ஸ்டார்ட்-அப் பெவிலியன் ஆகும். எங்களுடைய பொருளை காட்சிப்படுத்துவதற்கு சரியான வெளிப்பாடு கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம்.'
8. க்ரிண்டோ
Mr Vishal Agarwal
"தற்போது இருக்கக்கூடிய செட்-அப்புக்கும் புதிய வணிக செட்-அப்புக்கும் SATTE ஒரு அற்புதமான தளம் ஆகும். ட்ராவல் டெக் ஸ்டார்ட் - அப்புகளுக்கென்று அமைக்கப்பட்ட பெவிலியன் பங்குபெறுவதை ஊக்குவிப்பதோடு சீர்திருத்தும் வணிக யோசனைகளோடு ஒவ்வொருவருக்கும் உதவும்"
9. யூமீகோ
Mr Rishabh Sood
சி இ ஓ மற்றும் கோ-ஃபவுண்டர்
"உள்வரும், வெளிச்செல்லும் ட்ராவல் சம்பந்தப்பட்ட பெரிய ஆப்பரேட்டர்கள் இந்தக் காட்சியில் இருப்பதால் YuMiGo வான எங்களுக்கு, எங்களுடைய கேம்-சேஞ்சிங் ட்ராவல் செயலியை உலகுக்குக் காட்சிப்படுத்தவும், அறிமுகப்படுத்தவும் இதைவிடச் சிறந்த பார்வையாளர்கள் இருக்க முடியாது.'
10. Travelshore Technologies P Ltd.
Mr Alex T Jacob
டைரக்டர் மற்றும் சி இ ஓ
"கடந்த ஆண்டு எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், தொழில்நுடபத் தீர்வுகளை ட்ராவல் ஏஜண்ட்களுக்கும், டூர் ஆப்பரேட்டர்களுக்கும் சந்தைப்படுத்த மிகவும் பயனுள்ள ஒருதளம் SATTE ஆகும் என நாங்கள் நம்புகிறோம். SATTE க்கு எதிர்பார்க்கப்படும் 12,000க்கும் மேற்பட்ட வாங்குபவர்களோடு நெட்வொர்க் செய்வதற்கு பரந்த அளவிலான வாய்ப்பு இந்த நிகழ்வின் பிரதானமாகும்.'
UBM India- பற்றி
இந்தியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரான UBM India பல வகையான கண்காட்சிகள், துறை சார்ந்த மாநாடுகள், கருத்தரங்குகள் வாயிலாக உலகமெங்கும் இருக்கும் வாங்குபவர்களையும், விற்பனையார்களையும் ஒருங்கே ஒரு தளத்துக்கு கண்காட்சிகள், உள்ளடக்கத்தோடு கூடிய மாநாடுகள் மற்றும் கருத்தரங்கள் வாயிலாகக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் 25 பெரிய காண்காட்சிகளையும், 40 கருத்தரங்குகளையும் UBM India நடத்தி வருகிறது. இது பலவகையான தொழில்களுக்கு இடையேயான வர்த்தகத்துக்கு வழிவகுக்கிறது. UBM Asia நிறுவனமான UBM India-வுக்கு மும்பை, புதுதில்லி, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. UBM Asia, லண்டன் பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டிருக்கும் UBM plc -க்கு சொந்தமானது. UBM Asia ஆசியாவின் முன்னணி கண்காட்சி அமைப்பாளரும், சீனா, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகளின் மிகப் பெரிய வர்த்தக ஏற்பாட்டாளரும் ஆகும். மேலதிகத் தகவலுக்கு தயவு செய்து ubmindia.in. என்கிற இணையத் தளத்துக்குச் செல்லவும்
ஊடகத் தொடர்பு:
Mili Lalwani,
[email protected]
022-61727000
UBM India
Share this article