மும்பை, February 10, 2017 /PRNewswire/ --
கிரெடிட் மூலம் வாங்குவதும், டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துவதற்குமான தேவையும் செயலாக்க அளவை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
MoneyOnMobile செயலாக்க அளவில் 119 சதவிகித அளவு (12/5/16 வாரத்திலிருந்து 1/23/17 வாரம் வரை) அதிகரிப்பதாக அறிவித்திருக்கிறது. அதாவது, MoneyOnMobile பணம் செலுத்தும் நெட்வொர்க் வழியாக பணம் வந்திருக்கிறது.
(Logo: http://photos.prnewswire.com/prnh/20161026/432722LOGO )
MoneyOnMobile, Inc. அதனுடைய இந்திய துணைநிறுவனமான MoneyOnMobile க்கு YES BANK Limited மூலம் $1.5 மில்லியன் USD கடன் வசதியை வழங்கியிருப்பதாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தது. இந்தியாவில் டிஜிட்டல் மூலம் பணம் செலுத்துவதற்கான தேவை அதிகமானதற்கு இந்த வாய்ப்பை நிறுவனம் பயன்படுத்திக் கொண்டது. இந்த கடன் வசதி ஆண்டுதோறுமான உள்நாட்டு பண அனுப்பு செயலாக்க அளவுக்கும் கூடுதலாக $320m மற்றும் $650m USD வரை ஆதரவு அளிக்கும்.
2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஆரம்பத்தில், புழக்கத்தில் இருந்த ரூ 500, ரூ 1000 நோட்டுக்கள் நிறுத்துவதாக இந்திய அரசு அறிவித்தது. நிதி பரிவர்த்தனைக்காக 90 சதவிகிதத்துக்கும் அதிகமாக பணத்தையே சார்ந்திருந்த பொருளாதாரத்தில், நுகர்வோர்களும், வணிகங்களும் டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைக்குத் திரும்பினர்.
'‘பண மதிப்பு நீக்கம் உருவாக்கிய அபரிதமான டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகளுக்கான நுகர்வோர்களின் தேவைகளைச் சந்திக்க இந்தக் கடன்வசதி ஒரு கருவியாக இருந்தது என நாங்கள் நம்புகிறோம்" என்று MoneyOnMobile ன் தலைமைச் செயல் அதிகாரியும், சேர்மனுமான Harold Montgomery தெரிவித்தார். மேலும், '‘இந்த கடன் வசதியை அணுகமுடிந்ததால் இந்தியாவில் நாங்கள் அதிகமான பரிவர்த்தனைகளை ஆதரிக்க முடிந்தது அதனால் எங்களுடைய செயலாக்க அளவும் அதிகரித்தது'’ எனக் கூறினார்.
MoneyOnMobile பற்றி
MoneyOnMobile, ஒரு மொபைல் மூலம் பணம் செலுத்தும் சேவையை வழங்கும் தொழில்நுட்ப மற்றும் செயலாக்க நிறுவனம் ஆகும் . இந்திய நுகர்வோர்கள் பொருள்களுக்கும், சேவைகளுக்கும் மொபைல் ஃபோன் மூலம் பணம் செலுத்துவதற்கு அல்லது ஒரு செல் போனிலிருந்து இன்னொன்றுக்கு பணம் அனுப்புவதற்கு MoneyOnMobile வழிவகுக்கிறது. ஒரு எளிய குறுஞ்செய்தியாகவோ, MoneyOnMobile செயலி மூலமோ அல்லது இணையத்தளம் வழியாகவோ இதை உபயோகிக்க முடியும். இந்தியாவெங்கிலும் 325,000 க்கும் அதிகமான சில்லறை வணிக தளங்களை MoneyOnMobile கொண்டுள்ளது.
இணையத் தளம்: http://MoneyOnMobile.in.
ட்விட்டர்: https://twitter.com/MoneyOnMobile
முகநூல்: https://www.facebook.com/MoneyOnMobile
லிங்க்ட் இன்: https://www.linkedin.com/company/MoneyOnMobile
யூட்யூப்: https://www.youtube.com/channel/UCxqO4N1z9acnQmEysjqfBaQ
கார்ப்பொரேட் ஊடகத் தொடர்புக்கு:
Navaz Damania
VP - Corporate Communications
MoneyOnMobile
022-45021520
[email protected]
Share this article